சில புரிதல்கள் வலிக்கும்
இருப்பினும்
உண்மையைப் பகிர
ஒரு பக்குவம் வேண்டும்
பகிர்ந்திருக்கிறார்
நந்தன் (கவிஞர்/இயக்குனர்/எழுத்தாளர்)
அவருடைய முகநூல் பகிர்வை இங்கே தந்திருக்கிறேன்
அன்பன்
மது
(உன் தளத்தில் சொந்தமாக மட்டுமே எழுது என அடித்துச் சொன்ன தமிழ் இளங்கோ ஐயா மன்னிப்பாராக)
உண்மையில் இந்த உலகின் பொருளாதாரக் கொள்கை புரிவதற்கு எனக்கு நாற்பத்து சொச்சம் வருடங்கள் தேவைப்பட்டது என்பதே உண்மை..
முன்பு சோவியத் என்று ஒரு தேசம் இருந்தது. அந்த தேசத்தில் ஊழல்கள் மலிந்திருந்தது. அந்த ஊழல்களையும் கோர்ப்பசேவையும் பயன்படுத்தி அமெரிக்க முதலாளித்துவம் சோவியத்தை நொறுக்கியது வரலாறு..
சோவியத் நொறுங்கியபின் உலக நாடுகளின் தலையெழுத்து மெல்ல மெல்ல மாறத் துவங்கியது.. தத்தம் அரசுகளை நம்பிய குடிமக்கள் அரசுகளின் துரோகங்களைப் புரிந்து கொள்ள ஆரம்பித்தார்கள் - இந்தியர்களைத் தவிர..
இந்த முதலாளித்துவத்தின் ஆணி வேர் என்ன என்று பார்த்தால் கார்ப்பரேட் கம்பெனிகள் நடத்தும் நிறுவனங்கள்தான்.. கார்ப்பரேட் கம்பெனிகள் பொது மக்களின் பணத்தைப் பயன்படுத்தி தங்கள் பிசினசை நடத்துவார்கள். ஒரு கட்டத்தில் பிசினசை மூடுவது லாபமா நடத்துவது லாபமா என்று வருமபோது அவர்கள் விருப்பப் படி நடத்தும் தொழிலை மூடுவார்கள்.. அவர்கள் மூடும்போது தொழிலாளர்களுக்கு குறைந்தது மூன்று மாத சம்பள பாக்கி இருக்கும்..
அமெரிக்க மக்களும் கூட சென்ற பொருளாதார தேக்கநிலையின்போது இந்த முதலாளித்துவத்தின் கோர முகத்தை கண்டார்கள்.. அதனால்தான் வால்ஸ்ட்ரீட்டை கைப் பற்றுவோம் என்ற இயக்கத்தை முன்னெடுத்தார்கள். அந்த இயக்கம் எப்படி நசுக்கப்பட்டது என்பதே தெரியாமல் நசுக்கப்பட்டது..
கல்வியிலும் தம் ஆள்வோரை தேர்ந்தெடுப்பதிலும் சிறந்தவர்கள் அமெரிக்கர்கள் என்ற மாயை நமக்குள் விதைக்கப் பட்டிருக்கிறது.. அமெரிக்காவைப் பொறுத்தவரை கற்பு என்ற நான்சென்ஸ் எல்லாம் புழக்கத்தில் இல்லை. ஆனாலும் அங்கே அதிபரைத் தேர்ந்தெடுப்பதில் கற்பை எல்லாம் முன்னிலையில் வைப்பார்கள். பில் கிளிண்டன் தன் மனைவிக்கு துரோகம் இழைத்தால் ஒரு வேளை காங்கிரசின் கருணையால் தப்பலாம்.. ஆனால் அடுத்து தேர்தலில் நிற்க முடியாது.. இதுதான் அமெரிக்க அரசியல்..
அமெரிக்காவைப் பொறுத்த வரை அது மக்களிடம் கொடுப்பது ரெண்டே ரெண்டு சாய்ஸ்தான்.. ஒன்றா டெமாக்ராட்டுகளைத் தேர்ந்தெடுங்கள் அல்லது ரிபப்ளிக்கன்களைத் தேர்ந்தெடுங்கள் என்துதான் அந்த சாய்ஸ். இந்த இரண்டு கட்சிகளுமே தொழிலதிபர்களின் பண உதவியோடுதான் தேர்தல் பிரச்சாரத்தை மேற் கொள்ளுவார்கள்.. தேர்தல் முடிந்தபின் அந்தந்த சப்போர்ட்டிங் தொழிலதிபர்களின் ஆசையை அவர்கள் நிறைவேற்றி வைப்பார்கள்.. இதுதான் அமெரிக்க நிலைமை..
