இற்றைகள் fb status collection

சந்திரமோகன்.வே

1
ஒரு கலை உன்னதமாய் இருக்கிற பொழுது அதை ரசிப்பவர்களையும் அது உன்னத கலைஞர்களாக்கி விடுகிறது! 
சந்திரமோகன் வெற்றிவேலின் காற்றில் கலந்த இசையில் இளையராஜாவின் பாடல்களை அவர் வர்ணிப்பது அற்புதமாக இருக்கிறது! இசை அவர் எழுத்தில் எழுகிறது! 
ஹாட்ஸ் ஆப் சந்திரமோகன் வெற்றிவேல்.


2
தற்போது உயிரினங்கள் வழக்கமான வேகத்தைவிட நூறுமடங்கு வேகத்தில் மரணமடைகின்றன என்பதைக் கண்டறிந்திருக்கிறது ஒரு ஆய்வு !
அடுத்த பேரழிவை துவக்கிவிட்டோம்! 
நமது அடுத்த தலைமுறையிடம் நாம் சிரம் தாழ்ந்து மன்னிப்பு கோரவேண்டும். 
நமது இன்றைய வாழ்விற்கு அவர்களின் நாளையை அழித்துவிட்டிருக்கிறோம் நாம்.
ஒரு வழியா எல்லோருமா போய்ச்சேருவோம் வாங்க!
‪#‎Holocene_Extinction‬
3
அடுத்த ஆப்பு டெட்டாலுக்கு!
திடீர்னுதான் முழுச்சிகீறாங்க..
நல்ல விசயம்தான் .. தொடரட்டும்..
‪#‎Dettol‬

4
20 ஜிகா பைட் ஓர் வினாடிக்கு...
பைவ் ஜி வேக அளவுகோல் ...
வரும் 2018குளிர்ககால ஒலிம்பிக் போட்டிகளில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது..
‪#‎5G‬

5
MERS, Ebola, SARS மற்றும் AIDSக்கு மருந்து வைத்திருக்கிறோம்! 
வட கொரியா அறிவிப்பு ...
லே இன்னாலே சொல்றீங்க... 
மெய்யாலுமா?
‪#‎Northkoriea‬

6
அமெரிக்காவில் யூடா பள்ளத்தாக்கு பல்கலையில் நடக்கும் பொழுது செல்லை நோண்டிக்கொண்டே நடப்பவர்க்கென சிறப்புப் பாதை ஒன்று ஆரம்பிக்கப் பட்டு இருக்கிறது!
ஆமா வகுப்பறையிலும் ஒரு ஏரியாவை ஒதுக்க வேண்டியது தானே!
‪#‎Utah_Valley_University‬

7
மால்பீசியன்ட் என்கிற படம் வந்ததும் தெரியாது போனதும் தெரியாது. 
ஆனால் டிஸ்னி அடுத்த பாகத்தை எடுக்கான்.
இருக்கப்பட்ட மவராசக்கள் எடுங்கப்பா எடுங்க 
‪#‎maleficent‬

8
டாட்டா சில காபி சிரப்புகளை அதுவாகவே நிறுத்திவிட்டது.
இன்னும் என்ன என்ன கண்ராவியைஎல்லாம் முழுங்குரோம்ன்னு தெர்ல.
‪#‎starbucks‬

9
யப்பா எண்ணையில நல்லா பொரிச்ச எலிய சிக்கன்னு கொடுதாங்களேமே?
அமெரிக்காவிலேயே இந்த நிலைமையா?
‪#‎KFC_rat‬

10
ஊழல் அற்ற ஓராண்டு ?
பிரித்து மேயுறாங்க புதுப்புது அர்த்தங்களில்! 
இம்புட்டு ஊழலா?
கட்டிங் கரக்க்டா காங்கிரசுக்கு போனதால் அமைதியா கீராங்களோ?

