அம்மாவின் பள்ளி

எனது பால்யம் முழுவதுமே அம்மாவின் பள்ளி பற்றிய நினைவுகள் நீக்கமற இருக்கின்றன.

இன்று மாதிரி இணையம் தொ.கா என்றெல்லாம் இல்லாத அற்புதமான காலம் அது. சுஜாதாவையும் ஜெயகாந்தனையும் அம்மாவுடன் பேசிக்கொண்டிருப்பார் அப்பா.

வாய்ப்புக்கிடைக்கும் பொழுதெல்லாம் தனது  பள்ளியைக் குறித்து சொல்லிக்கொண்டே இருப்பார் அம்மா! ஒரு பையனுக்கு கொட்டாவி விட்ட வாக்கில் வாய் திறந்த வாக்கில் இறுகிக் கொண்டது. தமிழய்யா ஒருவர் கங்கு ஒன்றை எடுத்து வாயில் போடப் போவதாகச் சொன்னதும் அந்தச் சிறுவனின் வாய் மூடியது குறித்தும் சொல்வார்கள்.

அம்மா வாங்கிய பரிசுப் புத்தகங்கள், அவரது தம்பி பேச்சுப் போட்டியில் வாங்கிய பரிசுகள் என்று ஒரு குறும் சேகரிப்பே உண்டு அம்மாவிடம். எனக்கு நன்றாக நினைவிருகிறது பச்சை அட்டையில் நடுவே வெள்ளை செவ்வகத்தில் இலெமூரியா கண்டம், குமரிக்கண்டம் என்று தலைப்பில் எழுதப் பட்ட புத்தகம் இன்னும் எனது வீட்டில் இருக்கிறது. முதல் பக்கத்தில் பரிசு விவரத்துடன்! (இத்தகு தவறுகளை ஒருபோதும் நான் என் பள்ளிப் பருவத்தில் செய்ததே இல்லை என்பது கூடுதல் தகவல்).

புத்தகங்கள்தான் எவ்வளவு நீண்ட நாட்களுக்கு நம்முடன் தங்குகின்றன. அம்மாவின் பள்ளியை குறித்த ஒரு மரியாதை எப்போதுமே எங்களுக்கு உண்டு.

தனது மாணவர்களுக்கு ஒரு பள்ளி செய்ய வேண்டிய அத்துணைக் கடமைகளையும் அற்புதமாக நிறைவேற்றும் பள்ளியாக அது இருந்திருப்பதை உணரமுடிந்தது.

இன்றும் அம்மாவை தேடிவந்து நட்பு பாராட்டும் திருமதி.செல்வலக்ஷ்மி, திருமதி. ஃபான்சி, காலம்சென்ற திருமதி. காஞ்சனா சித்தி, அவர்களுடைய கணவர் திரு எம்.பி. சுப்ரமணியன், சமீபத்தில் விடைபெற்ற திரு.அய்யாமுத்து போன்ற உயரிய நட்புக்களை தந்த பள்ளி இது.

மேலும் அம்மாவின் சகோ திரு. சோலைராஜ் இந்தப் பள்ளியில்தான் படித்தார். இந்தப் பள்ளியின் அனுபவங்கள்தான் அவரை ஒரு சட்டமன்ற உறுப்பினராக வளர்த்தெடுத்தது.

சில ஆண்டுகள் ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தில் இளநிலை விரிவுரையாளராக பணியாற்றிய பொழுது ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது இரண்டுபேராவது இந்தப் பள்ளியில் இருந்து தர அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு புதுகைக்கு ஆசிரியப் பயிற்சி பெற வருவதையும் கவனித்திருந்தேன்.