வளைகுடாப் போர்கள் எல்லாம் ஷெல் போன்ற அமெரிக்க நிறுவனங்களுக்காக நடத்தப்பட்டவையே.. சோவியத்தின் வீழ்ச்சிக்குப்பின் இந்தியா போன்ற நாடுகள் அமெரிக்காவின் கோரப் பசிக்கு இரையாயின.. முக்கியமாக ஈழப் போர்.. அங்கே திரிகோண மலை உள்ப்பட பல இடங்களின் இயற்கை வளங்களைச் சுரண்ட தடையாக இருந்த காரணிகள் விடுதலைப் புலிகள்தான்..
அருகாமை நாடான இந்தியாவின் தலைமைக்கு லஞ்சம் கொடுத்து நோ அப்ஜெக்ஷன் வாங்கிய பின்னும் அங்கே இருந்த தடைகளான புலிகளை அழிக்க கார்ப்பரேட்டுகள் நடத்திய யுத்தம்தான் ஈழ யுத்தம்.. நம் அரசியல்வாதிகள் வாங்கிய காசுக்கு தங்களது வீரர்களையும் ஈழத்துக்கு அனுப்பி வைத்தார்கள். இறுதி யுத்தத்தில் இறந்த இந்திய வீரர்களின் கணக்கு என்றைக்குமே வெளி வரவே வராது..
இந்த முதலாளிகளின் யுத்தத்தில்தான் ஒன்றரை லட்சம் பேர் பலியானார்கள். அமெரிக்க முதலாளிகளிடம் வாங்கிய காசுக்குதான் தமிழக அரசியல்வாதிகள் கூவினார்கள். திமுக கொஞ்சம் அதிகமாகவே கூவியது. தனது ஊடகங்களில் ஈழ படுகொலைகள் வெளிவந்து விடாமல் பார்த்துக கொண்டது..
ஆக உலகின் எல்லா முக்கிய நிகழ்வுகளிலும் கார்ப்பரேட் அரசியல் இருக்கவே இருக்கிறது..
இந்த கார்ப்பரேட் அரசியல் எங்கு வரை பாய்கிறது என்றால் மாறவே மாட்டார்கள்.. ஏழைப் பங்காளர்கள். உழைக்கும் தோழர்களுக்கான தோள்கள் என்று நாம் நினைக்கும் கம்யூனிஸ்டுகள் வரைக்கும் இது பாயும்..
அவர்கள் மக்களின் தோழர்களாக இருப்பார்கள்.. திடீரென கூடங்குளம் அணு உலைகளுக்கு ஆதரவாக மாறுவார்கள்.. முந்தைய நாள் வரை அமெரிக்க தனியார் திட்டமான நியூட்ரினோவை எதிர்ப்பவர்கள் நியூட்ரினோவின் ◌பெங்களூர் காண்ட்ராக்டர் பிரகாஷ் காரத்தை சந்தித்ததும் நியூட்ரினோ அறிவியல் முன்னேற்றத்தின் அடுத்த கட்டம் என்று அறிவிப்பதோடு நில்லாமல் தங்களது அறிவியல் அமைப்பை நியூட்ரினோவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும்படி அனுப்பி வைப்பார்கள். இந்த அறிவியல் கழகத்தினரும் பொலிட் பீரோ சொன்னதன் படி நியூட்ரினோவை ஆதரிக்க ஆரம்பிப்பார்கள். ஒரு வேளை பொலிட் பீரோ நியூட்ரினோவை எதிர்க்கச் சொன்னால் அதை எதிர்க்க ஆரம்பித்திருப்பார்கள். அடிமைகளால் என்ன செய்ய இயலும்..
இதுதான் கார்ப்பரேட்டுகளின் கரங்கள் நீளும் இடம்.. கார்ப்பரேட்டுகளால் கோர்ப்பசேவை மட்டுமல்ல.. தன் இன உணர்வு இல்லாத எல்லா கம்யூனிஸ்ட்டுகளைக் கூட வாங்க இயலும்..
