பாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 7


பால் வாக்கரின் கடைசிப் பாஸ்ட் சீரிஸ் இது. பால் எதிர்பாராத விபத்தில் இறந்தபொழுது பாஸ்ட் செவென் வராது என்று சொல்லியிருந்தார் தயாரிப்பாளர். ஒரு மரியாதைக்கு மட்டுமே சொல்லியிருக்க வேண்டும். ஏன் என்றால் இது இருநூற்றி ஐம்பது மிலியன் டாலர்  பட்ஜெட் படம்! வெளியிடாமல் இருக்கமுடியுமா என்ன? படம்  இதுவரை நாற்பது மிலியனை வசூல் செய்திருக்கிறது.


இந்த தொடர் படங்களுக்கு உலகெங்கும் வெறிபிடித்த ரசிகர்கள் உண்டு. இந்தப் படங்களின் வரவிற்கு பின்னர்தான் சட்ட விரோதமான ரேஸ்கள் நமது நாட்டிலும் பரவலாயின. பதின்ம வயதில் இருக்கும் ரசிகர்கள் இதேபோல் ஒட்ட முயற்சித்து முக்தி அடைந்து வருவதும் வேதனைக்குரிய விசயம்தான்.  
டோரோட்டோ டீம் காரோட்டுவதில் கில்லி, இந்த டீம் எதிர்கொள்ளும் விதவிதமான வில்லன்கள் இதன் ஆறுபாகங்களை நகர்த்தினர். இருக்கும் டாப் ஹாலிவுட் ஆர்டிஸ்ட் அனைவரையும் ஒட்டுமொத்தமாக களத்தில் இறக்கியமாதிரி இருக்கு இந்தப் படம். ஆக்சன் ஸ்டார் ஜேசன் ஸ்டாத்தோம் அதிரடி என்ட்ரி, கூடவே டோனி ஜா, அற்புதமான நடிகர் டிஜோமொன் ஹௌன்சு என பெரும் பட்டாளமே நடிதிருக்கிறது.   

எனக்குத் தெரிந்து தமிழ்ப் படங்களுக்குக் கூட டைட்டில் போடும் போது இவ்வளவு விசில் சத்தம் கேட்டது கிடையாது.   கூரையைக் கிழிக்கிறார்கள்! 
செமை மேக்கிங் படம். 

ஆறாவது படத்துடன்  இயக்குனர் ஜஸ்டின் லின் விலக, புதிதாக வந்த ஜேம்ஸ் வான் முத்திரை பதித்துவிட்டார் என்றுதான் சொல்வேன். ஸ்கிரிப்ட் எழுதிய கிரிஸ் மோர்கன் ஒரு மாஜிக் செய்திருக்கிறார். 

ஒரு இடத்தில் கூட தொய்வில்லாமல் பறக்கும் கதை, டைரீஸ் கிப்சன் அசுர வேகத்தில் கார் ஒட்டுகிராரோ இல்லையோ வயிறு வலிக்கச் சிரிக்க வைக்கிறார். 

குழுவின் உறுப்பினர் ஹான் கொலையாவதில் இருந்து துவங்குகிறது படம். செபாஸ்டின் ஷாவின் (ஆறாவது படத்தின் வில்லன்) சகோதரன் டேக்கார்ட் ஷா ஒரு அஸாசியன் (பெரும்தலைகளை சாட்சி இன்றி போட்டுத் தள்ளும் கொலையாளி)  தனது  தம்பியின் சார்பாக பழிவாங்க வருகிறான்.

டோக்கியோவில் ஹானை கொள்ளும் அதே நேரத்தில் டோரோட்டோவின் வீட்டில் வெடிக்கிறது ஒரு குண்டு! வீடே சிதைந்து விழ எழும்புகிறது கரும்புகை. (அப்படியே என்னை அகிரா குரசொவாவை நினைக்க வைத்த காட்சி அது) கரும்புகை வானில் எழுவதை படத்தில் சிக்கல்களும் சவால்களும் எழுவதற்கான காட்சிக் குறியீடாக பயன்படுத்தலாம் என்று காட்டியவர் அவரே. இந்த படம் வரை மனிதரின் யுக்தி ஒன்று பயன்பட்டிருப்பது அவர் எவ்வளவு பெரிய படைப்பாளி என்று என்னை உணரவைத்தது. 

