விடைபெறல்கள்

சமீபத்தில் என்னை வாட்டிய இரண்டு இழப்புகள்.
1. நண்பர் ப்ருனோவின் பேரிழப்பு 
ஜாக்கி சேகரின் நிலைதகவல் இது ..

ஆழ்ந்த இரங்கல்.

நேற்று இரவு நண்பர் புருனோவின் மனைவி மரித்த செய்தி அறிந்து துடித்து போய்விட்டேன்...

இளம் வயதில் மரணம் ரொம்பவும் கொடுமை...
புருனோ எல்லோருக்கும் நல்லது மட்டுமே செய்து இருக்கின்றார்.... பெரிய பெரிய பிரச்சனைகளில் பதிவுலகத்தினர் சந்தித்த போது ஒரு நண்பனாக தோழனாக தோள் கொடுத்து இருக்கின்றார்.

இன்று மருத்துவமனையில் கூடிய கூட்டமே அதற்கு சாட்சி. டாக்டர் புருனோ இன்றுவரை தனியார்மருத்துவமனையில் பணிபுரியாது அரசு மருத்துவமனையிலேயே பணி செய்துக்கொண்டு இருப்பவர்...

நான் பதிவுலகில் ஒரு காலத்தில் எல்லாத்துக்கும் வரிந்து கட்டிக்கொண்டு சண்டை போட்டுக்கொண்டு இருந்த போதும் சரி...ரவுண்ட் கட்டி என்னை கார்னர் பண்ணிய போதும் சரி...

நண்பர் புருனோ போன் செய்து...

ஜாக்கி எல்லாரும் உங்களை ரவுண்ட் கட்டி இருக்காங்க.... படிச்சவன் மட்டும்தான் எழுதனும் அப்படின்ற பிம்பத்தை உடைச்சி ரொம்ப குறுகிய காலத்தில் நிறைய பேரை சம்பாதிச்சிட்டிங்க... அந்த பொறாமைதான் எல்லாத்துக்கும் காரணம்.. பதில் பேச வேண்டாம்... நீங்க எப்பவும் போல புறக்கணிக்க பழகிக்கோங்க என்று கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல சொல்லி என்னை திசை திருப்பி விட்டவர் அவர்தான்..

ஏதாவது பிராபலமா... மனசு விட்டு அவர்கிட்ட என்ன வேனா பேசலாம்.. அப்படிபட்ட ஆள்... திருமணம் முடிந்து செட்டில் ஆக வேண்டும் என்று பிரிந்து வேவ்வேறு ஊர்களில் புருனோ தம்பதிகள் தங்கள் பணிகளை செய்து பிரிந்து காத்திருந்தனர்.. வாழ்க்கையில் செட்டில் அகும் நேரத்தில் அந்த காலனுக்கு பொருக்கவில்லை.

டாக்டர் புருனோவின் மனைவி அமலி புருனோ நேற்று மதியம்கூட இப்படி ஒரு அசம்பாவிதம் தனக்கு நடக்கும் என்று துளியும் எதிர்பார்த்து இருக்கமாட்டார்... ectopic pregnancy யால் ஏற்பட்ட திடீர் உதிரப்போக்கில் ஏற்பட்ட sudden collapse அவரது உயிரைப் பலிகொண்டு விட்டது...

இதில் பெரிய கொடுமை கணவரும் மருத்துவர்.. மனைவியும் மருத்துவர், அவர்கள் குடியிருந்த வீட்டு ஓனர்களும் மருத்துவர்களே.. ஆனாலும் கையறு நிலை.... யோசனை செய்யக்கூட நேரம் கொடுக்காத காலனின் கயவாளிதனம் இது என்றால் அது மிகையில்லை.....15 நிமிடத்துக்குள் முதலுதவி செய்ய வேண்டுமாம்...

டாக்டர் புருனோ அப்போது மருத்துவமனையில் பணியில் இருக்க... டாக்டரின் மனைவியும் மருத்துவர் என்பதால் அவரும் பணி முடிந்து நேற்று மாலை குளிக்க சென்றவர் குளியல் அறையில் மயங்கி சரிய... உதிரபோக்கு அதிகமாகி அவர்கள் 108க்கு போன் செய்து அரசு மருத்துவமணைக்கு அழைத்து வந்து இறந்த காரணத்தால் அது போலிஸ் கேஸ் ஆகி விட்டது..

