நமது நாளைகள் ....

குழந்தைகள் தினத்தையொட்டி ஒரு புனே சிறுமி அஸ்ஸாமை கொண்டு வரைந்த டூடுள் 
நண்பர் பு.கோ. சரவணன் அவர்களின்  ஒரு முகநூல் நிலைத் தகவல்.
ஜெயப் பிரபு பகிர்ந்திருந்தார். பல கேள்விகளை என்னுள் எழுப்பியது.

எனது பாடத் திட்ட தயாரிப்பு குறித்து நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்று யோசிக்க வைத்த ஒரு பதிவு. 


"அங்க பாருப்பா.... பச்ச பசேல்ன்னு வளர்ந்திருக்கில்ல..
அதெல்லாம் என்னா தெரியுதா?"

-ரயிலில் எனக்கெதிரே அமர்ந்திருந்த ஒரு அன்னை தன் குட்டி மகளை சன்னலுக்கு வெளியே கைகாட்டி கேட்கிறாள்.

"புல்லும்மா... நெறயா வளர்ந்திருக்கு... கட் பண்ணி வைக்க மாட்டாங்களாம்மா?.."
-மகள்.

சொரேலென்றது எனக்கு... 

நெல் விளையும் நிலத்திற்கும், நாற்றுக்கும், புற்களுக்குமிடையேயான வித்தியாசம் தெரியாத ஒரு தலைமுறையை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

"Children are great imitators. So give them something great to imitate."

என்ற வரிகளில் எத்தனை உண்மையிருக்கிறதோ, அத்தனை உண்மை நாம் அவர்கள் பின்பற்ற,வாழ வழங்கும் செய்திகள் குறைந்து கொண்டே வருவதும்.

சிறிய சிறிய கூட்டல்,கழித்தல் கணக்குகளைக் கூட போடத் தெரியவில்லை.

நூற்றுக் கணக்கான முகவரிகளையும், தரைவழித் தொடர்பு தொலைபேசி எண்களையும் நினைவில் கொண்டிருந்த நாம்,
நம் பிள்ளைகளுக்கு பெற்றோரின் அலைபேசி எண்களை மனதில் நிலை நிறுத்தப் படாத பாடுபடுகிறோம்.

சந்து பொந்துகளிலும், பொட்டல் வெளிகளிலும் ஓடியாடி விளையாடி மகிழ்ந்த போது ஏற்பட்ட பெருத்த காயங்களுக்கெல்லாம், உமிழ் நீரும் ,காப்பித் தூள்களுமே அவசர கால மருந்துகளாகப் பட்டன நமக்கு. அப்போது மருத்துவமனைகளும், மருத்துவர்களும் மிகக் குறைவே.

இப்போது செல்போன்களிலும், கம்பியூட்டர்களிலும் 3 வயது குழைந்தைகள் கூட கால்பந்து உள்ளிட்ட எல்லா கேம்களையும் அனிமேஷன்களில் விளையாடி மகிழ்கின்றனர். வீட்டை விட்டு வெளியில் சென்று விளையாடச் சொன்னால் ஆங்க்ரி பேர்ட்ஸ் ஆகின்றனர்.

அதைத் தொட்டால் ,இன்ஃபெக்க்ஷன், இதைத் தொட்டால் பாக்டீரியா என 'லைப்பாய்,ஹமாம் விளம்பரங்களில்' பூதக் கண்ணாடிக்குள் நெளியும் புழுக்களைக் கண்டு பயந்து சங்கிலி போட்டுக் கட்டாத குறையாய் கதவடைத்தும் வைக்கிறோம் நம் குழந்தைகளை.

படிப்பு, உலகை காட்டுவதற்கு பதிலாய், 'ஸ்டேஷனரி ஷாப்புகளையே' குழந்தைகளின் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது.

பீட்ஸா,பர்கருலகில் வாழும் நாம், நம் குழந்தைகளின் படிப்பிற்காக ப்ராஜெக்ட்ஸ் என்ற பெயரில் கடை கடையாய் ஏறி இறங்குகிறோம்.

"ஏன்? எதற்கு? எப்படி?" -என்று கேட்காத 'அறியாத ஸ்டாட்டில்களை'
உருவாக்கி வருகிறோம்.

மாலை, பள்ளி விட்டு வேனிலிருந்து இறங்கும் குழந்தைகளின் முகம் பார்ப்பதற்குக் கூட மனதின்றி ஹோம்வொர்க் நோட்டை பார்த்து பரபரப்படைகின்றனர் பெற்றோர்.

