வருக வெல்க ... முகநூல் நிலைத்தகவல்கள்


1
பத்து வருடங்கள் இருக்கலாம்
ஓர் பேருந்துப் பயணத்தில் ஜன்னலூடாக தெரிந்த ஒரு கல்லூரியைக் காட்டி இது இன்று செயல்படுவதற்கு சார்தான் காரணம் என்றார் டாக்டர்.வின்சென்ட் டி பால், (தமிழகத்தில் ஆர்.எம்.எஸ்.ஏ திட்டத்தை அறிமுகப்படுத்திய குழுவின் ஆய்வு உறுப்பினர்) ... நான் அந்தக் கல்லூரியைப் பார்த்தேன் 
அதிர்ச்சி, வியப்பு என கலவையான உணர்வுக்குவியல். 


அது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு பொறியியல் கல்லூரி!
டாக்டர் வின்சென்டின் விவரணையில் இருந்து நான் கிரகிக்க துவங்கினேன்.
ஒரு துணைவேந்தர் ஆரம்பிக்க அவர் ஓய்வு பெற்றபின் ஒரு குழு அதை மூட முயற்சி செய்திருக்கிறது. 
எத்தனையோ ஏழை மாணவர்களின் கல்வி வாய்ப்பு, பல ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பு என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியாமல் இல்லை. 
அந்தத் துணைவேந்தரைப் பிடிக்காது அவர் ஆரம்பித்த கல்லூரி மூடப்பட வேண்டும் என்பது மட்டுமே படித்த பட்டம் பெற்ற அந்தப் பேராசிரியர்கள் குழுவின் பேரார்வமாக இருந்திருக்கிறது.
டாக்டர் வின்சென்ட் சொன்ன சார் அப்போது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின்  ஆட்சிமன்றக் குழுவின் உறுப்பினர். 
களத்தில் இறங்கிப் போராடியிருக்கிறார். 
அவர் பேசிய பன்ச் டயலாக்கெலாம் இன்றும் வியப்புத்தான்.
ஒருவழியாக அன்று அவர் போராடிக் காத்த கல்லூரி இன்று அண்ணா பொறியியல் கல்லூரி, திருச்சி என்று நாமகரணம் சூட்டப்பட்டு பல மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றி வருகிறது.
ஒவ்வொரு முறை நான் அந்தக் கல்லூரியை கடக்கும் பொழுதும் "சாரின்" போராட்டமும் அவரின் பன்ச் டயலாக்குகளும் நினைவில் வரும்.
ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக இருந்த பொழுதே அப்படி. 
இப்போது சார் ஒரு துணைவேந்தர்.. 
அழகப்பா பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தர் மேதகு முனைவர் எஸ். சுப்பையா அவர்கள்தான் அந்த சார்.
ஏழை மாணவர்களின் வலி தெரிந்த, அவர்களில் ஒருவராக இருந்தவர் இன்று கல்விச் செங்கோல் பிடித்திருக்கிறார்.
நிறைய எதிர்பார்க்கிறேன் ....
வாழ்த்துக்களுடன் கஸ்தூரி ரெங்கன்


2
வெற்று பக்தி எனக்குப் பிடிக்காது
வெறும் சுயநலம் மட்டுமே ..
திருச்சி ஸ்ரீ சத்குரு சம்ஹார மூர்த்தி சாமிகளின் பெயரில் இயங்கி வரும் சமூகம் ஒன்று பக்தர்களிடம் பெற்ற காணிக்கையைக் கொண்டு ஒரு பள்ளியை ஆரம்பித்திருக்கிறது.
நிகழ்வில் எனக்கும் ஒரு எள்முனையளவு பங்கு உண்டு என்பதே மகிழ்வு.
வரும் வியாழன் பள்ளி துவங்குகிறது...
நம்பிக்கையும்தான்.
நன்றி குருவே.

3
இன்றோடு ஒருவாரம் பள்ளி துவங்கி 
இரண்டே இரண்டு வகுப்புகளுக்கு மட்டுமே நூலகப் புத்தகங்களை வழங்கியிருக்கிறேன்... நிதானமான ஆரம்பம்தான் ...
இருந்தாலும் ஒரு சிறு திருப்தி ...
இந்தப் பருவத்தில்அதிக நூற்களை படிக்கும் மாணவர்க்கு ஒரு பரிசு தரலாம் என்று முடிவுசெய்திருக்கிறேன்.

Rafeeq Friend நல்ல முடிவு.

Kasthuri Rengan நூல்களை அளிக்கலாமா அல்லது வேறு பரிசுப் பொருள்களா... உங்கள் சாய்ஸ் என்ன?

Rafeeq Friend என்ன வகுப்பு?

Kasthuri Rengan ஆறு முதல் பத்து

Rafeeq Friend ஆண்டு பள்ளிக் கட்டணம் ஏதும் கட்டுகிறார்களா? ஆம் எனில் எவ்வளவு?

