இப்படி ஒரு ஞாயிற்று கிழமை - விதைக்கலாம் நிகழ்வு ஐந்து


காலை ஐந்து இருபதுக்கு எழுப்பியது அலாரம். ஐந்து நாற்பதுக்கு அழைத்தார் மலை. எனக்கு முன்னரே ஸ்ரீ, ஐஎம்எஸ் என்கிற மணி அய்யா மற்றும் ஸ்ரீ யின் தம்பி குருமூர்த்தியும்  இம்பாலா உணவகம் முன்னே காத்திருந்தார்கள். நாகு, ஜலீல், யு.கே டெக் கார்த்திகேயன், முகுந்தன், காசிப்பாண்டி, பி வெல் மருத்துவமனை பாக்கியராஜ் என ஒவ்வொருவராய் வரவும் பயணம் துவங்கியது.


அத்துணை பேரும் வரும் வரையில் பொறுமையாக காத்திருந்தார் வீரமாத்தி சுரேஷ்! போகும் வழியில் முருகனும், பிரபாகரனும் வர கிள்ளனூர் நோக்கி தொடங்கியது பயணம்.

கிள்ளனூர் முப்பது கி.மி தொலைவில் இருக்கிறது.  எங்களுக்கு முன்னரே ஊராட்சி மன்றத் தலைவர் ச.கோவிந்தசாமி அவர்களின் புதல்வர்  கோ.சின்னப்பா காத்திருந்தார். அவருடன்  துணைத் தலைவர்  ப.முத்து, உள்ளூர் பிரமுகர்கள் திரு.மதியழகன், திரு.பிச்சை களத்தில் பணியாற்ற தயாராக வந்திருந்த பெரியவர் செல்லையா போன்றோர் காத்திருந்தார்கள்.

ஊராட்சியின் ஒத்துழைப்பும் திரு. கோ.சின்னப்பா அவர்களின் திட்டமிடலும் மெச்சத்தக்கதாக இருந்தது. கடந்தமுறை நடந்த நிகழ்விலேயே எங்களது உறப்பினர் திரு.ராமலிங்கம் கன்றுகள் நடப்படும் அன்றே குழிகள் எடுப்பது தவறு என்று கோபமாகப் பதிவு செய்ததால், கிள்ளனூர் நிகழ்வில்  கடந்த வியாழன் அன்றே குழிகள் எடுக்கப்பட்டு ஆறவிடப்பட்டுவிட்டன. இதைச் செய்தவர் திரு. கோ. சின்னப்பா!

குழிகளில் செடிகளை நட்டு மண் நிரப்பி தண்ணீர் ஊற்றி, அவற்றைக் கண்போல் பாதுகாக்கச் சொல்லி வேண்டிவிட்டு விடைபெற்றோம். அதற்கு முன்பாக விதைக்கலாம் அமைப்பின் செயல்பாடுகளைப் கூட இருந்து பார்த்து அதன் இரண்டாம் நிகழ்வில் இருந்து அமைப்பின் உறுப்பினராக இருக்கும் திரு. ஐம்.எம.எஸ், மணி அவர்கள் தனது ஓய்வூதியத்தில் இருந்து ஐந்தாயிரம் ரூபாய்களை விதைக்கலாம் அமைப்பிற்கு அளித்தார்.

அமைப்பு பதிவுகூட செய்யப்படாத நிலையில் இப்படி ஒருவர் நிதியளிப்பது என்பது ரொம்பவே பெரிய விசயம். பதிவு செய்ய ஆயத்தப் பணிகள் நடைபெற்றுவருகிறது.

