மெட்ராஸ் - ஒரு விமர்சனம்

ஆயுத எழுத்தின் ஹிந்தி வடிவமான ‘யுவா’-வின் விமர்சனத்தில் பிரபல திரை-விமர்சகர் நம்ரதா ஜோஷி பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்: ‘யுவா நல்ல படமல்ல, நல்ல படம் போல பாசாங்கு செய்யும் படம்,’. 

அந்த வாக்கியம் தமிழின் நிறைய படங்களுக்கு பொருந்தும்; மெட்ராஸ் உள்பட. 



தெளிவான யதார்த்தத்தை முன்னிறுத்தி ஒரு களம் அமைப்பது நிறைய தமிழ்ப் படங்களுக்கு வசதியாகப் போய் விடுகிறது. மக்கள் அந்த மாதிரி ஒரு hyper-realism-மை ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்பது கொஞ்சம் ஆறுதலாக இருந்தாலும், இப்படி ஒரு யதார்த்தக் களம்தான் மாறியிருக்கிறதே ஒழிய கதையோ, அதன் களன்களோ, அவை கையாளும் பிரச்சனைகளோ மாறவே இல்லை என்பதை மெட்ராஸ் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது. வீரம் மிகுந்த நாயகன். பத்துப் பேர் கட்டை, அரிவாள் தாங்கி சூழ்ந்தாலும் அவர்களை எளிதில் வென்று விடும் திறன் கொண்டவன்; கூட எதற்கும் பிரயோசனமில்லாமல், கதையில் காதல் இருந்தே தீர வேண்டும் என்பதற்காக மட்டுமே, உலா வரும் நாயகி. இறப்பதற்காகவே கூட இருக்கும் உயிர் நண்பன். வெளிப்படையாக கொலை, கொள்ளை செய்து கொண்டே அரசியலிலும் இருக்கும் இரண்டு போட்டிக் குழுத் தலைவர்கள்; சண்டையிட்டாலும் கடைசியில் ஒன்று சேர்ந்து நாயகனை தனிமைப் படுத்தப் போகிறவர்கள். 

கதையில் ஒரு சுவர் முக்கிய பாத்திரமாக இருப்பதை படம் வெளியாகும் முன்பு பெருமையாக பேசிக் கொண்டு இருந்தார்கள். இந்த மாதிரி உயிரற்ற, inanimate பொருட்கள், படத்தில் முக்கிய அங்கம் வகிப்பது உலக சினிமாக்களில் நிறைய நடக்கிறது. இதனை melodramatic objects என்பார்கள். ஹாலிவுட்டில் கொஞ்சம் கிண்டல் கலந்த மொழியில் ‘McGuffin’ என்பார்கள். இது நிறைய நாட்களாக நடந்து வரும் விஷயம். படத்தில் சுவருக்கு முக்கியத்துவம் இருந்தாலும், கதையின் சிக்கல்கள் நாயகனை முன்னிறுத்தச் செய்யும் ஒரு சாதாரண மசாலா படமாகவே நகர்கிறது. குறைந்த பட்சம் அந்த ‘உயிர் நண்பன்’ அன்பு இருக்கும் வரையாவது கதை அவனைச் சுற்றியும் கொஞ்சம் நகர்ந்ததால் ஓரளவு யதார்த்தக் கட்டுக்குள் இயங்கியது. அன்பு இறப்புக்குப் பிறகு வேறு என்ன செய்வது என்று தெரியாமல் அலைபாய ஆரம்பித்து பார்வையாளனையும் கொஞ்சம் குழப்பவே செய்கிறது. கடைசியில் நடக்கப்போகும் ‘ஒத்தைக்கு ஒத்தை’ சண்டைக்கு இவ்வளவு ‘பில்டப்பா’ என்று கடைசியில் ஆயாசம் வருவதை தவிர்க்க முடியவில்லை. 