Kasthuri Rengan அரசுப்பள்ளி கட்டணம் ஏதும்கிடயாது

Rafeeq Friend அப்போது நூல்களாக கொடுக்கலாம் 
வீட்டிலொரு நூலகம்

Kasthuri Rengan ஆம் பாரதி கவிதைகள் மற்றும் குறள் எனது தேர்வு

Rafeeq Friend அது மாத்திரமன்றி தலைவர்கள் அறிவியலாளர்கள், 
திரு வி க போன்ற தமிழ் தொண்டாற்றியவர்களின் வாழ்க்கை வரலாறும்

Kasthuri Rengan நாட்டுக்கு உழைத்த நல்லவர்கள் வரிசை பழனியப்பா பிரதர்ஸ்...

Kasthuri Rengan நல்ல ஆலோசனை ...

Rafeeq Friend like emoticon என்னாலான சிறு பங்களிப்பும் உண்டு!

Kasthuri Rengan வரவேற்புகள் தோழர். ஆலோசனைகளே பெரும் பங்களிப்புதோழர் ... அதற்காக நன்றிகள்

Shanmugam Shanmugam நிதானம் நிதானம்


தேவதா தமிழ் நல்லவிசயம்

செ சுவாதி U r great.....

Selvendiran Bharathi நல்லவேளை நடக்கட்டும்

3
சில நாட்களுக்கு முன்னர் அடிக்கிற வெயில் தாங்காமல் craving for rain என்று நிலைதகவல் போட்டேன்..
ஆசை இன்று நிறைவேறிவிட்டது...
சுமார் மூன்று கிமி பயணத்திலும் மழை என்மீது கொட்டித்தீர்த்தது... 
உலகின் மாபெரும் தூவல்நீர் குளியல் வேறென்ன? 
சின்ன ஆசை சில்லி ஆசை என்றாலும் அவை நிறைவேறும் தருணங்கள் மகிழ்வானவையே!
போதாக்குறைக்கு வீட்டிற்கு வந்த மாப்ஸ் அதான் சொட்ட சொட்ட நனைஞ்சுட்டீங்களே எனக்கு சூடா ஏதும் வாங்கி வாங்க என்று அலப்பறை வேறு...
— feeling refreshed.

4
என்னாப்பா நடக்குது திடீர்னு உப்புன்னு கூவுறாங்க வேதிப்பொருள்கலப்புன்னு அலர்றானுங்க, குழந்தைகள் பாவம்னு சொல்றாங்க ...

என்னதாம்பா நடக்குது ...
அண்டர் கிரவுண்ட்ல என்ன பண்ணிக்குனு இருக்கான்க தெர்லயே...
யோவ் நீ இன்னா இப்படி பேசுற உருப்படியா ஏதானும் செய்தா சப்போர்ட் பண்ணமாட்டியான்னு கேட்க வேண்டாம்?
உங்களுக்குத் தெரியுமா நாம் பயன்படுத்தும் மாத்திரை மருந்துகள் பலவும் உலகநாடுகளில் தடை செய்யப்பட்டவை.
நமது மைதாவை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்திருக்கிறது
நமது இல்லங்களில் நாம் பூசும் வர்ணங்கள் (சுவர் வர்ணம்) அதீத அளவுகளில் வேதிப்பொருள் கொண்டவை. நோய்தரும் வல்லமை கொண்டவை.

நம் உண்ணும் உணவு, குடிக்கும் கோக், பயன்படுத்தும் உரம் என எங்கு எதைத் தொட்டாலும் அவற்றின் கூட்டுப்பொருள்கள்  அத்துனையும் உலக நாடுகள் (பிச்சைக்கார நாடுகளை விட) மனித உடல்நல பாதுகாப்பிற்கு அனுமதிக்கப்பட்ட அளவுகளை விட பலநூறு மடங்கு அதிகம்.

இதுகுறித்த விழிப்புணர்வு நமது அரசியல் வியாதிகளுக்கு கிடையாது...

அப்படியே இருந்தாலும் அந்த விழிப்புணர்வின் பலகோடி மதிப்பினை அவர்கள் அமைதியாக அறுவடை செய்துவிடுவார்கள்.

சராசரி இந்தியன்தான் நாதியற்றவன்..

இப்போ திடீர்னு வித்யாசமா கூவுராங்கோ...
இன்னா நடக்குது நைனா...

மாகி மட்டும் நிச்சயமாக நெஸ்லேயின் தவறாக இருக்க முடியாது... 
வேறு ஏதோ...


அன்பன் மது 

Comments

 1. அழகப்பா பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தர் மேதகு முனைவர் எஸ். சுப்பையா அவர்களுக்கு வாழ்த்துகள்!
  ஒரு சந்தேகம் மேலே போட்டிருக்கும் புகைப் படம் இப்போது எடுக்கப் பட்டது தானா :)

  ReplyDelete
  Replies
  1. வருக பகவானே ...
   இப்போது எடுக்கப்பட்ட புகைப்படம்தான்

   Delete
 2. பல்சுவையான செய்திகளையும் அனுபவங்களையும் பகிர்ந்துள்ள விதம் நன்று. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் முக்கியத்துவம் பெறுவனவாக உள்ளன.

