எதிர்பாரா ஆதரவு !
தஞ்சையில் இருந்து கரந்தை ஜெயக்குமார் அவர்களும், முனைவர் ஜம்புலிங்கம் அவர்களும் அமைப்புக்குழுவிற்கு ஆதரவாக இன்று புரவலர்களைச் சந்தித்தனர். குழுவினர் புதுகை புரவலர்களைச் சந்தித்த பொழுது ஞானாலயா நூலகத்தில் தினமணி ஆசிரியர் திரு.வைத்தியநாதன் அவர்கள் இருப்பதை அறிந்து அவரையும் சந்தித்திருக்கின்றனர். முனைவருக்கும், கரந்தையாருக்கும் நன்றிகள். எதிர்பாரா அலுவல்களினால் அடியேன் வரமுடியவில்லை மன்னிக்கவும்.பை வந்துவிட்டது!
பதிவர் சந்திப்பு அமைக்குக் குழு யு.கே டெக் நிறுவனத்தில் கூடி நிகழ்வுகளின் பல அம்சங்களை விவாதித்தது. குறிப்பாக பை வழங்குதலுக்கு புரவலர்களை அணுக முடிவுசெய்து, எஸ்.எம்.திலக் பை தயாரிப்பு நிறுவனத்தில் முன்பணம் கொடுக்கப்பட்டது.
குழுவை மிரட்டும் முக்கிமான விசயம்
பதிவர் சந்திப்புத் திருவிழாவின் முக்கியமான நிகழ்வு என்ன? அது பதிவர் சுய அறிமுகம்! முதல் கூட்டத்தில் இருந்தே இந்த மேட்டரை எப்படி கையாளப் போகிறோம் என்பதில் ஒரு திகில் இருந்தது. என்னைப் போன்றோர் உணர்ச்சி வசப்பட்டு அரைமணிநேரம் பேசினால் மொத்த நிகழ்வுமே அழுத்தத்திற்கு உள்ளாகும். இன்றுவரை ஒரு தெளிவு இல்லாத நிலையிலேயே ஒவ்வொரு முறையும் விவாதிக்கப்பட்டு முடிவிற்கு வராமலேயே அடுத்த விசயத்திற்கு தாவிக்கொண்டிருகிறோம். ஆமா பதிவு செய்திருக்கும் முன்னூறு பதிவர்களின் முடிவை அமைப்புக் குழு எப்படி எடுப்பது? அது மேடையில் ஏறும் ஒவ்வொரு பதிவரிடமும் இருக்கிறது!
இன்னொரு வேண்டுகோள்!
பதிவர் சந்திப்பில் பதிவர்கள் எழுதிய புத்தகங்களைக் காட்சிக்கு வைத்து விற்பனை செய்யும் ஆலோசனையும் இருக்கிறது. விற்பனை பதிவர்களின் வருகையைப் பொருத்தும் அவர்களின் பட்ஜெட் பொருத்தும்தான் இருக்கும். விற்பனைக்கு அமைப்புக் குழு உத்திரவாதம் ஏதும் தர இயலாது.இந்தக் கண்காட்சியில் நூல்களை வைக்க, விற்பனை செய்ய விரும்பும் பதிவர்கள் எத்துனை சதம் கழிவு தருகிறார்கள், அதில் எத்துனை சதம் நிகழ்வின் செலவிற்கு தருகிறார்கள் என்ற விவரத்தோடு bloggersmeet2015@gmail.com என்கிற மின்அஞ்சலுக்கு அனுப்பினால் கண்காட்சிக்கான விற்பனை அலுவலர்களை நியமிக்க, அரங்க வடிவமைப்பில் கண்காட்சியை எங்கே அமைப்பது என்பது போன்ற திட்டங்களுக்கு உதவியாக இருக்கும்.
மீதத்தை அடுத்த பதிவில் சொல்கிறேன்
அன்பன்
மது
ஆசிரியர் எஸ்.மது அவர்களின் தகவலுக்கு நன்றி. நான் ஏற்கனவே சொன்ன ஆலோசனை இது:
ReplyDelete/// வலைப்பதிவர் அறிமுகம்: மேடையில் ஏறினால் பல நண்பர்கள் அதிக நேரம் எடுத்துக் கொண்டு பின்னால் பேச வரும் நண்பர்களுக்கு நேரம் இல்லாமல் செய்து விடுகின்றனர். இந்த சந்திப்பில் வலைப்பதிவர்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய கையேடு ஒன்றை வெளியிடப் போவதாகச் சொல்லி இருக்கிறார்கள். அந்த கையேட்டில் உள்ளபடி வலைப் பதிவரை அறிமுகப்படுத்தும் பொறுப்பை, இரண்டு அல்லது மூன்று வலைப்பதிவர்கள் தொடர்ந்து செய்யலாம். ///
வருகைப்பதிவு பட்டியல்படி ஒரு பட்டியல் தருகிறேன்...! யோசித்து வைங்க...!
