முகநூல் இற்றைகள்...

1
நகைக்க வைக்கும் நினைவுகள்
ஒரு இருபது ஆண்டுகள் இருக்கும்.
அப்போது ஒரு தனியார் பள்ளியில் பணிபுரிந்துகொண்டிருந்தேன்.
எனது வீட்டிற்கு மாமன் மச்சான் என என்சோட்டு பசங்க வந்திருந்தார்கள்.
பக்கத்து வீட்டில் இருந்த பொடியன் ஒருவன் எனது வகுப்பில் இருந்தான். ஆறாம் வகுப்பு படிக்கும் அவன் எதோ சந்தேகம் கேட்க எனது வீட்டிற்கு வந்தான். 
ஒரு அரைமணிநேரம் என்னிடம் ஆங்கிலத்திலேயே பேசிக்கொண்டிருந்துவிட்டு விடைபெற்றான்.



எனது குழு நண்பர்கள் விரிந்த விழிகளோடு இருந்தார்கள். டேய் எப்படிடா இம்புடூண்டு பயன் இப்படி இங்க்லீஸ் பேசறான்!
அவர்களின் ஆச்சரிய அதிர்வு எனக்கு சமூகத்தின் வியப்பாகவேபட்டது.
மெல்ல சொன்னேன் ஆங்கிலத்தில் எதைப் பேசினாலும் ஏன் இப்படி வியந்து போகிறீர்கள்? பையன் பேசியதில் பாதி வாக்கியங்கள் தவறானவை. என்றும் ஆசிரியர் எந்தக் காரணம் கொண்டும் பேசுகிற மாணவனின் தவறுகளைக் உடனடியாகச் சொல்லக் கூடாது என்கிற காரணத்தினாலே நான் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தேன் என்றதும் ஆ அப்படியா என்றார்கள்.
யாரவது இங்லீசில் பீட்டர் விட்டாலே ஒரு நடுக்கம் வந்து உட்கார்ந்து கொள்வது இயல்பே.
இந்த மாயையில் இருந்து வெளியில் வருவதுதான் மெய்யான கல்வி, தன்னுணர்வு...
நிறையப் பேர் வெளியில் வந்துட்டாங்க... வராதவங்க ரொம்ப அசிங்கப் படுத்துறாங்க... நினைவில் இருக்கா அந்த தந்தையின் வார்த்தைகள் //என் பொண்ணு காபி ஷாப்பில் தமிழில் பேசினால் எனக்கு அவமானமாக இருக்கிறது///
மாயையில் இருந்து விடுபட வேண்டும்...
2
அவதார் ஜேம்ஸ் கேமரானின் மகுடத்தில் இன்னொரு மணிவைரம். 
கதைப்படி மனிதர்கள் பூமியை தின்றுதீர்த்துவிட்டு ஒளியாண்டுகள் பயணித்து இன்னொரு கிரகத்தை அடைந்து இயற்கையோடு ஒன்றிணைத்து வாழும் அதன் குடிகளை அழிக்க விளைகிறார்கள்... ஆனால் கதாநாயகன் பரிதாபத்திற்குரிய அந்த ஜீவன்களை காக்க அவர்களின் ஒருவனாக மாறிப்போகிறான் ...
திரையரங்கில் இந்தப் படத்தை விசிலடித்து பார்த்த நாம் ஒமாட்டிக்காயா (கிரகத்தின் பூர்வ குடிகள்) வெல்ல வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். 
ஆனால் நிஜத்தில் நம் மக்கள் பாக்சைட் தாதுக்காவும், தாமிரத்திற்காகவும் அவர்களின் பூர்வீக மலையக வாழிடங்களை விட்டு விரட்டப் படுவதை மௌனமாகவே பார்துக்கொண்டிருக்கிறோம்.
போதாக் குறைக்கு அவர்களை தீவிர வாதிகள் என்று அறிவித்து பன்னாட்டு நிறுவனங்களுக்காக கைக்கூலிகளாக செயல்படும் அரசியல் வியாதிகளை பார்த்து கைகூப்பவும் செய்கிறோம்...
‪#‎நொந்தவனம்‬ ...

