பள்ளியில் படிக்கும் பொழுது மாட் மாக்ஸ் படங்களை துரத்தி துரத்தி பார்த்த குழு எங்களது.
மெல் கிப்சன் என்கிற மாபெரும் நட்சத்திரத்தை உருவாக்கிய படம். 1979இல் தொடங்கி மூன்று பாகங்கள் வந்ததது. வசூலில் கின்னஸ் சாதனையை படைத்தபடம்.
படம் பேசும் விசயங்கள், சம்பவங்கள் குறித்து பாதி புரிந்தும் புரியாமலும் பார்த்த வயது.
இப்போது மீண்டும் மாட் மாக்ஸ் ஃபியூரி ரோட்!
அதே இயக்குனர்! ஜார்ஜ் மிலர்!
அப்புறம் என்ன.. போகாமல் இருப்பேனா.
படம் வழக்கம்போலவே போஸ்ட் அப்போகலிப்ட் சூழல். ஒரு பெரும் அழிவின் பின்னால் நாகரீகம் சட்டம் பாதுகாப்பு எல்லாம் அழிந்த பின்னர் எஞ்சியிருக்கும் மனிதர்களின் வாழ்வியல் முறைகள்.
அணுவெடிப்பிற்கு பின்னர் உலகம் பாலவனமாகிறது. ஒரு சில இடங்களில் மட்டுமே மனிதர் வாழமுடிகிறது. தண்ணீர் பற்றாக்குறையினால் உலகமே தவிக்க அதை கட்டுப்படுத்தும் இம்மார்டன் உலகை கட்டுக்குள் வைத்திருக்கிறான். இவனது அடியாட்கள் தனியே சுற்றும் ஹீரோவை மாக்சை பிடித்து அவனை ஒரு ப்ளட் பாங்க்காக பயன்படுத்துகிறார்கள்.
ஹீரோவின் நேரம் இம்மார்டனின் மனைவிகள் தப்பியோட , கதாநாயகி ஃபியூரோசா உதவுகிறாள். இவர்களை பிடிக்க விரையும் ஒரு அடியாள் ஹீரோவையும் தூக்கி ஒரு காரில் போட்டுக்கொண்டு விரைகிறான்.
தொடர்கிறது மெகா அதிரடி ஒன்று.
அப்புறம் வேறென்ன சுபம்தான்.
படத்தின் மாபெரும் பலம் என்றால் அது நாயகி சார்லீஸ் தேரோன். இப்படி ஒரு பிசாசை (நடிப்பில் சொன்னேன்) பார்த்து ரொம்ப நாளாயிற்று. இவரது பர்பார்மன்ஸ் முன்னால் ஹீரோ டம்மியாக தெரிகிறார்.
தொலைவில் இருட்டில் வரும் வில்லன் ஒருவனை டிம்மின் தோளில் துப்பாக்கியை வைத்து போட்டுத்தள்ளுவதாகட்டும், ஹீரோவை அடி உரிப்பதாகட்டும், இரண்டாயிரம் ஹார்ஸ் பவர் வண்டியை அசத்தலாக ஓட்டுவதாகட்டும் அம்மணி தூள் கிளப்பிங்.
அதே போல் உடைந்துபோய் மணல் பரவும் பாலையில் மடிந்து விழுந்து வான்நோக்கி கதறி அழும் காட்சி! என்ன குறியீடுப்பா.
படத்தின் ஸ்டென்ட்கள் அனைத்தும் அசத்தல். வசூல் குவிகிறதென்றால் அதற்கு முக்கியமான காரணம் ஸ்டென்ட்கள்தான்!
இப்படி ஒரு ஸ்டேன்ட் சீகுவன்ஸ் எப்படிப்பா இப்படி யோசிக்கிறாங்க. கை நோரிஸ் எனும் ஸ்டன்ட் இயக்குனர் படத்தின் இரண்டாம் பாகத்தில் இருந்து பணியாற்றி வருகிறார். பட்டாசு கிளப்பியிருக்கான் மனுஷன்.
அடுத்ததாக அரங்கை விட்டு வெளியில் வந்தாலும் நம்மோடு ஓட்டிக்கொண்டே வரும் இசை! ஜங்கி எக்ஸ்.எல். ஆமாப்பா இது தான் இசையமைப்பாளரின் பெயர்!