தம்பி பாலாவிடம் ஒரு பெண் மருத்துவர் பேசிக்கொண்டு இருக்கும் போது சொன்னார்... எத்தனையோ உயிர்களை அந்த கை காப்பாத்தி இருக்கும் ஆனா அவுங்க சம்சாரத்தை காப்பாற்ற ஒரு சின்ன வாய்ப்பை கூட அது வழங்கலையே என்று அங்கலாய்த்தார்..

அந்த அங்கலாய்ப்பில் உண்மை இல்லாமல் இல்லை.

உன் ஆத்மா சாந்தி அடையட்டும் சகோதரி...முன்னை விட அதிக மிருக பலத்தோடு என் நண்பர் புருனோ இந்த பேரதிர்ச்சியில் இருந்து மீண்டு வர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கின்றேன்.
*********************
2. திருமதி.பிரேமா தக்ஷிணாமூர்த்தி .

எனது பள்ளியின் தலைமை ஆசிரியை 

விடைபெறுக பேரரசியே..

பிரேமா தக்ஷிணாமூர்த்தி என்னொரு பெண்மணி.


ஆங்கில ஆசிரியையாக எனது பள்ளித் தலைமை ஆசிரியையாக ஒரு நல்ல பெண்மணியாக என்னை பேராச்சர்யத்திற்குள்ளாக்கிய தலைவி அவர்கள்.


பள்ளிச் செயல்பாடுகளை அற்புதமாக வடிமைத்து குழுப் பண்பை வளர்த்து உயர்தரத்தில் நிகழ்வுகளை நடத்துவது அம்மாவின் பாணி.

பள்ளிக்கு கொடி, பாடல், நோக்கம், இலட்சியம் என்று ஒரு கார்பரேட் அவுட்லுக் அம்மாவின் சிறப்பு.

நான் ஒரு பயிற்சிக்காக  பெங்களூர் சென்றிருந்த பொழுது நடைபெற்ற ஆண்டுவிழாவில் பங்கெடுக்க முடியவில்லை என்ற வருத்தத்தை தொலைபேசியில் பகிர்ந்தபொழுது என்னை ஆச்சர்யப்படுத்தும் ஒரு விசயத்தை சொன்னார்கள்.

நாளைக்கு என்ன ஸ்பெசல்ன்னு தெரியுமா?

சொல்லுங்கமா.

நம்ம பள்ளியில் படிக்கும் அனைவருக்கும் உணவுத் தட்டுக்களை வழங்கப் போகிறோம்.

படிக்கவர பசங்க சோத்துதட்டை தூக்கிட்டா வரது. இனி நம்ம மாணவர்கள் புத்தகம் மட்டும் கொண்டுவந்தால் போதும் என்றாரே பார்க்கலாம்.

தனது கைக்காசில் பள்ளிக்கு ஆழ்குழாய்க் கிணறு ஒன்றைத் தந்தவர்.

பணியில் சுத்தமாக இல்லாவிட்டால் எடுப்பாரே ஒரு ருத்ர அவதாரம்.

ஆனால் திட்டுகிறாரே என்று அவர்மீது வெறுப்பே ஏற்படாது.

எதுக்காக பயன்களை பெயிலாக்கணும். கிரேட் கொடுத்தா அவன் திறமைக்கு ஏற்றவாறு பிழைத்துக்கொண்டு போகிறான் என்று அவர் அன்றே வருந்தினார். இன்று ஒன்பதாம்  வகுப்பு வரை கிரேட் முறைதான்.

அற்புதமான கல்வியாளர், அருமையான மொழிபெயர்ப்பாளர். திருக்குறள் முழுவதையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வைத்திருந்தார்.

அவரது குழந்தைகளுக்கான ரைம்ஸ் தொகுப்பை இன்றும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.

எனது மகள் நிறை பிறந்தநாளுக்கு சொன்ன நேரத்திற்கு மிகச் சரியாக வந்து பரிசளித்து ஆசிர்வாதம் செய்தவர்கள். பெண்குழந்தைனு ரொம்ப கட்டுப்படுத்தாதீங்க. எங்க அப்பா முழுச்சுதந்திரம் கொடுத்து வளர்த்தால்தான் நான் இன்று கண்ணியத்துடன் இருக்கிறேன். பெண்குழந்தைகள் அவர்களை அவர்களே கட்டுப்படுத்திக்கொண்டு வளர்வாங்க என்று சொன்னது இன்று சொன்னது போல இருக்கிறது.