11
இந்த முகநூலை என்னுடன் பிரிக்க முடியாமல் ஒட்டிவைத்திருப்பதற்கு பிறந்தநாள் அறிவிப்புகளும் ஒரு காரணம். இன்று அப்படி நான் அறிந்த ஓர் பிறந்தநாள் மைத்துனர் Ksr Sriram Sarath SR Solairaj ஜுடையது!
தோளில் தூக்கி திரிந்த தினங்கள் இன்னமும் நினைவில். 
மிகச் சிறிய வயதில் சரத் கடந்துவந்த பாதையில் அதீத அழகும் அதீத கொடூரமும்.
நீண்ட நாட்களின் பொறுமைக்குப் பின்னர் சரத் இப்போது ஒரு தொழில் முனைவர். படித்த படிப்பிற்கு தரமான வீடுகளை கட்டித்தரும் ஒரு நிறுவனத்தையும், குழந்தைகள் பொருட்களை விற்பனைசெய்யும் ஒரு கடையையும் நிர்வகிப்பது எங்கள் கவலைகளை குறைத்திருக்கிறது. 
சத்குருவிடம் பிரார்த்திக்கிறேன் விண்முட்ட வளர்க! 
இனிய பிறந்தநாள் வாழ்துகள் சரத்.

12
ஜுராசிக் வேர்ல்ட் 511மிலியன் வசூல்... 
வெறும் இரண்டே நாட்களில் !
யப்பா Megneash Thirumurugan T ஒரே வாரத்தில் ஒரு பில்லியன் போயடுவாணுக போல...


13
மாவட்டத்தின் புதிய முதன்மை கல்வி அலுவலர் இன்று பாடத்திட்டக் குழுவுடன் ஒரு திட்டமிடல் சந்திப்பினை நிகழ்த்தினார்.
வெகு அருமையான எழுச்சியுரை...


14
ஓர் தேசத்தை நிர்வகிப்பது என்பது லாப நட்ட கணக்கு மட்டுமல்ல. அது மக்களின் நல்வாழ்விற்கு வழிவகை செய்து தருவதும் வெகு அவசியம்.
இப்போ கல்விக்கும் மருத்துவத்திற்கும் அரசு செலவிடக்கூடாது என்றும் ரயில் போக்குவரத்தை தனியர்மயமாக்கலாம் என்றும் அரசுக்கு அறிவுரை சொல்லப்பட்டிருக்கிறதாம்.
அக்குழு உறுப்பினர்களை நாடு அறிந்துகொள்ள வேண்டும்.
இந்த அறிவுரைக்கே கொதித்து எழா விட்டால் வெகுவிரைவில் நடைமுறைக்கு வரலாம்.
உலகின் மாபெரும் ஜனநாயக நாடு இப்போது மாபெரும் மருத்துவ சந்தையாகும் புள்ளியில் இருக்கிறது,
அதன் குடிமக்களில் பெரும்பாலோனோருக்கு சவப்பெட்டிகளை மட்டுமாவது அரசு தரும். 
இவர்கள் தான் அதிலும் பெயர் போனவர்கள் ஆயிற்றே.

15
குறள் நேசர்களின் கவனத்திற்கு 
இந்ததளத்தை நிர்வகிப்பவர்களை பாராட்டியே ஆகவேண்டும். அருமையான தளம். 
http://kural.muthu.org/

16
வலைப்பூவை திறந்தாலே தாங்கள் ஏன் இந்தியில் எழுதக்கூடாது என்று வெறுப்பேற்றுகிறான் கூகிள் ... 
ஐநூறு மிலியன் பேர் பேசும் மொழியாம் ... 
மிடிலே

17
உலகில் அதிக எண்ணிக்கையில் மருத்துவர்களை உருவாக்கும் நாடு கியூபா, 
அவர்களை அதிகம் கவர்ந்து கொள்வது அமேரிக்கா என்ற செய்தி உங்களுக்குத் தெரியும்...
இப்போது இது ஒரு ஆறுதல் ..
கியூப மருத்துவர்கள் நேபாளில் சேவையில் ... தலை வணங்க வேண்டிய சேவை.
உலகின் குட்டியூண்டு கம்யூநிஸ நாடு என்ன செய்ய முடியும் என்று காட்டியிருக்கிறது

