- Get link
- Other Apps
மியான்மர் எனப்படும் பர்மாவில் நடப்பது என்ன.. முழுமையாக தெரிந்து கொள்ள விரும்பும் நண்பர்கள் இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும்..
\\
எதற்காக இந்த படுகொலைகள்?
மியான்மரின் ராகின் மாகாணத்தில் புத்த மதத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதைச் செய்தது என்று கூறி மூன்று முஸ்லிம்களை கைது செய்தது மியான்மர் அரசு. ஆனால் இளம்பெண்ணின் படுகொலைக்கு ரோஹிங்கியா முஸ்லிம்களை பழிவாங்கவேண்டும் என்று துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. மிகத் தீவிரமான இன எதிர்ப்புப் பிரசாரம் முடுக்கி விடப்பட்டது.
முஸ்லிம்கள் மீதான வன்முறை தொடங்கியது. அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. தொடக்கத்தில் இருதரப்பிலும் உயிர்ச் சேதங்கள் இருந்தாலும் ஒரு கட்டத்தில் ராகின் பௌத்தர்களின் கை ஓங்கியது. கடைகள், கல்வி நிலையங்கள், வங்கிகள் என்று அனைத்தும் மூடப்பட்டன. ஊரடங்குச் சட்டம் முஸ்லிம்களை வீட்டுக்குள் முடக்கிப் போட்டதால், அவர்களை வேட்டையாடிய பௌத்த ராகின்களுக்கு மிக வசதியாகப் போய்விட்டது. அவர்களின் வீடுகளுக்குள்ளேயே சென்று அவர்களைக் கொன்றனர்.
ஊரடங்கு உத்தரவுக்கு ராகின் வன்முறையாளர்கள் செவிசாய்க்கவில்லை. காவல்துறையும் ராணுவமும் இவர்களுக்கு உதவின. உள்நாட்டில் வாழ வழியில்லாத முஸ்லிம்கள், உயிரைக் காத்துக்கொள்ள படகுகளில் வங்கதேசத்துக்கு அகதிகளாகச் சென்றனர். ஆனால் வங்கதேசமோ ஏற்கனவே 3 லட்சம் ரோஹிங்கியா அகதிகள் தங்கள் நாட்டில் இருப்பதால் மேற்கொண்டு அகதிகளை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறி திருப்பி அனுப்பியது. நடுக்கடலில் போவதற்கு திக்கற்று அலைந்து திரிந்தே பசியிலும் பட்டினியிலும் நோயுற்றும் பலர் இறந்துபோயுள்ளனர்.
இது ஒருபுறம் என்றால் படகுகளில் தப்பித்துச் செல்லும் அகதிகளை குறிவைத்து ஹெலகாப்டர் மூலமும் தாக்குதல் நடத்தப்பட்டு கொல்லப்படுகிறார்கள். அகதிகளாகத் தப்பித்தவர்கள் கதி இதுவென்றால், உள்ளேயே இருந்தவர்கள் பேரினவாத குழுக்களிடம் சிக்கி தங்கள் உயிரை இழக்கின்றனர். படுகொலை செய்யப்பட்டு இறந்த முஸ்லிம்களின் தலைமுடியை அகற்றி மொட்டையடித்து, அவர்களுக்கு பௌத்த்த் துறவிகள் போன்று உடை அணிவிக்கப்பட்டு, புகைப்படங்கள் எடுக்கப்பட்டு முஸ்லிம்களால் கொல்லப்பட்ட்து போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டு கலவரங்கள் தூண்டப்படுவதாக சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
ஆனால் இதை உண்மை என்று நம்பும் மியான்மர் நாட்டினர் முஸ்லிம்களுக்கெதிரான கலவரங்களில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். ரோஹிங்கியா மக்கள் மத்தியில் வேலை செய்துகொண்டிருந்த தொண்டு நிறுவனமான கிலிஜிஷிணிகிழி ''இது போன்ற மோசமான நிலைமையை, நாம் இதற்கு முன்னர் சந்தித்திருக்கவில்லை. இனப்படுகொலை என்பதைக் குறிக்கும் சர்வதேச சட்டத்தினால் வரையறுக்கப் படக் கூடிய சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ரோஹிங்கியா வங்காளிகள் என்ற இனம், மியான்மரில் அழிந்து கொண்டிருக்கிறது." என்கிறது.
