இவரை அறிவோம்!- நடாஷா ரைட் Natasha Wright Rafeeq Friend


இவர்களில் உங்களுக்கு யாரை அடையாளம் தெரிகிறது? என்ற கேள்வியுடன், இவரின் படத்தையும் ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகையின் படத்தையும் வைத்து ஒரு நிலைத்தகவல் பதிந்திருந்தேன். வழக்கம் போலவே மறைக்கப்பட்ட நிலையிலும் திரைப்பட நடிகையின் படமே அதிகமானோரால் அடையாளம் காணப்பட்டது. அதிகமானோர் இன்பாக்ஸ் வந்து நடிகையின் பெயரை எழுதி, சரியா என்றும் கேட்டார்கள். ஒருவர் மட்டும் சரியாக இவரின் இவரின் பெயரை எழுதியிருந்தார்.(கூகுள் உதவியதா? :) ) வேறு ஏதும் குறிப்பு எழுதுவாரா என்றிருந்தேன் ஏமாற்றமே!

அனைத்து ஊடகங்களும் பிரதான உள்ளீடாகத் தருபவை சினிமா சார்ந்த செய்திகளாகவே இருக்கும்போது விடை தெரியாதவர்களைக் குறைகூறி பயனில்லை. அதைத் தாண்டி சிந்திக்க விடக்கூடாது என்று திட்டமோ என்னவோ?

சரி யார் இவர்?

இந்தியாவில் படித்துவிட்டு வெளிநாட்டில் வேலைக்குப் போகிறார்களே?, இந்த தேசத்திற்கு என்ன செய்தார்கள் என்ற ஒரு பொதுக்குற்றச்சாட்டு இருக்கிறது இல்லையா? ஆனால் அமெரிக்காவில் பிறந்து, வளர்ந்து, படித்த இவர் இந்தியாவில் இந்தியாவிற்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். இவர் பெயர் நடாஷா ரைட். அங்குள்ள MIT என்றழைக்கப்படும் Massachusetts Institute of Technology கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவி.

என்ன செய்கிறார்?

இந்தியாவில் கிடைக்கும் 60% நிலத்தடி நீர் அதிக உப்புத் தன்மை கொண்டதாகும். இந்த தண்ணீரில் படிந்துள்ள உப்புகளை நீக்கினால் குடிநீராக உபயோகிக்கலாம். ஆனால் நாம் வீட்டில் உபயோகிக்கும் RO எனப்படும் எதிர்த்திசை சவ்வூடுபரவல் (Reverese Osmosis) மூலம் உப்புகளை நீக்குவதற்குத் தேவையான கருவியை நிறுவுவதற்கு பெரும்பாலான கிராமப்புறங்களில் மின்சார வசதியில்லை.

சுவையற்று இருந்தாலும் கிராமப்புறங்களில் நிலத்தடி நீரையே குடிநீராகவும் பயன்படுத்தப்படுகிறது. லிட்டருக்கு 3௦௦௦ முதல் 5௦௦௦ மில்லிகிராம் உப்பு கலந்திருக்கும் இந்த நீரைப் பருகுவதன் மூலம் உடனடியாக பாதிப்பு ஏதுமில்லை என்றாலும் காலப்போக்கில் உடல் உபாதைகளைத் தோற்றுவிக்கும்.

இந்நிலையில் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் உள்ள பிரச்சனைகளுக்கு, தங்களது ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பின் மூலம் தீர்வு காணும் விதமாக மின்சார வசதியற்ற இந்திய கிராமப்புறங்களில் இறங்கினர் நடாஷா தலைமையிலான மாணவர் குழு.

மின்சார வசதியற்ற கிராம மக்களுக்கு மிகக்குறைந்த செலவில் தரமான குடிநீரை வழங்குவதற்காக சூரியவொளி மூலம் மின்சாரம் பெற்று, மின்கூழ்பிரிப்பு முறை எனும் மின்சாரக் கம்பிகளுக்கிடையே தண்ணீரை ஓடவிட்டு அவற்றிலுள்ள அயனிகளை நீக்கி, தூய்மைப்படுத்தி சுவையான குடிநீரைத் தந்து சாதனை படைத்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சிக்கு இந்தியாவிலுள்ள ஒரு தனியார் நிறுவனம் நிதியுதவி செய்திருக்கிறது. விரைவில் நடஷாவின் கண்டுபிடிப்பு இந்திய கிராமங்களில் வலம் வரும்!

