வேகம் பெற்றது பதிவர் திருவிழா

கடந்த ஆண்டு மதுரை பதிவர் சந்திப்பில் அடுத்த ஆண்டு நீங்கள் சந்திப்பை நடத்துங்களேன் என்று தொடரோட்டக் குச்சியை புதுகை நோக்கி தள்ளியது இயல்பானதே. 



யாருக்கும் தெரியாத ஒரு விசயமும் இருந்தது. அது கவிஞர் முத்துநிலவனின் பல்லாண்டுகால கால அனுபவம். பல்வேறு நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதிலும் அவற்றைத் திறம்பட நடத்துவதிலும் தனிமுத்திரை பதித்தவர் அவர். 

குழுவை ஒன்றிணைப்பதிலும் செயல் நோக்கி செலுத்துவதிலும் அனுபவம் மிளிரும் ஒரு தலைவர் அமையப்பெற்றது புதுகைக்கு கிடைத்த போனஸ். 

உலகின் பல பகுதிகளில் இருந்தும் பதிவர்கள் தொடர்ந்து பதிவிட பதிவிட  என் மனதில் ஒரு திக் திக் திக். 

சரியாக செய்யவேண்டுமே என்பதுதான் அது. 

இதுவரை வரவு நிகழ்வின் பட்ஜெட்டில் கால்வாசியைத்தான் அடைந்திருக்கிறது நிதிக் குழு. உள்ளூர் புரவலர்களை இன்னும் அணுகவில்லை. 

இது ஒரு பக்கம் இருக்க அன்புச் சகோதரி இளமதி ஒரு பெரும் தொகை (இதுவரை வந்த வரவுகளிலேயே பெரிய வரவு!) ஒன்றை அனுப்பி குழுவினரை மூச்சடைக்க செய்துவிட்டார். 

இன்று கூடிய செயற்குழுவில் ஹாட் டாபிக்கே இவர்தான். மகிழ்வு இருந்தாலும் அவரிடம் இருந்து இவ்வளவு பெரிய ஆதரவை எதிர்பார்க்கவே இல்லை. அதை பெறுவது முறையா என்ற என் கேள்வியும் சுற்றிவந்தது அவையை. 

சகோதரி இளமதி கடந்து  நடந்துகொண்டிருக்கும் பாதை ஒன்றும் ராஜபாட்டை அல்ல. வாழ்வின் ஒவ்வொரு திருப்பத்திலும் அவர் எதிர்கொண்ட ஈவு இரக்கமற்ற பிரச்சனைகளைத் தாண்டி இப்படி ஒரு ஆதரவை அவரால் எப்படி செய்ய முடிந்தது என்று தெரியவில்லை. 

அவர் இருக்கும் திசை நோக்கி மானசீகமாக வணங்குவது ஒன்றே நான் செய்யும் சிறிய மரியாதையாக இருக்கும். 

வணக்கங்கள் சகோதரி. 
பிரார்த்தனைகளும்

இன்னொரு பதிவர் ஒன்று இரண்டு விளையாட்டை துவங்கியிருக்கிறார். அவர் யார் என்று சுவாரஸ்யமாக வினாக்கள் எழுப்பப்பட்டன. இன்னும் தெரியவில்லை!

அவர் அனுப்பிய தொகை 1234!

சக பதிவர்களின் மகிழ்வு கலந்த பரப்புரைகள் விழாக்குழுவினருக்கு ஒரு ஆனந்தத்தையும் கவனம் கலந்த ஒரு மனநிலையையும் ஏற்படுத்தியிருகிறது. 

கால்வாசி பட்ஜெட் ரெடி. 
மீதி !
உழைக்க வேண்டும் 
உள்ளூர் உலாவைத் துவக்க வேண்டும் ...

சந்திப்போம் 

அன்பன்
மது 

நிதியளிக்க

First Name        : MUTHU BASKARAN
Last Name         : N
Display Name      : MUTHU BASKARAN N
Bank              : STATE BANK OF INDIA
Branch            : PUDUKOTTAI TOWN BRANCH
Account Number    : 35154810782
Branch Code       : 16320
IFSC Code         : SBIN0016320
CIF No.           : 80731458645

நிதி அளிப்பவர்கள் இந்த மின்னஞ்சலிலும் தெரிவித்தால் அறிவிக்க வசதியாக  இருக்கும்.
bloggersmeet2015@gmail.com 

Comments

  1. களமிறங்கிய சகோவிற்கு வாழ்த்துகள்..இளமதி செய்துள்ளது மிகப்பெரிய உதவி...என்ன சொல்வதுன்னே தெரியல....சகோ..