  ReplyDelete
  Replies
  1. நன்றி முனைவரே ...

   Delete
 3. எமது வாழ்த்துகளும்.
  தமிழ் மணம் 4

  ReplyDelete
  Replies
  1. வருக ஜி
   நன்றி

   Delete
 4. செய்திகள் பல என்றாலும்
  ஒவ்வொன்றும் தனி விதம்
  நன்றி நண்பரே
  தம +1

  ReplyDelete
  Replies
  1. வருக அய்யா
   நன்றி

   Delete
 5. எஸ். சுப்பைய்யா அவர்கள் நிச்சயம் உங்கள் எதிர்ப்பார்ப்புகளுக்கு ஏற்ப நிர்வகிப்பார் என்ற நம்பிக்கையுடன் வாழ்த்துகிறேன்...

  " இதுகுறித்த விழிப்புணர்வு நமது அரசியல் வியாதிகளுக்கு கிடையாது... "

  எப்படி வரும் ? அவர்களது கண்களும் மனமும் மேல்நாட்டு வியாபாரிகள் வைக்கும் " பங்கில் " நிலைகுத்தி நிற்கிறதே...

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  ReplyDelete
  Replies
  1. நன்றி சாம்ஜி

   Delete
 6. அன்பு வலைப்பூ நண்பரே!
  நல்வணக்கம்!
  இன்று 08/06/2015 அன்று முதலாம் ஆண்டினை நிறைவுசெய்யும் "குழலின்னிசை"க்கு
  தங்களது அன்பான ஆதரவும், கருத்தும், அளித்து அகம் மகிழ்வுற செய்ய வேண்டுகிறேன்.

  முதலாம் ஆண்டு பிறந்த நாள் அழைப்பிதழ்

  அன்பின் இனிய வலைப் பூ உறவுகளே!
  "குழலின்னிசை" என்னும் இந்த வலைப் பூ!
  உங்களது மனம் என்னும் தோட்டத்தில் மலர்ந்த மகிழ்ச்சிகரமான நாள் இன்று.
  ஆம்!

  கடந்த ஆண்டு இதே தினத்தன்றுதான் 08/06/2014, "குழலின்னிசை" வலைப்பூ மலர்ந்தது.

  ( http://kuzhalinnisai.blogspot.com/2015/06/blog-post_7.html#comment-form )

  சரியாக ஓராண்டு நிறைவு பெற்று, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த வலைப்பூவானது, நல் இசையை நாள்தோறும் இசைத்து, அனைவருக்கும் நலம் பயக்குவதற்கு, உள்ளன்போடு உங்களது நல்லாசியைத்தாருங்கள்.

  தங்களது வருகையை எதிர் நோக்கும் வலைப்பூ நண்பர்கள்.

  மற்றும்!

  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com
  TM+1

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகள் நம்பி அவர்களே

   Delete
 7. நிலைத்தகவல் ராம்ப்ளிங்க்ஸ் அருமை! எல்லாமே...

  சுப்பையா அவர்கள் நம்பிக்கையைக் காப்பாற்றுவார்...

  ப்ள்ளி ஆரம்பிப்பதில் தங்களின் பங்களிப்பிற்கும் வாழ்த்துகள்!

  சராசரி இந்தியன்தான் நாதியற்றவன்// உண்மைதானுங்க...நாம் இளிச்சவாயன்கள்....வெளிநாட்டில் தடை செய்யப்படும் அனைத்தும் வளரும் நாடுகளில்தான் டம்பிங்க்-குப்பைக் கிடங்கு...நம்மவர்களும் இளித்து இளித்து வெளிநாட்டுப் பொருள்கள் என்று வாயைப் பிளந்து வாங்கிக் குவிப்பார்கள்.....அவதிப்படுவது சாதாரண சாமான்யன்கள்...குறிப்பாக மருந்துலகில் நடக்கும் அராஜகங்கள்....சொல்லி மாளாது...(கீதா-எனது கசின் மெடிக்கல் ஃபீல்டில் மேலாண்மையாளராக இருக்கின்றார்...அதனால் பல இருட்டடிப்புகள் தெரியும்....)  ReplyDelete
 8. மது சார்

  உயிருக்குக் கேடு என்று மது விற்பனை பிரமாதம் . உடலுக்குக் கேடு என்று சிகரெட் விற்பனை படு ஜோர் . போல குடலுக்குக் கேடு என்று சொல்லி நூடுல்சை விற்க வேண்டியதுதானே! அது என்ன பாவம் செய்தது? அழிக்க வேண்டியது , ஒழிக்க வேண்டியது ஆயிரக்கணக்கில் இருக்கு . நூடுல்சை மட்டும் நோவார்களாம் . பின்னணியில் என்ன அரசியலோ?

  ReplyDelete

Post a Comment

வருக வருக