இதுதாண்டா வளர்ச்சி

பெருமதிப்பிற்குரிய ஷாஜகான் அவர்களின் பதிவு ஒன்று ...
திரு. ஷாஜகன் ஒரு விழாவில் ...
(படம் குறித்து என்ன ஏது என்போருக்கு 

2010இல் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் திரு.ஷாஜகானும் அவரது நண்பர் திரு.குருமூர்த்தியும்   இணைந்து தமிழ் 2010 என்றொரு கருத்தரங்கம் நடத்தினர். அதில்  தமிழ்நாட்டின் முக்கிய எழுத்தாளர்கள், ஆர்வலர்கள், களப்பணியாளர்கள் பங்கேற்று கட்டுரை சமர்ப்பித்தனர். அத்தொகுப்பை கருத்தரங்க நிறைவுவிழாவில் அய்யா அப்துல் கலாம் வெளியிட்டார். அதன் பிரதியை ஷாஜகான் அவர்களுக்கு  வழங்குகிறார்.)

இப்போது அவருடைய நிலைத்தகவல் ஒன்று 

தேசிய மருந்து விலைநிர்ணய ஆணையம் என்று ஓர் அமைப்பு இருக்கிறது. மருந்துகளின் விலைகளை தனியார் நிறுவனங்கள் இஷ்டப்படி உயர்த்தாமல் கட்டுப்படுத்தும் நிறுவனம் இது.

2013 மே மாதத்தில் இந்த நிறுவனம் சில மருந்துகளுக்கு உச்சவிலை நிர்ணயித்து சுற்ற்றிக்கை விடுத்தது. மருந்து நிறுவனங்கள் இதற்கு எதிராகக் குரல் கொடுத்தன.


புதிய பாஜக அரசு அமைந்த பிறகு 2014 செப்டம்பர் 23ஆம் தேதி, முந்தைய சுற்றறிக்கையை ரத்து செய்கிறது ஆணையம். 
அதாவது, சுற்றறிக்கையில் குறிப்பிட்டப்பட்ட 108 மருந்துகள் அத்தியாவசிய மருந்துகள் அல்லவாம். அதனால் உச்சவிலை நிர்ணயிக்கத் தேவையில்லையாம்.

அந்த மருந்துகள் எதற்குத் தெரியுமா? காசநோய், புற்றுநோய், இதயநோய், சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களுக்கானவை.

இந்தியாவில் இன்று மிகப்பரவலாக இருப்பது சர்க்கரை நோய் – நோயாளிகள் எண்ணிக்கை 4 கோடி. காசநோயாளிகள் எண்ணிக்கை 22 லட்சம். புற்றுநோய்க்கு ஆளானவர்கள் 11 லட்சம்.

சரி, இந்த சுற்ற்றிக்கை ரத்து செய்யப்பட்டதால் என்ன ஆகிவிடும்? உதாரணத்துக்கு -
புற்றுநோய்க்கான மருந்து கிளிவெக் விலை 8500 ரூபாயாக இருந்தது ஒரு லட்சத்து எட்டாயிரம் ஆகும்.

இரத்த அழுத்த்த்துக்கான மருந்து பிளாவிக்ஸ் விலை 147 ரூபாய் இருந்தது 1615 ஆகும். 

இதன் மூலம் Sanofi, Abbott, Zydus Cadila, Ranbaxy, Lupin, Sun, cipla ஆகிய மருந்து நிறுவனங்கள் லாபம் பெறும்.

மருந்து நிறுவனங்களின் வேண்டுகோள் காரணமாக, இரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சகம், இந்த விஷயத்தை சொலிசிடர் ஜெனரலிடம் அனுப்பியதாம். ஆணையம் தன் வரம்பை மீறி விட்டது என்று அவர் தெரிவித்தாராம். எனவே, அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி இந்த சுற்ற்றிக்கை ரத்து செய்யப்பட்டதாம்.

இரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சராக இருப்பவர் பெங்களூர் தொகுதியில் வெற்றி பெற்ற ஆனந்த் குமார். ஆர்எஸ்எஸ் வளர்ப்பு. ஏற்கெனவே நிறைய ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர். முந்தைய பாஜக ஆட்சியின்போது நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தபோது 14500 கோடி ஊழல் குற்றச்சாட்டு இவர்மீது உண்டு. கர்நாடகத்தில் உள்ள இந்து தீவிரவாத அமைப்பான ராம் சேனாவே இவர்மீது 14000 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது. நீரா ராடியாவுக்கும் இவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் உண்டு. மேலும் குற்றச்சாட்டுகளை இணையத்தில் நீங்களே தேடி அறியலாம்.

மருந்துவிலை நிர்ணய ஆணையத்தின் இந்த முடிவுக்கு எதிராக இப்போது உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றமும் அந்த வழக்கை கையில் எடுத்துக்கொண்டுள்ளது.

நமக்கு இருக்கும் நம்பிக்கை எல்லாமே நீதிமன்றத்தின் மீதுதான்.

ஆ...ர...ம்...ப....ம்.

(காங்கிரஸ் ஊழல், திமுக ஊழல் மட்டுமே கண்டுக்கணும். இதெல்லாம் கண்டுக்காம போகணும் மக்கா... அப்பதான் இந்தியா வல்லரசாகும்)
-
பி.கு. - ஆணையத்தின் முடிவுக்கு எதிராத்தான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அந்த முடிவு ஏன் எடுக்கப்பட்டது, அதன் பின்னணியில் ஊழல் உள்ளதா என்பது அதில் வராது.