    ReplyDelete
  2. //அது கவிஞர் முத்துநிலவனின் பல்லாண்டுகால கால அனுபவம். பல்வேறு நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதிலும் அவற்றைத் திறம்பட நடத்துவதிலும் தனிமுத்திரை பதித்தவர் அவர்.// முத்துநிலவன் அண்ணாவின் செயலில் தெரியும் உண்மை! அவர்களின் முழு மனதும் இதில்தானே இருக்கிறது..புதுகைக்கு மட்டும் அல்ல, எனக்கும் அண்ணா பெரிய போனஸ் :-)
    அவருடைய ஆர்வமே நமக்கு ஆர்வத்தைத் தூண்டிவிடுகிறது.
    புதுகை நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!
    தோழி இளமதிக்கு அன்பு கலந்த நன்றிகளும் வணக்கங்களும்.

    ReplyDelete
  3. சகோதரி இளமதி அவர்களின் அன்பில் விழாக்குழுவே நெகிழ்ந்து போனது உண்மை. அவரது கவித்திறமை உலகறிந்ததே. அவரது யாப்புக் குருநாதர் அய்யா பாரதிதாசன் அவர்களின் பெயரும் இந்த நன்கொடையாளர் பெயரில் இளமதி அவர்களி்ன் தொகைக்கு நிகராகக் கொடையளித்து உள்ளதைத் தெரிவித்தது! “ஆசிரியர் - மாணவர்“ பண்பின்தொகையோ? இந்தத் தொகையைப் பெற்றுத்தந்த வலைச்சித்தர் அய்யா திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  4. இருப்போர் நிதியளித்தால் புதுக்கோட்டைவிழா இன்னும் வரலாறு படைக்கும் சகோதரி.

    ReplyDelete
  5. எதிர்பாராத அந்த அன்பிற்கு முன்னால்... நன்கொடையும் தாண்டி... என்னவென்று சொல்வது...?

    அந்த 1234 இன்று update செய்து விடும் போது தெரிந்து கொள்ளலாம்...

    ReplyDelete
  6. அன்புள்ள அய்யா,

    வேகம் பெற்றது பதிவர் திருவிழா விவரங்கள் பற்றி விரிவாக எழுதி இருந்ததைக் கண்டு மிக்க மகிழ்ச்சி. சகோதரி இளமதியாரின் உள்ளத்தை உவகை பொங்க சொல்லி பெருமிதம் கொண்டது ... நெகிழ்ந்தது... நெஞ்சைத் தொட்டது.

    “சகோதரி இளமதி கடந்து நடந்துகொண்டிருக்கும் பாதை ஒன்றும் ராஜபாட்டை அல்ல. வாழ்வின் ஒவ்வொரு திருப்பத்திலும் அவர் எதிர்கொண்ட ஈவு இரக்கமற்ற பிரச்சனைகளைத் தாண்டி இப்படி ஒரு ஆதரவை அவரால் எப்படி செய்ய முடிந்தது என்று தெரியவில்லை.

    அவர் இருக்கும் திசை நோக்கி மானசீகமாக வணங்குவது ஒன்றே நான் செய்யும் சிறிய மரியாதையாக இருக்கும்.”

    உண்மைதான். அவரின் துணைவரைத் தூக்கி நிறுத்த பெரும் போரை நடத்திக் கொண்டிருக்கின்ற நீண்ட நெடிய போராட்டத்தில்... எதிர்பாராமல் திடீரென இவரையே நோய்ச் சூறாவளி புயலின் வேகத்தில் தாக்க,,, அந்தத் தாக்குதலில் இருந்து மீண்டு வந்த அவரின் நலம் வாழ என்னோட வாழ்த்துகள்.

    நன்றி.
    த.ம.2.

    ReplyDelete
  7. ஆமா நிலவன் அண்ணாவின் மிக பெரிய ப்ளஸ்சே பரபரப்பாக வேலை பார்ப்பார்,அந்த உற்சாகம் நம்மக்கும் தொற்றிக்கொள்ளும்.... ஆனால் பதட்டபடாமல் வேலையை செய்வார். அண்ணனது உற்சாகத்திற்கும் செயல் வேகத்திற்கும் இந்த விழா ஒரு எடுத்துக்காட்டாக இருக்கபோகிறது. அதேபோல இளமதியார் திகைப்பில் ஆழ்த்திவிட்டார்!! தோழி !! உங்கள் நட்புக்கும் அன்புக்கும் உரைபோட வார்த்தைகளே இல்லை!!! மிக்க நன்றி!!

    ReplyDelete
  8. களமிறங்கி கைகோர்க்கும் நண்பர்கள் அனைவரும் வாழ்த்துக்கள். புதுக்கோட்டையில் சங்கமிப்போம்.