நம்ம ஊடகங்கள் இன்னும், யாருக்கோ பிரசவம், நிச்சயதார்த்தம் என்று மட்டும் எழுதிக்கொண்டிருக்கட்டும். நம்ம மாணவர்கள் யாருக்கோ மலர்தூவி பால் ஊற்றிக்கொண்டு இருக்கட்டும்.
- Rafeeq.

Comments

 1. நடஷாவின் கண்டுபிடிப்பு இந்திய கிராமங்களில் வலம் வரும் நாள் விரைவில் அமையட்டும்
  வடாஷாவை வாழ்த்துவோம் போற்றுவோம்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி தோழர்

   Delete
 2. கண்டுபிடிப்பு சிறக்கட்டும்... நடாஷா ரைட் பற்றி தகவலுக்கு நன்றி...

  ReplyDelete
 3. நல்ல உழைப்பாளியைப் பற்றி அறிமுகம் செய்துள்ளீர்கள். அவரது முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். அறிமுகப்படுத்தியமைக்கு தங்களுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நன்றி முனைவரே

   Delete

 4. மனிதநேயத்தை உணர்த்தும் பதிவு. எழுதிய உங்களுக்குப் பாராட்டுக்கள். நடாஷா ஒரு ரஷ்ய பெயர். அவர் செய்வது உழைப்பல்ல, சேவை என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. இசைப்பதிவின் முடிசூட மன்னரே வருக

   Delete
 5. நடாஷா ரைட் டுக்கு என் வாழ்த்துக்களும்...!. இதை தெரிவித்த சகோதரருக்கு அன்பு கலந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோதரி ...
   வருகைக்கு நன்றி

   Delete
 6. நடாஷாவின் பணி போற்றுதலுக்குரியது! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சுரேஷ் ஜி

   Delete
 7. நடாஷாவின் பணியை வாழ்த்துவோம் தோழரே....
  தமிழ் மணம் 6

  ReplyDelete
 8. நடாஷாவின் கண்டுபிடிப்பில் நம் கிராமங்கள் நன்மை பெறட்டும், அரசியல் தடுக்காமல் இம்முறை வெற்றிபெறட்டும்.
  தகவலுக்கு நன்றி அண்ணா

  ReplyDelete
 9. நடாஷா ரைட்க்கு செல்யூட்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி பதிவரே

   தங்கள் வருகைக்கு நன்றி

   Delete
 10. ரைட் என்று நான் என்ன சொல்வது ,பெயரிலேயே இருக்கே :)

  ReplyDelete
  Replies
  1. பின்னூட்டத்தில் கூட ஒரு புன்னகை வரவைக்க முடிகிறது உங்களால்

   Delete
 11. மிக நல்ல பதிவு! இந்த பதிவை எங்களின் பத்திரிகையில் பயன்படுத்திக் கொள்ளலாமா..? அனுமதி வேண்டுகிறேன்.
  த ம 9

  ReplyDelete
  Replies
  1. எழுதியவர் புதுசுரபி என்னும் வலைத்தளத்தை நடத்தும் ரபீக் நண்பர் அவர்கள் ...அவரது பெயரை குறிப்பிட்டு பயன்படுத்தலாமே தோழர்

   ஒரு தடையும் இல்லை

   உங்கள் பத்திரிக்கையின் பெயர் என்ன?

   Delete
 12. நம்ம ஊடகங்கள் இன்னும், யாருக்கோ பிரசவம், நிச்சயதார்த்தம் என்று மட்டும் எழுதிக்கொண்டிருக்கட்டும். நம்ம மாணவர்கள் யாருக்கோ மலர்தூவி பால் ஊற்றிக்கொண்டு இருக்கட்டும். ///// நிதர்சனமான, அதனாலேயே சற்று வருத்தம் தந்த வரிகள். நடாஷா போன்றவர்கள் குடத்திலிட்ட விளக்காய் இல்லாமல் குன்றிலிட்ட விளக்காய் இருந்திடத்தான் வேண்டும். விரைவில் இம்மாற்றம் நிகழும் (என நம்புவோம்.). அவரைப் போற்றுவோமாக.

