இன்றைய விழாக்குழு சந்திப்பில்

பதிவர் சந்திப்பு நடைபெறும் ஆரோக்கிய மாதா மக்கள் மன்றத்தில் இன்று கூடி விவாதிக்க வேண்டும் என்று கவிஞர் முத்துநிலவன் சொல்லவே காலை கிராமத்தில் இருக்கும் அம்மாவை பார்த்துவிட்டு மண்டபத்திற்கு வந்தேன். மிகச் சரியாக நிலவன் அண்ணாத்தே சொன்ன நேரத்திற்கு வந்துவிட்டார். முன்னரே கவிஞர் வைகறையும் கவிஞர் சோலைச்சியும் மண்டபத்தில் இருந்தார்கள்.



கற்க நிற்க பதிவர் திருமிகு. ஜெயலட்சுமி அவர்கள் தென்றல் கவிஞர் கீதா அவர்களுடன் வர பதிவர், கவிஞர் ரேவதியும் வந்தார்கள். மண்டபத்தை ஆராய்ந்து விட்டு மண்டப வாடகையை மண்டபப் பொறுப்பில் உள்ள அருட்தந்தையிடம் வழங்கினோம்.


மண்டபம் முப்பது வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலையில் இருந்து பலவிதத்திலும் மேம்பட்டிருந்தது. கவிதைகளை எங்கே ஒட்டலாம், புத்தக கண்காட்சி எங்கே நடத்தலாம் உணவு அறை எப்படி இருக்கிறது போன்ற விசயங்களை பார்வையிட்டது குழு.

பதிவர் கையேடு குறித்து தனியாக ஒரு படிவம் இருந்தால் இன்னும் வசதியாக இருக்கும் என்று சொன்னபொழுது வருகைப் பதிவு படிவமே போதும் என்று முடிவு செய்யப்பட்டது.  கையேட்டில் நண்பர்கள் அனைவரின் பெயரும் வலைப்பூவும் இருக்கவேண்டும் என்பதே எனது ஆசை. வருகை பதிவு படிவத்தில் கேட்கப்பட்ட விவரங்களைத் முழுமையாக நிரப்புவது அவசியம். நான் அட்லாண்டாவில் இருக்கேன் ஆஸ்திரேலியாவில் இருக்கேன் எதுக்கு படிவத்தை நிரப்ப வேண்டும் என்று இருந்துவிட வேண்டாம். அவசியம் படிவத்தை நிரப்பவும்.

நண்பர் ஸ்ரீ மலையப்பன் மற்றும் கார்த்திகேயன் யு.கே டெக் நிறுவனத்தில் கையேட்டிற்கான பேஜ் மேக்கர் பணிகளைத் துவக்கிவிட்டார்கள். ஒரு அணியே வேலை செய்துகொண்டிருக்கிறது.ஆனால் அவர்களுக்கு வேலை தரவேண்டிய நாமோ பதிவுப் படிவத்தை நிரப்பாமல் இருக்கிறோம். அணியை வேலை வாங்குவது இனி உங்கள் பொறுப்பு.

அருள் கூர்ந்து படிவத்தை நிரப்பவும்.
நிதி நிலை\

திட்டமிட்ட நிதியில் நான்கில் ஒரு பங்கு வந்துவிட்டது இன்னும் வந்துகொண்டும் உள்ளது. இருப்பினும் இன்னும் முக்கால்வாசி தூரத்தை தாவிக் கடக்க வேண்டும்.

செலவுக்கு பயப்படாத தலைமைதான் குழுவின் தலைமை எனிலும் பல்வேறு புரிதல்களை ஏற்படுத்தியிருக்கிறது.

எப்படி நடக்கின்றன ஆங்கிலப் பதிவர்(BNLF-Blog Now and Live Forever) சந்திப்புகள் என்று நாம் அறிகிற பொழுது தமிழ் பதிவர்கள் இன்னும் நிறைய தூரம் போக வேண்டியிருப்பதும் புரிகிறது.

ஆங்கிலப் பதிவர்களுக்கு கூடுதல் வசதியாக எழுதினால் பணம் தரும் ஆட்சென்ஸும் இருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.


அப்புறம் விருதுகள் குறித்த தில்லையகம் கீதா அவர்களின் நிலைப்பாட்டைச் சொன்னேன். குழு விவாதிக்க ஆரம்பித்திருக்கிறது. ஒரு மெகா போட்டியை அறிவித்திருக்கும் சூழலில் பழைய நடுவர்கள் குழுவினை விடுவித்து விழா ஏற்பாடுகளில் ஈடுபடுத்தவும் வசதியாக இருக்கும் என்றும் குரல்கள் எழுந்தன. விவாதங்கள் தொடர்கின்றன. 

தமிழ் வெர்ச்சுவல் அகாடமி பணிகளை ஒன்றிணைக்க இன்னும் கூடுதலாய் ஆட்கள் தேவை என்கிற நிலையில் விருதுகளுக்காக ஏற்கனவே பணியாற்றிக் கொண்டிருக்கும் பதிவர்களின் உழைப்பும் மெகா போட்டிக்கு தேவைப்படும் நிலையில் விருதுகள் தேவையா என்கிற கேள்வியும் முக்கியமானது. 