ஒரு நிமிடம் கூட சோடை போகாமல் ஆக்சன் சீக்வன்ஸ் நிரம்பியிருக்கிறது படம் முழுதும் இந்தக் கோடையில் அனேகமாக பலபேர் பலமுறை பார்க்கும் படமாக இது இருக்கும்.  

கடந்த கோடைக்கே வெளியாகியிருக்க வேண்டிய படம், பாலின் மரணத்தினால் இந்தக் கோடையில் வெளியாகிருக்கிறது. 

படம் முடித்ததும் பாலுக்காக (for Paul) என்றது டைட்டில். இது அவருக்கு மட்டுமல்ல அவரது ரசிகர்கள் அனைவருக்கும்தான். 

அப்புறம் பாஸ்ட் எய்ட் நியூ யார்க்கில் எடுக்கப்பட இருக்கிறது.  

படத்தின் ஹைலைட்ஸ் 
அந்த பாரா டைவிங் ... பலமாதம் உழைத்துப் படமாக்கப்பட்ட காட்சி அது. 

அபுதாபியில் கட்டிடங்களுகுக்கிடையே பாயும் கார் 

ராண்டா ரவுசியின் அபுதாபி சண்டை,  டோனி ஜா வின் முதல் ஹாலிவுட் அறிமுகம் இது. ஆனால் தனித்து முத்திரை பதிக்கும் வண்ணம் இல்லை. கர்ட் ரசல் வேறு இருக்கிறார். இப்படி எல்லோரையும் கூட்டி வைத்து அனைவர்க்கும் சம வாய்ப்பு கொடுத்து பின்னி பெடல் எடுத்திருக்கிறார்கள்.  

ட்ரோனை காலிசெய்யும் ராக். பாதாளத்தில் சரியும் பஸ்ஸில் இருந்து தாவும் பால் என பார்வையாளர்களை அசத்தும் காட்சிகள் இடைவெளியே இல்லாமல் வருகின்றன. 

படத்தின் கடைசிக் காட்சியில் லேட்டி விக்கரமன் பட பாணியில் லாலால மட்டும்தான்  பாடவில்லை அப்படியே தமிழ் படம் பார்க்கிற உணர்வு! 

இந்தக் கோடையில் வெடிக்கும் ஹாலிவுட் பட்டாசு... மிஸ் பண்ணாதீங்க.. 
அன்பன் 
மது 

Furious 7

Directed byJames Wan
Produced by
Screenplay byChris Morgan
Based onCharacters
by Gary Scott Thompson
Starring
Music byBrian Tyler
Cinematography
Edited by
Production
company
Distributed byUniversal Pictures
Release dates
 • March 16, 2015 (SXSW)
 • April 3, 2015(United States)[1]
Running time
137 minutes[2]
CountryUnited States
LanguageEnglish
Budget$250 million[3]
Box office$32.7 million
பிகு 
பலநாட்களுக்குப் பின்னர் வந்து பதிவிட்டாலும் பெரும்தலைகள் எல்லாம் வந்து கமென்ட் போட்டு என்னை சென்டிமென்ட்டாக அட்டக் செய்துவிட்டார்கள். பீலிங் கிரேட்புல்.. நன்றி நட்பூஸ். 

வரேன்... மீண்டும் ..

