மரணத்தை வென்றவர்கள் ... காதர் அவர்களின் முகநூல் இற்றை.

ஆக்கம்
திரு.காதர் 
கிளிக்செய்தால் அவரது முகநூல் கணக்கை அடையலாம்.)


மனிதம் முன் நின்று
மதங்கள் பின் நின்று
மக்கள் மனதை உருக்கிய
இரு மரணங்கள் ...
மரணம் ஒன்று - ஹெஸன் -ஜெர்மனி :

இன்று ஜெர்மன் முழுக்க உச்சரிக்கப் பட்ட ஒரு பெயர் தக்சி அல்பய்ராக், துருக்கிய முஸ்லிம் பெண்.

மெக்டொனாலில் ஒரு இரவு உணவுக்காக சென்ற தக்சி , அங்கே பாத்ரூமில் இரண்டு இளம் பெண்களை மூன்று கயவர்கள் மானபங்கம் படுத்திக் கொண்டிருந்தததை கண்டதும், அவர்கள் யார் என்றே அறியாதிருந்தும்,. மக்டோனால்டின் ஊழியர்கள் யாரும் உதவிக்கு வர மறுத்த நிலையிலும், அவர்களோடு தனியாளாக போராடி அந்த இரு பெண்களையும் மீட்டார்.

விஷயம் அத்தோடு முடிந்தது என நினைத்து உணவருந்தி முடித்து விட்டு தனியாக புறப்பட்ட தக்சியை, வஞ்சத்தோடு காத்திருந்த கயவர்கள் கண் மூடித்தனமாக தாக்கினர் . படுகாயமுற்று கோமா நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்ட தக்சி, மூளைச்சாவு அடைந்து விட்டதால் இனி எந்த முன்னேற்றமும் கிடைக்கப் போவதில்லை என மருத்துவர்கள் அறிவித்ததை ஒட்டி, பொறுத்த பட்டிருந்த சுவாச கருவிகள் நீக்கப்பட்டு அவரது 23வது பிறந்த நாளான இன்று, இன்று இவர் உயிர் பிரிக்கப் பட்டது,

இந்த பெண் வைக்கப் பட்டிருந்த மருத்துவ மனை முன் இந்த இரண்டு வாரங்களும் இங்கே கூடிய மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காதது, இவரை ஒரு இஸ்லாமியராக மக்கள் பார்கவில்லை,தங்கள் வீட்டு பெண்ணுக்கு ஏற்பட்ட ஒரு நிகழ்வாய் இதை கண்ட மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பிரார்த்தனைகளும் கேண்டில் லைட் விஜிலன்ஸ் நடத்thiனர், இவருக்கு ஜெர்மனியின் உயர்ந்த விருதான Federal Order of Merit விருது பரிந்துரைக்கப் ப்டடுள்ளது.
-------------------------------------------------------------------
மரணம் இரண்டு- அய்யம்பேட்டை -தஞ்சை

டாக்டர் கோட்டைச்சாமி - அய்யம்பேட்டை இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் பகுதியில் சிறிய கிளினிக் நடத்தி வந்த மருத்துவர். அங்குள்ள இஸ்லாமிய மக்களுடன் ஒன்றிப் பழகி. இரவு பகல் பாராமல் நோயாளிகள் அழைத்த குரலுக்கு ஓடியவர். அந்த ஊரின் அத்தனை இஸ்லாமியர்களையும் சொந்த சகோதரனைப் போல் பெயர் சொல்லி அழைக்கும், அய்யம்பேட்டை மக்கள் மனதில் இருந்து மருத்துவப் பணி செய்த டாக்டர் கோட்டைச் சாமி அவர்கள், ராமேஸ்வரம் சென்று திரும்பும் போது எதிர்பாரா விபத்து ஏற்பட்டு அகால மரணமடைந்தார். அய்யம் பேட்டையில் இவரது மரணம் கேட்டு கண்ணீர் சிந்தாதவரே இல்லை. இவரது இறுதி சடங்கில் திரண்ட முஸ்லிம் மக்களின் கூட்டம் கண்டு ஊரே வியந்து போனது.

