மாத்யு ப்ளோரிஸ் என்கிற வாசிக்கும் இயந்திரம்

நண்பர் ரபீக் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபொழுது மேதகு  கலாம் அவர்கள் செய்த சாதனைகளில் மாபெரும் சாதனை என பொதுவெளியில் வாசிப்பை குறித்த ஒரு பெரும் அறிமுகத்தை தந்து அனைவரையும் வாசிப்பை நோக்கி திருப்பியதே என்றேன் .

உண்மையில் இந்தியாவில் ராக்கெட் விடுவதைவிட பொதுத்திரளை வாசிப்பை நோக்கி திருப்புவது  எத்துனை சவாலானது என்பது வாசிப்பவர்களுக்கும் சமூகத்தை உற்றுநோக்குபவர்களுக்கும் புரியும்.


மதிப்பெண்களை மட்டுமே குறிவைத்து ஓடும் மாணவர்களையும் நூல்களை ஏனைய நூல்களை படிக்கவைத்த பெருமை கலாம் அவர்களுக்கே உரியது.

கலாமிற்கு இதற்காகவே நான் நெகிழ்தலோடு கூடிய நன்றியை பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன்.

இது குறித்து தோழர் ரபீக் தனது பதிவில் குறிப்பிட்டு என்மீது நான் கூசுமளவிற்கு வெளிச்சத்தை பாய்ச்சியுள்ளார்.

பதிவில் நான் மட்டுமே இல்லை என்பதால்
அவரின் பதிவு உங்கள் பார்வைக்கு.


வறுமையிலும் வாசிப்போம் !
===========================
படத்தில் இருப்பவர்களைப் பார்த்தால் இவர்களுக்குள் என்ன தொடர்பு என்ற கேள்வி எழுகிறதா? முழுவதும் படித்து பாருங்கள் அசந்து போவீர்கள். ( Bit length but worth smile emoticon )

இரண்டு நாள்களுக்கு முன் நண்பர் கஸ்தூரி ரங்கனுடன் பேசிக்கொண்டிருக்கும் போது, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் எவ்வளவோ செய்திருந்தாலும் தன்னைக் கவர்ந்தது, "மாணவர்களைப் புத்தகங்கள் படிக்கத் தூண்டியதே" என்று கூறினார்.

ஒரு ஆசிரியனாக, "இன்றைய மாணவர்களைப் பாடப்புத்தகங்களைத் தாண்டி இதர நல்ல புத்தகங்களைப் படிக்க நாங்கள் படும்பாடு எங்களுக்கு மட்டுமே தெரியும். அதை மிகச் சுலபமாக்கி, மானவர்களைப் புத்தகங்களை வாசிக்க வைத்ததின் பெருமை டாக்டர் கலாமையே சாரும்" என்றும் புகழ்ந்தார். தொடர்ந்து நண்பர் அனேகமான மாணவர்களைப் படிக்கச்சொல்லி அதற்கான சூழலையும் அமைத்துக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

சரி, படத்தில் இருக்கும் சிறுவனும் மற்றொருவரும்?

ஆங் ...... இந்தச் சிறுவன் அமெரிக்காவின் Salt lake நகரின் புறநகர்ப்பகுதியில் வசித்து வரும் மாத்யூ ஃப்ளோரிஸ் எனும் 12 வயதுச் சிறுவன். மிகவும் ஏழைக்குடும்பத்தில் பிறந்த இவனுக்கு புத்தகம் வாசிப்பதில் அத்தனை இன்பம். ஆனால் பாவம் படிப்பதற்கு புத்ததகம் வாங்கும் வசதியில்லை. அதனால் கையில் கிடைக்கும் துண்டு பேப்பர்களையும், சுவரொட்டி விளம்பரங்களையும் படித்து திருப்திக்கொள்வான்.

ஒரு நாள் தனது வீட்டிற்குப் பக்கத்தில் தபால்களை கொடுக்கவந்த தபால்காரரிடம், " உங்களிடம் பட்டுவாடா செய்யப்படாத பழைய தபால்கள் இருந்தால் தரமுடியுமா?" என்று கேட்டான். ஆச்சிரியம் அடைந்த தபால்காரர் ரோன் லிஞ்ச், எதற்கு உனக்கு என்று வியப்புடன் கேட்டார். "எனக்கு வாசிப்பதில் மிகுந்த ஆர்வம். புத்தகங்கள் ஏதுமில்லை " என்றான் சிறுவன். அருகில் இருக்கும் நூலகத்திற்குச் சென்று படிக்கலாமே நிறைய புத்தகங்கள் இருக்குமே என்று தபால்காரர் சொல்ல,

அமெரிக்காவில் வாழும் அந்தச் சிறுவன் என்ன சொல்லியிருப்பான் என்று நினைக்கிறீர்கள்?

வறுமையினால் வாடும் என்னால் செலவு செய்யமுடியாது.
ஆம், அந்தச் சிறுவனால் காசு கொடுத்து புத்தகங்கள் வாங்கவோ அல்லது பேருந்தில் நூலகம் சென்று புத்தகங்கள் படிக்கவோ அவனிடம் வசதியில்லை.

இதை நேரில் கண்டு உணர்ந்த தபால்காரர் உடனடியாக அந்தச் சிறுவனுக்கு உதவும் விதமாக தனது முகநூல் பக்கத்தில் அந்தச் சிறுவனைப் பற்றிய விவரங்களை பதிவிட்டு தமது நண்பர்களிடம் அவர்கள் படித்து முடித்த புத்தகங்களைக் கொடுத்து உதவுமாறு பதிவு ஒன்றை எழுதினார்..

