கவிதை எழுத ஒரு முயற்சி ..1
அவன்
இடுங்கிய கண்களுக்குள்ளோ
டவுசரின் கிழிசளுக்குள்ளோ
அல்லது
உங்கள் கோவில்களுக்குள்
நுழையத் தயங்கித் தடுமாறும்
அவன்
கால்களுக்கிடையேவோ
தென்படலாம்
இந்திய வல்லரசின் சாவி
அல்லது
அதன் சவப்பெட்டியில்
நீங்களும் நானுமாய்
அறைந்த
ஆணி2
மேமன்களை நெரித்த கயிறு
சட்டத்தின்
மகுடி ஓசையில்
பிடாரனின்
மூங்கில் கூடைக்குள்
மஸ்தான்கள் பெருவாரி இல்லையா?

3
அன்று
புறா பிடிக்க
வகுப்பை
தவிர்த்த
மனோஜை
இன்று
பார்த்தேன்
அவன்
நடு மார்பில்
மின்னியது
ஒரு காதல் குறி..
இப்போது
அவன்
புறா பிடிக்க போவதில்லையாம்

4
எழுந்த பிம்பங்களை
சிலாகித்து
உச்சி முகர்ந்து
பின்னர்
வீழ்த்தின சில பிம்பங்கள்
வீழ்ந்த பிம்பங்கள்
காத்திருந்தன
அவைகளின்
வாய்ப்புக்கு
வழக்கம்போல்
குறியிட்டுக்
கடந்தன
விருப்பக் குறியிடும்
ஏனைய பிம்பங்கள்

5
மைதானமெங்கும்
நிறைந்து கிடந்த
சாக்லேட் உறைகளினூடே
சிரித்தது
ஒரு
தேசியக் கொடி

6
==மவுன அஞ்சலி ==

மவுனமாய்
நின்றன
மணல் லாரிகள்
மஞ்சளும் பச்சையுமான
வண்ணங்களில்
நதியின்
சவக்குழியை
சிரத்தையாய்
தோண்டிய
அந்த
மஞ்சள்வண்ண
இயந்திரத்தின் முன்னே

7
ஓரு விருப்பக் குறிக்கும்
இன்னொரு விருப்பக் குறிக்கும்
நடுவே
நசிகிறது
மின் வெளி நட்பு

8
பேணப்படவேண்டிய
பதிவேடுகள்
திருத்தப்பட வேண்டிய
கட்டுரைகள்
நடத்தப்படாத
பாடங்கள்
இவற்றில்
எவையேனும்
ஒன்றிற்குள்
காத்திருக்கலாம்
நாளைய கலாம்கள்

9
அறிய ஆவல்
இன்று காமராஜ்
இருந்தாலும்
கரப்ட் ஆயிருப்பார்
சொன்ன தோழரின்
கண்முன்னே
வாழ்ந்து மரித்த
கலாம் குறித்து
அவர் என்ன சொல்கிறார்

10
மெய் நிகர் உலகின்
ஏதோவொரு
வனத்தின்
நடுவேதான்
இருக்கிறது
எனக்கான
போதி

11
வலியுணர்
இதயங்கள்
வடிக்கும்
கண்ணீர்
கவிதை?

12
-பிம்பங்கள் -
மின்சமூகவெளி
நிழல்
படத்தில்
மென் முறுவல்
பதங்கமானது
வீட்டுப்பாடம்
செய்யாத
குழந்தை
ஒருத்தியின்
கையுதறலிலும்
அவள்
விழியோரம்
வழிந்த
துளிக்கண்ணீரிலும்.


நேற்று செமை மூட் அவுட் எனவே சும்மா கிறுக்கிப் பார்த்தேன் படிச்சுட்டு காண்டாகி திட்ட வேண்டாம்.