திரு. அய்யாமுத்து அவர்கள் காலமான பொழுது இரங்கலுக்கு வந்திருந்த திரு.எம்.பி சுப்பரமணியன் அவர்கள் கருமுத்து தியாகராஜ செட்டியாரின் புரவலர் பண்பை சிலாகித்து சொன்னார். தொழிலாளர் குடியிருப்பிற்கு இரண்டு முறை நன்னீர், தனி ரேஷன், பள்ளி, மதுரையில் தியாகராஜா கல்லூரிகள் என அவர் சொன்னபொழுதுதான் ஒரு பெரும் ஆளுமையின் சமூகக் கடமையை உணரமுடிந்தது. ஹாட்ஸ் ஆப் டு தியாகராஜ செட்டியார்.

என்னிடம் சொன்ன மாதிரியே எனது குழந்தைகளிடமும் அம்மா சொல்லி இருக்கிறார். குழந்தைகள் பள்ளியைப் பார்த்தாக வேண்டும் என்று ஒரே அடம். சரி என்று சொல்லி அம்மாவுடன் சகோ.பழனிச்செல்வம், மாப்ஸ் சரத் சகிதம் பள்ளிக்கு சென்றோம். சரத் புகைப்படத்தில் ஆர்வம் உள்ளவர். படம் எடுத்து தள்ளிவிட்டார்.

ஆச்யர்மாக விடுமுறைதினத்தின் அந்த பிற்பகலிலும்  மைதானத்தில் ஹாக்கி பயிற்சி. அதுவும் பெண்கள் அணி!

தலைமை ஆசிரியர் திரு.அருளரசன் அவர்களைச் சந்தித்து அனுமதிபெற்று பள்ளியை சுற்றினோம். தலைமை ஆசிரியர் பழம்பெருமை மிக்க அந்தப் பள்ளியின் மாண்பை பக்குவமாக பராமரிப்பது புரிந்தது.


நாங்க விடைபெற்ற பொழுது ஒரு மாணவியர் குழு கொக்கோ போட்டியில் வெற்றி பெற்று ரூபாய் மூவாயிரத்தை தலைமை ஆசிரியரிடம்தர அவர் குழந்தைகளுக்கு பிரித்துக் கொடுத்துவிடுங்கள் என்று சொன்னார்.

இன்னும் தொடரும் இந்தப் பள்ளியின் சாதனைகள்!

மகிழ்வாகத் தான் இருந்தது மணவைப் பள்ளியின் அனுபவம்!

Comments

  1. என்றும் மறக்க முடியாத இனிய அனுபவம்...!

    ReplyDelete
    Replies
    1. ஆகா உடனடி வருகை...
      நன்றிகள் அண்ணாத்தே

      Delete
  2. வணக்கம்
    மறக்க முடியாத நினைவுகள் தான் சொல்லிச் சென்ற விதம் சிறப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி த.ம2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. உங்கள் அம்மாவின் பள்ளியை சொல்லி, எனக்கும் என் பள்ளியின் ஞாபகத்தை ஏற்படுத்தி விட்டீர்கள் சகோ. குழந்தைகள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி உண்மையானவரே ..

      Delete
  4. ///அம்மாவின் பள்ளியை குறித்த ஒரு மரியாதை எப்போதுமே எங்களுக்கு உண்டு.//
    அதுமட்டுமல்லாமல் அம்மாவின் மீது நீங்கள் வைத்திருக்கும் மதிப்பும் இந்த பதிவின் மூலம் அறிய முடிகிறது. பாராட்டுக்கள் நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தமிழன் அவர்களே

      Delete

  5. உங்கள் பதிவின் மூலமும் மைதிலி அவர்களின் பதிவின் மூலமும் நான் அறிந்து கொண்ட விஷயம் இதுதான் நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம்..

    ReplyDelete
    Replies
    1. இனிமையான நினைவுகள் சுழலும் பொழுது வந்த பதிவு ...
      அம்மாவை விடாப் பிடியாக அழைத்துச் சென்ற குட்டீஸ்தான் இந்தப் பதிவுக்கு காரணம்..
      நன்றி ..