இந்த  நிகழ்வில் கலந்துகொள்ளாத சிலர் இன்றய  நிகழ்வைச் சாத்தியப் படுத்தினார்கள். அரிமளம் அருகே சகாய விலையில் கன்றுகளை பெற்றுவந்த திரு. கூகூர் கனகமணி, (ஜே.சி.ஐ. புதுக்கோட்டை கிங்ஸின் தலைவர்), ஸ்ரீ மலைக்குப் பதிலாக அவருக்கு வந்த தேர்வுப் பணியை தனக்கு மாற்றிக்கொண்டு பணிக்குச் சென்ற சாந்தக்குமார், இன்றைய வீதிக் கூட்டத்தில் அப்துல் ஜலீல் பேச வேண்டும் என்பதற்காக அவருக்கு வந்த தேர்வுப் பணியை தனக்கு மாற்றிக்கொண்டு சென்ற ராமலிங்கம் ஆகியோரின் பங்களிப்பும் உன்னதமானது.

நிகழ்வில் திடீரென கலந்துகொண்டு அடுத்த நிகழ்வில் இருந்து தொடர்ந்து வருகிறோம் என்று இன்று புதிய உறுப்பினர்களான அண்ணாதுரை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் அலுவலராக பணியாற்றும் திரு.முருகேசன், கவிஞர் கண்ணதாசன் போன்றோர் இயக்கத்தில் இணைந்தது ஒரு மகிழ்வு.

நிகழ்வில் கலந்துகொண்ட உறுப்பினர்கள்.

திரு. பிரபாகரன்
திரு.நாக பாலாஜி
திரு.மணி
திரு.அப்துல் ஜலீல்
திரு.குருமூர்த்தி
திரு.காசிப்பாண்டி
திரு.கார்த்திகேயன்
திரு.குணசேகரன்
திரு.முகுந்தன்
திரு.அரங்குளமுருகன்
திரு.நாகநாதன்
திரு.முருகேசன்
திரு. மலையப்பன்,
திரு.கஸ்தூரி ரெங்கன்
திரு.பாக்கியராஜ்
மற்றும்
திரு. வீரமாத்தி சுரேஷ்,

அடுத்த நிகழ்வு ஆரம்ப சுகாதார நிலையம், அய்யர் குளம் புதுகை.

எட்டு மணிக்கெல்லாம் புதுகை வந்துவிட்டோம்
நிகழ்வு விரைவாக முடிந்தற்கு காரணம் இருவர். திரு.ராமலிங்கம் நிகழ்வின் முன்னரே குழிகள் இடப்பட்டு ஆறப்போட்டிருக்க வேண்டும் என்றவர். அதை அழகாகச் செய்து தந்த திரு. கோ.சின்னப்பன், இவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

தொடர்வோம்
அன்பன்
மது

Comments

  1. வாழ்த்துகள்

    ReplyDelete
  2. still now we planted 26 trees........silver jubilee..cheers n congrats to our VITHAI'S.............

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  4. அன்புள்ள அய்யா,

    விதை(க்)கலாம்... மரக்கன்றுகளை நடும்பணி நல்ல முறையில் தொடர்ந்து நடைபெறுவதை அறிந்து மகிழ்ச்சி.

    திரு. ஐம்.எம.எஸ், மணி அவர்கள் தனது ஓய்வூதியத்தில் இருந்து ஐந்தாயிரம் ரூபாய்களை விதைக்கலாம் அமைப்பிற்கு அளித்ததை எண்ணி அவரின் கருணை உள்ளத்திற்கு நெஞ்சார்ந்த நன்றி.

    த.ம. 2.

    ReplyDelete
  5. கலக்கல் விதைக் கலாம்!!! வாழ்த்துகள் நண்பரே!

    ReplyDelete
  6. இலட்சியம் என்னும் விதை போடு... முயற்சி என்னும் தண்ணீர் ஊற்று... முடியும் என்ற உரமிடு... வெற்றி எனும் கனி கிடைக்கும்...

    ReplyDelete
  7. விதைக்கலாம்... மிக நல்ல பணி...
    வாழ்த்துக்கள் மது சார்...

    ReplyDelete
  8. தொடரட்டும்.....

    வாழ்த்துகள் மது.

    ReplyDelete

Post a Comment

வருக வருக