பாபநாசம் என்றோர் அனுபவம்கடந்த ஞாயிறு ஒரு சிறிய விழா. நட்டை வரச் சொல்லியிருந்தேன். விழா துவங்க சிறிது தாமதம் ஆனதால் நட்டுடன் நானாஸ்  தேனீரகம் சென்றேன். பிரத்தியோக சுவைகொண்ட தேனீரை பருகிக் கொண்டே நட்டு கேட்டான் சார் பாபநாசம் பார்த்துடீங்களா?
இல்லையே ஏன்? 

கட்டாயம் பாருங்க சார். கிளைமாக்ஸ்ல கமல் முகத்தின் ஒவ்வொரு அணுவும் அசையும் சார். வேற யாராலையும் அப்படி நடிக்கவே முடியாது. பார்த்துட்டு சொல்லுங்க என்றான். 

நட்டு எனது மரியாதைக்கு உரிய முன்னாள் மாணவன். நான் அவன் மேல் வைத்திருக்கும் மரியாதையை இன்றளவும் காப்பாற்றிக் கொண்டிருப்பவன். படிப்பில் கில்லி. பத்தாம் வகுப்பில் எங்கள் பள்ளியின் முதல் மாணவன். பெரியாரை நேசிப்பவன். எனவே எங்களுக்குள் ஒரு அலைவரிசை உண்டு. 

பயல் சொன்னா கரீட்டா இருக்குமே என்றுதான் ஸ்ரீயிடம் படத்திற்கு போலாமா என்றேன். வாங்க என்று டிக்கட்டை எடுத்துவைத்துக்கொண்டு திரு.பாலுவுடன் ஆர்.கே.பியில் காத்திருந்தார். நான் வெஸ்ட்டில் முட்டிவிட்டு ஆர்.கே.பியில்  ஆஜர். 

கமலை  இயல்பான ஒரு நடுத்தர வயசு குடும்பத் தலைவராக பார்ப்பதில் என் போன்றோருக்கு கொஞ்சம் சங்கடம் இருக்கும். இவற்றை எல்லாம் மீறி கதையோடு ஒன்றைச் செய்வது கமலின் நடிப்பு என்றால் மிகையாகாது. படத்தின் ஆரம்பத்தில் ஜீப் காராக மாறவேண்டிய வேண்டுகோளை கெளதமி வைத்தபோது ஸ்ரீயிடம் சொன்னேன் "ஏங்க இந்தப் படத்தை பார்க்க சொன்னது எனது மாணவக் கண்மணி". பாலு பட்டாசாய் சிரித்தார். 

திடும் என  படம் வேகம் எடுத்தபொழுதும்  தொடர்ந்த காட்சிகளின் பொழுதும் ஏன் நட்டு இந்தப் படத்தை தவறவிடாதீங்க என்று சொன்னான் என்பது புரிந்தது. 

படத்தை பற்றி ஏதாவது சொல்லுப்பு என்பவர்களுக்கு.

பாத்திரங்களுக்கான நடிகர்களை தேர்ந்தேடுத்திருப்பதிலேயே ஒரு நேர்த்தி இருக்கிறது. எம்.எஸ். பாஸ்கரை ஒருமுஸ்லீம்  பாயாக மாற்ற முடியுமா? இப்படி சின்ன சின்ன கதாபாத்திரங்கள் கூட மிளிர்கின்றன. 

பளிச் ஒளிப்பதிவு, சோடை போகாத எடிட்டிங், படத்தின் ஆரம்பத்தில் இருப்பதே தெரியாமல் இருந்துவிட்டு வீட்டிற்குள் நுழையும்  போலிஸ் சுமோவிற்கு ஸ்பீக்கர்களை அலறவிடும் கிப்ரானின் இசை ஒரு வாவ். 

