கல்வியைக் குறித்து ஒரு கருத்து உண்டு. படித்த விசயங்கள் எல்லாம் மறந்ததற்குக் பிறகும் எது நினைவில் இருந்து அழியாமல் நிற்கிறதோ அதுவே கல்வி!
திரைபடங்களுக்கும் இது பொருந்தும். இந்தப் படத்தைப் பார்த்து சில வருடங்கள் ஆனாலும் பல காட்சிகளின் தீவிரம் மனதில் அப்படியே இருக்கு.
யூரி ஒரு ஆயுத வியாபாரி. அந்த ஆப்ரிக்க புரட்சிப் படைக்கு கள்ளவழியில் ஆயுதம் தருவதற்காக அவர்களின் தலைவனைச் சந்திக்க வந்திருக்கிறான். செமையான ஆடம்பரத்தில் விரிந்திருகிறது அரண்மனை. சிம்மாசனத்தில் சர்வாதிகாரி. பின்னே நிற்கிறாள் ஆசைநாயகி. பாதுகாப்புக்கு நிற்கும் போராளி ரசிகனாகிறான். தலைவன் ஆள் என்று தெரிந்தும் ரசிக்கிறான்.
மெல்ல நெருங்கும் யூரி தனது ஆகச் சிறந்த கைத்துப்பாக்கி ஒன்றை எடுத்துக் கொடுக்கிறான். அதன் பிரதாபங்களை அடுக்குகிறான். அப்படியா என்று கேட்டபடியே லோட் பண்ணி ரசிக கண்மணியை போட்டுத்தள்ளுகிறான் சர்வாதிகாரி.
அரண்டுபோய் கத்துகிறான் யூரி. நான் எப்படி பயன்படுத்திய துப்பாக்கியை விற்க முடியும் ?
இந்த காட்சி ஒன்று போதும் படம் பேசும் விசயங்களையும், யூரி பாத்திரத்தின் தன்மையையும் சொல்ல!
மறக்கமுடியாத இன்னொரு காட்சியில் ஒரு பெரும் விமானம் நிறைய ஆயுதங்களோடு பறக்கும் யூரியை நெருங்குகிறது இன்டர்போல். தரையிறங்க மறுக்கும் யூரியின் விமானத்தை சுட ஆரம்பிக்கவே பதறுகிறார்கள் பைலட்டுகள்.
வெகு அமைதியாக சொல்கிறான் யூரி. இங்கேயே தரையிரக்கு. அவன் திரும்ப விமானத்தளம் போயிட்டு வர பதினோரு மணிநேரமாவது ஆகும். அதற்குள் நாம் தப்பித் விடலாம்.
அப்படியே தரையிறங்குகிறது விமானம். ஆப்பரிக்க மக்களை நன்கு புரிந்து வைத்திருக்கும் யூரி அவர்களுக்கு இலவசமாகவே துப்பாக்கிகளை அளிக்கிறான்.
இன்டர்போல் அங்கு வரும்பொழுது விமானம் மட்டும்தான் இருக்கிறது. கடுப்பாகும் ஏஜன்ட் அங்கேயே ஒரு டயரில் யூரியை விலங்கால் பிணைத்துவிட்டு சென்றுவிடுகிறான்.
மெல்ல கவியும் இருளை நிறைகிறது ஏ.ஆர். ரகுமானின் இசை! ஆம் பாம்பே படத்தில் அவர் பயன்படுத்திய பின்னணி இசை. யூரியின் கண்முன்னால் அந்த மாபெரும் விமானம் சல்லி சல்லிசல்லியாய் பிரித்து எடுத்துச் செல்லப் படுகிறது.
காலையில் மீண்டும் வரும் இன்டர்போல் யூரியை விடுவித்து செல்கிறது!
ஆயுதங்கள் பெருவாரியாக உற்பத்தி செய்யப்படும் பொழுது அவற்றை எப்படியாவது விற்பனை செய்தால்தான் அந்த நிறுவனங்கள் பிழைத்திருக்க முடியும். இதை ஒரு ஏழை இளைஞன் பயன்படுத்திக்கொண்டு பெருவெடிப்பாக வளர்வதே கதை.
படத்தின் டைட்டில் காட்சியே ஒரு குறும்படம்தான். ரஷ்யாவில் தயாராகும் ஒரு துப்பாக்கி குண்டுடன் துவங்கும் எழுத்துக்கள் அது பயணித்து ஆப்ரிக்காவில் ஒரு சிறு குழந்தைப் போராளியின் தலையில் இறங்குவதை காட்டி வெகு அழுத்தமான ஆரம்பத்தை நமக்குத் தருகிறது.
யூரி பிழைப்புக்காக அமெரிக்க வந்த ஓர் ரஷ்ய பிரஜை. கொஞ்சம் கொஞ்சமாக ஆயுதவியாபாரியாக மாறுகிறான். பின்னர் தான் விரும்பிய மாடலை ஒரு ஷூட்டிங் என்று சொல்லி தனித்தீவின் லாட்ஜ் ஒன்றுக்கு வரவழைத்து காதலில் வீழ்த்தி திருமணம் செய்கிறான். (இது தற்போதைய தமிழ்ப் படம் ஒன்றில் வந்தது, நம்ம ஆட்கள் நல்ல ரசிகர்கள்).