திரு. ஷாஜகான் அவர்களின் முகநூல் பதிவொன்று ... 

Comments

  1. அன்புள்ள திரு.கஸ்தூரி அய்யா,

    வணக்கம். ‘இதுதாண்டா வளர்ச்சி’ கட்டுரையில் தேசிய மருந்து விலைநிர்ணய ஆணையம் குறித்து கருத்தரங்கில் அய்யா அப்துல் கலாம் வெளியிட,. அதன் பிரதியை ஷாஜகான் அவர்களுக்கு வழங்கியதை குறிப்பிட்டு காட்டியிருந்தீர்கள்.

    சுற்றறிக்கையில் குறிப்பிட்டப்பட்ட 108 மருந்துகள் அத்தியாவசிய மருந்துகள் அல்லவாம். அதனால் உச்சவிலை நிர்ணயிக்கத் தேவையில்லையாம்.

    அந்த மருந்துகள் எதற்குத் தெரியுமா? காசநோய், புற்றுநோய், இதயநோய், சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களுக்கானவை. பிறகு அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி இந்த சுற்ற்றிக்கை ரத்து செய்யப்பட்டதாம்.

    மருந்துவிலை நிர்ணய ஆணையத்தின் இந்த முடிவுக்கு எதிராக இப்போது உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றமும் அந்த வழக்கை கையில் எடுத்துக்கொண்டுள்ளது.

    நமக்கு இருக்கும் நம்பிக்கை எல்லாமே நீதிமன்றத்தின் மீதுதான். உண்மைதான்...நீதிபதிகளின் கையில்தான் நீதி இருக்கிறது...கை சுத்த பத்தமாக இருக்க வேண்டும். ‘ஜான் ஏறினால் முழம் வழுக்க’ கதையானால் என்ன செய்வது?

    பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்

    நன்மை கடலிற் பெரிது.
    நன்றி.


    ஆணையத்தின் நிலையை அருமையாக எடுத்துக்காட்டிய கட்டுரையைச்சுட்டிக்காட்டிய விதம் அருமை.

    ReplyDelete
  2. திரு ஷாஜகான் அவர்களின் பதிவு மிகவும் அருமையான அவசியமான ஒன்று. மக்களிடம் இன்னும் மருந்துகள், மருத்துவத் துறை பற்றிய விழிப்புணர்வு வரவில்லை. தாங்கள் சொல்லியது போல் மக்களும் சரி, ஊடகங்களும் சரி பக்கம் பக்கமாக காங்கிரஸ் ஊழல், திமுக ஊழல், 2 ஜி ஊழல் என்று வரிந்துக் கட்டிக்கொண்டு ஆராய்ந்து தகவல் வெளியிட்டு பர பரப்பு ஏற்படுத்துகின்றார்களே அல்லாமல், நடைமுறை வாழ்க்கையில் மக்கள் தினமும் சந்திக்கும் நிகழ்வுகளில் உள்ள ஊழலைப் பற்றியும், விழிப்புணர்வு பற்றியும் அலசுவதில்லை, விழுப்புணர்வு ஏற்படுத்துவதும் இல்லை.

    மிக உயர்ந்த விலை நிர்ணயித்தது பற்றி, மருந்துகள் விற்பனை அதிகாரியாக வேலை செய்யும் நண்பர் தெரிவித்து வருத்தமும் பட்டுக்கொண்டார். அவர் மற்றொன்றையும் குறித்து வருத்தம் அடைட்நார். என்னவென்றால் காலாவதியாகும் மருந்துகளை மீண்டும் சந்தைப்படுத்துவது குறித்தும். மக்களுக்கு அதைக் கண்டுபிடிக்க முடியாதாம். ஏன் அவர்க்கே கூடக் கண்டுபிடிக்க முடியய்வில்லையாம்!!

    இந்தியா ஒரு வல்ல்ல்ல்ல்லரசு!!!!???

    ReplyDelete
  3. ஆஹா இவ்ளோ இருக்கா இதுல...நல்ல பதிவு நன்றி சகோ.

    ReplyDelete
  4. மருந்து கம்பெனிகளின் பகற்கொள்ளையை நீதிமன்றம் தடுத்து நிறுத்தினால் தான் நாட்டுக்கு நல்லது ,இனியும் அரசுகளை இந்த விஷயத்தில் நம்ப முடியாது !
    த ம 1

    ReplyDelete
  5. இப்போத்தானே வேலையக் காட்ட ஆரம்பிச்சுருக்காங்க மோடி சர்க்கார், இன்னும் இருக்கு... பார்ப்போம் நீதிமன்ற நம்பிக்கை இருக்கிறது.. பகிவுக்கு நன்றி சார்...

    ReplyDelete
  6. பார்ப்போம் நீதி மன்றத்தின் தீர்ப்பு எவ்வாறு இருக்கும் என்று.

    "//(காங்கிரஸ் ஊழல், திமுக ஊழல் மட்டுமே கண்டுக்கணும். இதெல்லாம் கண்டுக்காம போகணும் மக்கா... அப்பதான் இந்தியா வல்லரசாகும்)//"

    சரியா சொன்னீங்க...

    ReplyDelete

Post a Comment

வருக வருக