அன்பன்
மது

Comments

 1. Replies
  1. முதல் வருகைக்கு நன்றி அய்யா
   ஊக்குவிப்புக்கு நன்றி

   Delete
 2. அண்ணா , கவிதைலாம் கலக்கிட்டீங்க போங்க :-)
  4 கொஞ்சம் குழப்பமா இருக்கு..அப்புறம் கேட்டுக்கிறேன்
  மிகப் பிடித்தது 10.
  9 சரியான கேள்வி

  Cheer up Anna :-)

  ReplyDelete
  Replies
  1. உங்களைப் போல தமிழ்ச்சேவை எதுவம் செய்யவில்லை

   தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்தில் ஆவணப்படுத்துவது பெரும் சேவை
   தொடருங்கள்

   வலியின் வழி வந்த வரிகள் இவை
   கவிதைகள் என்பது வாசகர்களின் பெருந்தன்மை அவ்வளவே

   Delete
 3. அட! நண்பர் கஸ்தூரி! எங்கேயோ போய்ட்டீங்க.....!! செம! ரொம்பவே ரசித்தது 1,3,5,9.... சரி...அப்ப அடிக்கடி மூட் அவுட் ஆகுங்க.... ஹஹஹ

  ReplyDelete
  Replies
  1. சாத்திக்கொண்ட பெரும் கதவுகளின் முன்னே நின்று
   அதிர்ச்சியை உள்வாங்கி செரித்து
   வலியில் எழுதியவை அவை ...
   எனக்கு அம்மாதிரித் தருணங்களில் மட்டுமே ஒரு மீள்தளுக்காக எழுத வருகிறது.
   அந்த தருணங்கள் ஒருவேளை மீண்டும் வந்தால் வரலாம் மேலும் கவிதைகள்

   Delete
 4. உங்களுக்கு மூடு அவுட்டானால் இப்படி புரட்சிகரமான கவிதைகள் உங்களிடம் இருந்து வெளிவருகின்றன.. அப்படியானால் உங்களை மிகவும் கோபபடுத்தி சீண்டிவிட்டால் தமிழகத்தில் ஒரு புரட்சியே வெடிக்கும் போல இருக்குதே

  ReplyDelete
  Replies
  1. மாப்பு நமது கோபங்கள் எழுத்தில் மட்டுமே...
   அதுவும் சஞ்சய்தத்துக்காவே, யாகூப் மேமனுக்காவோ எழுதுவதே இல்லை ...
   மதுக்கடை குறித்தோ சசி அய்யா குறித்தோ எழுதுவதில்லை
   இப்படி பொறுப்பே இல்லாமல் இருக்கு என் எழுத்து
   எப்படி புரட்சி வரும்

   சஞ்சய் தத் (சுனில் மற்றும் நர்கீஸ் மகன்) செய்தது எதுவுமே தவறில்லை தானே நாம் அதைவிட அதிகம் செய்த ஒருவரை பிரதமராக்கிய பொழுது...
   (அதற்கு முன்பே என் நிலைப்பாடு இதுதான்)

   Delete
 5. பதிவுலகின் 'புரட்சி தலைவர். என்ற பெயரை உங்களுக்கு சூட்டுகிறேன்

  ReplyDelete
  Replies
  1. செமையா ராகிங் பண்றீங்க

   Delete
 6. அழகா வருது கஸ்தூரி தோழர். தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் போன்ற மலர்களோடு இருப்பதால் சற்று மணக்கிறது இந்த நார்

   Delete
 7. ஆறாவது தைத்தது. 12 வது புன்னகைக்க வைத்தது. அருமை.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி
   கவிதைகள் என்று தலைப்பு கொடுத்தால்தான் உங்களைப் போன்றவர்கள் வருகிறார்கள்.
   சரி ஒரு தொகுப்பை ரெடி பண்ணப் பார்கிறேன்

   Delete
 8. கவிதைகளில் முயற்சி தெரியவில்லை தோழரே முதுர்ச்சி தெரிகிறதே....
  அருவியாகி மழையாகியது
  தமிழ் மணம் ஐந்தருவி

  ReplyDelete
  Replies
  1. இன்னும் பயணிக்க வேண்டும் தோழர்
   மகிழ்வு
   நாம் நேரில் பேசியது இன்னும் நினைவில் இருக்கு

   Delete
 9. வணக்கம் சகோதரரே!