அது ஒரு வாவ் என்றால் தொடரும் காட்சியில் மூச்சு தள்ள ஓடிவந்து இன்ஸிடம் சிரித்துப் பேசும் கமல் பின்னால் மறைந்து சப்தமில்லாமல் செல்வி (நிவேதா தாமஸ்) அழுவது அப்ளாஸ் அள்ளுகிறது. 
எங்கப்பா புடிச்சாங்க இந்தப் புள்ளையை. கண்ணாலேயே பேசுதேப்பா. சரி இதுதான் அப்டீண்னா புள்ளிமீனா (எஸ்தர் அணில்) ஜன்னல் வழியே  அரண்டு போய்ப் பார்ப்பது மிரட்டல். 

பெண்பிள்ளைகள் இப்படி ஒரு அப்பாவிற்காக சத்தியமாய் ஏங்குவார்கள். 

ராணி பாத்திரத்தில் கெளதமி பசையாய் ஒட்டிக்கொண்டுவிட்டார். உண்மையைச் சொல்லணும்னா படத்தை  விட மூவி பஃப் விளம்பரத்தில் பத்து வருடம் இளமையாக தெரிகிறார்! 

தியேட்டர்களில் இரண்டாம் காட்சியில் இத்துணைக் கூட்டத்தை பார்த்து ரொம்ப நாட்களாயிற்று. ஒரு வசனத்திற்கு தட்டலாம் அல்லது இரண்டு வசனத்திற்கு தட்டலாம்,  இப்படி தொடர்ந்து வசனத்திற்கு கைதட்டல் வாங்கிய திரைப்படங்கள் அரிதினும் அரிது. 

ரெண்டு நிமிசத்திற்கு ஒருமுறை கைதட்றாங்க தியேட்டரில். வசனத்திற்கு ஜெ.மோ பெருமை கொள்ளலாம் எனினும் வேறு யாரும் செய்திருந்தால் இத்துணை அப்ளாஸ் வந்திருக்குமா என்பது மிலியன் டாலர் கேள்வி. 

மிக மிக அழுத்தமாக கமல் தன்னை ஒரு சீசன்ட் ஆர்டிஸ்ட்டாக நிறுவியிருக்கிறார். 

அய்யா நிழல் திருநாவுக்கரசு போன்றவர்கள் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரிஷிமூலம் நதிமூலத்தொடு சொல்லமுடியும்தான். அதையெல்லாம் மீறி அனைவருமே உடன்படும் ஒரு கருத்து உண்டு என்றால் கமல் தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத பேராளுமை என்பதுதான். 

அவரது நியூரான்களுக்கு வயசாகிவிட்டது. இனி அவர் என்ன பெரிதாக செய்யப் போகிறார் என்ற மனநிலைக்கு என்னை விஸ்வரூபம் தள்ளியிருந்தது. 

பாபநாசம் நாசம் செய்தது எனது அந்த மனபிம்பதைத்தான்! சில காட்சிகளில் கமல் விஸ்ரூபத்தை காட்டியிருக்கிறார். ஏற்கனவே குறிப்பிட்ட முதல் போலிஸ் என்ட்ரியிலும், பின்னர் வாழைத்தோப்பை நோண்டி அரண்டு போய் அனைவரும் திரும்பிப் பார்க்கும் இடத்தில் கமல் கொடுக்கும் லுக். 

என்ன லுக்குப்பா அது. 

சரி படம் முடிஞ்சிருச்சு என்கிற புள்ளியில் கமல் எடுக்கும் அடுத்த விஸ்வரூபம் கோடம்பாக்கம் நோக்கி நகரும் அடுத்த தலைமுறையில் நினைவடுக்குகளின் நித்தியமாய் வாழும்! 

இந்தப்படத்தின் ஒரு ப்ளூ ரே பிரிண்டை பத்திரமாக வைத்துகொள்ள வேண்டும் திரை ரசிகர்கள் ஒவ்வொருவரும். 