3
பிரியத்திற்குரிய நண்பர் சந்திரமோகன் ...
நீண்ட நாள் தள்ளிப்போன சந்திப்பு .
சில நிமிடங்கள் மட்டும் என்றாலும்
அவரது அன்னை தந்த அடுக்குமல்லியைப் போலவே நினைவில் சுழலும் நறுமணமாய் ஒரு இனிய உரையாடல் ...
அடுத்த முறை நீண்ட நேரம் பேசமுடியும் என்று நினைக்கிறேன்.
— with சந்திரமோகன் வெற்றிவேல்

4
ஜீவ சுந்தரி பாலன் ... 
வாட்சப்பில் வரும் ஒரு படம் குறித்து நந்தனின் பதிவின் பின்னூட்டம் ..
Jeevasundari Balan
ஒரு இருபத்தைந்து வருடங்களுக்கு முன் ஒரு மகளிர் தினம். 1990 என்று நினைவு. அப்போது அது வியாபாரிகளின் தினம் ஆகவில்லை. எங்களைப் போன்ற இடதுசாரி அமைப்பைச் சேர்ந்த பெண்கள்தான் மகளிர் தினத்தை அனுசரித்தோம். அந்த நாளில் நாற்றத்தை வாரியிறைக்கும் “தினமலம்’ பத்திரிகை தன் முதல் பக்கத்தில் ஒரு வயதான பெண்மணி பிராந்தி ஷாப்பில் (அப்போதுதான் டாஸ்்மாக் இல்லையே) சரக்கு வாங்கி அங்கேயே குடிக்கும் படத்தை வெளியிட்டு, ‘மகளிர்தினம்’ என்று நக்கலடித்திருந்தது. நாங்கள் விடவில்லை. அலுவலகத்துக்கு நேராகப் போய் கலங்கடித்து விட்டோம். ஒரு பெண் பொதுவெளியில் குடிக்கிறாள் என்றால், எத்தனை மன அழுத்தமும் வேதனையும் அவளுக்கு இருக்கும்? அதையெல்லாம் வெளியிட்டு அசிங்கப்படுத்துவதே இங்குள்ள ’புனிதர்’களுக்கு ஒரு பொழுதுபோக்கு்ம், கிண்டலும் ஆகி விட்டது. எத்தனை சதவீதப் பெண்கள் குடிக்கிறார்கள்? அது மட்டும் ஏன் இவர்களின் கண்களை உறுத்துகிறது? நந்தன் ஸ்ரீதரன்
5

உங்களன்பிற்கு நன்றி தோழர்களே!
மகிழ்வான தருணம் தந்தீர் மலர்தரு ஆசிரியரே! Kasthuri Rengan
கந்தர்வகோட்டையிலிருந்து கனிவான முகம் கொண்டுவந்தீர் தம்பீ....Manikandan Arumugam
அழகு ரோஜா மலர்தந்து அன்பு செய்தீர் தோழரே Vembulu Kumaran.


6
இது இசை பற்றிய பதிவு அல்ல. சமூகம் பற்றியது
பத்து ஆண்டுகளுக்கு முன்பு
எனது நட்பு வட்டம் சற்று அலாதியானது ... எந்த வரையறையும் கிடையாது.
ஒவ்வொரு விசயத்திற்கும் ஒரு குழு நண்பர்கள், தியேட்டர் என்றால் ஒரு குழு, புதுக்குளம் கரையில் உட்கார்ந்து பேச ஒரு குழு, இப்படி பல குழுக்கள் இன்றளவும் தொடர்கின்றோம்.
அப்படி ஒரு குழுவிடம் ஓர் திரைப்படம் குறித்துப் பேசிக்கொண்டிருந்த பொழுது புதிதாக வந்திருந்த திரைப்படம் குறித்து அழுத்தமாக சொன்னார்கள்.
மொக்கைப் படம் அது .
எப்படியோ தவறி நான் அந்தப் படத்தை பார்க்க நேர்ந்தது. படம் ரொம்ப நன்றாக இருந்தது.
நண்பர்களிடம் ஏன் அப்படி சொன்னீங்க என்ற பொழுது அதன் இசையமைப்பாளர் குறித்த வெறுப்பே அப்படி அவர்களை சொல்ல வைத்திருந்ததை உணர்ந்தேன்.
ஒரு சமூக உணர்வு அவர்களுக்கு அழுத்தமாக இருந்ததையும் உணர்ந்தேன். கொஞ்சம் ஷாக்தான்.
அதற்குபின்னர் பணியில் சேர்ந்த பொழுது மூத்தவர் ஒருவரிடம் ஒரு குறிப்பிட்ட இசைஅமைப்பாளரை சொல்லி இப்போது அவர்பாடல்கள் நிறய வருவதில்லை என்று சற்று வருத்தம் தொனிக்கும் குரலில் சொன்னேன்
(சாதிப் பெயரை சொல்லி ) அவன் அடி அவ்ளோதான் என்றார்.
ஆக நம்ம மக்கள் இசையை இசையாகவோ, நல்லதை நல்லது என்றோ கெட்டதை கெட்டது என்றோ பிரித்தறியும் பக்குவம் கூட இல்லாமல் இருக்கிறார்கள்.
இந்த லெட்சணத்தில் வல்லரசு ஆவுராங்கலாமா ...
மனிதர்கள் மனிதர்களாக ஏற்றுக் கொள்ளப்படாதவரை, சற்றும் மனிதத் தன்மையற்ற முட்டாள்த்தனமான பிரிவினைகள் இருக்கும் வரை
வல்லரசு ஆவோம் என்று யாரவது சொன்னாலோ பேசினாலோ செம காண்டாகுது எனக்கு,
சமயத்துல சிரிப்பு சிரிப்பா வரும்..
‪#‎வல்லரசு‬