ReplyDeleteமுதல் இரு வரிசை எண்ணிக்கை 104 (புதுக்கோட்டையும் சென்னையும்)
வரிசை எண் 3 முதல் 6 வரை (அதாவது திருச்சிராப்பள்ளி வரை) எண்ணிக்கை 59
வரிசை எண் 7 முதல் 31 வரை எண்ணிக்கை 69
1 புதுக்கோட்டை (62)
2 சென்னை (42)
3 கோயம்புத்தூர் (19)
4 தஞ்சாவூர் (14)
5 மதுரை (14)
6 திருச்சிராப்பள்ளி (12)
7 ஈரோடு (5)
8 நாமக்கல் (5)
9 சிவகங்கை (4)
10 திண்டுக்கல் (4)
11 நாகப்பட்டினம் (4)
12 புதுச்சேரி (4)
13 பெங்களூர் (4)
14 வேலூர் (4)
15 அரியலூர் (3)
16 இராமநாதபுரம் (3)
17 கிருஷ்ணகிரி (3)
18 சேலம் (3)
19 திருப்பூர் (3)
20 கரூர் (2)
21 காஞ்சிபுரம் (2)
22 திருவண்ணாமலை (2)
23 திருவள்ளூர் (2)
24 திருவாரூர் (2)
25 தேனி (2)
26 புது டெல்லி (2)
27 விருதுநகர் (2)
28 கன்னியாகுமரி (1)
29 திருநெல்வேலி(1)
30 பாலக்காடு (1)
31 பெரம்பலூர் (1)
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
நல்ல செய்திகளைப் பொறுப்போடு சரியாகக் சொல்லி ஆலோசனையும் கேட்ட மதுவிற்கு நன்றி.
Deleteதனபாலன் அய்யா கவனத்திற்கு - இது நமது கையிலிருக்கும் பட்டியல்தான். இந்த வரிசையில் அறிமுகம் செய்யவேண்டுமெனில் பதிவர் அனைவரும் 9மணிக்கு வந்திருக்க வேண்டும். அப்படி ஒருபோதும் நடவாது. ஆக வந்துசேரும் வரிசையில்தான் 5, 5பேராக அறிமுகம் நடத்தவேண்டும். அந்த பதிவையும் 12மணிக்குமேல் வருவோர்க்கு அறிமுக உத்தரவாதம் தர இயலாது என்பதே என் கருத்து. நேரக்கட்டுப்பாடுதான் விழாவின் மொத்தத் தன்மையையும் சிறக்கும்படியோ சிரிக்கும்படியோ மாற்றக் கூடும். இதி்ல் ஆலோசித்து நல்ல முடிவைச் செயல்படுத்துவதில் தான் எல்லாம் இருக்கிறது. பார்க்கலாம்.
இந்த யோசனையைத்தான் வழங்குவாதாக இருந்தோம்...ஏனென்றால் எல்லோரும் 9மணிக்குச் சரியாக வந்துவிடுவார்களா? அதாவது முதல் நாள் வருகை தருவோர் வந்துவிடலாம். ஆனால் 11 ஆம் தேதி காலையில் வருவோர் சற்று தாமதமாகலாம்...அதற்கும் நேரம் சரியாக ஒதுக்க வேண்டும். அதாவது இந்த மணியிலிருந்து இந்த மணி வரை மட்டுமே என்று...நல்ல யோசனை இது நன்றி னாங்கள் சொல்ல வந்ததை உரைத்தமைக்கு...
Deleteநிகழ்வின் போக்குக் குறித்து தங்கள்
ReplyDeleteபதிவின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது
தொடர்ந்தால் நன்றே
வாழ்த்துக்களுடன்...
நண்பர்களைக் கண்டதும், விழாக்குழுவினரோடு அரை நாள் இருந்ததும் ஓர் இனிய அனுபவமே. நன்றி.
ReplyDeleteவிழா சிறக்க வாழ்த்துக்கள்,,,,,,
ReplyDeleteஒரு பதிவருக்கு ஒரு நிமிடம் என்று வைத்தால் கூட 222 பதிவர்களும் அறிமுகப்படுத்தி முடிக்க குறைந்த பட்சம் 4 மணி நேரம் ஆகும். அப்படியென்றால் விழாவின் அரை நாள் பொழுதை அறிமுகமே சாப்பிட்டுவிடும். இது மற்ற நிகழ்வுகளுக்கு பெரும் தடையாக இருக்கும்.