      Delete
  6. பாட்டியின் பக்கத்தில் சிரித்து கொஞ்சி விளையாடும் குட்டிஸ்கள் நல்ல சுட்டிகள்தான் போல அதிர்ஷ்டகார குழந்தைகள் அக்குழந்தைகள் வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகிறேன்

    ReplyDelete
    Replies
    1. குட்டீசிடம் சொல்லிவிடுகிறேன் நன்றி

      Delete
  7. என்னுடைய பள்ளி நினைவுகளையும் ஞாபகப்படுத்தியது தங்களின் பதிவு அண்ணா !!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி அதிரடி விமர்சகரே

      Delete
  8. இனிய நினைவுகளுடன் பகிர்வு அருமை அண்ணா..அம்மாவையும் குழந்தைகளையும் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. நாங்களும் ஹனியையும் ஆல்வினையும் மிஸ் பண்ணறோம்... வருகைக்கு நன்றி

      Delete
  9. அம்மாவின் பள்ளி, அம்மாவின் நட்பு வட்டம் – மலரும் நினைவுகளை மாலையாக்கி பகிர்ந்தமைக்கு நன்றி.
    த.ம.4

    ReplyDelete
    Replies
    1. நன்றி பீஷ்ம பதிவரே...

      Delete
  10. மலரும் நினைவுகள் அருமை தோழரே...
    தமிழ் மணம் 5

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே...

      Delete
  11. ஒரு அழகான பயணம் அம்மாவின் பள்ளியை நோக்கி...
    அருமை... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. வணக்கம் சகோ
    நான் படித்த பள்ளியும் இது தான். இதில் அம்மாவும் படித்தார் என்ற செய்தி நம் வீட்டிற்கு வந்த போது தான் தெரிந்து கொண்டேன். அம்மாவின் அன்பைக் கூட முழுதாக பெற்றேன். பழமையான பள்ளி நிறைய மாணவர்களை வாழ்க்கையில் நிறைவான இடத்திற்கு உயர்த்திய பள்ளி. அங்குள்ள ஆசிரியர்கள் எப்பவே எம்மனதை விட்டு நீங்காது இடம் பிடித்தவர்கள். அவர்களின் மனதில் நானும் நீங்காது இன்று வரை இடம் பிடித்திருப்பது எனக்கு நெகிழ்ச்சியாக இருக்கும். தியாகராச செட்டியார் தொழிலாளர் குடியிருப்பை அவர்களுக்கே சொந்தமாக வழங்கியது மட்டுமல்லாது வீட்டின் முன்னும் பின்னும் முறையே நான்கு அடிகள் நீட்டிக் கொள்ள அனுமதி அளித்திருப்பதும் அவரது கொடைத்தன்மைக்கு எடுத்துக்காட்டு. தியாகேசர் ஆலை மேல்நிலைப்பள்ளி நான் படித்த பள்ளி என்று சொல்லிக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ எதிர்பாரா வருகைக்கும் அதன் மகிழ்விற்கும் ...

      Delete
  13. ஆகா கிடைத்தற்கரிய வாய்ப்பு
    படிக்கப் படிக்க மனம் மகிழ்கிறது நண்பரே
    தங்களின் தாயாருக்கு என் வணக்கங்களைக் கூறவும்

    ReplyDelete
    Replies
    1. நன்றி அய்யா...

      Delete
  14. பகிர்வுக்கு நன்றி! படித்த பள்ளிக்கு சென்று வருவதே ஓர் சுகானுபவம்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுவாமிகள்.

      Delete
  15. நன்றி கரந்தையாரே..

    ReplyDelete
  16. பிறர் இகழ்வை பேசி இன்பம் காணும் இவ்வுலகில்
    மகிழ்வை பேசிய மறக்க முடியாத பதிவு இது!
    மணவை பள்ளியின் மாண்பினை போற்றுவோம்!
    நன்றி!

