மெமரி கார்ட் 1

ஒரு கவிதை

வழங்கப்படாத 
ரொட்டித்துண்டுகளுக்கு அருகில் 
தன் வாலை 
உதிர்த்துவிட்டே போயிருக்கிறது 
நன்றி.

- ஃப்ராங்க்ளின் குமார்



காணமல் போன பதிவர் ...

தமிழ்மனத்தில் ஏழாவது ராங்கில் இருந்தவர் இவர். சமீபமாய்க் காணாமல் போய் மீண்டிருக்கிறார்.



இவர் யார் தெரிகிறதா?

இவர்தான் அவர் ,
அட இப்பவாது தெரியுதா?
தம்பி ஒருவழியா பதிவெழுத வந்துட்டார். வெல்கம் back அரும்புகள் மலரட்டும்.

சிங்கம் களமெரங்கிருச்சுடோய்....

இசைபதிவர் ஒருவர் 


இசைப் பதிவர் காரிகன் குறித்து சொல்வது தேவையில்லாத வேலை.
இசையை ரசிப்பவர்கள் எல்லோருமே வார்த்தைவிருப்பம் போகாமல் இருக்க முடியாது.

காரிகனின் எழுத்து ஒரு போதை. ஒரு முறை இவர் பதிவு ஒன்றைப் பிரிண்ட் செய்ய முயன்ற பொழுது முப்பத்தி ஐந்து பக்கங்கள் என்றது வோர்ட். ஆகா, இது வேலைக்காகாது என்று இணையத்திலேயே படிக்க ஆரம்பித்து விட்டேன்.

நீங்களும் ஒரு தபா பாருங்க ... இணைப்பு

காகித பூக்களின் பாடல் 


லவுடு ஸ்பீக்கர் பொண்ணு அலறவிடும் தகவல்கள் எல்லாமே அருமை ...
தைரியமா படிக்கலாம் காதுக்கு நான் காரண்டி.

இணைப்பு 


இதெல்லாம் சினிமாவில்தான் நடக்கும் ஆனா இப்போ ...
என்னன்னு பார்க்க இங்கே சொடுக்குக

நிகில் நிகழ்வு ஒன்று 


காரைக்குடி ராமநாதன் செட்டியார் உயர்நிலைப்பள்ளியில் 8/11/2014 அன்று நிகில் வாழ்வியல் திறன் பயிற்சி நடைபெற்றது.


பயிற்சி நலமே நடந்தது தலைமையாசிரியர் திரு.பீட்டர் ராஜா பள்ளியை தனித்த அடையாளத்துடன் நடத்திவருவது மகிழ்வு.

மாணவர்கள் பங்களிப்பு மிக நன்றாக இருந்தது. பயிற்சி முடிந்தவுடன்தான் ஒன்று தெரிந்தது தேவராஜன் அவர்களின் முன்னோர்கள் அரசுக்கு அளித்த பள்ளி என்பது. தேவா அண்ணாத்தே இதுவரை தொண்ணூறு முறை ரத்த தானம் செய்தவர். மகிழ்வான நிகழ்வு.

மலர்த்தரு பதிவு வெளியீட்டுக் கொள்கை

ஞாயிறு, செவ்வாய்,வியாழன் மட்டுமே இனி பதிவுகளை வெளியிட இருக்கிறேன்.

இப்பதைக்கு மெமரி கார்டு புல் எனவே மீண்டும் ஒரு புது மெமரி கார்டுடன் சந்திப்போம்.

அன்பன்
மது 

Comments

  1. முதல் புகைப்படத்தை பார்த்தவுடன் கொஞ்சம் சந்தேகமாக இருந்தது. அடுத்த படத்தை பார்த்தவுடன், அந்த சந்தேகம் தீர்ந்து விட்டது.

    அட! வெளிநாட்டுக்கொள்கை மாதிரி வெளியீட்டுக்கொள்கையா... அதுவும் வாரத்தில் மூன்று நாள் மட்டுமா..நடத்துங்க, நடத்துங்க... .