படம் வெறும் ஆக்சன் குப்பை என்று தள்ளிவிட்டு போய்விடாமல் செய்யும் வண்ணம் நிறைய குறியீடுகள் விரவியிருக்கின்றன. பசுமை பள்ளத்தாக்கின் விதைகளை வைத்துக்கொண்டு அலையும் ஆக்சன் பாட்டி அவரது இறுதிப் புன்னகையெல்லாம் ஒரு செகன்ட் நமக்கு ஆக்சன் பிலிமா இல்லை அவார்டு பிலிமா என்கிற நினைக்கிற அளவிற்கு இருக்கிறது.
நல்ல படம்தான் இந்த வெறிகொண்ட சாலை...
வசூல் 150மிலியன் டாலர்களின் தயாரான இப்படம் இப்போதே 109 மிலியன்களை குவித்துவிட்டது. எனது கணக்குப்படி வெகு விரைவில் இது பிலியன் டாலர் வசூலை அடையும். சரிதானே மெக்(விமர்சன உலகம் மேக்னேஷ்).
ஒரு தபா பார்க்கலாம்
எனது மதிப்பெண் 7/10 ..
பி.கு
டிம் ஹார்டி அடுத்த பாகத்திலாவது நல்லா நடிக்கிறாரான்னு பார்க்கலாம். அடுத்து வரும் மூன்று படங்களிலும் இவர்தான் ஹீரோவாம். சார்லீஸ் தேரோன்தான் ரட்சிக்கனும்..
மிகைப்படுத்தாத யதார்த்தமான அழகான விமர்சனம் நன்றி தோழர்
ReplyDeleteதமிழ் மணம் 2
நன்றி தோழர்
Deleteத.ம.3
ReplyDeleteநன்றி அய்யா
Deleteநேரில் உங்களோடு உரையாடுவது போன்றே இருக்கிறது, உங்கள் விமர்சன ஸ்டைல்.
ReplyDeleteநன்றி அய்யா
Deleteகளத்திற்கே அழைத்துச்சென்றது போலிருந்தது விமர்சனம். பாராட்டுகள்.
ReplyDeleteஇந்தப் படங்களின் முதல் மூன்று பாகங்களைப் பற்றி நண்பர்களோடு பேசிக் கழித்த காலம் இன்னும் நினைவில் இருக்கு ஜார்ஜ் மிலர் அறுவடை செய்துவிட்டார்..
Deleteஇப்படி ஒரு பிசாசை பார்க்க வேண்டும்...!
ReplyDeleteஅரண்டுருவீங்க... பாப்போம்
Deleteஅழகான விமர்சனம்
ReplyDeleteநன்றி தோழர்...
Deleteதாம் ஹார்டி நல்ல நடிகர் தான்ணா . ஆனா இந்த படத்துல என்னாச்சினு தெரியல . நாளைக்கு பார்த்துட்டு வந்து மற்றதை எல்லாம் சொல்றேன் நா ...
ReplyDeleteநன்றி மெக்..
Deleteபார்ப்போம்..
ஒருவேளை மெல் கிப்சனின் பர்பார்மன்ஸ் என்னை டிஸ்டர்ப் செய்திருக்கலாம்..
Deleteஇப்படியான படமெல்லாம் பார்க்க கொடுத்து வைக்கவில்லை..த.ம8
ReplyDeleteஏன் தோழர்..
Deleteபாக்கனும்னு தோணுதே.. :)
ReplyDeleteமியுசிக் ஸ்டார்ட் ஆகிட்டது போல...
Deleteவருகைக்கு நன்றி சகோதரி
விமர்சனம் அருமை நண்பரே
ReplyDeleteகுடும்பத்தோடு ஒரு சிறு சுற்றுலா சென்று வந்தமையால், கடந்த சில நாட்களாக, வலையின் பக்கம் எட்டிக் கூடப் பார்க்க இயலவில்லை. அதனால் தங்களின் சில பதிவுகளைப் பார்க்காமல் விட்டிருப்பேன். இனி தொடர்வேன்
தம +1
வருக வருக ..
Deleteசுற்றுலா எனில் இனி பதிவுகள் நிறையத் தொடருமே...
வாழ்த்துகள்
உங்களின் விமர்சனம் படித்துவிட்டு ஒரு சில ஆங்கிலப் படங்கள் பார்த்தேன் . இதையும் பார்த்துவிட வேண்டியதுதான்! நீங்கள் ஆங்கிலப் பட ரசிகரோ?
ReplyDeleteஆம் அய்யா..
Deleteஅப்படி செட்டாகி விட்டது..
அழகிய விமர்சனம் தங்களது ஸ்டைலில்!
ReplyDelete