நம்பவே முடியாத ஆனால் பார்த்தல் வாயைப் பிளந்தபடி ரசிக்க வைக்கிற ஸ்டன்ட் காட்சிகள் எம்.ஐ படங்களின் அடையாளம்.
எம்.ஐ ஒன் ஒரு அற்புதமான ஸ்பை திரில்லர். இந்த எதிபார்ப்பில்தான் எம்.ஐ டூ போனேன். நம்ம சூப்பர் ஸ்டார்களே மெர்சல் ஆகும் அளவிற்கு பில்டப் ஸ்டுன்ட்கள். இன்றுவரை இந்த சீரிஸில் வந்த மூவிகளில் எம்.ஐ ஒன் நிகழ்வுச் சாத்தியத்திற்கு நெருக்கமானது. மற்றவை எல்லாம் ஒரு ரெம் அனுபவம்.
காலையில் தூக்கத்தில் இருந்து எழுமுன் விளையும் ஒரு கலவையான கனவு போல நிகழவே முடியாத ஸ்டன்ட்கள் படத்தின் அடயாளம். என்னை போன்ற ஆட்கள் இப்படி சொன்னால் ரசிகர்கள் வேறு மாதிரி சொல்கிறார்கள். படத்தை கொண்டாடித் தீர்க்கிறார்கள். இதுவரை வந்த எந்த எம்.ஐ படமும் பிளாப்ஆகவில்லை.
இந்தப் படங்களின் ஸ்டன்ட் டைரக்டர்களிடம் நம்ம ஹீரோ நிலாவைக் கொஞ்ச நேரம் தம் கட்டி இழுக்கிறார் என்று வேடிக்கைக்கு சொன்னாலும் உடன் காட்சிகளை ரெடி பண்ணிவிடுவார்கள்.
இந்த இடத்தில் எம்.ஐ ஐந்து ரொம்பவே வேறுபடுகிறது. தனது உயிர் நண்பனும் சக உளவாளியுமான பெஞ்சியை மரணத்தின் வாயிலுக்குள் அனுப்பி தனது உயிரைத் கிட்டதட்ட துறந்து அவனை காப்பாற்றும் ஈதன் ஹன்ட் நம் கவனம் ஈர்க்கிறார்.
கதை அந்தக் கால கதைதான். எழு மலை ஏழு கடல் தாண்டி ஒரு குகையில் வில்லனின் உயிர் இருக்கிறது அதை அடைவேண்டும் என்பது மனிதன் பேச ஆரம்பித்ததில் இருந்து சொல்லப்படும் விசயம்தான்.
ரெட் பாக்ஸ் என்பது ஒரு பெண்டிரைவில் என்க்ரிப்ட் செய்யப்பட்ட டேட்டா இதனை திறக்க இங்கிலாந்து பிரதமரால்தான் முடியும். இதை நோக்கி சுழல்வதே கதை.
திடீர் மீட்டிங் ஒன்றில் இம்பாசிபிள் மிஷன் போர்ஸ் கலைக்கப்பட ஏஜெண்டுகள் அனைவரும் அனாதைகள் ஆகிறார்கள். படத்தின் ஆரம்பமே திகீர் என இருக்கு.
ஈதனுக்கு ஒரு மிசன் வருகிறது. தம்பி உன் ஏஜன்சி காலி. எங்களோடு இருந்தால் உனக்கு உயிர் உண்டு இல்லைனா எல்லோர்க்கும் சாவுதான் என்று சொல்லி வெடிக்கிறது. மயக்கப் புகை நிரம்பும் அறையில் கண்ணாடிக் கதவுகள் வழியே வெளியில் குரூரமாய் நிற்கும் வில்லனைப் பார்கிறான் ஹன்ட். அவன் ஒரு ஏஜண்டை இவன் கண் எதிரிலேயே போட்டுத் தள்ளிவிட்டு போய்விடுகிறான். தொடரும் சதுரங்க ஆட்டம் பட்டயக் கிளப்புது.
எம்.ஐ சீரிஸ் படங்களில் ஏதாவது ஒரு காட்சியிலாவது முகங்கள் மாற்றப் படும். இதற்கான த்ரீடி பிரிண்டர், குரல் மாற்றும் கருவி, என ஜோரான ஸ்பை டெக் படத்தின் பலம். இந்த பாகத்திலும் அவை இருக்கு.
இந்தப் படத்தில் ஒரு சாலையில் துரத்தி வரும் சிண்டிகேட் ஆட்களைத் தனது பி.எம்.டபிள்யூ காரைப் பம்பரம் மாதிரிச் சுழற்றி அவர்களை டாம் பறக்க விடுவது ஜோர் என்றால் தொடரும் காட்சியில் கார் நான்கு குட்டிக்கரணம் அடித்து விழுவது வாவ்.