    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    ReplyDelete
  17. அருமையான நினைவலைகள்...அம்மாவிற்கு மறக்க முடியாத காலங்கள்...வாழ்த்துகள் சகோ...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரி

      Delete
  18. நான் ஐரோப்பா சுற்றுலா போனேன், நான் அமெரிக்கால போயி நயாகரா பார்த்தேன் னு சொல்றதைவிட, நான் என் அம்மாவின் பள்ளிக்கு, என் குழந்தைகளுடனும், அம்மாவுடனும் சென்றேன் என்று எழுதுவது எத்தனை தனித்துவம் கொண்டது!!! :-)

    ஒரு முறை என் அம்மா, தண்ணீர் பஞ்சம் சமயம் தெருக் குழாயில் தண்ணீர் பிடிக்க வரிசையில் நின்றார்களாம், அப்போது அவர்கள் பள்ளியில் படிக்கும்போது இருந்த அவங்க டீச்சர், எதிரே வந்தார்களாம். அம்மாவுக்கு வயது 40க்கு மேல் இருக்கும் அப்போது ..அந்த டீச்சர் ரிட்டயர்ட் ஆனவங்க.. உடனே கையில் உள்ள குடத்தை அபப்டியே தரையில் வைத்து விட்டு இரு கை கூப்பி "நமஸ்காரம் டீச்சர்" என்று அந்த நொடியில் அம்மா, சிறுமியாக, அந்தக்காலத்துப் மாணவியாகிவிட்டார்களாம். அவங்க டீச்சரும் புன்னகையுடன் திருப்பி வணக்கம் சொன்னார்களாம். 30 வருடங்கள் முன்னால் டீச்சராகவும் மாணவியாகவும் இருந்த இருவர் இவர்கள்! :)

    வீட்டில் வந்ததும் இதை பகிர்ந்து கொண்டார்கள். I could feel that she still did have the same respect she had for her teacher then! உங்களை, உங்க டீச்சருக்கு அடையாளம் தெரிந்து இருக்குமா? என்று கேட்டேன், நான். My mom believed that her teacher did recognize her! :)))

    You reminded me of that incident now, Madhu! :)

    ReplyDelete
    Replies
    1. ஆகா... அம்மாவை குழந்தைகள் கேட்டார்கள். ரொம்ப சின்சியரா உங்க பள்ளியைப் பார்க்கனும் என்று சொல்லி. இது ரொம்ப நாட்களாக நடந்தது.
      இந்த அரையாண்டு விடுமுறையில்தான் சாத்தியமானது..
      தனித்துவம் என்று ஏதும் இருப்பதாக தோன்றினால் அது உங்கள் பார்வைக் கோணம். (எப்போதுமே யாரும் அணுகாத பக்கத்தில் இருந்துதான் நீங்கள் பார்க்கிறீர்கள்!)
      ---
      உண்மையைச் சொல்லப் போனால் இத்துணை ஆண்டுகளுக்கு பின்னரும் மனதில் பதிந்த மாணவர்களைத் தவிர (அதீத அறிவு, அதீத சேட்டை ) பெரும்பாலானவர்களை நினைவிருப்பதில்லை.

      ஆனால் அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை நான் அவர்களை நினைவில் வைத்திருப்பேன் என்பது... பொது இடங்களில் பார்த்து சிநேகமாக பேசும் சில சமயங்களில் சங்கடப் பட்டிருக்கிறேன்.
      @அம்மாவின் நம்பிக்கை.

      Delete
  19. அம்மாவை தளத்தில் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி
    அதோடுபெப்பி வயாடிசின்னக்குட்டியையும்.
    அம்மா பிள்ளைகளுக்கு ஒவ்வொன்றயும்
    செய்வதோடுஇந்த காலகட்டத்துக்கு ஏற்றார்
    போல் சிந்திப்பது ...........கிரேட்(மக்களே சார் ஊருக்குத்தான்
    பெரியஆளு ஆனா அம்மாவுக்கு இன்னும் குழந்தைதான்)

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்வ்வவ்வ்வ்..
      நல்லா கலாய்கிறீங்க ..
      வருகைக்கு நன்றி ..

      Delete
  20. அருமையான பதிவு நண்பரே! இது போன்ற ஒரு அனுபவம் எத்தனை பேருக்குக் கிடைக்கும்! நல்ல பாட்டி நல்ல அம்மா நல்ல மகன், நல்ல மருமகள் நல்ல பேரக்குழந்தைகள்!!