சீனாவும் இந்தியாவும் இதுகுறித்து கனத்த மௌனம் சாதிக்கின்றன. நோபல் பரிசு வென்ற மியான்மரின் எதிர்க்கட்சித் தலைவர் ஆங்-சாங்-சூ-கீயும் இது குறித்து மௌனம் சாதிக்கிறார். அமைதிக்கான நோபல் பரிசை வென்ற இன்னொருவரான தலாய் லாமாவும் இது குறித்து மௌனம் சாதிக்கின்றார். ஒருவேளை அமைதிக்கான நோபல் பரிசை, இதுபோன்ற சமயங்களில் அமைதியாய் இருப்பதற்காக வழங்கப்பட்டது என்று புரிந்துகொண்டார்களோ என்னவோ?
ரோஹிங்கியா முஸ்லிம்கள் 8 லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்கவில்லை மியான்மர் அரசு. திருமணம் செய்துகொள்ள ராணுவ உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். எல்லைக் காவல்படை உட்பட 4 இடங்களில் அனுமதிப் பத்திரம் பெறப்பட வேண்டும்.. திருமணம் செய்யாமல் ஓர் ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வது அங்கு குற்றம். அப்படி வாழ்ந்து கருவுற்ற ஓர் இளம்பெண்ணின் கால்நடைகளையும் உடைமைகளையும் ராணுவத்தினர் அபகரித்துச் சென்ற சம்பவமும் நடந்தது.
2 குழந்தைகளுக்கு மேல் பெறக்கூடாது. மிகக் குறைவான ஊதியமே அவர்களுக்கு வழங்கப்படும். அவர்களுடைய நிலங்கள் பிடுங்கிக்கொள்ளப்படுகின்றன. ஓரிடத்தில் இருந்து இன்னொரு இட்த்திற்கு நாட்டுக்குள்ளேயே இடம்பெயர அரசின் அனுமதியை அவர்கள் பெறவேண்டும். உயர்கல்வி வழங்கப்படுவதில்லை. பாஸ்போர்ட் கிடையாது.
7 வயது முதலே குழந்தைகள் தொழிலாளிகளாக்கப்படுகிறார்கள். நாட்டின் மிக அபாயகரமான, மோசமான தொழில்கள் செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். பாலம் கட்டுவது, பாதைகளை சீரமைப்பது போன்ற பல கட்டுமானப் பணிகளிலும் இவர்களே குறைந்த கூலிகளில் அடிமைகள் போல வேலை வாங்கப்படுகிறார்கள். இவர்களின் வீடுகளுக்குள் எப்போது வேண்டுமானாலும் காவல்துறை நுழைந்து சோதனை செய்கிறது. அவர்கள் கூடும் இடங்களில் துப்பாக்கிச்சூடுகள் நடத்தப்படுகின்றன.
ராணுவம் முஸ்லிம் பெண்களை பாலியல் வல்லாங்கு செய்வது வாடிக்கையாகிப் போனது. இத்தனை அடக்குமுறைகளைத் தாங்கிக்கொண்டிருக்கும் ஒரு சமூகம் இந்நேரம் பொங்கியெழுந்திருக்க வேண்டும். ஆனால், குர்துக்கள், பாலஸ்தீனியர்கள் போல அவர்களை வழிநடத்த ஒரு தலைவர் அவர்களுக்கு இல்லை என்பதால் அது நடக்கவில்லை..
அண்டை நாடு என்கிற முறையில் இந்தப் படுகொலைகளைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கப்போகிறதா இந்தியா? அல்லது ஒரு கண்டன அறிக்கையாவது இந்திய அரசு வெளியிடுமா என்கிற எதிர்ப்பார்ப்பு இந்திய முஸ்லிம்களிடையே உள்ளது. அதையாவது நிறைவேற்றுமா அரசு?
--நன்றி கவின்மலர்....\\
கடும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தரும் நிகழ்வு ... பகிர்ந்த கவிஞர் நந்தனுக்கும், எழுதிய கவின்மலருக்கும் வலியுடன் நன்றிகள்
மனதை உருக்கும் பதிவு இதை வெளியுலகம் இன்னும் சரியாக அறிய வில்லையா!?
ReplyDeleteவினோதம் என்றாலும் உண்மை இதுதான் ..
Deleteமீடியாக்கள் இதைப்பற்றி பேசாது மௌனிகின்றன..