படத்தின் தொழில் நுட்பங்களைஎல்லாம் மீறி தனித்துத் தெரிவது மனித உறவுகளுக்கு ஹீரோ பாத்திரம் கொடுக்கும் வெய்ட். நண்பனைச் சாக விடமாட்டேன் என்பதும். சிண்டிகேட்டில் இருந்தாலும் ஹன்டுக்கு உதவும் ஹீரோயினும் படத்தின் வண்ணங்களை வேறு தளத்தில் குழைத்துத் தீட்டுகிறார்கள். மனித உறவுகளை ஒரு ஸ்பை திரில்லரில் வைத்ததே ஒரு சவால். படத்தின் அதிரி புதிரி வெற்றிக்கு இதுமட்டுமே காரணமாய் இருக்கும் என்று தோன்றுகிறது.
பைக்கில் பறக்கும் பத்து வில்லன்களை பறக்க விட்டு ஹீரோயினை நெருங்கும் ஹன்டை அவள் எப்படி ஜஸ்ட் லைக்தட் காலி செய்கிறாள் என்பது சுவாரசியம்.
ஜோக் என்றால் சி.ஐ.ஏ டைரக்டர் ஈதன் ஹன்டை பற்றி இங்கிலாந்து பிரதமந்திரியிடம் சொல்லும் வசனங்கள். தமிழ்பட ஹீரோக்களுக்கு கூட இப்படி ஒரு பில்டப் கிடையாது! தலை, தளபதி, சூசா எல்லாரும் பேசும் வசனங்கள் நினைவில் வந்தது. நம்ம இளவரசுவே தேவலை. சி.ஐ.ஏ டைரக்டர் சொல்லும் வசனம் ஒன்று "ஹி இஸ் எ வாக்கிங் மேனிபெஸ்டேசன் ஆப் டெஸ்டினி". லே ராசாக்களா எங்கேயோ போய்டீங்கலே.
இந்த இடத்தில் நம்ம தமிழ் பில்டப்புகளை நினைத்துப் பார்த்தேன் பக்கத்தில் கூட வர முடியாது. படத்தின் ஆகப் பெரிய நகைச்சுவை வசனம் இதுதான்.
ஆக்சன் பிரியர்கள் தவிர்த்தால் சாமி கண்ணைக் குத்திடும். எனவே பார்க்கலாம்.
அன்பன்
மது
ரசனையான விமர்சனம்...
ReplyDeleteநன்றி அய்யா
Deleteபார்கலாம் என்கிறீர்கள் பார்க்கலாம்
ReplyDeleteதமிழ் மணம் 3
விமர்சனம் அருமை. வாய்ப்பிருப்பின் படத்தினைப் பார்ப்பேன்.
ReplyDeleteநன்றி அய்யா
Deleteபடங்கள் பார்ப்பது இப்போதெல்லாம் முடியாத விஷயமாகி விட்டது. உங்கள் மூலம் சில படங்களைப் பற்றித் தெரிந்துகொள்கிறேன். நன்றி நண்பரே.
ReplyDeleteவருக பயணப் பதிவரே
Deleteஉங்கள் ரசனைக்குரிய குறும்பட பகிர்வு ... என்னுடைய சாய்ஸ்
நான் பார்க்காத படங்கள் இப்போது நிறைய இருக்கின்றன ...
நானும் குறைத்துவிட்டேன்
நன்றி அய்யா
ReplyDeleteஅன்புள்ள அய்யா,
ReplyDeleteமிஷன் இம்பாசிபிள் படத்தின் விமர்சனம் தங்கமலை ரகசியம் போல் கதை அந்தக் கால கதைதான். எழு மலை ஏழு கடல் தாண்டி ஒரு குகையில் வில்லனின் உயிர் இருக்கிறது அதை அடைவேண்டும் என்பது மனிதன் பேச ஆரம்பித்ததில் இருந்து சொல்லப்படும் விசயம்தான் என்றும் ஆக்சன் பிரியர்கள் அவசியம் பார்க்க வேண்டும் என்றும் கூறி அசத்திவிட்டீர்கள்.
நன்றி.
த.ம. 6
வருகைக்கு நன்றி அய்யா
Deleteஅருமையானவிமர்சனம் நண்பரே
ReplyDeleteசாமி கண்ணை குத்தவதற்குள் பார்த்துவிடுகிறேன்
நன்றி
தம +1
பார்த்தாச்சு......உங்க விமர்சனம் அதை விட நன்றாக இருக்கின்றது..நண்பரே!
ReplyDeleteஹாஹா பில்ட் அப் சூப்பர்.
ReplyDeleteஎங்க வீட்டுல விமான ஸ்டண்ட் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள் மூன்று பசங்களும். பார்ப்போம்னு நினைக்கிறேன்.
தமிழில் முரட்டு தேசம். அருமையான மொழிபெயர்ப்பு. என்ன நினைக்கிறீர்கள் மது?
ReplyDeleteசமீபத்தில்தான் இந்தப் படம் பார்த்தேன் . வசனங்களை தொடர்ந்து கவனிக்காவிட்டால் கதையோட்டம் புரியாது போய்விடும் போலிருக்கிறது . மற்றபடி வழக்கம்போல அசத்திவிட்டார்கள். உங்கள் பதிவிலும் எல்லோருடைய பாத்திரமும் அழகாக வர்ணிக்கப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் படம் ஜூஹல் பந்தி விருந்து.
ReplyDelete