    ReplyDelete
  9. மனம் மகிழ்கின்றது நண்பரே
    போற்றுதலுக்கு உரிய பதிவர்களைப் போற்றுவோம்
    நன்றி
    தம +1

    ReplyDelete
  10. புதுக்கோட்டையில் வலைப்பதிவர்களின் முக்கிய மய்யப் புள்ளியே ஆசிரியர் நா. முத்துநிலவன் அவர்கள்தான். வலைப்பதிவு என்பதன் பெருமையை புதுக்கோட்டையில் பரவச் செய்தவரே அவர்தான். அன்னாரது வழிகாட்டுதலில் புதுக்கோட்டை வலைப்பதிவர் மாநாட்டிற்கு உற்சாகத்தோடு செயல்பட்டு வரும் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  11. மிக்க மகிழ்ச்சி நண்பரே....

    சந்திப்பு சிறக்க எனது வாழ்த்துகளும்.

    ReplyDelete
  12. விழாவை திறம்பட நடத்தி செல்லவிருக்கும் முத்துநிலவன் ஐயா அவர்களுக்கும், வாரிக் கொடுத்த வள்ளல் சகோதரி இளமதி அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
    த ம 10

    ReplyDelete
  13. பதிவர் இளமதி மேடம் அவருக்கு நன்றிகள்.

    ReplyDelete
  14. விழா சிறக்க, விழா குழுவிற்கு வாழ்த்துக்கள்,
    நன்றி.

    ReplyDelete
  15. வணக்கம் அன்புச் சகோதரரே!

    வலைப்பதிவர் சந்திப்பு மிக மிகச் சிறப்பாக நடைபெற
    உளமார வேண்டி வாழ்த்துகிறேன்!
    முத்து நிலவன் ஐயாவின் வழிகாட்டலும் அவரயது அயராத முயற்சியும் கூடவே நிருவாகக் குழுவினரின் தன்னலம் கருதாப் பணியும் கட்டாயம் இந்த விழாவைச் சிறப்பின் சிகரத்தை
    எட்ட வைத்திடும்! அதில் எனக்குக் கொஞ்சமேனும் ஐயம் இல்லை!

    தங்களின் இப்பதிவில் இந்த இளமதியையும் முதன்மைப்படுத்தி
    என்னை திக்குமுக்காடச் செய்துவிட்டீர்களே சகோ!..
    எனது கடமையாக இதை எண்ணிச் செய்தேன். அவ்வளவே!

    இப்படியான நிகழ்வுகளுக்கு வேண்டியதாயும் பற்றாமல் போவதும்
    இந்தப் பணம் மட்டுமே!
    அயலில் நின்று சரீர உதவி செய்யாத எம் போன்றோர்
    இயன்றவரை நிதியுதவி செய்வதுதான் பொருத்தமானது.
    தனிப்பட்ட சிக்கல்கள் இல்லாதார் யார்?..
    எறும்பும் அதன் கையால் எண் சாண் என்பார்கள்!
    அவரவர்க்கு ஆயிரம் கஷ்டம் பிரச்சனை இருக்கும்.. ஆனால்
    இப்படித் தமிழரெல்லாம் ஒன்று கூடலாய் விழாவாய்ச்
    செய்யும்போது எந்தவகையிலென்றாலும் முடிந்தவரை
    தோள் கொடுத்து உதவ வேண்டும். அதனையே நானும் செய்தேன்.
    தமிழர் விழா என்றால் என்னவென்று தரணியே பேச வேண்டும்!
    தடம் பதிக்க வேண்டும்! முடிந்ததைச் செய்தேன் உறவுகளே!

    நானும் என் கணவரும் 12 வருடங்கள் இங்கே வாழும் நாட்டில்
    புலம்பெயர்ந்த எம் மாணவச் செல்வங்களுக்கு தமிழறிவை ஊட்டுவதற்காக வார இறுதி நாட்களில் பாடசாலையாகவே நடத்திக் கற்பித்தலுடன் விளையாட்டு, பண்பாட்டுக் கலைவிழாக்கள், போட்டிகள் போன்ற பலவகையால் அவர்களை ஊக்குவித்துக் கற்பித்தோம்.
    அப்போது நாம் எதிர்கொண்ட நடை முறைச் சிக்கலான நிதியுதவியை நன்கு பட்டுணர்ந்தவள். அவ்வகையில் அங்கும் எங்கள் விழா சிறக்க இத்தனைப் பாடுபடும் உங்களுக்கு ஏதோ என்னால் இயன்றதை உதவினேன் என்று மனம் நிறைகின்றேன்.

