சாதிக்கலாம் வாங்க 2016


மாநிலத்தில் பள்ளி இறுதித் தேர்வு எவ்வளவு முக்கியமானது என்பது நமக்குத் தெரியும். 

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் புதுகை  ஆசிரியர்களுக்கான உரிமைப் போராட்டத்தை மட்டுமல்ல தனது கடமையையும் செவ்வனே செய்கிறது என்பதற்கு தொடர்ந்து இவ்வியக்கம் நடத்திவரும் சாதிக்கலாம் வாங்க நிகழ்வே சான்று.

மாவட்ட வருவாய் அலுவலர் திரு. மாரிமுத்து அவர்களும், மாவட்ட கல்வி அலுவலர் திரு. மாணிக்கம் அவர்களும் முன்னிலை வகித்து நிகழ்வை சிறப்பித்தனர். 

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் தலைவராக  திரு.மாரிமுத்து  (முன்னாள் பள்ளித் துணை ஆய்வாளர்) இருந்த பொழுது துவங்கப் பட்ட இந்தக் கூட்டணி தொடர்ந்து வெற்றிகரமாக செயல்பட்டு மாணவர் முன்னேற்றத்தில் தங்கள் பணியைப்  பகிர்ந்து கொள்கின்றன.

செந்தூரன் பாலிடெக்னிக் கல்லூரியின் பேராதரவோடு நடைபெற்றுவரும் இந்த நிகழ்ச்சி மாவட்ட தேர்ச்சி சதவிகிதத்தை அதிகரிப்பதில் ஒரு எளிய பங்கினைச் செய்கிறது.  

ஆண்டுதோறும் சுமார் ஐயாயிரம் மாணவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்வு மிகச் சிறந்த முறையில் திட்டமிடப்பட்டு கல்வி அதிகாரிகள் மற்றும்  மாவட்ட வருவாய் அதிகாரிகள் முன்னிலையில் நடந்துவருகிறது. 

நிகழ்வில் ஐந்து தேர்வுகளையும் எப்படி எழுதுவது என்கிற பயிற்சியுடன் ஆற்றுப்படுதுதலும், நினைவாற்றல் பயிற்சியும் வழங்கப்படுகிறது.
தமிழ்த்தேர்வை எப்படி எழுதுவது என்கிற பயிற்சியை ஆற்றல் மிகு  ஆசிரியர் திருமிகு. குருநாத சுந்தரம் அவர்களும், ஆங்கிலத்திற்கு எஸ்.கஸ்தூரி ரெங்கன் அவர்களும், கணிதத்திற்கு திருமிகு ஏ.எல்.பழனியப்பன் அவர்களும்,  அறிவியலுக்கு திருமிகு. செல்வராணி அவர்களும், சமூகவியலுக்கு திருமிகு. ரமேஷ் அவர்களும் பயிற்சியளித்தனர். 

நினைவாற்றல் பயிற்சியை பலத்த ஆரவாரத்திற்கிடையே திரு.ஆர்.ஆர். கணேசன் அவர்கள் வழங்கினார்கள். ஆற்றுபடுத்துதல் உரையை பேராசிரியர்  மு.பாலசுப்ரமணியன் அவர்கள் வழங்கினார்கள். பல பாடல்களைப் பாடி மாணவர்களை உற்சாகமூட்டி வழிகாட்டினார்.  

நிகழ்ச்சியை மிக அருமையான முறையில் மாபெரும் அரங்கத்தில் ஏற்பாடு செய்து தந்திருந்தது செந்தூரன் பாலி. நிறுவனத்தின் இயக்குனர்கள் திருமிகு. வைரவன், திருமிகு.செல்வராஜ், திருமிகு.கார்த்திக், திருமிகு. முத்துக்குமார், திருமிகு. புவனேஸ்வரி நகையகம் நடராஜ், போன்றார் பாராட்டுக்குரியோர். 

விழாவை உருவாக்கி அதைத் தொடர்ந்து நடத்தும் தமிழக பட்டதாரி ஆசிரியர் கழகப் பொறுப்பாளர்கள் திருமிகு. மாரிமுத்து, திருமிகு. ஜெயராமன், திருமிகு. கண்ணன், திருமிகு. சிவராஜா, திருமிகு. சாந்தக்குமார்  போன்றோரின் சாதனைகள் தொடர வாழ்த்துகள்.


இந்த நிகழ்வில் தொடர்ந்து கலந்துகொள்ளும் வாய்ப்பை எனக்கு வழங்கிய தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் திரு.மாரிமுத்து (தலைமை ஆசிரியர், பெருமாநாடு அ உ பள்ளி) மற்றும் இதர  பொறுப்பாளர்களுக்கும் நன்றிகள். முதல் முதலில் என் தயக்கங்களைக் களைந்து என்னை இந்த மேடையில் அறிமுகம் செய்த திரு.சோமசுந்தரம் அண்ணாவிற்கும் நன்றிகள்.

தொடரட்டும் சங்கத்தின் சாதனை, வளரட்டும் செந்தூரன் கல்வி நிறுவனங்களின் சேவை.

அன்பன் 
மது 

பிகு :
ஆங்கிலம் இனிது அகிலம் உனது 
இனி தொடரும் 
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கிலப் பாட வழிகாட்டல் பதிவுகள் 

Comments

  1. மாணவர்களுக்கான சாதிக்கலாம் வாங்க என்ற நிகழ்வை நடத்தும் செந்தூரான் கல்வி நிறுவனத்துக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள்...
    தொடரட்டும் இப்பணி...

    ReplyDelete
  2. என் அன்பும் வாழ்த்துக்களும்

    ReplyDelete
  3. சாதனைகள் தொடரட்டும

    ReplyDelete
  4. சிறப்பான பணி! தொடருங்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. சாதனைகள் தொடரட்டும்.... மாணவச் செல்வங்களுக்கு உங்களின் வழிகாட்டுதல்களும்......

    பாராட்டுகள் நண்பரே...

    ReplyDelete
  6. அரிய பணி மேற்கொள்வோருக்கு வாழ்த்துகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  7. செந்தூரான் கல்வி நிறுவனத்திற்கு வாழ்த்துகள்! உங்கள் பணியும் தொடர வாழ்த்துகள். பி கு அருமை!!! நல்ல விஷயம். தொடருங்கள்!

    ReplyDelete

Post a Comment

வருக வருக