வருகைக்கு நன்றி அய்யா
வணக்கம்
ReplyDeleteவேதனையான விடயம் அவர்கள்வாழ்விலும் விடியல் பிறக்கட்டும்
பகிர்வுக்கு நன்றி.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கு நன்றி அய்யா
Deleteபடிக்கும் பொழுது ஒவ்வொரு விடயங்களும் வேதனையை அளிக்கின்றது தோழரே உலகமெங்கும் மனிதம் செத்துக்கொண்டு இருக்கின்றது இதன் முடிவு உலத அழிவில்தான் தீரும் பூகம்பங்களும். சுனாமிகளும் பெருகிக்கொண்டே வருவதற்க்கு மனிதர்களின் அட்டூழியங்களே முதல் காரணம் இதைப் பகிர்ந்த கவிஞர் நந்தன் ஸ்ரீதரன் அவர்களுக்கும், தங்களுக்கும் வேதனையுடன் நன்றி.
ReplyDeleteதமிழ் மணம் முதலாவது.
மனிதர்கள் இறைவனின் பெயரால் மிருகங்களாக மாறி வருடங்கள் ஆகின்றது
Deleteஇதுவொரு மிகக் கொடுமையான இன அழிப்பு போர். இதைப் பற்றி நானும் ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒரு கட்டுரையை பத்திரிகையில் எழுதியிருந்தேன். விரைவில் அதை எனது வலைதளத்தில் வெளியிடுகிறேன். அருமையான கட்டுரையை படிக்க தந்தமைக்கு நன்றி!
ReplyDeleteத ம 4
நன்றி திரு.செந்தில் உங்கள் கட்டுரைக்கு காத்திருக்கிறேன்
Deleteஇப்படியெல்லாம் கொடுமை நடப்பதை ,இருந்தால் அல்லவா ,கடவுள் பார்த்துக் கொண்டு இருப்பார் ?
ReplyDeleteஅவனைப் போட்டுத் தள்ளி ரொம்ப நாட்கள் ஆச்சு ...
Deleteகடும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தரும் நிகழ்வு
ReplyDeleteஎன்ன உலகம் இது
தம +1
வேதனை தரும் நிகழ்வுகள்தான் ..
Deleteமுகநூலிலேயே வாசித்தேன் தோழர். நல்ல பதிவைப் பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteபுத்திஷ்டுகள் செய்தாலும் புத்தனே செய்தாலும் நாம் கொலைகளின் எதிரிகளே
நன்றி தோழர் ...
Deleteவிரைவில் நல்லதொரு முடிவு வரட்டும்...
ReplyDeleteநன்றி அண்ணா
Deleteபகிர்வுக்கு நன்றி விரைவில் ஒரு நல்ல முடிவு ஏற்பட வேண்டும்.
ReplyDeleteநல்லது நடத்தால் சரி
Deleteவருகைக்கு நன்றி அய்யா
http://arumbithazh.blogspot.in/2015/05/blog-post_27.html
ReplyDeleteவருகைக்கு நன்றி
Deleteதற்போது உலகில் நடக்கும் கொடூரங்களில் இதுவும் ஒன்று. இயற்கைப் பேரிடம் ஒரு புறம், இவ்வாறான நிகழ்வுகள் மறுபுறம், வாழ்க்கையின் அவலத்தை நினைக்கும்போது வேதனையாக உள்ளது. தாங்கள் இதனைப் பொறுப்புடன் பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteபொதுவாக பெரியார் முதல்க் கொண்டு பலரும் மைனாரிட்டிக்கு சப்போர்ட் பண்ணுவோம். அதாவது இஸ்லாமியர், கிருத்தவர்களை நாம் அதிகம் சாடுவதில்லை. மெஜாரிட்டியான இந்ந்துக்களையே அதிகம் விமர்சிப்போம். இதை சுயநலம் மட்டுமே புரியும் பார்ப்பனர்கள் அடிக்கடி விமர்சிப்பதைக் காணலாம். ரகுவீரன் பிரச்சினையைப் பேசினாலும் பார்ப்பனர்கள் (இந்துக்களுடன் ஒண்ணு சேர்ந்து மெஜாரிட்டியாகிவிடும் இவர்கள்) , இஸ்லாமியர்களையும் கிருந்த்தவர்களையும் இழுத்து வந்து நிறுத்துவதைப் பார்க்கலாம்.
ReplyDeleteஎனிவே, இதுபோல் நாம் மைனாரிட்டியை அரவணைப்பதற்கு முக்கியக் காரணம் என்னவென்றால்..மைனாரிட்டியை இதுபோல் மெஜாரிட்டி தாக்க ஆரம்பித்தால் அவர்களை காப்பாத்துவது கஷ்டம் என்பதால்த்தான். சுயநலம் தவிர எதுவுமே தெரியாத பார்ப்பனர்களுக்கு இது விளங்குவதே இல்லை. எதுக்கெடுத்தாலும் பார்ப்பனர்களுக்கு ஒப்பாரி வைப்பவர்களுக்கும், நம்முடைய நிலைப்பாடு புரிவதில்லை. மைனாரிட்டியை நாம் பாதுகாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
ஒரு பெண்ணை 3 பேரு வன்புணர்வு செய்து உள்ளார்கள். பெண் புத்த மதத்தை தழுவியவள். மூவரும் இஸ்லாமியர்கள் என்கிறார்கள். இச்சூழலில் எழுந்த பிரச்சினை, மதச் சண்டையாகி மைனாரிட்டி மெஜாரிட்டியைத் தாக்க ஆரம்பிச்சுட்டாங்க.