18
காலை எனது கிராமத்திற்கு அம்மாவுடன் ஒரு விசேசத்திற்கு சென்றிருந்தேன் ... விழாப்பந்தல்வரை வந்த அம்மா திடீரென வித்யாசமாக நடந்தார். அப்படியே மெல்ல சரிந்து உட்கார்ந்து முகத்தில் தண்ணீர் பட்டவுடன் எழுந்து விழாச்சூழலை கெடுக்க விரும்பாமல் அருகில் இருக்கும் எங்கள் வீட்டிற்கு செல்லலாம் பயப்பட ஒன்றுமில்லை என்றார்கள்.
அதற்குள் அவர் ஏற்கனவே பேசிய சென்டிமென்ட் டயலாக்கெல்லாம் நினைவில் வந்தது. உன் மடியில்தான் உயிர் போகவேண்டும் என்பதும் அவற்றில் ஒன்று.
ஆபத்தில் நான் எப்போதும் அழைக்கும் Karthik Amma வைத்தான் அழைத்தேன். இருபது நிமிடத்தில் போர்ட் பிகோவில் வந்துவிட்டான். இது ஹைபர் கிளிசிமிக் சாப்பிட்டால் போதும். நிறய ஓய்வு தேவை. மற்றபடி பெரிதாக ஒன்றுமில்லை என்றான்.
மெல்ல இயல்புக்குவந்த நான் கார்த்தியிடம் இன்னைக்கு சி.எல் போட எவ்வளவு தயக்கமாக இருந்தது தெரியுமாடா என்றேன் . நேற்று சத்குருவின் பெயரால்ஆரம்பிக்கப்பட்ட பள்ளியின் திறப்பு விழாவிற்கு கூட போகலை என்றேன்.
ஆமா மச்சான் அரசு ஊழியர்கள் பெரும்பாலானோர் அப்படிதான் என்று நாம வேலைக்கு அடிமையாகிவிடுகிறோம் என்றான்.
அவன் விடைபெற்றுப் போன சற்றைக்கெல்லாம் ஒரு அழைப்பு. 
சார் நான் சித்திக்கின்(பெயர் மாற்றம்) அப்பா பேசுறேன் .
என்னசார் இப்படி இன்னைக்கு உங்களைச் சிறப்பிக்கலாம் என்று வந்தேன். இன்னைக்குன்னு பார்த்து இல்லாம போய்டீங்களே. 
(மனசுக்குள் அய்யா திங்கள் வந்துடுவேன் அதற்குள் இல்லாமல் போய்டீங்கன்னு சொல்றீங்களே.)
என் மகன் பத்தாம் வகுப்பு பாசானது உங்களால்தான்.
அய்யா அப்படியெல்லாம் இல்லை அவனுக்கு கடவுள் அருள் நிறய இருக்கு. (சிறுவயதில் மூளை மருத்துவத்தை சந்தித்தவன்) நான் ஒண்ணுமே பண்ணலையே என்றேன்.
சார் நீங்க மட்டும் கடைசி இருபது நாட்களில் மாலைவகுப்பு எடுக்காமல் இருந்திருந்தால் பயல் பாஸ் பண்ணியிருக்க மாட்டன் என்று ஒரே பீலிங்க்ஸ் ஆப் இந்தியா!
இன்னும் அவர் சொன்ன பல டையாலக்கை எல்லாம் எழுதினால் தாங்க முடியாத சுய புரணமாக போய்விடும்.
இருந்த போதும் நான் இருந்த சூழலில் எனது மன இறுக்கத்தை சற்றே குறைத்து அந்த அலைபேசிப் பேச்சு . 
(உண்மையில் அவன் கடைசி தினங்களில் படிக்க ஆரம்பித்திருந்தான், அந்த தினங்களில் இவர் என்னிடம் வைத்திருந்த எப்படியாவது என்மகன் பாஸ் ஆகோணும் என்ற வேண்டுகோள் என் கனவில் அடிக்கடி வந்து தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருந்ததும் தனிக்கதை)
அம்மாவிற்கு மருத்துவர் முத்துராஜா ஒரு குளுக்கொபின் ஊசியை போட்டு எதற்கும் சில டெஸ்டுகளை எடுத்துவிடுங்கள் என்று சொல்லியிருக்கிறார். இப்போதைக்கு அம்மா நலம். 
டெஸ்ட் ரிசல்டுகள் நல்லபடி வந்தால் நானும் நலமே!

