டெஸ்லா சாலையில் ஒரு அற்புதம்


டெஸ்லா இலான் மஸ்கின் ஒரு கனவுத் திட்டம். டெஸ்லா ஒரு புதிர் நிறைந்த இயற்பியலாளர் என்பது உங்களுக்குத் தெரிந்ததுதான். அவரது பெயரில் ஒரு மகிழ்வுந்து!

எனது பதின்ம வயதில் தமிழ் திரைப்படங்களைப் பார்த்து கதாநாயகனுக்கு கொடுக்கும் காசில் ஒரு பங்கை ஒளிப்பதிவாளருக்கு கொடுத்தால் படங்களின் நேர்த்தி அதிகரிக்குமே என்று நினைத்திருந்த கணத்தில் வந்து குதித்தார் பி.சி. ஸ்ரீராம். 

இதே போல் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள்  பொதுவெளியில் ஹைட்ரோ கார்பன் எரிபொருட்களை பயன்படுத்தும் மகிழ்வுந்துகளை கைவிடச் சொல்லி வந்தபோதும் பெருநிறுவனங்கள் அதனைக் கண்டுகொள்ளவில்லை. 

இலான் மஸ்க்கின் டெஸ்லா ஒரு புயலை உருவாக்கியிருக்கிறது. இதை இந்தியாவில் மையம் கொள்ளச் செய்ய நமக்குத் தேவை தொழில்நுட்ப அறிவல்ல, 
பணமல்ல 

ஒரு நல்ல அரசியல் தலைமை.

வருவார்களா? 

நம்புவோம்..
உங்கள் பார்வைக்கு டெஸ்லா .. 

Comments

 1. நம்பலாம் ஆனால் நம்பமுடியாது...
  தமிழ் மணம் 2

  ReplyDelete
 2. வாருங்கள் தோழர்...!
  நீண்ட இடைவெளிக்குப் பின்னொரு பதிவு.
  காணும் போதே மகிழ்வுந்துகிறது.
  நன்றி
  த ம 3

  ReplyDelete
 3. அற்புதமாகத் தான் இருக்கிறது......

  த.ம. +1

  ReplyDelete
 4. அன்புள்ள அய்யா,

  ‘டெஸ்லா சாலையில் ஒரு அற்புதம்’
  Tesla model S ஓர் அழகான காரைக் காட்டி.... இல்லை இல்லை...அதை ஓட்டுவதைக் காட்டி... அதன் ஒய்யார உட்புற அழகு... டச் ஸ்கீரின்... பின் புறம் டிக்கில் அதிக இட வசதி... 4.6 செகண்டுக்குள் 60மைல் வேகம்.... 13.3 செகண்டுக்குள் 104 மைல் வேகம்...என பஞ்சாய்ப் பறக்கும் கார் 134 மைல் அதிவேகத்தில் செல்வதைப் காட்டியது... மிகவும் இரசிக்கும் படியாக இருந்தது.

  ஒரு B.M.W. போல... ஆடியைவிட... அந்தக்கார் செல்கின்ற பொழுது அழகாக இருந்தது.

  ஓடி ஆடி உழைத்தாலும்... நடுத்தரக் குடும்பத்தினர் வாங்கிப் பயன்படுத்த இயலாது என்றே எண்ணுகிறேன். Basic Model Car அமெரிக்க டாலரில் 97,000/- என்றால் இந்திய ரூபாயில் அம்பத்து அய்ந்து இலட்சத்திற்கும் (55,00,000) மேலாகுமே!

  இருக்கிறவன் அள்ளி முடிந்து கொள்ளலாம்...!

  நம்ம நாட்டு அரசியல் தலைவர்கள் பெட்ரோலுக்கு அபாண்டமாக போடும் வரியைக் குறைத்தாலே போதும்! நாடு நலம் பெறும்!
  -நன்றி.
  த.ம. 5.

  ReplyDelete
  Replies
  1. இதில் விலை குறைந்த மாடல்களும் இருக்கின்றன.
   நன்றி

   Delete
 5. உண்மையைச் சொல்கிறேன் மதூ... டெஸ்லா ஒரு புதிர் நிறைந்த இயற்பியலாளர் என்பது நீங்கள் சொல்லும் வரை எனக்குத் தெரியாது.
  நீங்கள் கார்க்காதலர் என்பதும் தெரிகிறது... நீங்கள் சொல்வதுபோல அரசியல் தலைமை வந்தால் தொழில் நுட்ப அறிவும் வரும் என்பதை ஒப்புக் கொள்கிறேன்.. அதற்கு நம் சமூக-இலக்கிய அறிவைப் பயன்படுத்துவோம் தோழா.. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்திருக்கீக... நன்றி, தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. இது குறித்து தொடர் ஆய்வில் இருக்கிறேன். விவரங்கள் பின்னர் சொல்கிறேன். முதலில் எனக்கு சொன்னது மாரியின் சகோதரர் சக்திதான். சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து வந்திருந்த பொழுது இலான் குறித்து சிலாகித்து பேசினார். அது ஒரு ஆய்வாக விரிந்தது.