பார்ப்போம் 





நிலவன் அவர்களுடன் தமில்பதிவர் குருநாத சுந்தரம் 





Comments

  1. சுட்டுத் தள்ளியதை போட்டுத் தாக்கிட்டிங்களே மதூ...?
    அருமை.. இப்படித்தான் விழாச் செய்திகளைப் பகுதி பகுதியாகப போடணும் என்றால் மற்றவர்கள் ஏன் போடுவதில்லை..? மைதிலியின் தொகையைச் சூடாக எடுத்து நீட்டியதைத் தன்னடக்கம் காரணமாகப் போடவில்லையா? இல்ல..மதுவை விட மைதிலி அதிகம் கொடுக்கச் சொன்னதைச் சொல்லவேண்டாம் என்றா? (ரெண்டுபேர் காசும் ஒன்னு தானே மதூ? எனக்கு வேற்றுமை தெரியல)

    ReplyDelete
    Replies
    1. காரணமாகத்தான் ...
      அப்படியென்றால்
      நிதி குறித்து நீங்கள் சொன்ன விசயங்களும் வந்திருக்க வேண்டுமே அண்ணா...
      நன்றி வருகைக்கு

      Delete
  2. களப் பணியாளர்களுக்கு உளமாரந்த வாழ்த்துகள்.
    உழைப்பு உயர்வை பெற்றுத் தரும்.
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. பாரிய அதரவுக்கு நன்றிகள் தோழர்

      Delete
  3. பிரமாதம்! ஏற்பாடுகள் அருமை.

    ReplyDelete
    Replies
    1. இப்போத்தான் போய் பார்த்துவிட்டு வந்திருக்கிறோம் ...
      இன்னும் நிறய வேலைகளை பார்க்க வேண்டும்

      Delete
  4. சந்திப்பு சிறப்புற நடைபெறும் என்பதில் ஐயமில்லை.... அவ்வப்போது சந்தித்து விழா பற்றிய கலந்துரையாடல்களும் முடிவுகளும் எடுப்பதை தெரிந்து கொள்ளும் போது மனதில் மகிழ்ச்சி..... விழா ஏற்பாடு செய்து வரும் நண்பர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் நன்கு நடக்கும் தோழர் ...
      நீங்களும் வாங்க

      Delete
  5. கையேடு பதிவு : லைட்டா கொஞ்சம் சூடு பிடித்திருக்கிறது...

    ReplyDelete
    Replies
    1. ஆம் நான் பேஜ் மேக்கர் சிடியை தேடிக்கொண்டிருகிறேன்

      Delete
  6. நாள் நெருங்கிக் கொண்டிருக்கின்றது
    தங்களின் நிலைமை புரிகிறது நண்பரே
    நன்றி
    தம +1

    ReplyDelete
  7. இதையெல்லாம் பாக்கும்போது எனக்கு என்னென்னமோ நினைவுக்கு வருது... அசத்துங்க (மன்னிக்கவும்) அசத்துவோம் அச்சங்களை களைந்து...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஒன்றாக அசத்துவோம்

      Delete
  8. vizaa kuzuvinarin ovovuru muyarchiyum vetri adaiya manathaara vazthukkiren.

    puthukkottai vizaa urupinarkalin team work rompa pidichi irukku
    athunaalathaan ennavo enakkum intha varudam vizavil pangu pera vendum enkira ennam elunthirukkirathu.
    paarppom.


    pathivukku nandri sir.


    ReplyDelete
    Replies
    1. வருகிறீர்கள் தானே தோழர்

      Delete
  9. பாரிய முயற்சி!.. கூட வந்திருந்து உதவிட முடியலைன்னு வருத்தம்!
    எம்மாலியன்ற வழிகளில் இயங்குகிறோம் நாமும்!

    நேற்றைய என்னுடைய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துப் பதிவிலும்
    விழா செயற்பாடு, தேவைகள் என்பனவற்றை
    இணைப்புகளாகச் சேர்த்துப் பாடியிருக்கிறேன்!
    வேறு வழிகள் முயல்கிறேன்!
    யாவும் நல்லபடி நடந்தேறும்!!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் உதவியே பெரும் உந்துதல்
      உணமையச் சொல்லப்போனால் உங்களைப் போன்ற பதிவர்கள் தொடர்ந்து நிகழ்வு பற்றி எழுதி குழுவுக்கு பொறுப்புணர்வை ஏற்படுத்துகிறீர்கள் என்பதே உண்மை...
      நன்றிகள் சகோதரி

      Delete
  10. புதுக்கோட்டை பதிவர் சந்திப்புத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்களின் ஓயாத உழைப்புக்குத் தலைவணங்குகிறேன். விழா சிறப்பாக நடைபெற எவ்வளவு மெனக்கெடல்கள். அனைவருக்கும் அன்பான பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி
      பதிவர் கையேட்டுக்கு விவரம் அளித்துவிட்டீர்களா

      Delete
  11. வணக்கம்
    தங்களின் சமுக அக்கறை கண்டு மனம் நெகிழ்கிறது.. விழா சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள். த.ம 7
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் தோழர்

      Delete
  12. அட எங்க பாயின்டும் அங்கு விவாதத்திலா...மிக்க மகிழ்ச்சி!

    நீங்கள் அனைவரும் இவ்வளவு அழகாக திட்டமிட்டு ஏற்பாடுகளைச் செய்யும் போது விழா சிறக்காமல் போய்விடுமா என்ன!!!? சிறப்பித்துவிடுவோம்....

    ReplyDelete
  13. அன்புள்ள அய்யா,

    பதிவர் சந்திப்பு நடைபெறும் ஆரோக்கிய மாதா மக்கள் மன்றம் படத்தில் பார்க்கவே மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. ஆர்வமுடன் விழா சிறக்க அனைவரின் ஒருங்கிணைந்த உழைப்பு கண்டு வியந்து போகிறேன்.
    விழாக்குழு நன்கு திட்டமிட்டு செயலாற்றுவதை எண்ணி எண்ணி மகிழ்கிறேன்.

    பாராட்டும் - வாழ்த்தும்.

    நன்றி.
    த.ம.9.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வருக

      Delete
  14. வேலை பார்த்துக்கொண்டே இதையும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்

    ReplyDelete

Post a Comment

வருக வருக