19
காதறாக் கள்வன் செம்புலி ஜம்புலிங்கம் குறித்து தமிழ் ஹிந்துவில் வந்திருந்த கட்டுரையைப் படித்தேன்..
ஜம்புலிங்கம் பாறை குறித்து படித்தபொழுது கள்வன் வனத்தின் சக்ரவர்த்தியாகவே வாழ்ந்திருப்பதை உணர்ந்தேன்... 
தமிழ் ஹிந்து தவிர வேறு எங்கும் இப்படி படிக்கமுடியுமா என்று தெரியவில்லை .. அருமையான கட்டுரை

20
Vasanth Girija வேண்டுகோளின்படி புதுக்கோட்டையின் சிறப்புகள் 
1. வெகு நேர்த்தியாக வடிமைக்கபட்ட நேரான ஒன்றை ஒன்று குறுக்காக வெட்டும் சாலைகள். 
2. குடிநீர் மேலாண்மைக்காக சரிவில் அமைக்கப்பட்ட நகர். ஒன்றுடன் ஒன்று நிலத்தடி கால்வாய்கள் மூலம் இணைக்கப்பட்ட குளங்கள். (மன்னர் தந்ததை மக்களாட்சியில் தின்று தீர்த்த சோகமும் உண்டு )
3. ஆசியாவின் மிகப்பெரிய யூகலிப்டஸ் காடு !
4. இந்தியாவில் இரண்டாவதாக ஆரம்பிக்கப்பட்ட அருங்காட்சியகம். 
5. மன்னர் வழங்கிய மருத்துவமனை 
6. மன்னர் கல்லூரி
7. கல்வியியல் கல்லூரி 
8. ஐ.டி.ஐ
9. உலகம் விரும்பும் உள்ளூர் வாசிகளால் கைவிடப்பட்ட சித்தன்னவாசல் ஓவியம். 
10. கொடும்பாளூர் கோவில். 
11. கீழப்பளுவஞ்சி புறா மாடம் 
12. ஆவுடையார் கோவில் கல்சங்கிலி
13. நூறாண்டுகளைக் கடந்த கல்விநிலையங்கள் 
14. சிப்காட், சிட்கோ தொழிற்பேட்டைகள் 
15. வேளாண் கல்லூரி
16. தமிழகத்தின் மிகச் சிறந்த உணவகங்கள் 
இப்போதைக்கு போதுமான அளவில் சொல்லியிருக்கிறேன்
இலக்கியவாதி அகிலன் பிறந்தது இங்கேதான்.
தமிழ் திரையுலகின் முதல் சூப்பர்ஸ்டார் பி.யூ.சின்னப்பா இங்கேதான் பிறந்தார். (இவரைக் பார்க்க பெரும் தலைகள் எல்லாம் தற்போதைய அண்ணாசிலைக்கு முன்னால் இருந்த பழைய தங்கும் விடுதிகளில் காத்திருப்பார்கள், அவர்களில் ஒருவர் கவிஞர் கண்ணதாசன்!)
இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் பிறந்தது இங்கேதான் (டாக்டர். முத்துலட்சுமி அம்மையார்) 
போதுமா வசந்த்?

21
வாக்கியங்கள் சில அப்படியே மனசில் ஒட்டிக்கொள்ளும் ... இப்படிப் பட்ட வாக்கியங்களை சமைத்த மூளைக்கு சொந்தக்காரர்கள் குறித்து எப்போதும் ஒரு ஆவ்... 
சமீபத்திய வாக்கியம் 
கூண்டில் பிறந்த பறவைகள் பறப்பதை நோய் என்று நினைக்கும்! அளஜன்றோ ஜோட்ரோவஸ்கி இப்போதைய கவர் படம் இது தான் ... 
இன்னும் இதன் எதிரொலி எனது மனசில் கேட்டுகொண்டே இருக்கிறது.

22
Shah Jahan
உலகின் ராஜா என்று பொருள் தரும் பெயர் என்றுதான் நினைக்கேன்.
சிலரை நினைத்தாலே மனதிற்குள் உற்சாகம் பீறிடும்
ஷாஜ் ஜி அந்தமாதிரி ஒரு நண்பர்தான்
இதுவரை நேரில் பார்க்கவில்லை
வாங்கி வைத்திருக்கும் அலைபேசி எண் ஒருமுறை கூட பயன்படுத்தப் படவில்லை..
இருப்பினும் எனக்கு வெகு அருகில்தான் இருக்கிறார்
ஷாஜ் இன்னும் பல ஆண்டுகளுக்கு ஒளிதரும் கலங்கரை விளக்கமாக இருக்க பிரார்த்தனைகளுடன்

23
அம்மா இந்த பாண்டை அயர்ன் செய்ய வேணாம் ..
ஏண்டா
ரிங்கில் ப்ரீமா 
அப்போ பாத்திரக்காரனுக்கு கொடுத்திராலமா?