7
விக்டர் பிராங்கள் போரில் அவதியுற்ற மக்களுக்கு உதவ வந்த ஒரு தம்பதியினரின் அனுபவம் குறித்து பதிந்திருக்கிறார்.
சில கேள்விகளின் பின்னால் அவர்கள் அப்பீட்டு ..
நீங்கள் அவர்களுக்கு உதவ வேண்டும் என்று நினைக்கிறீர்கள், அப்படியெனில் நீங்கள் அவர்களை விட உயர்ந்தவர்கள் என்கிற எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா...
அவர்கள் உங்களை விட தாழ்ந்தவர்கள் என்கிற எண்ணம் இருக்கிறதா
இந்த ரீதியில் கேட்கப் பட்ட கேள்விகளின் முடிவில் அந்த தம்பதியினர் தெளிவான பதில்களை தர இயலாமல் அப்பீட் ஆனார்கள்.
உண்மைதானே தான் உயர்ந்தவன் என்று ஒருவர் நினைத்தால் மற்றோரை தாழ்ந்தவர்கள் என்று அவர் நினைக்கிறார் நம்புகிறார் என்றுதானே அர்த்தம்?
அப்போ ஒருவர் தனது மொழி உயர்ந்தது என்று சொன்னால்?
தனது இனம் உயர்ந்தது என்று சொன்னால்?
சாதி?
தோலின் நிறம் உயர்ந்தது என்று சொன்னால்?
அடுத்தவர் மீது எப்படி வேண்டுமானாலும் வன்முறை நிகழ்த்தலாம்.
இப்படி நம்பும் அனைவரும் அமைதியான கொலைகார்கள்தான் எனபதில் நேக்கு எந்த சந்தேகமும் இல்லை.
8
அமெரிக்காவில் கடந்த ஆண்டில் நாற்பது சதம் தேனீக்கள் மறைந்து போயிருக்கின்றன.
இது நல்ல சகுனம் அல்ல..
தொடர்ந்து பூச்சி இனங்களும் பறவை இனங்களும் காணமல் போவது மனிதகுலத்தின் கல்லறை வெகுவிரைவாக தயாராவதின் அறிகுறி..
இந்த ஆண்டு இந்த இழப்பு சதவிகதம் கூடியிருப்பதாக அமரிக்க உணவு மேம்பாட்டுத் துறை சொல்லியிருக்கிறது...
இருக்குறவரை என்ஜாய் ...
9
விடுதலைக்கு எதிராக குரல் கொடுத்தவர்களில் எனக்கு பிடித்தவர்கள் இரண்டு பேர்.
ஒருவர் அம்பேத்கார். இன்னொருவர் அயோத்திதாசர்!

அம்பேட்கரைபற்றி பலருக்கும் தெரியும்.
உலகில் மிக அதிகமான சிலைகள் அமைக்கப்பட்டிருப்பது  சட்ட மேதை அம்பேட்காருக்குத்தான் என்பதும் உங்களுக்கு தெரியும்.