    எங்கள் நலம் வேண்டிப் பிரார்த்தித்து வாழ்த்தும் அன்புங்கள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றி!
    உலகமே வியந்து நோக்கும் விழாவாக எங்கள்
    ”வலைப்பதிவர் சந்திப்பு 2015” பெரிய விழாவாகச்
    சிறப்புடன் நடைபெற வேண்டி, வாழ்த்துகிறேன்!!

    வாழ்க தமிழ்! சிறக்கட்டும் உங்கள் தொண்டு!

    (பின்னூட்டம் பதிவுபோல நீண்டு விட்டது!
    பொறுத்திட வேண்டுகிறேன்!)

    ReplyDelete
    Replies
    1. “இப்படித் தமிழரெல்லாம் ஒன்று கூடலாய் விழாவாய்ச்
      செய்யும்போது எந்தவகையிலென்றாலும் முடிந்தவரை
      தோள் கொடுத்து உதவ வேண்டும். அதனையே நானும் செய்தேன். எங்கள் விழா சிறக்க இத்தனைப் பாடுபடும் உங்களுக்கு ஏதோ என்னால் இயன்றதை உதவினேன்“ - இது வெறும் வார்த்தைகள் அல்ல சகோதரி. உங்கள் வாழ்க்கையின் அனுபவ அடக்கத்தின் வெளிப்பாடு. விழா முழுவதும் உங்கள் அன்பின் அடர்த்தியால் மணக்கப்போவது உறுதி. எனவே உங்களுக்கு நன்றியெல்லாம் கிடையாது, இது “எங்கள் விழா“ என்று நீங்கள் சொன்னதை அப்படியே நூறுவிழுக்காடு வழிமொழிகிறோம். இந்த உணர்வு மற்ற பலருக்கும் வந்து விட்டால் பதிவர் உலகம் மிகப் பயன்பெறும். அதற்கு நீங்கள் ஒரு முன்னத்தி ஏர் என்று உரக்கச் சொல்வோம். வணக்கம்.

      Delete
    2. வணக்கம் ஐயா!

      தங்கள் அன்பில் நெகிழ்ந்தது என் மனம்!
      என்னப் பற்றிய தங்களின் உயர்ந்த மதிப்பீட்டிற்குச்
      சிரம் தாழ்ந்த வணக்கம் ஐயா!

      Delete
  16. 1234 கேட்கும்போதே (மன்னிக்க)
    பார்க்கும்போதே கி..ர். என்கிறதே மனம்.

    ReplyDelete
  17. உண்மைதான் ,உங்கள் வேகத்தைக் கண்டு அசந்து நிற்கிறேன் !

    ReplyDelete
  18. சகோ. இளமதியின் தமிழ்ப்பற்றுக்கும், பங்களிப்பிற்கும் புதுக்கோட்டை வலைப்பதிவர்2015 குழு என்றைக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளது.

    ReplyDelete
  19. வணக்கம் சகோ தங்கள்அனைவரதும் வேகத்தைக் கண்டு ஆச்சரியத்தில் அசந்து தான் போகிறேன். நிலவன் அண்ணாவின் ஆற்றலும் வழிகாட்டலும் அளப்பரிய சேவையே. தங்கள் அனைவரின் ஆர்வத்தையும் பங்களிப்பையும் கண்டு மலைத்தே நிற்கிறேன். அதிலும் என் அன்புத் தோழியின் பங்களிப்பைக் கண்டு மனம் பூரித்துப் போனேன். அவர் பெருந்தன்மையும் நல்ல உள்ளமும் மெய்சிலிர்க்க வைத்தது மட்டுமல்ல கண்நீரையும் உகுத்தது. அவரை தலைதாழ்த்தி வணங்குகிறேன். வேறு வார்த்தையே வரவில்லை. இத்திருவிழா பெருவிழாவாக வேண்டும். அனைத்தும் சிறப்பாக நடந்தேற என் வாழ்த்துக்கள் ...! தாமதத்திற்கு மன்னிக்கவும் ....நன்றி !

    ReplyDelete
  20. நல்லவர் கூடி நல்லது செய்ய நினைக்கின்றீர்கள் . உங்கள் மனம் போல் எல்லாம் நல்லபடியாக நடக்க வாழ்த்துகள் !

    ReplyDelete
  21. என்னப்பா இங்க போட்ட கமென்ட காணும்...எந்தக் காக்கா தூக்கிட்டுப் போச்சோ...சரி சரி புதுக்கோட்டைல கொண்டு போட்டுருச்சோ..தளத்துல போடாம...?

    ஜரூரா நடக்கிறது வேலைகள்....இல்லையா?! இளமதி அவர்களின் கொடை போற்றற்குரியது. அவர்களுக்கு எங்கள்மனமார்ந்த பிரார்த்தனைகள்...எங்கள் வணக்கங்களும்...

    ReplyDelete

Post a Comment

வருக வருக