    தாங்கள் தங்கள் அம்மாவிடம் வைத்திருக்கும் பாசமும் மதிப்பும் மரியாதைஅயும் பளிச்! தங்கள் தாயார் தங்களுக்கு ஒரு அருமையான தோழியாகவும் இருக்கின்றார், அருமை அருமை தோழரே! நீங்கள் எல்லோரும் பல்லாண்டுகள் அன்பு தழைத்திட வாழ மனமார வாழ்த்துகின்றோம்,

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ஜீவா, காமராஜ், பெயார் குறித்து முதலில் அறிந்தது அம்மாவின் அறிமுகத்தால்தான்
      அதற்கு காரணம் இந்தப் பள்ளிதான்..
      (இன்றைக்கு பெரும்பான்மைக்கு ஜீவா பற்றி தெரியாது என்பது எவ்வளவு வேதனை, ஏதொ மணியன் பேசிக்கொண்டிருக்கிறார்)

      Delete
  21. மறக்க இயலாத இனிக்கும் நினைவுகள்.
    நன்று

    ReplyDelete
  22. அம்மாவின் பள்ளி ..! உங்க சந்தோஷம் உற்சாகம் அப்படியே மணப்பாறை டு மிட்லண்ட்ஸ் எனையும் தொற்றிக்கொண்டது :) இயற்கை சூழலில் இருக்குன்னு நினைக்கிறேன் பள்ளிக்கூடம் ..மிக அருமை ..

    ReplyDelete
  23. நண்பர் மது,

    The past is deep என்று நான் எப்போதும் சொல்வதுண்டு. உங்களின் பதிவு அதைத்தான் காட்டுகிறது. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழரே ...
      தேர்வுக் குதிரை தனது ஓட்டத்தை துவக்கிவிட்டது இந்தப்பக்கம் வருவது கொஞ்சம் சவாலாக இருக்கிறது..

      Delete
    2. அன்புள்ள அய்யா,

      அம்மா படித்த பள்ளியைப் பற்றி அம்மா தங்களிடம் பகிர்ந்ததை நல்ல பல நினைவுகளைப் பகிர்ந்தீர்கள். தியாகேசர் ஆலை மேனிலைப்பள்ளிதான் தங்களின் மாமாவை வார்த்தெடுத்தது.
      எனது தந்தை தியாகேசர் ஆலையில் மேஸ்திரியாக பணியாற்றியவர். திருவாளர்.அருளரசன் தலைமையாசிரியர் நல்ல பண்புமிக்க ஆசிரியர். பழகுவதற்கு நல்ல நண்பர்.

      நன்றி.

      Delete
  24. மது சார்

    நாம் படித்த பள்ளிக்குச் சென்றால் தாய் வீட்டுக்கு போனதைப் போல் உணர்வோம் . நீங்கள் அம்மா படித்த பள்ளிக்கு அவர்களை கூட்டிச் சென்று அவர்களின் மதிப்பு மிக்க நினைவுகளை மீட்டெடுத்திருக்கிறீர்கள். காசு பணத்தை விட அந்த சந்தோசம் மிகப் பெரிது.

    ReplyDelete
  25. இந்தப் பதிவைப் படித்த மறுநாளே நான் படித்த பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது . 35 வருடங்களுக்குப் பிறகு நான் படித்த பள்ளியின் கேட்டைப் பிடித்துக் கொண்டு கட்டிடத்தையும் மைதானத்தையும் பார்த்தபோது இனம் புரியா சந்தோசத்திற்கு அளவே இல்லை. பால்ய காலத்து நினைவுகள் எல்லாம் கூடி வந்து மாலை கோர்த்தது. what a coincidence !

    ReplyDelete
    Replies
    1. உங்கள் மகிழ்வு என்னையும் தொற்றுகிறது

      Delete

Post a Comment

வருக வருக