அவர்தாம் பெரியார்

சமீபத்தில் இணையத்தில் தமிழர்களின் சமத்துவத்திற்கு பாடுபட்ட பெரியார் படத்திற்கு நான் எழுத விரும்பாத வகையில் அவமரியாதை நிகழ்ந்தது ... 
கவிஞர், இயக்குனர்  நந்தனின் எதிர்வினை... அவர் உயிரோடு இருந்த வரை அவர் மீது செருப்பு வீசினார்கள். தாக்குதல்கள் நடத்தினார்கள். அனைத்தையும் அவர் வரவேற்றார். தன்னையே விமரிசனத்துக்கு உட்படுத்தச் சொன்னவர்தான் அந்த கிழவர்.
அவர் இறந்து இத்தனை நாள் ஆன பிறகும் இந்த இந்துத்துவா முட்டாள்களுக்கு இன்னும் அவரை நினைத்துதான் பயமாக இருக்கிறது. இன்னும் இவர்களுக்கு அவர்தான் சிம்ம சொப்பனமாக இருக்கிறார். இன்று வரை அவரை இவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இன்றுவரை அந்த கிழவனார் விதைத்த பகுத்தறிவு சிந்தனையால்தான் இந்த இந்துத்துவா வெறியர்கள் பணம், பதவி, அதிகாரம் இவற்றோடு வந்தாலும் ஒன்றுமே செய்ய முடியவில்லை. மாநிலத் தலைமையை வழக்குகளைக் காட்டி முடக்கியாயிற்று. மத்தியில் கேள்வி கேட்க முடியாத அதிகாரத்துக்கு வந்தாயிற்று.. முக்கியமான ஊடகங்களை காசை எறிந்து நாய் மாதிரி பின்னால் வர வைத்தாகிவிட்டது. இதற்கு மேல் என்ன..? இந்த மடையர்கள் ஓட்டுப் போட வேண்டியதுதானே..? என்ன செய்தாலும் வோட்டுகள் மட்டும் விழமாட்டேனென்கிறதே.. ஏன்..? பகுத்தறிவுப் பகலவன் போதித்து வைத்த பகுத்தறிவு இன்னும் இந்த தமிழர்கள் மத்தியில் சுடர்விட்டு எரிகிறதே.. அதனால்தான்..
பணம், பதவி, அதிகாரம் இவற்றால் எல்லாம் அந்த மரித்த மனிதன் ஏற்றி வைத்த சுடரை அணைக்க முடியவில்லை என்பதால் என் தகப்பனின் முகத்தில் சிறுநீர் கழித்து அந்த சுடரை அணைக்க முயன்றிருக்கிறார்கள் மடக் கோழைகள். செருப்பால் அடித்து அவமானப் படுத்த முயன்றிருக்கிறார்கள் இந்த தோற்றுப் போன கூட்டம்.
அவர் படத்தின் மீது சிறுநீர் கழித்த சகோதரனே. நீ இப்படி சுதந்திரமாக உன் கருத்தை வெளிப்படுத்தவும் போராடியவர்தான் எங்கள் பெரியார். அவர் படத்தை செருப்பால் அடிக்கும் சகோதரியே.. உன்னைப் போல் ஒரு சகோதரி தன் மானத்தை மறைக்க தோள்சீலைப் போராட்டம் நடத்தியவன்தான் இந்த உனது பாட்டன்..
அவர் உயிரோடு இருந்தபோதே இதை விட பெரிய அவமானங்களைப் பார்த்துவிடடார். இதைப் பார்த்து என் போன்ற அவரது தொண்டர்கள்தான் கொஞ்சம் உணர்ச்சி வயப்படுகிறோம். அவர் இருந்திருந்தால் நிச்சயம் உங்களை சிரித்துக் கடந்திருப்பார்..
நடத்துங்கள். இது போன்று எத்தனை போராட்டங்கள் வேண்டுமானாலும் நடத்துங்கள். எத்தனை போராட்டம் நடத்தினாலும் என் பாட்டன் பகுத்தறிவுச்சுடரை ஏற்றிவைத்த இந்த மண்ணில் உங்களால் ஓர் ஆணியையும் பிடுங்க முடியாது.. அவன் கேட்ட ஒரு கேள்விக்கும் உங்களால் பதில் சொல்ல முடியாது..
உங்களால் முடிந்ததெல்லாம்.. தேடிப் பிடித்து அவன் படத்தில் சிறுநீர் கழித்து நீங்கள் எவ்வளவு அச்சத்திலும் வயிற்றெரிச்சலிலும் இருக்கிறீர்கள் என்று காட்டிக் கொள்வது மட்டும்தான்.. நடத்துங்கள். எந்த ஆட்சேபணையும் இல்லை. ஏனென்றால் உங்களுக்கு இந்த போராடும் உரிமையைப் பெற்றுக் கொடுத்தவன் கூட எம் தந்தைதான்.. வாழ்த்துகள்..