இதேபோல் சைனாவிலும் மைனாரிட்டி முஸ்லிம்ஸ் இருக்காங்க. சீனாவிலும் இவர்களை கவனமாகத்தான் "டீல்" பண்ணுறாங்க. அதாவது இவர்களை வளரவிடக்கூடாது என்றுதான் அரசாங்கமே நினைக்கிறது.
இஸ்லாமியர்களுடைய மதப்பற்று எல்லோரையும் பயமுறுத்துகிறது என்பதுதான் இதை புதைந்து கிடக்கும் கசப்பான உண்மை. மதத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் தீவிரமாக எடுத்துக்கொண்டால் இதுபோல்தான் வந்து முடிகிறது. மதத்தை ஒரு "கல்ச்சராக" நாம் பார்க்கக் கற்றுக்கொண்டால் நல்லதுனு நினைக்கிறேன். "நாம்" என்பது நானும் நீங்களும் இல்லை. இவ்வுலகே பார்க்கக் கத்துக்கணும். அதெல்லாம் நடக்கிற காரியாமா?னு அவநம்பிக்கைதான் வருகிறது. :(
சட்டம் தனது கடமையை செய்யாமல் மதத்தின் முன் மண்டியிட்டால் என்ன நடக்கும் என்பதற்கு மீண்டும் ஒரு கசப்பான உதா.
Deleteவருகைக்கு நன்றி
கடும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தரும் நிகழ்வினை பகிர்ந்தளித்த ளித்த கவிஞர் நந்தனுக்கும், எழுதிய கவின்மலருக்கும் வலியுடன்கூடிய நன்றிகளை நாமும் பகிர்ந்தளிக்கின்றோம் தோழரே!
ReplyDeleteத ம +1
நட்புடன்,
புதுவை வேலு
உண்மையில் இச்சம்பவங்கள் 2012ல் நடைபெற்றன . தற்போது 2012 போன்ற பாரிய வன்முறை மீண்டும் அங்கு வெடிக்கவில்லை. மியன்மாரிலிருந்து முஸ்லிம்களுடன் புறப்பட்ட நான்கு படகுகளை மலேசியா, பங்களதேஷ், தாய்லாந்து போன்ற நாடுகள் ஏற்க மறுக்க அவர்கள் கடலில் உணவின்றி தத்தளித்துக்கொண்டிருந்த உண்மைச் செய்தியோடு இன்று சொல்லப்படும் கொடூர வன்முறை பற்றிய சோடிக்கப்பட்ட கதை ஆரம்பித்தது.இந்த நான்கு படகுகள் பற்றிய கதையை கொஞ்சம் திரிவுபடுத்தி உசுப்பேற்றிவிட்ட சில இணையத்தளங்களை மேற்கொண்டு கூகுளில் கிடைத்த பழைய புகைப்படங்களை (2012) பிரசுரித்து முகப்புத்தக போராளிகள் இந்த கதையை இல்லாததுபோல ஒரு இன்டென்சாக மாற்றிவிட்டிருக்கிறார்கள். இன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவது போன்ற எந்த வன்முறைகளைப் பற்றியும் எந்த உலக செய்தி நிறுவனங்களோ அல்லது மனிதாபிமான அமைப்புக்களோ உறுதிசெய்யவில்லை. இத்தளத்தில் படித்துப்பாருங்கள் http://www.rajamal.com/?p=1164
ReplyDeleteஎன்ன கொடுமை இது?! கொடூரமா இருக்குதே! நாம் எந்த உலகில் இருக்கின்றோம்? பார்பேரியன்ஸ்? ஆம் அப்படித்தான் தோன்றுகின்றது....உலகில் பல பகுதிகள் இன்னும் கற்காலத்திலிருந்து வெளிவரவே இல்லை என்றுதான் தோன்றுகின்றது.....
ReplyDeleteஅதே சமயம் திரு அன்னொஜென் பாலகிருஷ்ணன் அவர்கள் சொல்லி இருப்பதையும் பார்க்க வேண்டும்....
.எதுப்பா உண்மை?!!!