  நீங்களா?.. இது உங்கள் வலையா?...

  அட..! அட..! திணறடித்துப் போனது உங்கள் கவிவரிகள் என்னை!
  உள்ளத்தின் உள்ளிருக்கும் ஆதங்கம் எழுத்தெனச் சீறிப் பாய்ந்து
  கவி வடிவம் பெற்றுவிட்டன!

  சொல்லுகிற விடங்கள் சுருக்கென முள்ளாய்
  இதயத்தில் உறுத்திக் குத்துகிறது!
  உணர்வு மிகுந்த கவிதைகள்!

  மிக அருமை!
  தொடருங்கள் சகோ!..
  வாழ்த்துக்கள்!

  த ம +

  ReplyDelete
  Replies
  1. ஆம் சகோ எழுதத்தான் வேண்டும்.
   இல்லை என்றால் வலைப்பூ காற்றாடி விடும் எனத் தோன்றுகிறது

   Delete
 10. சிறப்பாக இருக்கின்றன! தொடருங்கள் தோழரே!

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் தளிர் அய்யா
   உங்கள் குறும் கவிதைகளை விட என்று சொல்ல மாட்டேன் ...
   வருகைக்கு நன்றி

   Delete
 11. மிக அருமை ...என்னது ?? கிறுக்கலா .இல்லை அனைத்தும் மிக அருமை அதுவும் முதல் கவிதையும் ,மவுன அஞ்சலியும் மனதை வலிக்க வைத்தன

  ReplyDelete
  Replies
  1. வருக சகோ
   நலம்தானே
   சத்தியமா கிறுக்கல்தான் ...
   நேக்கு நன்னா தெரியும் ...
   உங்கள் ஊக்குவிப்பிற்கு நன்றிகள்

   Delete
 12. மூட் அவுட் ஆனபிறகும்
  இப்படி எழுத முடிகிறதென்றால்.....
  நீங்கள் பெரிய கவிஞர்தான்
  வாழ்த்துக்கள்
  தம +1

  ReplyDelete
  Replies
  1. பெரிய மனசுக்கு நன்றி அய்யா
   தொடர்கிறேன்
   வாக்கிற்கும் நன்றி

   Delete
 13. நீங்கள் கவிஞராகி விட்டீர்கள் ,புரியாத வார்த்தைகளில் புகுந்து விளையாடுகிறீர்களே :)

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா
   புரியாத வார்த்தைகளைப் போட்டால் கவிஞர்?
   பின்னூட்டத்தில் கூட நகைச்சுவையா ?
   நன்றிகள் தோழர்

   Delete
 14. முரளி அண்ணா சொன்னதை தான் நானும் நினைக்கிறேன். பாஸ்! 2, 4, 12 கமல் ரேஞ்சுக்கு போய்டீங்க(புரியல பாஸ்) மத்ததெல்லாம் """ இம்புட்டு திறமையை இம்புட்டு நாளா எங்க வைச்சுருந்தீங்க ??? நானும் தான் பல தடவை உங்கள mood out பண்ணிருக்கேனே:))))

  REALLY, SIMPLY SUPERB!! CONGRATS!

  ReplyDelete
  Replies
  1. யார் ரேஞ்சுக்கு போனாலும் தங்கள் ரேஞ்சுக்கு வரமுடியாது என்பதும் நேக்கு தெரியும்

   Delete
 15. அன்புள்ள அய்யா,

  புதுக்கவிதையில்...
  புதுக்கருத்துகள்...
  கவிதையில் எளிமை...
  கருத்தினில் புதுமை...
  அவள்
  விழியோரம்
  வழிந்த
  துளிக்கண்ணீரிலும்.