நிறைவான வாழ்க்கை. ஆனால் இன்டர்போல் ஏஜன்ட் யூரியின் மனைவியிடம் யூரியின் நிழல் வாழ்வைச் சொல்லிவிடுகிறான். செமையான திருப்பி அடித்தளுடன் பிரிகிறாள் அவள். பிரிதலை அதைவிட வலிமையாக அவள் சொல்லிவிட முடியாது. இந்த இடத்தில் நமது அரசியல்வாதிகளின் மனைவிமார்களையும் நினைத்துப் பார்க்க வேண்டியிருந்தது!
மொக்கை டாக்குமென்டரியாக வந்திருக்கவேண்டிய படம் உணர்வு, காதல், இலட்சியம், தந்திரம் என பல மனித உணர்வுகளை வெற்றிகரமாகத் தந்து தனியிடம் பிடித்திருகிறது.
உறுதியாகச் சொல்வேன் இது ஒரு ஆகச் சிறந்த திரைப்படம்.
எனக்குப் பிடித்த ஹாலிவுட் ஹீரோ நிக்லஸ் கேஜின் மிகச்சிறந்த கலைவெளிப்பாடு இதில் இருக்கிறது. மனுஷன் வாழ்ந்திருக்கான்பா.
தன உடல் மேலே ஒரு பெண் இருக்கும் பொழுதும் சொந்த தம்பி உயிரிழக்கும் பொழுதும் அசையாமல் பணத்திலேயே குறியாக இருக்கும் இவர் பாத்திரம் நிச்சயம் மறக்கமுடியாத ஒன்று
கண்டிப்பாக பாருங்கள்.
படம் சொல்லும் செய்திகள் தனிரகம்.
உலகின் மாபெரும் ஆயுத வியாபாரிகள்(நாடுகள்) சர்வதேச பாதுகாப்பு நிறுவனத்தின் நிரந்தர உறுப்பினர்கள் என்று முடிகிறது டைட்டில் கார்ட்!
யாருப்பா அந்த ஆண்ட்ரு நிக்கல், இயக்குனர் முத்திரை என்றால் இப்படி இருக்க வேண்டுமப்பா.
மலர்தரு 9/1௦

நல்லதொரு விமர்சனம்
ReplyDeleteதமிழ் மணம் 1
நன்றி நண்பரே
Deleteஅவசியம் பார்க்கிறேன்
ReplyDeleteநன்றி நண்பரே
நன்றி அய்யா
Deleteஅன்புள்ள அய்யா,
ReplyDelete‘லார்ட் ஆப் வார்’ -தங்களின் விமர்சனம் படத்தைப் பார்க்கத் தூண்டுகிறது.
நன்றி.
த.ம. 3
நீங்களே சொல்லிட்டீங்க பார்த்துட வேண்டியதுதான்....விமர்சனத்துக்கு மிக்க நன்றி!..
ReplyDeleteபட விமர்சனம் பார்க்கும் ஆசையைத் தூண்டிவிட்டது. பார்ப்பேன். நன்றி.
ReplyDeleteமது,
ReplyDeleteபடம் பார்த்திருக்கிறேன். அதிலும் புல்லெட் ஒன்று உருவாவதிலிருந்து அது பல கைகள் மாறி பயணித்து இறுதியில் ஒரு சிறுவனின் ? தலைக்குள் சென்று தன் இலக்கை முடித்துக்கொள்ளும் அந்த திகைப்பான டைட்டில் காட்சி மிக அருமை. இன்னும் நம் படங்களில் இதை சுடாமல் இருக்கிறார்களே என்ற ஆச்சர்யம் எனக்கு உண்டு.
பார்க்கத் தூண்டுகிறது....சிறப்பான விமர்சனம்
ReplyDeleteபடத்தை ரொம்பவும் அனுபவித்து பார்த்து இருக்கிறீர்கள் போலிருக்கிறது. உங்கள் விமர்சனம் இந்த படத்தை அவசியம் பார்க்க வேண்டும் என்ற உணர்வை உண்டு பண்ணுகிறது. நான் தியேட்டர் பக்கம் போய் வருஷக் கணக்காகிறது. சிடி கிடைத்தால் பார்க்க வேண்டும்.
ReplyDelete/// மொக்கை டாக்குமென்டரியாக வந்திருக்கவேண்டிய படம் உணர்வு, காதல், இலட்சியம், தந்திரம் என பல மனித உணர்வுகளை வெற்றிகரமாகத் தந்து தனியிடம் பிடித்திருகிறது.///
ReplyDeleteநீங்க நிறைய படம் பார்க்க வேண்டும்
அருமையான விமர்சனம்...
ReplyDelete