கால அட்டவணை போட்டே பல வீடுகளில் பெற்றோர் குழந்தைகளிடம் பேசுகின்றனர்.

"சைன்ஸ் என்னாச்சு? மேத்ஸ் ப்ராப்ளம் முடிஞ்சிட்டா? மெமரி போயம் பத்து தடவ எழுது.. ஹிந்தி நோட் எடு.. "- என்ற வார்த்தைகளைக் கேட்டுக் கேட்டு மரத்துப் போய்விட்டன பிஞ்சு உள்ளங்கள்.

எத்தனை பெற்றோர் நிலவையும், விண்மீன்களையும் ஆண்டுக்கொருமுறையேனும் தங்கள் குழந்தைகளுக்குக் காட்டி பரவசமடைந்திருக்கிறீர்கள்?

உங்கள் குழந்தை வண்ணத்துப் பூச்சியை உயிருடன் நேரில் கண்டதுண்டா? 

பசு மாட்டிற்கும்,கன்றிற்குமான பாசத்தை ஒரு தடவையாவது அவர்கள் காண வழியுண்டா?

குழந்தையின் கரம் பிடித்து காலாற பூங்காக்களில் நீங்கள் நடக்கையில்,
சொர்க்கம் உங்கள் உள்ளங்கையில் படரும் சுகத்தை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?

ஒவ்வொரு குழந்தையும் இறைவனால் பூமியில் மனிதர்களின் மகிழ்ச்சிக்காய் பணியமர்த்தப்பட்டவர்கள் என்ற உண்மையை நீங்கள் உணர்ந்ததுண்டா?

அவசர உலகமென்ற பேரில், குழந்தைகளுக்கான பாடல்களையும், கதைகளையும், திரைப்படங்களையும் உள்ளடக்கிய குழந்தை இலக்கியங்களை ஒட்டு மொத்தமாக குழி தோண்டி புதைத்துவிட்ட மாபெரும் குற்றத்தை செய்துவிட்ட தலைமுறையில் நானும் ஓர் அங்கம் என்பதை நான் மறுப்பதற்கில்லை.

குழந்தைகளின் உலகம் மிகப் பெரிது!
அளவிட முடியாதது.
அவர்களது கற்பனைத் திறன், நமது எதிர்கால இந்தியாவிற்கே மிகப் பெரிய சொத்து.
பற்பல கண்டுபிடிப்புகளுக்கும், மாற்றங்களுக்கும் அவையே அடிப்படை..
ஒன்றுக்கும் உதவாத மதிப்பெண்களை மட்டுமே வைத்து அவர்களை மதிப்பிடாதீர்கள்.

நாளை 'குழந்தைகள் தினம்'. 

அன்று மட்டுமாவது, குழந்தைகளோடு குழந்தையாக வாழ்ந்து பாருங்களேன்.

நீங்கள் இழந்தனவும், அவர்களிடமிருந்து நீங்கள் பறித்தனவும், உங்கள் பொட்டில் அறைந்து சொல்லும்.

Comments

  1. ஆசிரியர் அல்லவா? குழந்தைகள் தினத்தின் போது பொருத்தமான கட்டுரை ஒன்றை தந்தீர்கள். நன்றி!
    த.ம.1

    ReplyDelete
  2. இழந்திருக்கிறோம், பறித்திருக்கிறோம் என்பதுதான் உண்மை

    ReplyDelete
  3. Replies
    1. வரவான ஓட்டிற்கு நன்றி

      Delete
  4. ஆஹா... அருமையான கட்டுரை...
    உண்மையை உரைத்துச் சொல்லும் பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி பரிவிற்கு

      Delete
  5. \\அன்று மட்டுமாவது, குழந்தைகளோடு குழந்தையாக வாழ்ந்து பாருங்களேன்.\\
    எனது மனம் கனத்து விட்டது தோழரே நான் நிறைய இழந்து விட்டேனே... என்பதை நினைத்து.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வேதனை புரிகிறது தோழர்..
      வருத்தங்கள்தான்

      Delete
  6. “படிப்பு, உலகை காட்டுவதற்கு பதிலாய், 'ஸ்டேஷனரி ஷாப்புகளையே' குழந்தைகளின் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது.“

    “மாலை, பள்ளி விட்டு வேனிலிருந்து இறங்கும் குழந்தைகளின் முகம் பார்ப்பதற்குக் கூட மனதின்றி ஹோம்வொர்க் நோட்டை பார்த்து பரபரப்படைகின்றனர் பெற்றோர்.“