தனது பேரன்களின் காதணி விழாவில் அவர்கள் வரைந்த அற்புதமான ஓவியங்களை ஒரு நேர்த்தியான அரங்கில் கண்காட்சியாக வைத்திருந்தார்.

எல்லாத் தளங்களிலும் முழுமையான ஒரு வாழ்வை வாழ்ந்தவர் திருமதி. பிரேமா தக்ஷினமூர்த்தி.

அறுபத்தி ஐந்து வயதிற்குள் விடைபெறுவது என்பது வேதனையான விசயம்தான்.

ஒவ்வொரு முறை வீட்டைக் கடக்கையிலும் அம்மாவை ஒருமுறை பார்க்கணும் என்று தோணும். பார்க்கலாம் என்று தள்ளித் தள்ளி...

கடைசியாக ஒரு விசயம் 

தேரில் கட்டப்பட்டிருந்த மாலைகளை உதிர்த்தவரை அழைத்துச் சொன்னார்கள் அய்யா மாலையை உலுக்காதீங்க அம்மா ரோட்ல குப்பை போட்டா வருத்தப்படுவாங்க

இது வாழ்வு.. 

இது நிறைவு ...
விடைபெறுக எங்கள் பேரரசியே ...


Comments

 1. பல நாள் கழித்து உங்கள் தளம் வந்தேன் அண்ணா...இப்பதிவைப் பார்த்து கண்ணீர் வந்துவிட்டது...

  ReplyDelete
  Replies
  1. இயற்கை வைக்கும் முற்றுப் புள்ளி அல்லவா ...
   நாம என்ன செய்ய முடியும்.
   வருகைக்கு நன்றி சகோதரி

   Delete
 2. ஜாக்கி சேகரின் கட்டுரை கண்கலங்க வைக்கிறது. மருத்துவருக்கே இந்தக் கதி என்றால் .....

  ReplyDelete
  Replies
  1. சமீபமாய் மரு. ப்ருனோவை தொடர்பு கொள்ள முடியவில்லை
   மீண்டு வரட்டும்.

   Delete
 3. ஆழ்ந்த இரங்கல்கள்...

  ReplyDelete
 4. தங்களின் தலைமையாசிரியையைப் படித்தபோது “ யாண்டு பலவால நரையில வாகுதல்“ தான் நினைவுக்கு வருகிறது.

  நம் சுற்றமும் நட்பும் சிறப்பாக அமைதலைவிட வேறு பேறென்ன,?

  நன்றி

  த ம1

  ReplyDelete
 5. ectopic pregnancy ஆம் மிகவும் மோசமான ஒன்று....மருத்துவர்களாக இருந்தும் பிற உயிர்களைக் காக்க உதவினாலும், நம் உயிர் நம் கையில் இல்லை என்பது எவ்வளவு நிதர்சனமாகி விட்டது! ஆழ்ந்த இரங்கல்கள்...

  உங்கள் த்லைஅமையாசிரியை எத்தனை உயர்வான பெண்மணி...சிறப்பானவர்களின் உயிர் சீக்கிரமே பிரிந்திடுமோ...

  //பெண்குழந்தைனு ரொம்ப கட்டுப்படுத்தாதீங்க. எங்க அப்பா முழுச்சுதந்திரம் கொடுத்து வளர்த்தால்தான் நான் இன்று கண்ணியத்துடன் இருக்கிறேன். பெண்குழந்தைகள் அவர்களை அவர்களே கட்டுப்படுத்திக்கொண்டு வளர்வாங்க//


  மிக மிகச் சரியான வார்த்தைகள். மதிப்பு கூடுகின்றது! அது போல் மலர் விழுந்தால் குப்பையாகிவிடும் அம்மாவுக்குப் பிடிக்காது...ஆஹா சிறந்தப் பெண்மணியாக வாழ்ந்துள்ளார்!! அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்ர்தனைகள். நல்லோர்கள் வாழ்வார்கள் இதயங்களில்.