படம் முடிந்த பிறகு, இதே மாதிரி ஒரு ‘பராக்ரமசாலி ஹீரோ’ எழுச்சி கொண்டு ஓரிரு ‘வில்லன்களை’ த்வம்சம் பண்ணி அரசியலை சுத்தம் செய்வதை இன்னும் எவ்வளவு நாட்கள் நாமும் அலுக்காமல் பார்த்துக் கொண்டு இருக்கப் போகிறோம் என்று சோகமே மேலிட்டது. பக்கத்து ஊர் கேரளாவில் அவர்கள் முன்னெடுக்கும் கதைக் களன்கள், வெளிப்படுத்தும் புத்தம் புதிய சிந்தனைகள், பயன்படுத்தும் திரை மொழிகள் நம்மை அப்படி வியக்கச் செய்கின்றன. தமிழர்கள் பெரிதும் கிண்டலும் கேலியும் செய்யும் ஹிந்தித் திரையுலகம் Queen, Ship of Theseus, Mary Kom, Lunch Box என்று வேறு தளங்களில் உலவும் படங்களை நமக்கு அளிக்கத் துவங்கி விட்டார்கள். நாமோ மலையாளத்தான் உள்பட எல்லாரையும் கிண்டல் அடித்துக் கொண்டே, ஆனால், முப்பது வருடத்துக்கு முந்தைய அதே கதையை திரும்பத் திரும்ப அலுக்காமல் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

திரு. https://www.facebook.com/sridharfc ஸ்ரீதர் சுப்பிரமணியன் அவர்களின் முகநூல் பதிவு. அனுமதிபெற்ற பகிர்வு 
==========================
முகநூலில் கிடைத்த முத்திரைப் படங்கள் ...

தன்ணிர்வண்ணங்களில் இப்படி ஓவியங்கள் சாத்தியமா? 
யப்பா யாருப்பா? அந்த சபாபதி? 




Comments

  1. விமர்சனமும் அருமை
    படங்களும் மிக அருமை நன்றி நண்பரே

    ReplyDelete
  2. இத் திரைப்படத்தை நிறையப் பேர் பாராட்டுகிறார்கள். ஜோஷியின் விமர்சனம் உண்மை. நாம் பார்த்து வியந்த படங்களை மீண்டும் பார்க்கும்போது இந்த பாசாங்கை உணர முடிகிறது
    நல்ல விமர்சனம்.

    ஓவியங்களை ஸ்லாகிக்க வார்த்தை இல்லை

    ReplyDelete
  3. பொதுவாக நீங்கள் ஆங்கில படங்களுக்கு தானே விமர்சனம் செய்வீர்கள்!!
    நல்ல விமர்சனம்.

    "//ஆனால், முப்பது வருடத்துக்கு முந்தைய அதே கதையை திரும்பத் திரும்ப அலுக்காமல் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.//"

    சரியாக சொன்னீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி உணமையானவரே...

      Delete
  4. யப்பா யாருப்பா? அந்த சபாபதி? --> http://www.rajkumarsthabathy.com/archive.html

    ReplyDelete
    Replies
    1. அருமையான இணைப்பு
      உங்கள் தளம் பார்த்தேன் அருமை..

      Delete
  5. தமிழ்ப் பட விமர்சனத்துடன் தந்த தண்ணீர்ப் படம் அசத்துகிறது!
    அற்புதம்! பகிர்விற்கு மிக்க நன்றி சகோதரரே!

    ReplyDelete
    Replies
    1. வருக சகோதரி...
      நன்றி

      Delete
  6. வித்தியாசமாக தமிழ் படம் விமர்சனம்...முதலில் மதுவா? மெட்ராஸ் கொஞ்சம் வியப்பாகத்தான் இருந்தது!

    விமர்சனம் அருமை! உண்மை!

    அட போங்கப்பா தமிழ் படங்கள் அலுப்பைத் தருகின்றன....அதுவும் இப்படிப்பட்டப் படங்கள் ரொம்பவே!

    அந்த ஓவியங்கள் யம்மாடியோவ்! அருமை!

    ReplyDelete
    Replies
    1. தோழர் விமர்சனம் ஒரு முகநூல் பதிவு ..
      ஸ்ரீதர் சுப்பிரமணியன் அவர்களின் முகநூல் பதிவு. அனுமதிபெற்ற பகிர்வு
      அவரது முகவரி இணைப்பையும் தந்திருக்கிறேன் தோழர்..

      Delete
  7. டாப் 10 மூவீஸ் சுரேஷ்குமார் போல சொன்னால் மெட்ராஸ் " பழசு"...

    ReplyDelete
    Replies
    1. ஹாய் ஸ்ரீ
      ...
      வருகைக்கு நன்றி

      Delete

Post a Comment

வருக வருக