இங்கே இறந்து போன இவர்கள் இருவருககும் கண்ணீர் சிந்தியவன் மற்றொரு மதத்தை சார்ந்தவன்.

சாதாரண மனிதர்களாய், தன்னலம் பாராமல் மனிதத்தை உயர்த்தி பிடித்தவர்கள்.

இந்த இரண்டு மரணங்களிலும் கூடிய கூட்டம் கூறும் பாடம்
மனிதம் ஒரு போதும் சாகாது என்பதே

நல்ல மனிதர்கள் எபோதும் போற்றப்படுவார்கள்.
நாமும் நல்லவர்களாகவே மரணிப்போம்..

ஆக்கம்
திரு.காதர்  (கிளிக்செய்தால் அவரது முகநூல் கணக்கை அடையலாம்.)

Comments

 1. ஒருவன் எப்படி வாழ்ந்தான் என்பது அவனது மரணத்தில் தெரியும் என்பார்கள்!
  உண்மைதான் தோழர். இவர்களின் பிறப்பிற்கும் வாழ்விற்கும் அர்த்தம் இருக்கிறது.
  பகிர்விற்கு நன்றி!
  த ம ? ( இணைக்கலாமா எனத் தெரியவில்லை )

  ReplyDelete
  Replies
  1. இது ஆட்டோ போஸ்ட்..தேதி நேரம் குறிப்பிடப் பட்டது... எனவே நான் தமிழ் மனத்தில் இணைக்க வில்லை..
   வருகைக்கு நன்றி

   Delete
 2. கண்டிப்பாக நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை !

  மனிதத்தைப்பாராட்டாதவன் விலங்கிற்கும் கீழ்நிலையிலிருப்பான் . அருமையான பதிவு

  ReplyDelete
 3. இயற்கையோடு ஒன்றெனக் கலந்த இருவருக்கும்
  வீர வணக்கம் சொல்வோம்
  மதங்களைக் கடந்த மனித நேயர்கள்
  என்று போற்றுவோம்

  ReplyDelete
 4. இந்த மனித நேய செய்தி நண்பர்களிடம் நானும் பகிர்ந்து கொண்டேன் !
  த ம 2

  ReplyDelete
 5. அருமையான பகிர்வு.....

  மனிதம் தான் முக்கியமே தவிர மதம் அல்ல.....

  ReplyDelete
 6. ஜாதி, மதம் இதற்கெல்லாம் அப்பாற்பட்டது ‘’மனிதநேயம்’’ இருவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம் தோழரே...

  ReplyDelete
 7. நல்லதொரு பகிர்வு...
  பகிர்வுக்கு நன்றி சார்....

  ReplyDelete
 8. நல்லவர்களை அறிய தந்தமைக்கு நன்றி!!

  ReplyDelete
 9. "உன் நண்பனைக் காட்டுங்கள். நீங்கள் யாரென்று சொல்லிவிடமுடியும்" என்ற ஒரு வாசகம் உண்டு. ஆனால் அது அத்தனை உண்மை என்று சொல்லிட முடியாது.
  ஒருவரின் மரணம்தான் அவர் எப்படிப்பட்டவர் என்பதைச் சொல்லும் என்பதுதான் சரியோ என்று பல சமயங்களில் தோன்றும். சாதி, மதம், இனம் பாராமல் மக்கள் உண்மையான கண்ணீர் அஞ்சலி செலுத்தினால் அதுதான் அந்த இறந்தவருக்குக் கிடைக்கும் மாபெரும் மரியாதை. அப்படிப்பட்ட இரு நல்ல மனிதர்களைப் பற்றி பகிர்ந்ததற்கு மிக்க நன்றி! மனிதம் இன்னும் நிலைத்திருக்கின்றது!

  ReplyDelete

Post a Comment

வருக வருக