Comments

 1. அவர் படத்தின் மீது சிறுநீர் கழித்த சகோதரனே. நீ இப்படி சுதந்திரமாக உன் கருத்தை வெளிப்படுத்தவும் போராடியவர்தான் எங்கள் பெரியார். அவர் படத்தை செருப்பால் அடிக்கும் சகோதரியே.. உன்னைப் போல் ஒரு சகோதரி தன் மானத்தை மறைக்க தோள்சீலைப் போராட்டம் நடத்தியவர்தான் இந்த உனது பாட்டன்..“-----என்பது நீ பாடையிலே போகும்வரை உனக்கு சுட்டுப்போட்டாலும் உனக்கு உரைக்காது.. த.ம.2

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான்
   வருகைக்கு நன்றி தோழர்

   Delete
 2. ///அவர் படத்தின் மீது சிறுநீர் கழித்த சகோதரனே. நீ இப்படி சுதந்திரமாக உன் கருத்தை வெளிப்படுத்தவும் போராடியவர்தான் எங்கள் பெரியார். அவர் படத்தை செருப்பால் அடிக்கும் சகோதரியே.///

  நம் மக்கள் இவ்வளவு கிழ்த்தரமாகவா போய்விட்டார்கள்

  ReplyDelete
  Replies
  1. அந்தப் படத்தை நான் பகிர விரும்பவில்லை
   வருகைக்கு நன்றி தோழர்

   Delete
 3. வணக்கம்
  ஒரு மனிதனுக்கு எழுத்துச்சுதந்திரம் கருத்துச்சுதந்திரம். இரண்டும் உள்ளது... இருந்தாலும் அவரின் படத்தில் சிறுநீர் கழிப்பது முட்டால் தனம்...தங்களின் மன ஆதங்கத்தை சொல்லி சென்றீர்கள்....நன்றி. த.ம 3

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி தோழர்

   Delete
 4. பெரியாரை மறைத்து ஆட்சி செய்கின்றன அவர் பெயரால் வளர்ந்த கட்சிகள்...காலம் புரியவைக்கும்...

  ReplyDelete
 5. எதையும் பிடுங்க முடியாது...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி தோழர் ...
   இயக்கங்கள் பரப்புரையில் ஈடுபட வேண்டும்

   Delete
 6. வேதனை தரும் நிகழ்வுகள். ஆனாலும் அறியவேண்டிய தகவல்கள்.
  மிக்க நன்றி பதிவுக்கு தொடர வாழ்த்துக்கள் ..!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோதரி நலம்தானே

   Delete
 7. வெந்தாடி வேந்தரையும், பகுத்தறிவு பகலவனையும் இன்றைய தலை முறையினர்
  அறிவதற்கு இதுபோன்ற உள்ளதை சொல்லும் பதிவுகள் தேவைதான் தோழரே!
  த ம +1
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
 8. மனசு வெருத்துபோச்சு சகோ அந்த படங்கள பார்த்து :(

  ReplyDelete
  Replies
  1. மரத்துப் போனால் நல்லது

   நன்றி சகோதரி

   Delete
 9. Nattil evalavo prachanaigal irukkum bothu taali aruthu mattu kari sapitu kondirungal. Periyar ella idathilum sendru servar.

