வலைப்பதிவர் மாநாடு ஆலோசனைக் கூட்டம்

வணக்கம் 

கடந்த வாரம் பாரி மழலையர் பள்ளியில் வலைப்பதிவர் சந்திப்பிற்கான மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் நிகழ்ந்தது. 


புதுகையின் பெரும் இலக்கிய ஆளுமைகளோடு நானும் கலந்துகொண்டேன். பல்வேறு விவாதங்கள் நடந்தன. மூத்த பதிவர்கள் நிகழ்வைத் திட்டமிடும் கவிஞர் முத்துநிலவன் அண்ணா மற்றும் கவிஞர் பொன்.கா அவர்களின் பெயரில் வங்கியில் கரண்ட் அக்கவுண்ட் ஒன்று தொடங்க தீர்மானிக்கப் பட்டது.  மின்னஞ்சல் குழு, நிர்வாகிகளுக்கான வாட்சைப் குழு ஒன்றையும் துவக்கினோம். 

நிகழ்விலேயே தொடர்புக்கான மின்னஞ்சல் தொடங்கப்பட்டது. துவக்கியவர் ஸ்ரீ மலையப்பன்.  நிகழ்விலேயே வாட்சப் நிர்வாகக் குழுவும் துவக்கப்பட்டது.  வாட்சப் வித்தகர் பாண்டியன் அவையிலேயே துவக்கியது அருமை. 

சொன்னபடி இந்த வாரம் கரண்ட் அக்கவுன்ட் தொடங்கப்பட்டுவிட்டது. நிகழ்விற்கான நிதி இனி வரும் என்று நம்புகிறேன். 


நிகழ்வின் முதல் நிதி ஆதாரத்தை கொண்டுவந்து சமர்பிக்க அடுத்த அறைக்கு சென்ற பாரி மழலையர் பள்ளி திருமதி.கருணைச்செல்வி அவர்கள்  திரும்ப வருவதற்குள் தேவதா தமிழ் முதல் நன்கொடையாளர் என்கிற பட்டதை தட்டிவிட்டார்!  இவர்களுக்குப் பின்னர் நன்கொடை நோட்டு பெயர்களால் நிரம்பத் துவங்கியது. 

அனைவருக்கும் நன்றிகள். 

விழா ஏற்பாடுகளுக்காக நிலவன் அண்ணாத்தே உள்ளூர் சங்கங்களைத் தொடர்புகொள்ள போகலாம் யார் வரிங்க என்று கேட்டதும் முதல் ஆளாக கவிஞர் வைகறை பெயர்கொடுத்திருக்கிறார்.

அடுத்த கூட்டத்தில் இருந்து தொடர்ந்து நண்பா அறக்கட்டளையின் பயிற்சி அரங்கில் நடத்திக் கொள்ள அனுமதி கிடைத்திருக்கிறது. நிரந்தரமாய் அணி அங்கேயே செயல்படலாம் என்றாலும் உறுப்பினர்களின் வசதியையும் கருத்தில் கொள்ளவேண்டும். 

ஒரு பெரும் நிகழ்வை நடத்த எத்துணைத் திட்டமிடல்கள் வேண்டும் என்பது கிளர்வூட்டும் கேள்வியாய் முன்னிற்கிறது. 

இனி பதிவுகள் ஏற்பாடுகள் குறித்து பேசும் 
தொடர்ந்து ..

நீங்க வரீங்கதானே?  
புதுகை உங்களை அன்புடன் வரவேற்கிறது. 

Comments

 1. ஆர்வமுடன் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது மகிழ்வாக உள்ளது சகோ.

  ReplyDelete
 2. இது போன்ற விழாக்களை பொறுப்பேற்று நடத்துவது எளிதல்ல. ஆனால் முத்துநிலவன் ஐயா அவர்கள் தலைமயில் புதுகைப் படை புறப்பட்டுவிட்டதே.வென்று காட்டும் வரை ஓயாது
  வாழ்த்துகள்
  காத்திருக்கிறோம்.அந்த இனிய நாளை நோக்கி

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் அவருக்கு இதில் பல்லாண்டு கால அனுபவம் உண்டு

   Delete
 3. வலைப்பதிவர் மாநாடு ஆலோசனைக் கூட்ட நிகழ்வினை அறியத் தந்தமைக்கு நன்றி தோழரே!
  வலைப்பதிவர் ஒற்றுமை சிறப்புற வாழ்த்துகள்.
  த ம +1
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்
   நன்றிகள் வருகைக்கும் ஆதரவுக்கும்

   Delete
 4. புதுக்கோட்டையில் நடக்கவிருக்கும் மாபெரும் வலைப்பதிவர்கள் சந்திப்பு விழாவின் வருகையை பதிவு செய்ய :

  http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்
   நன்றிகள்
   புதுகைக்கு உங்கள் தொழில்நுட்ப ஆதரவை தந்தமைக்கு நன்றிகள்

   Delete
 5. ஆகா
  பதிவர் திருவிழா முன்னேற்பாடுகள்
  களைகட்டத் தொடங்கிவிட்டன
  மகிழ்ச்சி நண்பரே
  தம +1

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்
   உங்கள் நூல்களை ஆர்வமுடன் எதிர்நோக்குகிறேன்

   Delete
 6. Replies
  1. நன்றிகள் ... சகோ

   Delete
 7. பெரிய பணி. சிறப்பாகத் தொடரவும், விழா சிறப்பாக அமையவும் ஒன்றுகூடுவோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் மேலான ஆலோசைனைகள்
   வரவேற்கப்படுகின்றன

   Delete
 8. விழா சிறக்க வாழ்த்துக்கள் .சகோ ...!

  ReplyDelete
 9. அருமை மது. பதிவர் சந்திப்புக்கான ஆலோசனைக் குழுப் புகைப்படங்கள் மற்றும் கணக்கு எண் விவரங்களுடன், அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். த ம 7

  ReplyDelete
  Replies
  1. அடுத்து அதுவே

   Delete
 10. வணக்கம்

  நிகழ்வு சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்.த.ம7
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் ரூப்ஸ்

   Delete
 11. விழா ஏற்பாடுகள் ஜரூராக நடப்பதை அறிந்து மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வரலே நான் வருவேன் உங்களைப் பார்க்க

   Delete
 12. வலைப்பதிவர் மாநாடு சம்பந்தமாக என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்று அறியச் செய்தமைக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் மேலான ஆலோசைனைகள்
   வரவேற்கப்படுகின்றன
   நன்றி அய்யா

   Delete
 13. விழா சிறப்புற எனது வாழ்த்துகளும்.....

  ReplyDelete
 14. விட்கெட் போட்டுட்டோம்ல....விழாவைச் சிறப்பிக்க உழைக்கும் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள், வணக்கங்கள் பாராட்டுகள்!

  ReplyDelete

Post a Comment

வருக வருக