   Delete
 6. வணக்கம் மலர்த் தரு
  தருகிறேன் தமிழ் மணம் வீசுக!
  த ம 7
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
 7. ஒரு நல்ல அரசியல் தலைமை
  இந்தியாவில் அவசியம் நிலை பெற வேண்டும்!
  வேண்டுதல் வேர் விடட்டும்!
  நன்றி!
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
 8. அருமை அண்ணா..இங்கு டெஸ்லா அதிகம் பார்க்கிறேன். மாதாந்திர வாடகை கட்டும் லோன் மூலமாக எடுக்கலாம், மாதம் ~$525 :)
  Nissan Leaf electric cars இன்னும் அதிகம் அண்ணா, அரசு வரிவிலக்கும் கொடுக்கிறது. அலுவலகம் செல்வதற்கு அதைத்தான் என் கணவர் எடுத்திருக்கிறார். ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் ~80-90 மைல்ஸ் கொடுக்கிறது. 20மைல் தள்ளியிருக்கும் அலுவலகம் சென்று வர சரியாக இருக்கிறது அண்ணா.

  ReplyDelete
  Replies
  1. வினோத்திற்கு ஒரு பூச்செண்டு..
   வாழ்த்துக்கள்
   நன்றி

   Delete
 9. எவ்வளவு சொல்லுங்க... வாங்கிடுவோம்...!

  http://www.malartharu.org/2015/03/wonder-on-road.html இப்படிக்கா போய்... பதிவு இல்லை... http://www.malartharu.org/ அப்புறம் அப்படிக்கா வந்து... மறுபடியும் இப்படிக்கா வந்து விட்டேன்...http://www.malartharu.org/2015/03/wonder-on-road-tesla-motors.html

  ReplyDelete
 10. டெஸ்லாவ அறிவியல் உலகத்த விட்டு வேண்டுமென்று ஒதுக்கிவைத்தார்கள் . அதேபோல் இதையும் ஒதுக்காமல் ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகம்தான் .

  அடுத்த நம்பிக்கைக்கு , THE DARK KNGHT RISES படத்தில் BANE பற்றி ALFRED சொல்லும் வசனங்கள்தான் எனக்கு நினைக்கத்தோன்றுகிறது .

  தம+

  ReplyDelete
 11. நம்ம ஊரிலா.. நல்ல அரசியல் தலைமையா...
  வடிவேலு சொன்ன மாதிரி... வரும் ஆனா வராது கதைதான்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி பரிவை ஜி

   Delete
 12. Madhu:

  வருண்! நீங்க வெஜிட்டேரியனா? இல்லைனா விலங்குகளையும் கொன்னு சாப்பிடுறவாளா?

  நான் வெஜிடேரியன் இல்லைங்க! ஐயோ "நல்லவன்"னு பட்டம் வாங்க முடியாத பாவியா இருக்கேனே!

  வருண்! நீங்க எலெக்ட்ரிக் கார் வச்சு இருக்கீங்களா? இல்லைனா ஊரை நாசமாக்கும் பெட்ரோல் கார்தான் வச்சிருக்கீங்களா?

  நான் ஒரு ஹாண்டா அக்காட் தான் "ஓன்" பண்ணுறேன். இங்கேயும் யோக்கியன் பட்டம் பெறமுடியவில்லையே!

  இப்படியே தொடர்ந்தால் ஒவ்வொரு விசயத்திலுமே நான் ஒரு "பாவி"னுதான் தெரிய வருகிறது.

  ஜீசஸ் அதான் நம்மள எல்லாரையுமே பாவிகள், பாவம் செய்தவர்கள்னு சொன்னாரு போல. தினந்தோரும் இப்படித்தான் எதாவது பாவம் செய்கிறோம்-சாகிறவரைக்கும். இதெல்லாம் தெரிந்தே செய்கிற தவறுகள்தான்.

  I have a good philosophy but I am a practical person. So I keep my good philosophy aside most of the time.

  Affordability and reliability play a major role in taking a decision on What car I should buy?

  A Honda Accord costs about $23, 000 but a Tesla or any other electric car costs at least almost double the cost of an Accord. Today the gasoline price is $2.10/gallon. I would spend about $100 per month for gas. So, $1200/per year. Accord is a very reliable car and maintenance cost is almost nothing. But I dont know what kind of problem will come with an electric car like Tesla or Nissan Leaf if I own it. The battery needs to be replaced in 5 years or so, that would cost at least a 5 k or so (I am guessing the amount). Moreover, if you carefully look at the "pollution factor", you can not say electric car is pollution-free either. Here is a link and some conclusion part..

  ----------------------------------

  Vehicle pollution
  Cleaner than what?
  Why an electric car may be much dirtier than a petrol one!

  http://www.economist.com/news/science-and-technology/21636715-why-electric-car-may-be-much-dirtier-petrol-one-cleaner-what

  Here is the conclusion part!

  Overall, the research shows that electric cars are cleaner than those that rely on internal-combustion engines only if the power used to charge them is also clean. That is hardly a surprise, but the magnitude of the difference is. How green electric cars really are, then, will depend mainly on where they are driven. In France, which obtains more than half its power from nuclear stations, they look like a good bet. In China—which is keen on electric cars, but produces some 80% of its electricity from coal—rather less so.

  ReplyDelete
  Replies
  1. நன்றி வருண்.
   மாற்றங்கள் எதுவும் எளிதாக ஏற்றுக் கொள்ளப்பட்டதில்லை!

   Delete
 13. ஒரு நல்ல அரசியல் தலைமை இருந்துவிட்டால் தான் இந்தியா வல்லரசாகி விடுமே!

  ReplyDelete
  Replies
  1. ஆகட்டும் சீக்கிரம்

   Delete

Post a Comment

வருக வருக