முக்கியமா ஒன்று தோன்றியது 

படத்தில் அடிவாங்கி சாவது எல்லாம் ஆப்ரிக்க நடிகர்கள், ஆசிய நடிகர்கள்தான். அவர்களது கதாபாத்திரம் அப்படி! யூ டூ ஹாலிவுட்... ஏனோ எனக்கு தமிழ் படங்களில் வரும் கருப்பு தலித் கதாபாத்திரங்கள் நினைவில் வந்தன. தலித் கருப்பாக இருக்க வேண்டும், அடிவாங்க வேண்டும் கோடம்பாக்கத்தில் இப்படி என்றால் அங்கும் அப்படிதான். எந்தப் பாத்திரம் கொடுத்தாலும் அசத்தும் டிஜிமோன் ஹௌன்சு இதில் வில்லனாகத்தான் வருகிறார்.  

அடப் போங்கப்பா ஷேக்ஸ்பியரே வில்லன்களை யூதர்கள் என்றுதான் அறிமுகப் படுத்துவார்.  இதில் இந்தக் காலப் படைப்பாளிகள் சறுக்குவது சகஜம் என விட்டுவிடலாம்தானே. 

Comments

 1. அபுதாபியில் கட்டிடங்களுகுக் கிடையே பாயும் காரா? கண்டிப்பாக பார்க்கவேண்டும் தங்களது விமர்சனம் அருமை தோழரே...
  தமிழ் மணம் 1

  ReplyDelete
 2. பாத்திடுவோம்...!

  அட்டாக் செய்ய வருவீங்களா...? வருவீங்களா...?

  ReplyDelete
  Replies
  1. ஹ ஹா நன்றி அண்ணாத்தே

   Delete
 3. பார்க்க வேண்டும்...... எனத் தோன்றுகிறது உங்கள் பதிவு பார்த்த பிறகு!

  ReplyDelete
  Replies
  1. நன்றி தோழர் .. பாருங்க ... 250 மிலியனை எப்படி பட்டாசு கொளுத்தியிருகாங்க என்று தெரிந்துகொள்ளலாம்

   Delete
 4. அவசியம் பார்க்கின்றேன் நண்பரே
  நன்றி

  ReplyDelete
 5. அன்புள்ள அய்யா,

  பாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 7 -படம் பற்றிய செய்திகள் அறிந்தேன்.
  கடந்த கோடைக்கே வெளியாகியிருக்க வேண்டிய படம், பாலின் மரணத்தினால் இந்தக் கோடையில் வெளியாகிருக்கிறது என்ற செய்தியுடன் விறுவிறுப்புக்கு கொஞ்சமும் பஞ்சம் இருக்காது என்று தெரிகிறது.

  நன்றி.
  த.ம. 6..

  ReplyDelete
 6. நல்ல விமர்சனம். படம் பார்ப்பதுபோலிருந்தது. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நன்றி முனைவரே

   Delete
 7. வணக்கம் மது ஜி ,அசத்தல் பதிவு வாழ்த்துக்கள் ...
  இதென்ன கேட்ட டயலாக்கா இருக்கேன்னு பார்க்கிறீங்களா ?எல்லாம் நீங்கள் காட்டிய வழிதான் :)

  ReplyDelete
  Replies
  1. நன்றி பகவானே

   Delete
 8. Replies
  1. பாருங்க அய்யா

   Delete
 9. இன்னும் பார்க்கவில்லை. இந்த வாரத்தில் பார்த்து விடுவேன்.. அருமையான விமர்சனம்

  ReplyDelete
  Replies
  1. நன்றி இயக்குனரே

   Delete
 10. ஹலோ மது சார்
  படத்தை வார்த்தைகளிலேயே அழகாக செதுக்கியிருந்தீர்கள் . தியேட்டரில் பார்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று போய் பார்த்தேன். நீங்கள் வர்ணித்திருக்கும் அத்தனை காட்சிகளும் சாகசங்களும் 3D யில் அசத்தல் . நான் பார்த்த தியேட்டரில் நல்ல கூட்டம் . நகைச்சுவை வசனங்களுக்கு கை தட்டுகிறார்கள் .

  இது மாதிரி நல்ல நாலு படங்கள் வந்தால் சொல்லுங்கள். உங்களின் விமர்சனத்திற்குப் பிறகே படத்திற்குச் செல்ல வேண்டும்.

  ReplyDelete

Post a Comment

வருக வருக