இந்தியாவை திரும்பி பார்க்கவைத்த பிரமாண்ட வெற்றியைப் பெற்ற மைனே பியார் கியா திரைபடத்தை இன்னும் சிலர் நினைவில் வைத்திருக்கலாம். அதன் பாடல்களுக்காவே இந்தியாவை வசீகரித்தப் படம் அது. அத்துணைப் பாடல்களும் அருமை என்றாலும் எனக்கு ரொம்பப் பிடித்தப் பாடல் ஆத்தே ஜாதே என்கிற தலைப்பு பாடல்தான். (பின்னர் அகத்தியனின் காதல் கோட்டையிலும் இந்தப் பாடலின் பாதிப்பில் காலமெலாம் காதல் வாழ்க என்று வந்ததும் நினைவில் இருக்கலாம்).
இந்தியாவிற்கு ஒரு மகத்தான சூப்பர் ஸ்டாரைத் தந்த படம் இது. பாக்யஸ்ரீ சல்மான் ஜோடி ஒரே இரவில் இந்தியாவின் இளமையின் அடையாளமாக மாறிப்போனது இந்தப் படத்திற்குப் பின்னர்தான்.
எனது அருமை நண்பர் லியோவின் நீலக் கலர் சோனி வாக்மேனில் இந்தப் பாடலைதான் அடிக்கடி கேட்பேன் நான். வாய்ப்பு கிடைக்கும் அத்துணை தருணங்களிலும் எனது சூழலில் ஒலித்த ஒலிக்கவிட்ட பாடல் இது! ஒவ்வொருமுறையும் படத்தின் இசையமைப்பாளர் மீது எனக்கிருந்த அபிமானம் பன்மடங்கு கூடும். என்னஓர் மேலோடி ...வாவ் என்று மானசீகமாக அவர்களின் திறமையை வியந்து ரசிக்கவைத்த பாடல் இது. இசை அமைப்பாளர் ராம்லக்ஸ்மன் இரட்டையர்களாக தங்கள் பணியைத் துவக்கியவர்கள். 1976ல் ஏஜன்ட் வினோத் படத்திற்கு ஒரு பாடலைப் பாடிய பின்னர் ராம் இறந்துபோனார், இருப்பினும் லக்ஸ்மன் அவரது பெயரை துறக்காமல் ராம்லக்ஸ்மனாகவே தொடர்ந்தார்.
ராம் லக்ஸ்மன் |
அந்தப் பாடல்
திடீரென ஒரு பெரும் கலாச்சரா அதிர்ச்சியாக எம்.டிவி அறிமுகமாக அதுவரைக் கேட்க வாய்ப்பில்லாத அதிரடி ஆங்கிலப் பாடல்களை கேட்க முடிந்தது. பல பாடல்கள் மேலோடியாகவும் இருந்ததால் எம்.டிவியின் தீவிர ரசிகனாகிப் போனேன். எம்.டிவி கிளாசிக் என்கிற நிகழ்வில் ஒளிபரப்பாகும் அத்துணை பாடல்களுமே முத்துக்களாகவே இருந்தது. அப்படி ஒரு காலைப் பொழுதில் நான் பார்த்த பாடல் ராம்லக்ஸ்மன் மேலிருந்த அபிமானத்தை சுக்குநூறாக்கியது.
'
விழிகளை இழந்த ஒரு பிறவி இசை மேதை ஸ்டீவிடம் இருந்து ஆத்தே ஜாதே சுடப்பட்டிருப்பதை உணர்ந்த அந்த மொமொன்ட் "அடப்பாவிகளா மொமென்ட்"
இசைப்பதிவுகள் தொடரும் அதிர்வுகளோடும் அனுபவங்களோடும்.
வணக்கம்
ReplyDeleteஅருமையான தகவல்.. படித்த போது அறிந்தேன்.. பாடலை இரசித்தேன்.. பகிர்வுக்கு நன்றி த.ம2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபஸ்
Deleteஇரண்டு பாடல்களில் உள்ள ஒற்றுமையை இந்த மரமண்டையால் உணர முடியலே :)
ReplyDeleteஇதெல்லாம் ரொம்ப ஓவர்
Deleteதங்கள் எழுத்துக்களைக் காண்பதுவும் காணொளி போல் இனிமையானது.
