நல்ல கவிதை ஒன்றுமரணம் நிகழ்ந்த வீட்டின்
மறுநாள்
கிடுகுகளின் வழியே
காலி இருக்கைகளில் அமரும்
வெய்யிலில்
யாரோ அமர்கிறார்கள்,
வரையறுக்கப்பட்ட கேள்விகளை
அது கேட்பதில்லை.
மேல் நோக்கி
அது கை நீட்டுவதில்லை.
அது ஒரு
தொடர் முத்தத்தை இடுகிறது.
ஒரு இரவு கொடுத்த
மொத்த துக்கத்தின்
துளைகளில்
மெல்ல வழிந்து நிரம்புகிறது.
பின் நகர்கிறது
அடுத்தடுத்த
காலி இருக்கைகளுக்கு.


- ஜெ. ஃப்ராங்க்ளின் குமார்

நண்பர் நந்தனின் பகிர்வு இது கவிதையைப் படிக்கும் பொழுது கடக்கும் அந்த சூரிய ஒளி என்னையும் கடக்கிறது ... நன்றி நந்தன் வாழ்த்துக்கள் ஜே.பிராங்களின் குமார் 

கவிஞர்கள், கவிதை பிரியர்கள் தவறவிடக்கூடாத பக்கம் ஒன்று 

Comments

 1. அருமை! நல்லதொரு கவிதை! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 2. அன்புள்ள அய்யா,

  ‘நல்ல கவிதை ஒன்று’- வரையறுக்கப்பட்ட கேள்விகளை அது கேட்காமலே கிடுகுகளின் வழியே வெய்யிலோன் நகர்வது அருமை...நாம் தான் கை நீட்டுகிறோம்...

  நன்றி.

  ReplyDelete
 3. உணர்வினைத் தொட்டிட்ட உண்மை வரிகள்
  திணறியே நின்றேன் திகைத்து!

  பேச்சிலை சகோதரரே!

  நண்பருக்கும் பகிர்ந்த உங்களுக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. துக்க வீட்டுக் கவிதையும் மகிழ்ச்சி அளிக்கிறதே :)
  த ம 1

  ReplyDelete
 5. மனதை தொடும் வரிகள் சகோதரரே.
  நல்ல கவிதை.

  ReplyDelete
 6. அருமையான கவிதை சகோ !

  ReplyDelete
 7. அருமையான் கவிதை......

  ReplyDelete

Post a Comment

வருக வருக