ReplyDeleteஅதற்கு பதிலாக நிகழ்ச்சி தொகுப்பாளரே பதிவர்களை இரண்டு வரிகளில் அவரைப் பற்றி சொல்லி அறிமுகப்படுத்தி விடலாம். பதிவர் மேடை ஏறினால் மட்டும் போதும். அந்த இரண்டு வரிகளை பதிவர் கையேட்டிற்காக கொடுத்த விவரங்களில் இருந்து எடுத்துக் கொள்ளலாம். ஒரு பதிவருக்கு 20 - 30 வினாடிகள் என்று கணக்கு வைத்துக்கொண்டால் 2 மணி நேரத்திற்குள் அறிமுகம் முடிந்துவிடும்.
பதிவர்கள் தாங்களாகவே சுய அறிமுகம் செய்துகொண்டால் என்னதான் நேரக்கட்டுப்பாடு விதித்தாலும் கட்டாயம் 5 மணி நேரத்தை அது தொட்டுவிடும். அடுத்த முறை பதிவர் சந்திப்பை 2 நாட்களாக நீட்டித்து, அறிமுகத்திற்கென்று ஒரு நாளை வைத்துக் கொள்ளலாம். மற்றபடி அதிகமான நிகழ்சிகள் கொண்ட இந்த சந்திப்பில் இப்படித்தான் செய்ய முடியும் என்று தோன்றுகிறது. மற்றபடி பதிவர்களின் விருப்பமே நமது விருப்பமும்.
திருவள்ளூரில் இரண்டுபேர் தானா? நானும் வர முடியாது! வருத்தமா இருக்கே!
ReplyDeleteமாவட்ட வாரியாகத்தான்
ReplyDeleteகையேடு அச்சிடப் பட்டிருப்பதாக
கவிஞர் ஐயா தெரிவித்தான்.
மாவட்ட வாரியாக பதிவர்களை மேடைக்கு அழைத்து
மாவட்டத்திற்கு ஒருவர் பேசுவதற்கும், மற்ற பதிவர்களை
அறிமுகம் செய்வதற்கும் அழைக்கலாம் என எண்ணுகின்றேன்.
சென்னை போல் பதிவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், மூன்று குழுவாகவோ அல்லது நான்கு அல்லது இன்னும் தேவையென்றால் ஐந்து அல்லது ஆறு குழுவாகவோ மேடைக்கு அழைத்து அறிமுகம் செய்யலாம்.
வலைப் பதிவர் திருவிழா 2015
ReplyDeleteதனியாக ஒரு வலைப் பூ இருந்தாலும் தங்களது கைவண்ணத்தில் அது குறித்த உண்மை நிகழ்வுகளை தருவதில் உம்மை மிஞ்சுதலுக்கு ஒருவரும் இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது தோழரே!
விழா சிறக்கட்டும்!
தோழமை பூக்கள் பூத்துக் குலுங்கட்டும்!
வாசமுடன் பூத்துக் குலுங்கட்டும் புதுகோட்டை!
நன்றி!
த ம 7
நட்புடன்,
புதுவை வேலு
மது/கஸ்தூரி தோழரே! எண்ணிக்கையைப் பார்க்கும் போது அறிமுகப் படலமே நிறைய நேரம் எடுத்துக் கொள்ளும் போல இருக்கின்றதே.. மட்டுமல்ல பதியாத பதிவர்கள் ஒருவேளை கடைசியில் வர நேரிடலாம் இல்லையா? பதிந்தவர்களில் ஒரு வேளை ஒரு சிலருக்கு வர இயலாமலும் போக நேரிடலாம்....சுய அறிமுகத்தை விட பொது அறிமுகம் அதாவது யாராவது ஒருவர் அல்லது இருவர் மாற்றி மாற்றி பதிவர்களை அறிமுகம் செய்துவிடலாம் அல்லவா? திரை இருந்தால் வைக்கப்பட்டிருந்தால் அதிலும் ஒளிபரப்பிவிடலாமே லைவ்..அது நேரத்தைக் குறைத்து விடும் அல்லவா....சுய அறிமுகம் நிச்சயமாக அது நேரத்தை விழுங்கும். அறிமுகம் செய்யும் போது பதிவர் மேடை ஏறினால் போதுமானது. மைக் பிடிக்க வேண்டாம். ஒரு வேளை அது பொம்மை ஷோ போல என்று நினைத்தால் திரை இருக்குமானால் திரையில் பதிவரைக் காட்டி (ஃபோட்டோ க்கள் வந்திருக்குமே..) அறிமுகம்? இது இன்னும் கடினமோ?!!
ReplyDelete
ReplyDeleteபதிவர் சந்திப்புச் செய்திகள்
உள்ளத்தில் துள்ளும் செய்திகளாக
http://www.ypvnpubs.com/