பி.கு

எனது நட்பு வட்டம் முழுவதுமே கமல் ரசிகர்களால் நிரம்பியதுதான். நானும் அவர்களில் ஒருவன்தான்.  எங்கே தப்பு செய்துவிட்டேன் என்றால் ஸ்டான்லி குப்ரிக்கையும், அகிராவையும் பார்த்ததில்தான். 

உண்மையில்  ஒரு ரான் அல்லது புல் மெட்டல் ஜாக்கட்டைத் தரும் அத்துணை திறமைகளும் நுட்பங்களும் கமலிடம் உண்டு. அதை அவர் செய்வதே இல்லை என்பதுதான் எனது வருத்தம். 

தமிழ் சினிமாவின் அடையாளமாக அல்ல உலக சினிமாவின் அடையாளமாக அவர் இருக்க வேண்டும் என்பது எனது ஆசை. பேராசை ஒன்றும் இல்லை. நியாமான ஆசைதான். பார்ப்போம் எப்போது நிறைவேறுகிறது என்று. 

இந்த வருத்தத்தை கொஞ்சம் குறைத்திருக்கிறது பாபநாசம். ரீமேக் என்றாலும் கமல் உண்மையில் ரீக்கிரியேட் செய்திருக்கிறார். 

அன்பன்
மது 

Comments

 1. தங்களின் விமர்சனத்தில் இன்னொரு முறை ரசித்தேன்... முன்னாள் மாணவருக்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. அண்ணா நலமா?
   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 2. பாபநாசத்தை திர்ஷ்யம் படத்தோடு ஒப்பிட்டே பலரும் விமர்சனம் செய்திருந்தனர்.இன்னொரு மகாநதி என்கிறார்கள் . நிச்சயம் பார்க்க வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. பாருங்கள் அய்யா ...
   ரொம்பவே ரசிப்பீர்கள்..

   Delete
 3. மிகவும் அருமையான படம்...
  கமல் என்னும் கலைஞனுக்கு மீண்டும் தீனி போட்ட படம்.
  த்ரிஷ்யம் நாலைந்து தடவை பார்த்திருந்தாலும் பாபநாசம் பார்க்க சலிக்கவில்லை... தான் ஒரு உலகநாயகன் என்பதை நிரூபிக்க கிடைத்த மற்றுமொரு மகாநதி...

  ReplyDelete
  Replies
  1. நன்றி பரிவையாரே......

   Delete
 4. Arumaiyana vimarsanam

  ReplyDelete
 5. த்ருஷ்யத்தின் ரீமேக் என்பதால் பாபநாசம் எப்படி வந்திருக்குமோ என்ற நினைப்பு இருந்தாலும், கமல் என்பதால் அவர் தமிழ் திரையினை தனது நடிப்பினால் ஆளுமை செய்யும் கலைஞ்ராயிற்றே,...அதனால் நன்றாக வந்திருக்கும் என்ற எதிர்பார்ப்பைச் சிறிதும் சிதைக்காமல், நேட்டிவிட்டி பாதிக்கப்படாமல் எடுத்திருக்கிறார்கள். பார்த்து ரசித்த படம்...உங்கள் விமர்சனம் அதைச் சொல்லியே விட்டது....பகிர்வுக்கு மிக்க நன்றி....

  ஆம் கமல் இன்னும் எவ்வளவோ சாதிக்கலாம்தான். விஸ்வரூபம் டெக்னிகலாக அவர் முன்னோக்கி எடுத்துச் செல்ல விழைந்திருக்கலாம்...ஆனால் மனதிற்கு நிறைவைத் தரவில்லை. இதில் நடிப்பு அபாரம்...இன்னும் அவர் எவ்வள்வோ செய்யலாம்..திறமை மிக்கவர். பொறுத்திருப்போம்...நாங்களும் கமலின் திறமையை ரசிப்பவர்கள்!