ReplyDeleteதொடருங்கள்.
நன்றி.
த ம 3
எழுதுகிறேன் தோழர்
Deleteஅர்ஜுன்,
ReplyDeleteஇந்தப் படத்தில் தில் தீவானா, ஆஜா ஷாம் ஹோனி ஆயி, என்ற பாடல்கள் கேட்க நன்றாக இருக்கும். எங்கிருந்து உருவப்பட்டவை என்று தெரியாதவரை ரசிக்கலாம்.
ஸ்டீவி வொண்டெர் அமெரிக்க கறுப்பின கண்ணிழந்த இசைஞர். அவருடைய மிகப் பிரபலமான ஐ ஜஸ்ட் கால்ட் டு சே ஐ லவ் யு பாடலை கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் காப்பி அடித்து படத்தின் டைட்டில் சாங் போட்டிருப்பார்கள். அதை பார்த்த போதே பற்றிக்கொண்டு வந்தது.
இதில் Mere Rang Mein Rangne Wali என்றொரு பாடல் இருக்கிறது. ஆரம்பத்தில் ட்ரம்பெட் எகிறிக் குதிக்கும். இது 86ஆம் ஆண்டு Europe என்ற ஸ்வீடிஷ் இசைக் குழுவினரின் அதிரடி ஹிட் அடித்த The final countdown என்ற ராக் பாடலின் காப்பி. அரங்கத்தில் கை தட்டிய எல்லோரையும் பார்த்து மனதுக்குள் ஏளனமாக சிரித்துக்கொண்டே படம் பார்த்தேன் அப்போது. கேட்டுப்பாருங்கள். பாடல் அதகளமாக இருக்கும். சுர்ர்ரென்று வேகம் பரவும்.
நன்றி இசைப் பதிவரே
Deleteதங்களின் அனுபவத்தை ரசித்தோம்.
ReplyDeleteநன்றி முனைவரே
Deleteஇரண்டும் அருமையான பாடல்கள் தோழரே...
ReplyDeleteதொரட்டும் தங்களது இசைப்பணி.
தமிழ் மணம் 5
நன்றி தோழர்
Deleteஅதே அதே ..இந்த படத்த பார்க்கும்போதே நான் சொன்னேன் என் தோழிகளிடம் !ஒருத்தி கூட என்னை அப்போ நம்பலை எங்க அண்ணா ஒருவர் இந்த பாட்டு போட்டு அடிக்கடி அப்போ கேப்பார் ..(காசெட் உபயம் எங்க பக்கத்து வீட்டு ஆங்கிலோ இந்தியர் குடும்பம் )..ம்ம் சூப்பர்ப் தொடருங்கள்
ReplyDeleteநன்றி மணம்வீசும் காகிதப் பூந்தோட்டக்காரம்மவிற்கு
Deleteதங்களை வலையில் சந்தித்து நீண்ட நாட்களாகி விட்டது நண்பரே
ReplyDeleteதம +1
சில மாணவக் கண்மணிகள் என்னை புத்தனாக்கி விட்டார்கள்... வேறு என்ன சொல்வது
Deleteஎன்கிட்டேயும் ஒரு லிஸ்ட் இருக்கு :) .... சீக்கிரம் அடுத்த போஸ்ட் எப்போ வரும்னு காத்திட்டிருக்கேன்
ReplyDeleteவரட்டும் விரைவில்
Deleteஎல்லா இசைக் கலைஞரிடமும் கொஞ்சம் ஒரிஜினல் ட்யூன்களும், நெறைய மற்றவர் ட்யூனை அவர்களே அறியாமல் காப்பியடித்த தாகத்தான் இருக்கிறது.
ReplyDeleteஆஃப்ரிக்கர்கள், ஜெனட்டிக்கலாகவே இசை, நடனம், விளையாட்டு போன்றவைகளில் திறமை வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். They sing, and dance and play just very naturally without trying too hard. White people accept that they are naturally-born dancers and singers and musicians. :)
Personally I lose respect for anyone who steals someone else creation and claims credit for it and pretend like a genius and justify such an act when he/she is caught. That's one of the reasons I hate most people's favorite actors such as Kamalahassan! I also notice, we tend to take it easy when the culprit is someone we love most! That's our weakness I think. At least we should have basic decency to accept the fact that I DO HAVE such a weakness!