இதே நியூட்ரினோவை கேரளாவில் அமைக்கவா என்று கேட்டால் கேட்டவனின் நாக்கை கேரள மார்க்சிஸ்ட்டுகள் அறுத்து விடுவார்கள். கூடங்குளம் கூட கேரளாவில் இருந்து துரத்தப்பட்ட திட்டம்தான். அதை இன்று வரை கேரள கம்னிஸ்ட் தலைமை எதிர்த்தபடிதான் உள்ளது.. மலையாளிகள் பெரம்பான்மையாக உள்ள மார்க்சிஸ்ட் பொலிட் பீரோதான் அவர்களை அடக்கி வாசிக்கவைத்தபடி இருக்கிறது..
ஆக இந்த கார்ப்பரேட்டுகளால் யாரை வேண்டுமானாலும் விலைக்கு வாங்க இயலும்... எங்களது உரிமைக்காக யார் போராடுவார்கள் என்று நம்பினோமோ.. எங்களைக் காப்பாற்ற யார் வருவார்கள் என்று நம்பினோமோ அவர்களைக் கூட விலைக்கு வாங்க இந்த முதலாளிகளால் முடியும்..
இந்த நிலைமையில் நாம் என்னதான் செய்வது.. கார்ப்பரேட்டுகளுடன் மோத வாய்ப்பில்லாமல் அவர்களது அடிமைகளுடன் மோதி தமிழ் தேசிய வியாதிகள் என்ற பட்டப் பெயரை மட்டும்தான் சம்பாதித்துக் கொள்ள முடியும்..
தோழர்கள் தருவதானால் எதை வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும் நாம்..

ஒவ்வொரு வரியும் வலிக்கும் யதார்த்தம்..
ReplyDeleteத.ம.+1
சோவியத் ஒன்றியத்தின் சிதைவு மனிதத்தின் சிதைவாக இருப்பது வேதனை ..
Deleteநன்றி கிரேஸ்.
நாம் ஏமாளிகள் என்பதை உறுதிப்படுத்துகிறதா...?
ReplyDeleteஆம் மீண்டும் மீண்டும்
Deleteவருத்தம் தான் சகோதரரே..:(
ReplyDeleteஎன்னது ... சகோதரி மீண்டும் ....
Deleteமகிழ்வு
பதிவு வருத்தம் மட்டுமல்ல ஒரு விழிப்பையும் தந்ததால் பகிர்ந்தேன்
உலகின் பொருளாதாரக் கொள்கை என்பது அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் இன்னொரு பக்கம்தான்.
ReplyDeleteகம்யூனிசம் என்ற காரை கோர்ப்பசேவ் என்ற டிரைவருக்கு சரியாக ஓட்டத் தெரியவில்லை; இதில் நாம் காரை குறைகூற முடியாது.
பேஸ்புக் பகிர்வினுக்கு நன்றி.
(உன் தளத்தில் சொந்தமாக மட்டுமே எழுது என அடித்துச் சொன்ன தமிழ் இளங்கோ ஐயா மன்னிப்பாராக) –
நீங்கள் வலைப்பதிவில் நிறைய எழுத வேண்டும்; அவைகளை புத்தகங்களாக நீங்கள் வெளியிட வேண்டும். அந்த விழாவில் நானும் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆசைதான்.
த.ம.4
இன்னும் நிலவன் அண்ணாத்தே பாக்கல
Deleteபார்ப்போம் என்ன சொல்றாருன்னு
மிக நல்ல தகவல்கள் ஆனால் நாம் ஏமாந்து கொண்டிருக்கின்றோம் என்பதை வேதனையுடன் சொல்லும் தகவல்கள்....
ReplyDeleteஆம்
Deleteவிழித்தாலே போதும்
ஒ! அமெரிக்காவும் நம்ம நாடு மாதிரி தானா?!
ReplyDeleteஆம் பல விசயங்களில்
Deleteநிதர்சனத்தை வெளிப்படுத்தியமைக்கு நன்றி.
ReplyDeleteமணியான இந்த கருத்துக்களுக்கு சொந்தக்காரர் ,மணி ரத்தினத்தின் மைந்தரோ ?
ReplyDelete