24
வேலூர் பதிவர் சந்திப்புக்கு போகாதற்காக வருந்தவைத்துவிட்டது நண்பர்களின் நட்பு அலைபேசி பேச்சு...

Comments

 1. பிறகு வருகிறேன் தோழர்
  தமிழ் மணம் 1

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி தோழர்

   Delete
 2. டெட்டாலுக்கா...? ஐயோ...

  http://kural.muthu.org/ நல்லா இருக்குங்க...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி அண்ணா

   Delete
 3. நாள்முள்ளின் நகர்வுக் கோணமாய் ஒவ்வொரு இற்றையும்...!

  தொடர்கிறேன் தோழர்.

  த ம +1

  ReplyDelete
 4. மது,

  புதுகையின் சிறப்பு என்று பல சங்கதிகளைப் பட்டியலிட்டு அசத்திவிட்டீர்கள். புதுகை என்றாலே அதன் வரிசையான வீடுகள், சுகாதாரமான தெருக்களின் அமைப்பு இரண்டுக்கும் முதலிடம். புதுக் குளத்தை விட்டுவிட்டீர்களே? என்ன ஒரு ரம்மியமான இடம்!

  நடிகர் ஜெமினி கணேசன் கூட ராஜா கல்லூரியில் படித்தவர் என்று நினைவு.

  புதுகையை நினைவூட்டியதற்கு நன்றிகள் பல.

  ReplyDelete
  Replies
  1. எப்படி புதுக்குளத்தை மிஸ் பண்ணினேன்...
   நன்றி இசைப்பதிவரே

   Delete
 5. வணக்கம் சகோ !

  பயனுள்ள பதிவுகள் தொடர்கிறேன் நன்றி !

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் வருக திரு சீராளன் அவர்களே ...
   நன்றி

   Delete
 6. அடிக்கடி இப்படி போடுங்க அனைத்தும் சுவாரசியம். நீங்கள் நேரம் செலவழித்து தேடிப் பிடித்து படித்ததை எங்களுக்கும் பகிர்ந்தமைக்கு நன்றி

  ReplyDelete
 7. அட! சுவாரஸ்யமாக இருக்கே....அனைத்தும் அருமை.....பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே!

  ReplyDelete
 8. நமது அடுத்த தலைமுறையிடம் நாம் சிரம் தாழ்ந்து மன்னிப்பு கோரவேண்டும்.
  நமது இன்றைய வாழ்விற்கு அவர்களின் நாளையை அழித்துவிட்டிருக்கிறோம் நாம்.//

  ம்ம்ம் அடுத்த தலைமுறைக்கும் இன்னும் பல தலைமுறைகளுக்கும் எல்லோரும் சொத்து சேர்த்து வைக்கிறார்கள் (யாருன்னு உங்களுக்குத் தெரிந்திருக்கும்.....என்ன சொத்துன்னும் தெரியும்,,,) இயற்கைச் சொத்தைத் தவிர.....பொதுநலச் சொத்தை விட்டு சுயநலச் சொத்துதான் சேர்கின்றது...

  கொரியாகாரங்க என்ன அதைவிடச் சின்னன் சிறிசு நாடுங்க கூட வைச்சுருக்கும்....நம்மள தவிர....நம்மகிட்ட இல்லாதது இல்ல நாம் செய்ய மாட்டோம் எதுவும்...

  இங்கு சகோதரி ரஞ்சனி நாராயணன் அவர்கள் பங்களூரில் உள்ள இயற்கை வைத்தியத்தில் பல அரிய மருந்துகள் தயாரித்து வழங்குவதைப் பற்றிச் சொல்லி இருக்கிறார்...

  ReplyDelete
  Replies
  1. சகோ ரஞ்சனி நாராயணின் பதிவுகளுக்கு வைடிங்

   Delete
 9. செம்புலி ஜம்புலிங்கம் தான் வீரப்பனுக்கு முன்னோடியா :)

  ReplyDelete
  Replies
  1. அப்படித்தான் தோன்றுகிறது

   Delete

Post a Comment

வருக வருக