  ReplyDelete
 10. மறைந்தவர் எதிரியாயினும் இகழ்ந்து பேசக்கூடாது தனது வீரத்தை வாழும்போதே காட்ட வேண்டும் அவனே ஆறறிவு மானிடன் இது ஐந்தறிவு ஜீவிகளின் செயல் ஆகவே இதனை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது தோழரே நமது புகைப்படத்தின் மீது நாய் மூத்திரம் இருந்தால் என்ன செய்வோம் ?
  CELL மூலம் காலையிலேயே 7 இட்டு தமிழ் மணத்தில் நுழைத்து விட்டேன் தோழரே...

  ReplyDelete
 11. நமக்கு இந்தளவுக்கு பேச்சுச் சுதந்திரம் உண்டு என்பதை தன் வாழ்நாள் முழுவதும் உணர்த்தியவர் பெரியார். தமிழன் என்கிற இனம் தலையாட்டி பொம்மைகள் இல்லை என்கிற இன்றைய நம் தனித்துவ அடையாளத்துக்கு அடிக்கல் நாட்டியவர் பெரியார்தாம். இந்த இந்துத்தவா முட்டாள்களை எல்லாம் ஒரு பொருட்டாகக் கருதாமல் போவதுதான் தந்தை பெரியாருக்கு நாம் பெருமை சேர்ப்பதாகும்.

  ReplyDelete
 12. இவர்களால் எதையும் ஒன்றும் செய்ய இயலாது என்பதுதான் உண்மை
  தீம +1

  ReplyDelete
 13. பெரியார் மீது பற்று கொண்டவர்களில் ஆத்திகர்களும் உண்டு என்பதை மறந்து சிலர் செய்யும் காரியங்கள், பெரியாருக்கு இருக்கும் புகழை கெடுத்து விடாது.
  த.ம.12

  ReplyDelete
 14. --அவர் உயிரோடு இருந்தபோதே இதை விட பெரிய அவமானங்களைப் பார்த்துவிடடார். இதைப் பார்த்து என் போன்ற அவரது தொண்டர்கள்தான் கொஞ்சம் உணர்ச்சி வயப்படுகிறோம். அவர் இருந்திருந்தால் நிச்சயம் உங்களை சிரித்துக் கடந்திருப்பார்..----

  நண்பர் மது,

  இதுதான் உண்மை. நான் அந்தப் படத்தைக் காண நேர்ந்தது. பெரியார் என்றொருவர் இருந்திராவிட்டால் இப்படியான சுதந்திரங்கள் அதைச் செய்தவர்களுக்கு கிடைத்திருக்குமா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. நன்றி இசைப் பதிவரே..

   Delete

 15. அவர்தாம் பெரியார்...!

  அவர் உயிரோடு இருந்தபோதே இதை விட பெரிய அவமானங்களைப் பார்த்துவிடடார்.

  அவர்தான் பெரியார்... இவர் எல்லாம் சிறியார்...

  பெரியாரைத் துணைக்கோடல்... ஓர் அதிகாரமே அய்யன் வள்ளுவர் வடித்துத் தந்துள்ளார். படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்...!

  எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
  மெய்ப்பொருள் கண்ப தறிவு.

  -வள்ளுவனின் வாய்மொழியைப் பெரியார் பகுத்தறியச் சொல்லியிருக்கிறார்...!

  ஆறறிவு இருப்பவர்கள் மட்டும் சிந்திக்க... மற்றவர்கள் நிந்திக்க...!

  நன்றி.
  த.ம. 13.

  ReplyDelete
 16. இது முட்டாள் செயல் அன்றி வேறில்லை!

  ReplyDelete
  Replies
  1. நன்றி .... இப்போது தோப்பு ...

   Delete
 17. அவர்தாம் பெரியார் என்ற முத்தாய்ப்பான தலைப்பினைக் கொண்டு அருமையான புகழாரம் சூட்டியுள்ளீர்கள். எவ்வளவு பெரியார் வந்தாலும் சமுதாயம் திருந்தப்போகின்றதா என்பது ஐயத்திற்குரியதே.