    ReplyDelete
    Replies
    1. வருக உண்மையானவரே ...
      நன்றி

      Delete
  2. மெமரி கார்ட் மாட்டர் அத்தனையும் சூப்பர்!
    நம்ம ஸ்பீக்கர் விடயங்கள் எப்பவும் அசத்தல்தான்!...:)
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    பகிர்விற்கு நன்றி சகோ!..:)

    ReplyDelete
  3. ஆஹா1 தம்பி பாண்டியன் மீண்டும் வந்தாச்சா...கலக்குவார் இனி! எங்கள் ப்ளாகில் ஒரு புது இடுகை பார்த்தோம்..சென்றோம் ஆனால் அவர் வலைத்தளம் ஸாரி என்றது! பழைய இடுகையயே காட்டியய்து. இப்போது உங்கள் மெமரி கார்டின் தகவல் திருப்தி .

    ஆம் லவுட் ஸ்பீக்கர் அருமைப்பா....

    நிகில் நிகழ்வு பாராட்டும்படியயனது.

    நல்லதாயிற்று...நீங்கள் அறிவித்தது. மிஸ் ஆகாமல் பார்த்துக் கொள்ள....

    நாங்களும் திங்கள் புதன் வெள்ளி என்றிருந்தோம்...பின்னர் இரு நாட்கள் ஆனது....இப்போது சிறிது தடம் புரண்டு உள்ளது...மீண்டும் ஆரம்பிக்கலாம் என்றிருக்கின்றோம்....பார்ப்போம்...



    ReplyDelete
    Replies
    1. இவ்வளவு சின்சியரா பின்னூட்டம் இடும் உங்களைப் போன்றோருக்காகவே நான் வெளியீட்டுக் கொள்கை செய்ய வேண்டியதாயிற்று...

      ப்ளாக் அப்படித் தான் ...
      அழுந்திப் பிடித்துக் கொண்டு இருக்க முடியாது.

      Delete
  4. Replies
    1. கனவில் வந்த காந்தியுடன் உரையாடிக் கொண்டிருக்கிறேன். இன்னும் கனவு கலையவில்லை..

      Delete
  5. :) மிக்க நன்றி மெமரி கார்டில் எனது தளத்தையும் சேமித்ததற்கு :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி
      மஞ்சரி குறித்துக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா ...?
      அதன் பாணியில் இருந்தது..
      ரசிக்கவும் முடித்தது எனவே பகிர்ந்தேன்

      Delete
  6. மெமரிகார்டில் பதிந்த தகவல்கள் சிறப்பு! கல்யாண மாப்பிள்ளை மீண்டும் பதிவெழுத வந்ததில் மிக்க மகிழ்ச்சி! கவிதை சிறப்பு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுவாமிகளே

      Delete
  7. நண்பர் மது எஸ்,

    மீண்டும் எனது தளத்தை அறிமுகம் செய்ததற்கு நன்றி. மேலும் என்னை ஒரு இசைப் பதிவர் என்று அழைத்ததற்கு இன்னொரு பெரிய நன்றி.

    ----ஒரு முறை இவர் பதிவு ஒன்றைப் பிரிண்ட் செய்ய முயன்ற பொழுது முப்பத்தி ஐந்து பக்கங்கள் என்றது வோர்ட். ஆகா, இது வேலைக்காகாது என்று இணையத்திலேயே படிக்க ஆரம்பித்து விட்டேன்.-----

    அவ்வளவுதானா? நீங்கள் எனக்கு வந்த பின்னூட்டங்களையும் சேர்த்து பார்த்திருப்பீர்கள். தனியே பதிவை மட்டும் கணக்கில் கொண்டால் அத்தனைப் பக்கம் வராது என்று தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி
      அடியேன் பதிவினை மட்டுமேதான் காப்பி செய்தேன் ...
      பிரிண்ட் செய்வது எனது வழமை.
      சமீபத்தில் ஊமைக்கனவுகள் வெண்பாப் பதிவுகள் இரண்டும் சேர்ந்து லீகல் தாளில் முப்பத்தி இரண்டு பக்கங்கள் வந்தன.