  ReplyDelete
  Replies
  1. உங்களிடம் சில நிமிடங்கள் மட்டும் பேசினேன் சில வாக்கியங்கள் இன்னும் காதிற்குள் சுத்திக் கொண்டிருகிறது

   நலம்தானே வாத்தியாரே

   Delete
 13. நடாஷா ரைட் இந்தியாவிற்கு வந்து நல்லது செய்து கொண்டிருக்கிறார். கொஞ்ச நாள் பொருத்து இருந்து பாருங்கள் ஒரு கோஷ்டி வந்து சொல்லும் இவர் நல்லது செய்ய வரவில்லை மதத்தை பரப்புவதற்காக வந்து இருக்கிறார் என்று சொல்லி விஷத்தை தூவுவார்கள்

  ReplyDelete
  Replies
  1. நேக்கும் அப்படித்தான் தோன்றுகிறது அண்ணா

   Delete
 14. இவரை அறிந்ததில்லை தோழர்.

  பகிர்விற்கும் அறிவூட்டியதற்கும் நன்றி.

  த ம 10

  ReplyDelete
  Replies
  1. கொஞ்சம் அல்ல ரொம்பவே ஓவர்
   அறிவூட்டியது அடியேன் அல்ல திரு ரபீக்

   Delete
 15. அன்புள்ள அய்யா,

  நல்ல நீருக்கு இந்திய கிராமப்புறங்களில் நடாஷா தலைமையிலான மாணவர் குழுவின் பணி சிறக்கட்டும்.

  நன்றி.
  த.ம.11.
  manavaijamestamilpandit@gmil.com

  ReplyDelete
 16. நல்லதொரு பதிவு.....நடாஷா ரைட் பற்றி அமெரிக்காவில் இருக்கும் கீதாவின் உறவினர் இவரைப் பற்றிச் சொல்லி இருந்தார். அவரும் அங்குதான் இருக்கின்றார். அவருக்கு நடாஷாவுடன் தொடர்பு உண்டு...ஏனென்றால் இதெ இன்ஸ்டிட்யூட்டில் உறவினர் பெண் எம்பிஏ ப்ராஜெக்ட் சூரிய ஒளியினால் வளரும் நாடுகளின் கிராமங்களுக்கு மின்சாரம் வழங்குவதைப் பற்றியது அது வெற்றி பெற்று விருது பெற்று, ஒரு கம்பெனி ஆரம்பித்து முதல் 10 கம்பெனிகளுக்குள் இடம் பெற்று, அமெரிக்கவின் உதவித் தொகை பெற்று ஹிலாரி கிளிண்டன், பில் கிளிண்டன் அவர்களையும் சந்தித்து, அந்த உதவித் தொகையுடன் வளரும் நாடுகளில் சூரிய ஒளி ப்ராஜெக்ட் ஆரம்பித்துள்ளார். அவருடன் இன்னும் மூன்று பெண்களை சேர்த்துக் கொண்டு, பெண்களால், கிராமத்துப் பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க அவர்களுக்கு பயிற்சி கொடுத்து சூரிய ஒளி ப்ராஜக்ட் தொடங்கியிருக்கிறார். அதைப் பற்றி எழுத விழைந்த போது அவர் இன்னும் சில தகவல்கள் தருவதாகச் சொல்லி இருந்தார். அப்போது நடாஷா பற்றியும் சொன்னார். அதைக் குறித்தும் தருவதாகச் சொல்லி இருந்தார்.....கீதாவும் அவருடன் டெமொ செய்ய இங்கு தமிழ் நாட்டில் சில கிராமங்களுக்குச் சென்றிருக்கிறார். எல்லாம் தொகுத்து வலைத்தளத்தில் எழுத வைத்திருக்கின்றோம்...

  நடாஷாவின் பணி சிறக்க வேண்டும். வெற்றி அடையவேண்டும். மட்டுமல்ல இங்கு நம் நாட்டுப் பெருந்தலைகளும் அரசியலை நுழைக்காமல், சுயநலத்தைப் புகுத்தாமல், இருக்க வேண்டும்....என்ற ஒரு சிறு ஆதங்கமும் ஏற்படத்தான் செய்கிறது....உறவினரின் அனுபவம்....இதைச் சொல்ல வைக்கிறது....

  ReplyDelete
  Replies
  1. திட்டம் வெற்றிபெறவேண்டும்
   ஏன் சகோ கீதா இதுகுறித்து எழுதவில்லை

   Delete
 17. நன்றிகள் தோழர்

  ReplyDelete

Post a Comment

வருக வருக