    “அவசர உலகமென்ற பேரில், குழந்தைகளுக்கான பாடல்களையும், கதைகளையும், திரைப்படங்களையும் உள்ளடக்கிய குழந்தை இலக்கியங்களை ஒட்டு மொத்தமாக குழி தோண்டி புதைத்துவிட்ட மாபெரும் குற்றத்தை செய்துவிட்ட தலைமுறையில் நானும் ஓர் அங்கம் என்பதை நான் மறுப்பதற்கில்லை“ --
    ----------- நான் இல்ல மதூ... நாம்..நாம்...நாம்
    அய்யா அருமைய்யா... முகத்தில் அறைந்த வாசகங்கள்...
    உறைக்க வேண்டியவங்களுக்கு உறைக்கமாட்டேங்குதே..
    இருந்தாலும் சொல்லிக்கிட்டே இருக்கணும்.. உறைக்கும் உறைக்கவைப்போம்
    நன்றிய்யா.. மனசத்தொட்டுட்டீங்கய்யா..

    ReplyDelete
    Replies
    1. உங்களின் ஆழமான பார்வை அருமை
      வருகைக்கு நன்றி அண்ணா.

      Delete
  7. உண்மைதான்!.. உளந்தொட்ட... உண்மையைத் தொட்ட பதிவு!..

    இப்பொழுதேனும் இதைச் சிந்திக்காது விட்டால் எஞ்சாது ஒன்றும்..!

    அருமை! நல்ல பகிர்வு சகோ! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. பால் எப்படி கிடைக்கிறது என்று கேட்டால் டிப்போவில் இருந்து வருகிறது என்று சொல்லும் பிள்ளைகளும் இருக்கிறார்கள் .இன்னும் ஒரு படி மேலே போய்,,வாசலில் தொங்கும் பையில் பால் பாக்கெட் இருப்பது எனக்குத் தெரியும் ,அது எங்கிருந்து எப்படி வருகிறது என்பது தெரியாது என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள் ,நகர்மயம் ஆவதன் விளைவு ,பிள்ளைகளின் உலகம் நரகமயமாகி வருகிறது !
    த ம 5

    ReplyDelete
    Replies
    1. உணமைதான் பகவானே

      Delete
  9. அன்று மட்டுமாவது, குழந்தைகளோடு குழந்தையாக வாழ்ந்து பாருங்களேன்.//

    ஆஹா! என்ன அருமையான வார்த்தைகள்! உண்மை! இன்று பெற்றோரும், குழந்தைகளும் நடைப்பிணங்களாக, ரோபோக்களாகத்தான் வாழ்கின்றார்கள். மிக மிக அருமையான ஒரு கட்டுரையை அதுவும் இன்று குழந்தைகள் தினத்தில் பதிவு செய்ததற்கு உங்களுக்கு மிகப் பெரிய பூசெண்டும், பாராட்டுக்களும்!

    ReplyDelete
    Replies
    1. இது தோழர் பு.கோ சரவணின் பதிவு தோழர்
      பகிர்வு மட்டுமே நான்.
      எழுப்பும் கேள்விகளின் நியாயம் என்னைச் சுட்டது எனவே பகிர்ந்தேன்

      Delete
  10. ஒவ்வொரு கேள்வியும் சாட்டையடி! சிறப்பான பகிர்வு! இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ... தோழர்

      Delete
  11. அன்றைய, இன்றைய குழந்தை வளர்ப்பு நிலைகளை நறுக்கென்று சொன்னதற்காக உங்களுக்கு என் வாழ்த்துக்களும் வணக்கங்களும் சாரே /// மனிதன் உணரனும், மனம் மாறனும் .... எனக்குள்ள கவலை என்னவெனில் இன்றே இப்படியெனில், நாளைக்கு எப்படி இருக்குமோ என்பது தான் ////

    ReplyDelete
    Replies
    1. நாள் நிச்சயம் மாறியாகவேண்டிய கட்டாயம் இருக்கிறது ...

      Delete

  12. நிறைய பறித்துவிட்டோம் குழந்தைகளிடமிருந்து ..பாவம் அவர்கள் ..:(
    படித்த கவிதை வரிகள் //வருடம் தவறாமல் குழந்தைகள் தினம் கொண்டாடுபவர்களே !
    இனிமேல் தினங்களை விட்டு விட்டு குழந்தைகளை எப்போது
    கொண்டாட போகிறீர்கள் ?
    -கவிக்கோ அப்துல் ரகுமான் //

    அருமையான பகிர்வு !
    பட்டாம்பூச்சிகளையும் ,கூட்டுபுழுக்களையும் ,சிறு பறவைகளையும் காட்டாமல் ..தொலை காட்சியில் மானா மயிலா /சூப்பர் சிங்கர் போன்ற மாயைகளிலும் அமிழ்கிறோம் !!

