குவியப் புள்ளி எல்காம் Focus point ELCOM


இன்னொரு குவியம் ...

கடந்த சில ஆண்டுகளாக இங்க பல செய்திகளைப் பகிர்ந்து வந்திருக்கிறோம். அறிவியல் செய்திகள், வாசிப்பு அனுபவங்கள், சமூக சிந்தனைகள் என பற்பல செய்திகளை என்னுடைய கோணத்தில் இருந்து பகிர்ந்திருக்கிறேன்.


இனி எனது பதிவுகளின் குவியப் புள்ளிகளில் ஒன்றாக எல்காமை  வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்! நான் எல்காம் திட்டத்தில் இருக்கிறேன். 

லேய் எல்காமா அப்படீன்னா என்ன?

அது ஸ்டெம் திட்டத்தின் ஒரு பகுதி.

மண்ட காயுதே ? ஸ்டெம் ?
Science Tech English and Maths என தமிழக அரசுப் பள்ளிகளில் புதிதாக துவக்கப்பட்டிருக்கும் கல்வி மேம்பாட்டுத் திட்டம். 

இதில் ஆங்கிலத்திற்கு எல்காம் ELCOM .
இங்க்லீஷ் லாங்க்வேஜ் கம்யூனிகேஷன் எனும் பதத்தின் கவர்சிகரமான சுருக்கம். 

இது ஒரு முன்னோடித் திட்டம். 

தேசத்தில் முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட சில தமிழக  பள்ளிகளில் மட்டும் செயல்பட்டு வருகிறது இந்தத் திட்டம். 

அடுத்தடுத்த ஆண்டுகளில் அனைத்துப் பள்ளிகளிலும் இந்தத்  திட்டம் செயல்படும்!


முழுக்க முழுக்க புதிய தலைமுறை ஆசிரியர்களுடன் பணியாற்றும் வாய்ப்பினை இந்த திட்டம் எனக்கு வழங்கியிருக்கிறது.

 திட்டத்தில் இருக்கும் பள்ளிகளை வாட்சப் மூலம் இணைத்து பள்ளிக் கற்றல் செயல்பாடுகளை காணொளி மூலம் பகிர்ந்து வருகிறார்கள்!

புதிய தலைமுறை ஆசிரியர்கள், அவர்களின் உத்வேகம் குறையாத முயற்சிகள், எழுப்பும் குரல்கள் என குழுவில் பல்வேறு விஷயங்கள் பகிரப்பட்டு வருகின்றன.  

தொடர்ந்து ஆங்கிலத்தில் பகிரப்படும் செய்திகளும், படிக்கவேண்டிய நூற்களும், கற்றல் கற்பித்தல் நுட்பங்களும் பகிரப்பட்டு வந்தது என்னை திட்டம் குறித்து ஆரோக்கியமான உள்ளீடுகளைப் பெறச் செய்தது. 

ஒரு வாட்சப் குழுவில் இடைவிடாது பகிரப்பட்ட ஆங்கிலம் கற்பித்தல், கற்றல் குறித்த செய்திகள் எனக்குள் ஏற்படுத்திய விளைவுகளின் நீட்சியே இந்தப் பதிவு. செய்திகளைப் பகிர்ந்த ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். அவர்களது குதுகலம் என்னைப் பற்றிக்கொண்டுவிட்டது ...

என்னையும் இயக்க ஆரம்பித்தது!

அப்படி என்னதான் செய்கிறீர்கள் இந்தத் திட்டத்தில்?' என நீங்கள் கேட்பது புரிகிறது.

ஆங்கிலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எளிமையான விசயமாக இருக்க வேண்டும், அவர்கள் எளிதாக மொழியைப் பேசவும் எழுதவும் வேண்டும் என்கிற நோக்கத்தில் செயல்படும் திட்டம். 


முதல் கட்டமாக ஆங்கில வாசிப்புத் திறனை போனிக்ஸ் மூலம் அணுகிறோம். பின்னர் பாட நூல் கடந்த வாசிப்பு, எழுத்து என விரிய இருக்கிறது திட்டம். 


திட்டத்தின் முதல் கட்டத்தை வெறுமனே பார்த்தால் abc நடத்துவது என தட்டையாகவும் சொல்லலாம். 

நுட்பமாக பார்த்தல் அதன் அவசியம் புரியும். 

என்ன செய்கிறோம் என்பது இங்கே போய் பார்த்தாலும் தெரியும் 
எல்காம் வலைப்பூ (எதோ நம்மால முடிச்சது.. )

தொடர்ந்து பதிவர் சந்திப்பு படங்கள் வந்து கொண்டு இருப்பதால் பதிவுகளை இப்போதைக்கு இவ்வளவுதான் .

எல்காம் குறித்து தொடர்ந்து பேசுவோம். 

அன்பன் 
மது 

Comments

 1. உங்களின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் (இரவு 2 மணி ஆன பின்பும் கண் முழித்து பதிவிடும் உங்களுக்கு பாராட்டுக்கள் )

  ReplyDelete
 2. எல்காம் அறிந்தேன் நண்பரே
  நன்றி

  ReplyDelete
 3. நல்ல முயற்சி. தொடரட்டும் நண்பரே.

  ReplyDelete

Post a Comment

வருக வருக