மது கை கொடுங்கள்! காதல் கோட்டை பாட்டு காலமெல்லாம் காதல் வாழ்க....பாட்டைக் கேட்டு நுனி பிடிக்க அந்த ஆத்தே பாட்டு கிடைக்க அதிலிருந்து தொடர்ந்த போது அப்போது 4 / 5 வருடங்களுக்குப் பிறகு ஸ்டீவின் இந்தப் பாட்டு கிடைத்து கேட்க நேர 84ல் ரிலீஸ் ஆகி 85 என்று னினைக்கிறேன்...கிராமி அவார்ட் கிடைத்ததாக அறிந்தது இதெல்லாம் காதல் கோட்டை வந்த பிறகுதான் தெரிந்துகொண்டது.....அப்பவே அடப்பாவி இப்படிக் கூட காப்பி அடிக்க முடியுமா என்று வியந்து...அப்புறம் என்னங்க நம்ம மனுஷங்க தான் ஹாலிவுட்டையே காப்பி அடிச்சுட்டு எங்க கதைனு சொல்லிக்கிற ஆளுங்களாச்சே....இப்படி நிறைய பாட்டுகள், இன்டெர்லூட் எல்லாம் அங்கங்க பிட்டு அடிச்சுருக்காங்க....காரிகன் அவர்கள் கூட நிறைய சொல்லுவாரு....
ReplyDelete- கீதா
பல ஹிந்தி பாடல்களில் தமிழ் இசையின் பாதிப்பும் ஆங்கிலப் பாடல்களின் பாதிப்பும் இருப்பதுண்டு....!
ReplyDeleteசில ஹிந்தி இசையமைப்பாளர்கள் இப்படியான இசையமைத்தே பிரபலம் அடைந்தவர்கள் என சச்சரவு உண்டு!
இனிமை...
ReplyDeleteரசிப்போம்...!
அன்புள்ள அய்யா,
ReplyDeleteராம் இறந்துபோனார், இருப்பினும் லக்ஸ்மன் அவரது பெயரை துறக்காமல் ராம்லக்ஸ்மனாகவே தொடர்கிறார் என்பது அவர்மேல் வைத்திருக்கும் அன்பையும் நட்பையும் காட்டுகிறது.
காணொளியில் பாடல்களைப் பார்த்து மகிழ்ந்தேன்.
நன்றி.
த.ம. 13.
ஒரு இசையமைப்பாளர் ஒரு இசையால் ஈர்க்கப்பட்டு அதன் சாயலில் அமைப்பதற்கும், ஈயடிச்சான் காப்பி அடிப்பதற்கும் வித்யாசம் உண்டு. துரதிருஷ்ட வசமாய் இந்திய இசையமைப்பாளர்களில் பெரும்பாலோர் மேற்கிலிருந்து நிறைய " உருவி " இருக்கிறார்கள் !!!
ReplyDeleteநண்பர் காரிகனின் தளம் அறிமுகமானதிலிருந்து நான் பலமுறை உங்களை போல அதிர்ந்துள்ளேன் !
எனது புதிய பதிவு : " த்ரோ தேம்பெர்மாசியோன் துய் லேம்பெர்மாசியோன் ! "
http://saamaaniyan.blogspot.fr/2015/03/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி
நன்றி
சாமானியன்
மது
ReplyDeleteபெரும்பாலும் எல்லா இசையமைப்பாளர்களும் ஒரு சில மேற்கத்திய பாடல்களை காப்பி அடித்தவர்கள்தான். ஆனால் அவர்களின் எல்லா பாடல்களும் காப்பி அடிக்கப்பட்டவை அல்ல . ஒரு சில பாடல்களை வைத்து அவர்களின் படைப்புகள் முழுவதையும் நாம் சந்தேகமாக பார்க்கக் கூடாது. படைப்புத் திறனற்றவர்களாகவும் பார்க்கக் கூடாது.