    நினைவுக்கு வருது ..நண்பி ஒருவரின் மகள் ..முட்டை எங்கிருந்து வருது என்பதற்கு பதில் சூப்பர் மார்க்கெட் என்று சொல்லியிருக்கா ..நாமெல்லாம் கோழி ஆடு மாடு வளர்த்து பார்த்தவர்கள் ....தீம் பார்க்குக்கு அழைத்து செல்வதை விடுத்து அட்லீஸ்ட் farm போன்ற இடங்களுக்காவது பிள்ளைகளை அழைத்து போகணும் ..இங்கே அப்படி செய்கிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. நிறைய சொல்லுங்க லவுட் ஸ்பீக்கரில் நன்றி

      Delete
  13. நெல்மரம் என்று எங்கேயோ படித்தது நினைவுக்கு வருகிறது உங்கள் பதிவு பார்த்ததும்...!
    கற்க வேண்டியதைக் கற்காமல் தொலைக்கும் இளமையில் கல்வியை அச்சிடப்பட்ட சில புத்தகங்களுள் அடக்கிவிட்ட கல்வி முறை.....!
    அதில் மாணவரை வைத்துச் சற்றும் அகலாமல் அடைக்காக்க வேண்டிய ஆசிரியர் சமுதாயம்...

    தங்கள் பகிர்வுடன் இந்நாள் முழுவதும் இது பற்றிய சிந்தனைகளாய்க் கடந்தது.

    நேற்று நீங்கள் செய்தது பேருதவி!

    நன்றி

    த ம 6

    ReplyDelete
    Replies
    1. ஆகா நிறய எண்ணங்களை என்னுள் விதைத்தது இந்தப் பதிவு
      திரு. பு.கோ சரவணன் அவர்களின் பதிவு தோழர் ..

      Delete
  14. அருமையான கட்டுரை நண்பரே....

    ReplyDelete
  15. அன்புள்ள அய்யா,
    நமது நாளைகள் ....நண்பர் பு.கோ. சரவணன் அவர்களின் ஒரு முகநூல் நிலைத் தகவல் ...அருமையான பெற்றோராக இருக்க குழந்தைகள் தினத்தையொட்டி பல அரிய கருத்துகள் சொல்லியிருந்ததற்கு பாராட்டுகள்.
    அதை நாங்கள் பார்க்க தாங்கள் பகிர்ந்ததற்காக நன்றிகள்.


    "அங்க பாருப்பா.... பச்ச பசேல்ன்னு வளர்ந்திருக்கில்ல..
    அதெல்லாம் என்னா தெரியுதா?"

    "புல்லும்மா... நெறயா வளர்ந்திருக்கு... கட் பண்ணி வைக்க மாட்டாங்களாம்மா?.."
    -மகள்.
    ஆமாம்...நெல்லுக்கும்...புல்லுக்கும் வித்தியாசம் தெரியாமல்தான் வளர்க்கிறோம்.
    ஒரு முறை ராஜுவ் காந்தி தனது சுற்றுப் பயணத்தின் பொழுது திடிரென ஒரு குடிசைக்குள் நுழைந்து விட்டார். அங்கு அவருக்கு வேர்க்கடலை கொடுத்திருக்கிறார்கள்....நன்றாக இருக்கிறது...இது எந்த மரத்தில் விளைகிறது என்று கேட்டாராம் பாருங்களேன்.
    பிள்ளைகளின் மதிப்பெண்களைப் பார்ப்பதை விட்டுவிட்டு...
    பிள்ளை மனங்களை மதிக்கக் கற்றுக்கொள்வோம்.

    ‘முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே!’
    முத்து நிலவன் அய்யா நினைவுக்கு வருகிறார்.
    நன்றி.

    ReplyDelete
  16. இனிய நண்பரே தங்களை தொடர்பதிவில் இணைத்திருக்கிறேன் எனது வலைப்பூ வந்து அறிந்து கொள்ளவும்,
    அன்புடன்
    தங்களின் நண்பன்
    கில்லர்ஜி.

    ReplyDelete

Post a Comment

வருக வருக