      Delete
  8. ஆஹா பாவம் பண்டியன் தம்பி...கொஞ்சநாள் விட்டு பிடிக்கலாம்ல...அதென்னெ ரேஷன் போல ம்ம்ம்சரிதான் இதுலயே மூழ்காம....

    ReplyDelete
    Replies
    1. அய்யா புல் போர்சில் இருக்காக.. பாப்போம்

      Delete
  9. #வெல்கம் back அரும்புகள் மலரட்டும்.#
    ஹனிமூனை முடிஞ்சது போலிருக்கே :)
    தம 2

    ReplyDelete
    Replies
    1. வருக ..
      அவர் விளக்கக் கவிதையைப் படிக்கவில்லையா..
      வாக்கிற்கு நன்றி ..

      Delete
  10. அன்புள்ள அய்யா,

    கல்யாண மாலையுடன்.... இது மாலை நேரத்து மயக்கம்!
    ஏதோ வடநாட்டுக்காரரைக் காட்டி ஏதோ சொல்லப் போகிறீர்கள் என்று நினைத்தேன். அப்புறம்தான் நம்ம ஊர்க்காரரு என்று தெரிந்து கொண்டேன். அ....பாண்டியரு... விரைவில் சந்திப்போம்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருக அய்யா நன்றி

      Delete
  11. நல்ல கவிதை...
    சகோதரர் பாண்டியன் மீண்டும் எழுத வந்திருப்பது சிறப்பு...

    ReplyDelete
    Replies
    1. வருக தோழர் நன்றி

      Delete
  12. கல்யாண மாப்பிள்ளை
    மீண்டும் வலைப்பூவிற்கு வந்ததை வரவேற்போம்

    ReplyDelete
  13. கனவில் வந்த காந்தி

    மிக்க நன்றி!
    திரு பி.ஜம்புலிங்கம்
    திரு துளசிதரன் வி.தில்லைஅகத்து

    புதுவைவேலு/யாதவன் நம்பி
    http://www.kuzhalinnisai.blogspot.fr

    ("உலகம் சம நிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வு இல்லா நிலை வேண்டும்".)

    ReplyDelete
  14. வணக்கம் சகோ
    ஆஹா பதிவே போட்டாச்சா! நம்ம ஜேம்ஸ் ஐயா சொல்லித்தான் அறிந்தேன். திருமண ஆல்பத்துல அண்ணன் ரெண்டு போட்டோவை விழுந்து விழுந்து படம் எடுக்கும் போதே எதுக்கோ தயார் ஆகிராட்டுருனு நினைச்சேன் அது இது தானா!! படங்களை நண்பர்களுக்கு காண கொடுத்தது ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது சகோ. வட நாட்டுக்காரர்னு நினைச்சேன்னு நம்ம ஜேம்ஸ் ஐயா சொல்லும் போது நாம அப்படியா இருக்கோம்னு தோணுது. சரி எது செய்தாலும் நம்மல இந்த உலகம் உற்றுப்பார்க்கனும் அதான் முக்கியம். சிறப்பான பகிர்வுக்கு நன்றிகள் சகோ..

    ReplyDelete
    Replies
    1. வாங்க வாங்க ...
      நலம்தானே..
      வருகைக்கு நன்றி

      Delete
  15. கவிதைப் பகிர்வு அருமை தோழர்.
    நீங்கள் பகிர்வதற்கு விஷயம் கிடைத்துவிடுகிறது.
    நானெல்லாம் சும்மா இருப்பதே சுகம் என்று இருக்கிறேன்.
    த ம 4

    ReplyDelete
    Replies
    1. புரியுது புரியுது ...
      வருகைக்கு நன்றி

      Delete
    2. ஐயோ,
      தோழர் என்ன புரிந்து கொண்டீர்கள்?
      தவறாக ஏதுமில்லையே...

      Delete
  16. அறிந்தேன் தோழர்..
    நன்றி

    ReplyDelete

Post a Comment

வருக வருக