  ReplyDelete
  Replies
  1. நன்றி முனைவரே

   Delete
 18. தாமத வருகைக்காக வருந்துகிறேன் மது.
  சரியான தேவையான பதிவு “மாநிலத் தலைமையை வழக்குகளைக் காட்டி முடக்கியாயிற்று. மத்தியில் கேள்வி கேட்க முடியாத அதிகாரத்துக்கு வந்தாயிற்று.. முக்கியமான ஊடகங்களை காசை எறிந்து நாய் மாதிரி பின்னால் வர வைத்தாகிவிட்டது. இதற்கு மேல் என்ன..? இந்த மடையர்கள் ஓட்டுப் போட வேண்டியதுதானே..? என்ன செய்தாலும் வோட்டுகள் மட்டும் விழமாட்டேனென்கிறதே” என்னும் வயிற்றெரிச்சல்தான் வேறென்ன? மிக்க நன்றி மது. கூடுதல் த.ம.1

  ReplyDelete
  Replies
  1. இதுமாதிரி வெறிகொண்ட தாக்குதலை நம்ம ஆட்கள் எதிர்கொண்டு நாளாகிவிட்டது ...
   எனவே ஒவ்வொருவராக பதிலிட்டு வருகிறார்கள் ..
   வழக்கம்போல் நான் ஓவராக உணர்ச்சிவசப்பட்டு ஊரில் உள்ள நல்ல வார்த்தைகளைக் கொண்டு பதிவிடலாம என்று பார்த்தேன் ... அப்புறம் நந்தனின் பதிவு ஆறுதலாக இருந்தது ... ராசு, டி.வி.எஸ். என நண்பர்கள் மிக பக்குவமாக எதிர்வினை ஆற்றி வருகிறார்கள்..

   நான் இந்த விசயத்தில் இன்னும் பக்குவப் பட வேண்டியிருக்கிறது...

   Delete
 19. அவர் படத்தின் மீது சிறுநீர் கழித்த சகோதரனே.அவர் படத்தை செருப்பால் அடிக்கும் சகோதரியே.. //

  அடச் சீ இவங்க எல்லாம் மனுஷங்க??!!! ரொம்ப மோசமானவங்க...இந்த அளவுக்குக் கேவலமாக நடந்து கொள்ளும் மனுஷங்க வாழற கூட்டத்துக்கு நடுல வாழ வேண்டிய சூழல்....வாயில் வேறு வார்த்தைகள் எல்லாம் வந்தன....ஆனால் நாகரீகம் கருதி வேண்டாம் என்று ....

  ReplyDelete
  Replies
  1. விடுதலை எதற்கு பெற்றோம் ...
   எப்படி பெற்றோம்
   என தெரியாத மூடர்கூட்டம்

   Delete
 20. இந்த அரைவேக்காடுகளின் செயலால் ஒன்றும் இழப்பில்லை ,அவர்கள் ,தங்களை முட்டாள்கள் என்பதை நிரூபித்துக் கொள்கிறார்கள் :)

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப சரியாய் சொன்னீங்க

   Delete
 21. பெரியார் குறித்துத் தொடர்ந்து எழுதுவதும், இந்துத்துவாக் கிறுக்கர்களின் போலித்தனங்களைக் திரைகிழிப்பதுமே அவருக்கும் அவரது எதிரிகளுக்கும் நாம் செலுத்தும் எதிர்வினை

  ReplyDelete
  Replies
  1. நிறைய எழுத வேண்டும் தோழர்

   Delete
 22. உங்களது உணர்வு மிக மிக நியாயமானது. நமக்கான வேலை நிறைய இருக்கிறது என்பதையே இதுபோன்ற நிகழ்வுகள் சொல்கின்றன. உங்களது வலைப் பக்கத்தை எனது வலையின் முகப்பில் வைத்துள்ளேன் தொடர்ந்து வாசிப்பதற்கு ஏதுவாக

  ReplyDelete
  Replies
  1. அகிலம் அறிந்த எழுத்தாளுமை என்னை தொடர்கிறேன் என்று சொன்னது எனக்கு கிடைத்த ஊக்கமருந்து..
   அங்கீகாரத்தை தக்கவைத்துக் கொள்கிறேன்
   நன்றிகள் தோழர்

   Delete

Post a Comment

வருக வருக