  ReplyDelete
  Replies
  1. விஸ்ரூபம் நான் எதிர்பார்த்த அளவில் டெக்னிக்கலாக இல்லை தோழர் ...
   விச்வரூபத்திற்கான சவுக்கு சங்கரின் விமர்சனத்தை படித்தீர்களா நீங்கள்?
   //இன்னும் அவர் எவ்வள்வோ செய்யலாம்..திறமை மிக்கவர். பொறுத்திருப்போம்//
   நிறைய செய்திகளை இது தொடர்பாக பகிர விருப்பம்.. நேரம் வரும்போது பார்க்கலாம்.

   Delete
 6. வணக்கம்.

  தங்களின்பார்வையில் விமர்சனம் நன்று
  த.ம 5

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் ரூப்ஸ் ...
   நன்றிகள்

   Delete
 7. அருமையாக ரசித்து விமர்சனம் எழுதியுள்ளீர்கள்! பார்க்க வேண்டும்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. பாஸ் தியேட்டரில் பாருங்க ... செமை...

   Delete
 8. மது,

  உங்களின் விமர்சனம் அருமை. மகாநதிக்குப் பிறகு கமல் ஒழுங்காக நடித்த படம் இது என்று சொல்கிறார்கள். நான் இன்னும் பார்க்கவில்லை. அதனால் இதற்கு மேலே கமல் நடிப்பை விமர்சனம் செய்ய இயலவில்லை. எதோ ஒரு இடத்திலாவது கமல் தனது மேதாவித்தனத்தை வெளிக்காட்டாமலா இருப்பார்? படம் பார்த்துவிட்டு சொல்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. எழுத்து மந்திரவாதிக்கு வணக்கங்கள் ...

   I bet u will love it...


   பார்க்கலாம் நீங்க என்ன சொல்றீங்கன்னு...

   Delete
 9. படம் பார்க்கத் தூண்டும் விமர்சனம் நண்பரே
  அவசியம் பார்க்கிறேன்
  நன்றி
  தம +1

  ReplyDelete
  Replies
  1. பாருங்கள் அய்யா.
   வாக்கிற்கு நன்றி

   Delete
 10. இன்னும் படம் பார்க்க இயலவில்லை. பார்க்க வேண்டும் என நினைத்திருக்கும் படம் இது....

  த.ம. 7

  ReplyDelete
  Replies
  1. பாருங்கள் அய்யா.
   ஏழாம் வாக்கு !
   மகிழ்வு

   Delete
 11. அது என்ன நடு சென்டர் மாதிரி முஸ்லீம் பாய்:)))))

  விமர்சனம் படம் பார்க்கதூண்டுகிறது. ஆனா படம் இப்போ அர்.கே.பி தியேட்டரில் இல்லையாமே:(( வெஸ்டில் விசாரிக்கணும்.

  ReplyDelete
  Replies
  1. அட வாங்கம்மா ..
   படம் போய்டுத்து...
   ப்ளூ ரே பிரின்ட்தான் இனி

   Delete
 12. திரிஷ்யம் பார்த்ததால பாபநாசம் பாக்கனும்னு தோணலை. கமலுக்காகப் பார்க்க, டிவிடி க்கு waiting

  ReplyDelete
 13. அதென்ன ப்ளு பிரின்ட் ?சொல்லுங்க வாத்தியாரே ,பார்த்துக்கிறேன் :)

  ReplyDelete
 14. நானும் பார்த்தேன்! உங்கள் விமர்ச்சனம் உண்மை!

  ReplyDelete
 15. கமல் நடிப்புலகின் மேதாவி என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். எந்தப் பாத்திரத்தையும் எளிதாக நடித்து ஊதித் தள்ளிவிடுகிறார். இதில் அவருக்கு நல்ல தீனி கிடைக்கவும் பிரமாதமாக செய்து விட்டுப் போய்விட்டார். உலகத் திரைப்படங்களில் நடிக்க முழுத் தகுதியும் உள்ளவர் இவர் ஒருவரே. காலம் பதில் சொல்லட்டும்.

  ReplyDelete

Post a Comment

வருக வருக