ஒரு 50-60 புத்தகங்கள் கிடைக்கும் என எண்ணி இருந்த வேளையில், குவிந்ததோ உலகின் பல பகுதிகளில் இருந்து புத்தகங்கள் நூற்றுக்கணக்கில் இன்று வரைக்கும் குவிகின்றன. இந்தியாவில் இருந்தும் இங்கிலாந்து , ஆஸ்திரேலியா போன்ற பல்வேறு நாடுகளில் இருந்து புத்தகங்கள் குவிகின்றன.

அத்தனையும் எனக்கா என்று பிரமித்த Mathew, அனைத்து புத்தகங்களையும் கடைசி அட்டைவரையிலும் விடாமல் படிக்கபோவதாக ஆரம்பித்துவிட்டான்.

(ஜூலை 23ம் தேதி எழுதி ஒருவாரத்தில் 200 புத்தங்கங்கள் சேர்ந்துவிட்டதாம்)

-RAFEEQ — with Kasthuri Rengan.


----
அதீத வெளிச்சத்திற்கும் தோழமைக்கும் நன்றிகள் தோழர் ரபீக்.
என்ன இன்னும் அதிக தவணைகளில் அடியேன் புத்தகங்களை குழந்தைகளுக்கு வழங்கியாக வேண்டும்.

அன்பன்
\மது

Comments

 1. நல்ல முயற்சி, பயனுள்ள செய்தி, பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் அய்யா

   Delete

 2. வாசித்தல் எவ்வளவு இன்பமானது என்பது, அதனை துய்த்தவருக்கு மட்டுமே தெரியும் ஒரு அலாதியான அனுபவம். அந்த வாசிப்பு பழக்கத்தினை மாணவர்களிடையே விதைக்கும் ஆசிரியர் கஸ்தூரி ரங்கணுக்கு மனமார்ந்த நன்றி! இதுவும் ஒரு புண்ணியம், சமூக சேவைதான். மாத்யூ ப்ளோரிஸ் போன்று இன்னும் எத்தனை ஏக்க பிள்ளைகள் இருக்கிறார்களோ?
  த.ம.

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் அய்யா

   Delete
 3. எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
  திண்ணியர் ஆகப் பெறின்.
  காலமுக்கு பிடித்த மற்றும் ஒரு குறள்:)

  **என்ன இன்னும் அதிக தவணைகளில் அடியேன் புத்தகங்களை குழந்தைகளுக்கு வழங்கியாக வேண்டும்.**

  நடத்துங்க சகா, you can do it:)

  ReplyDelete
 4. இன்றைய மாணவர்களைப் பாடப்புத்தகங்களைத் தாண்டி இதர நல்ல புத்தகங்களைப் படிக்க நாங்கள் படும்பாடு எங்களுக்கு மட்டுமே தெரியும். அதை மிகச் சுலபமாக்கி, மானவர்களைப் புத்தகங்களை வாசிக்க வைத்ததின் பெருமை டாக்டர் கலாமையே சாரும்"

  உண்மைதான் நண்பரே
  வாழ்த்துக்கள்
  தம +1

  ReplyDelete
  Replies
  1. கலாம் அய்யாவின் உடல் அருகே இருந்து நீங்கள் பகிர்ந்த புகைப்படம் வந்தது பார்த்தேன்
   உங்களை நினைத்து பெருமையாக இருந்தது..
   மரியாதை தெரிந்த மனிதர்.

   Delete
 5. சிறப்பான முயற்சி... வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் அய்யா

   Delete
 6. குழந்தைகளிடம் வாசிக்கும் பழக்கம் தூண்டும் தங்களின் பணி போற்றத் தக்கது. மாத்யூ ப்ளோரிஸின் வாசிக்கும் ஆர்வம் வியக்க வைத்தது! நன்றி!

  ReplyDelete
 7. தேடல் மூலம் வாசிப்பை சுவாசிப்பாய் ஆக்கிக் கொண்ட மாத்யு ப்ளோரிஸ்க்கு வாழ்த்துகள்!

  ReplyDelete
 8. அருமையான சிந்தனை! அளப்பரிய சேவை!

  நல்ல பதிவு + பகிர்வு சகோ!
  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. நல்ல பதிவு வாழ்த்துகள் தோழரே
  தமிழ் மணம் 6
  நேற்றைய எனது கருத்துரை எங்கே......

  ReplyDelete
 10. கலாமின் கனவை, குறிப்பாகக் கல்வித் துறையில் நனவாக்க வேண்டும் என்ற எண்ணத்தினைத் தாங்கள் செயல்படுத்தி வருவதைப் பார்க்கும் போதுமிகவும் பெருமையாக இருக்கின்றது நண்பரே! கல்வி என்பது வெறும் ஏட்டுப் படிப்பு மட்டுமல்ல. வாசித்தலும், சமூக விழிப்புணர்வும் அடங்கும்...அருமையான பணி...கலாமின் பாதங்களைப் பின் தொடர்வோம்...பாராட்டுகள் கஸ்தூரி...வாழ்த்துகள் தங்கள் பணி சிறக்க...அந்தக் குட்டிப்பையனுக்கு வாழ்த்துகள்!

  ReplyDelete
 11. குழந்தைகளிடமிருந்துதான் எதுவும் தொடங்க வேண்டும் என்னும் கலாமின் கனவு நிறைவேறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

  ReplyDelete

Post a Comment

வருக வருக