  ReplyDelete
  Replies
  1. இவ்வளவு விரிவாக ஒரு பின்னூட்டம்
   நன்றி தோழர்

   Delete
 6. இருவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

  "//பெண்குழந்தைனு ரொம்ப கட்டுப்படுத்தாதீங்க. எங்க அப்பா முழுச்சுதந்திரம் கொடுத்து வளர்த்தால்தான் நான் இன்று கண்ணியத்துடன் இருக்கிறேன். பெண்குழந்தைகள் அவர்களை அவர்களே கட்டுப்படுத்திக்கொண்டு வளர்வாங்க//"

  உண்மையான வார்தைகள். பெண் பிள்ளைகளையுடைய பெற்றோர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி உண்மையானவரே

   Delete
 7. இரண்டு சம்பவங்களும் மனதை மனதை பாரமாக்கிவிட்டன :(
  //மாலையை உலுக்காதீங்க அம்மா ரோட்ல குப்பை போட்டா வருத்தப்படுவாங்க

  இது வாழ்வு.. //
  எவ்வளவு அற்புதமான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் என்பதற்கு இதுவொன்றே சாட்சி !!!

  ReplyDelete
  Replies
  1. பெரும்பான்மை பெண்கள் 200 ஆண்டுகள் வாழ்ந்து அனுபவிக்க சாதிக்க வேண்டியதை அறுபதாண்டுகளில் முழுதாக வாழ்ந்துவிட்டவர் பிரேமா அம்மா ..
   வாழ்க்கை நம்ம பார்த்த்து ஒரு மவுனப் புன்னகையை வீசி வலியைத்தரும் நிகழ்வுகள் இவை.
   நன்றி சகோதரி..

   Delete
 8. இரங்கல் பதிவு இறைத்தன்மை அடைந்தோரின் இறவாப்புகழை செப்பியது! ஜாக்கிசேகரின் தளத்தில் படித்தபோதும் மீண்டும் படித்தேன்! புருனோவின் இழப்பு பேரிழப்புதான்!

  ReplyDelete
  Replies
  1. வார்த்தையில் சொல்ல முடியாத இழப்பு மருத்துவருடையது
   வேறு என்ன சொல்ல முடியும் ஸ்வாமிகள்.

   Delete
 9. அன்புள்ள அய்யா,

  புருனோவின் மனைவி மரித்த செய்தியைப் பார்த்து அதிர்ந்து போனேன். தங்களின் நண்பரின் துணைவியாருக்கு ectopic pregnancy யால் ஏற்பட்ட திடீர் உதிரப்போக்கில் ஏற்பட்ட sudden collapse அவரது உயிரைப் பலிகொண்டு விட்டது... என்று கூறியிருந்தீர்கள். இதுபோல வியாதியை நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை... மனதிற்கு மிகவும் வேதனையாக இருந்தது.

  ReplyDelete
 10. சாமான்ய மக்கள் நிறைய பேருக்கு இன்னும் இந்த ectopic pregnancy பற்றிய விழிப்புணர்வு ஏற்படணும் .
  விரைவில் இந்த விஷயத்தால் பாதிக்கப்பட்ட உயிர் பிழைத்த மிக நெருங்கிய ஒருவரின் அனுபவத்தை அவர் அனுமதி பெற்று எழுதுகிறேன் . இங்கிலாந்து அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசரின் மனைவிக்கும் //sophie //
  இப்பிரச்சினை ஏற்பட்டு உயிர் பிழைத்தவர் தான்

  ReplyDelete
  Replies
  1. எழுதுங்க சகோதரி.

   Delete
 11. கண் கலங்க வைத்த மரணங்கள் !
  த ம 2

  ReplyDelete
 12. காலம்தான் உங்கள் மனக் காயங்களை ஆற்ற வேண்டும். என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள். மறைந்து போன அன்னாரது ஆன்மாக்கள் சாந்தி அடையட்டும்.

  ReplyDelete
 13. வருத்தம் தான்..எனக்கும் 2 பேரிழப்புச்செய்திகள்..பொன் .க அய்யா பெயரன்,எங்கள் பள்ளி 10ஆம் வகுப்பு மாணவி...தற்கொலை...மரணங்களைச்சந்தித்துக்கொண்டே தான் நகர்கின்றோம்..

  ReplyDelete
 14. வணக்கம்.!நெகிழ்வான செய்தி.

  ReplyDelete

Post a Comment

வருக வருக