  நன்றி.
  த.ம. 9

  ReplyDelete
  Replies
  1. நன்றி அய்யா மிக்க நன்றி
   தங்களின் வேலையைப் பாக்கி வைத்துவிட்டேன் மன்னிக்கவும்
   விரைவில் செய்கிறேன்

   Delete
 16. வணக்கம்
  சொல்லிச்சென்ற விதம் வெகு சிறப்பு... நன்றாக உள்ளது இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
  த.ம 1
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வருக இணைய தளபதியே
   வருகைக்கும் வாக்கிற்கும் நன்றி

   Delete
 17. கவிஞரே வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. உண்மையில் நான் செயிலுக்கு போறேன் செயிலுக்கு போறேன் என்கிற வடிவேலுவின் குரலில்
   நான் கவிதை எழுதீட்டேன் நல்லா பாத்துக்கோ நல்லா பாத்துக்கோ
   நான் கவிதை எழுதீட்டேன் என்றுதான் தலைப்பிட நினைத்திருந்தேன் ...

   Delete
 18. என்ன நினைத்து எழுதினீர்களோ உங்கள் 11-க்கு கிறுக்கலாய் என் வலைப்பூவில் ஒன்று எழுதியிருக்கிறேன்... அனைத்தும் அருமை அய்யா...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி தோழர்

   Delete
 19. அருமை அருமை

  ReplyDelete
  Replies
  1. தருமியைப் பார்த்து சிவபெருமான் சொன்ன மாறி கேட்குது... காதில்

   Delete
 20. தேசியக் கொடி, மணல் லாரிகள் பற்றிய கவிதைகள் எளிதில் புரிந்து கொள்ளும்படி இருக்கின்றன. மரபுக் கவிதை என்றால் ஏதேனும் ஒரு இலக்கணம் சொல்லி விடலாம். நீங்கள் எழுதி இருப்பதோ புதுக் கவிதைகள்! வார்த்தைகளை இன்னும் வெட்டி, ஒட்டி, நறுக்கி எழுத முயற்சிக்கவும். வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வருக மூத்த பதிவரே
   நன்றிகள்

   Delete
 21. அட அட அட டா என்ன வழிகிழி மாறி வந்து விட்டேனா? இல்லை இல்லை இருங்கள். திரும்ப செக் பண்ணுகிறேன். இல்ல மதுவா மைதிலியா என்ற டவுட் தாங்க டவுட் இன்னா கிளியர் பண்ணனும் தானே. என்ன நான் சொல்கிறது.
  எல்லாம் சேர்க்கை தானே என் அம்முவோட ராசி தான். ஹா ஹா ....
  சா... சா..... சும்மா சொல்லக் கூடாது சகோ கொன்னிட்டீங்க போங்க. இனி உங்களை அடிக்கடி சீண்டனும் போல இருக்கே. எதுக்கா உங்க திறமை வெளிப்படத் தான். செம செம அசத்துங்க சகோ ! வாழ்த்துக்கள் ...!

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் தோழர்

   Delete
 22. பேணப்படவேண்டிய
  பதிவேடுகள்
  திருத்தப்பட வேண்டிய
  கட்டுரைகள்
  நடத்தப்படாத
  பாடங்கள்
  இவற்றில்
  எவையேனும்
  ஒன்றிற்குள்
  காத்திருக்கலாம்
  நாளைய கலாம்கள்//அருமையான முத்து ரசித்தேன்.தொடர்ந்து கவிதை எழுதுங்க மது.

  ReplyDelete
 23. மூடு அவுட்டுக்கே இப்படின்னா? ........... கவிதைகள் அருமை!

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் தோழர்

   Delete
 24. மணல் லாரிகள் பற்றிய கவிதை - மனதைத் தொட்டது.

  மற்றவையும் நன்று.

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் தோழர்

   Delete

Post a Comment

வருக வருக