இந்த அயோத்திதாசர் யாருன்னு தெரியுமா?

இவர் உண்மையான பெயர் காத்தவராயன். ஒரு தலித். இவரது தாத்தா ஒரு வெள்ளைக்கார துரை வீட்டில் தோட்ட வேலை பார்க்க, அங்கே விளையாடப் போன காத்தவராயனை படிக்க வைத்து தொலைந்தார் அந்த  வெள்ளைக்கார பிரபு.

நமக்கு கிடைத்தார் அயோத்திதாச பண்டிதர்!
மேல படிக்கணும்னா
http://www.malartharu.org/2014/04/iyothee-thass.html
10
பாட புத்தகங்களில் படிக்கிற விடுதலை இயக்கத்திற்கும் ...
நூலக புத்தகங்களில் படிக்கிற விடுதலை இயக்கத்திற்கும்தான் எத்துனை வித்தியாசம்.
உயர்த்தப்பட்ட வாட்களும், எறியப்பட்ட ஈட்டிகளும், வெடித்த துப்பாக்கிகளும், சுழன்ற ராட்டைகளும் நாட்டைக் காப்பாற்ற மட்டுமே என்று இன்னும் யாரவது நம்பினால்... அவர்கள் மாதிரி அப்பாவிகள் யாரும் இருக்க முடியாது...

Comments

  1. முன் அனுமானம் ஒன்று உண்டாகி விட்டால் ,இசையை மட்டுமல்ல எதையுமே ரசிக்க முடியாது !

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி தோழர் ..

      Delete
  2. // பையன் பேசியதில் பாதி வாக்கியங்கள் தவறானவை. என்றும் ஆசிரியர் எந்தக் காரணம் கொண்டும் பேசுகிற மாணவனின் தவறுகளைக் உடனடியாகச் சொல்லக் கூடாது என்கிற காரணத்தினாலே நான் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தேன்//

    முத்தாய்ப்பான யோசிக்க வேண்டிய வரிகள்.

    // (சாதிப் பெயரை சொல்லி ) அவன் அடி அவ்ளோதான் என்றார்.//

    ஒருவேளை செவ்வாய்க் கிரகம் போனாலும் ஜாதியை விடாத தமிழர்கள்.

    த.ம.3

    ReplyDelete
    Replies
    1. ஆகா நான் இற்றைகைளின் தொகுப்பை சேமிக்கும்படியே இந்த பதிவை வெளியிட்டேன்...
      பொறுமையாக படித்ததற்கு நன்றிகள் அய்யா

      Delete
  3. பேஸ்புக்கில் தனிதனியாக படித்தாலும் இங்கே அனைத்தையும் ஒரு சேர படிக்கும் போது மிக நன்றாக இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. வாங்க டி.ஜே. நலம்தானே..
      நன்றாக இருந்தால் சரி

      Delete
  4. நல்ல இற்றைகள்.

    இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே...
      உங்கள் கட்டுரைகள் தொடரட்டும் குறைந்த பட்சம் ஒரு மின் நூலாகவாது வரட்டுமே..

      Delete
  5. கொடுப்பவன் தானே மேல் ஜாதி...
    கொடுக்காதவனே கீழ் ஜாதி... (2)
    படைத்தவன் பேரால் ஜாதி வைத்தான்...
    பாழாய்ப்போன இந்த பூமியிலே... (2)
    நடப்பது யாவும் விதிப்படி என்றால்
    வேதனை எப்படி தீரும்...? (2)
    உடைப்பதை உடைத்து வளர்ப்பதை வளர்த்தால்...
    உலகம் உருப்படியாகும்... ம்... உலகம் உருப்படியாகும்...

    கடவுள் செய்த பாவம்...
    இங்கு காணும் துன்பம்...
    யாவும் என்ன மனமோ...? என்ன குணமோ...?
    இந்த மனிதன் கொண்ட கோலம்... ம்...
    மனிதன் கொண்ட கோலம்...

    ReplyDelete
    Replies
    1. அண்ணே இந்த விசயத்தில் உங்களுக்கு பி.ஹெச்.டி யே தரலாம்..
      எப்டி இப்டி...அசத்தல்

      Delete
  6. நன்றாக இருக்கிறதுத. த.ம.5

    ReplyDelete

Post a Comment

வருக வருக