சக்கரக்காலன் அல்லது பயணக்காதலன்சக்கரக்காலன் அல்லது பயணக்காதலன்
ஷாஜகான்
காலத்தில் செய்த உதவி, சிறிது எனினும்... ஞாலத்தின் பெரிதெனக் கருதப்படும்னு அய்யன் சொன்னார் ஆனால் காலத்தில் செய்த பேருதவிகளை மறக்கவே முடியாது.

சென்னை வெள்ளத்தில் மனிதர்கள் உடல்களாக அடித்துச் செல்லப்பட்ட பொழுது டெல்லியில் தனியொருவனாக அய்யா ஷாஜகான் முன்னெடுத்த விசயங்கள் இன்னும் என்னிடம் சிலிர்ப்பை ஏற்படுத்துகின்றன.(புதிதாகப் படிப்போருக்கு, டோல் கட்டண ரத்து, ஒரு லெட்சம் ரயில் நீர் பாட்டில்கள், இலவச ரயில் மற்றும் ஞாயிறு வங்கிகள் இயக்கம் போன்ற பேரிடர் மீட்புப் பணிகள் அய்யா ஷாஜகான் அவர்களின் செயல்திறனுக்கு ஒரு சாட்சி)

இந்தா வருது அந்தா வருதுன்னு ஒருவழியா அய்யாவின் நூல்கள் வெளியிடப்பட்டுவிட்டன. இரண்டு நூல்கள். சக்கரக்காலன் அல்லது பயணக்காதலன் என ஒரு நூலும் இது மடத்துக்குளத்து மீனு என்கிற இரண்டாவது நூலும்.

இரண்டு நூல்களுமே அய்யா முகநூலில் எழுதிய இற்றைகளின் தொகுப்புத்தான். ஷா ஜி அவரது இற்றை ஒன்றில் நூல்கள் வெளியான விசயத்தை குறிப்பிட்டிருக்க கமண்டில் எங்கே எனது காப்பி என்று கேட்டிருந்தேன்.

நான் ராஜாமகளைக் கேளுங்கள் என்றார் ஷா ஜி. அதற்குள் ராஜாமகள் என்னுடைய முகவரியைப் பெற்று எனக்கு நூல்களை அனுப்பிவிட்டார். புயல் வேகம்!

நூல்கள் என்னவோ புயல் வேகத்தில் வந்துவிட்டாலும் அடியேன் பள்ளியில் தேர்வுத் திருவிழாவில் இருந்ததால் வாசிக்க நேரமே இல்லை. அதோடு காத்திருப்பில் இருந்த நூல்களும் புதியவரவை   வாசித்தலை தள்ளிப்போட்டுவிட்டது. அதோடு இல்லாமல் முகநூல் இற்றைகள்தானே, நாம் படித்தவைதானே என்கிற அலட்சியம் வேறு.

ஒருவழியாய் இன்றுதான் கையில் எடுக்க முடிந்தது நாக.வேணுகோபாலன் அவர்களின் உரையும், அய்யாவின் முன்னுரையும், நன்றியுரையும் தூண்டிலாக நூலின் உள்ளே இழுக்க ஆழ்ந்து போனேன். முகநூல் இற்றைகள் என்று அலட்சியப்படுத்திவிடவே முடியாத செய்திகளைத் தாங்கி ஒவ்வொரு இற்றையும் நம்மை அயர்ந்து போகவைக்கிறது.

ஏன் இவ்வளவு தாமதமாக இவற்றை நூலாக்கினார் இவர் என்கிற கோபமும் வருகிறது. பல்லாண்டுகாலம் நூல்களில் திளைத்தவர் என்பதை ஒவ்வொரு எழுத்தும், பக்கமும் காண்பிக்கிறது.

சமீபத்தில் என்னை மறந்து இப்படி ஒரு நூலை வாசிப்பதில் மனது லயித்ததில்லை.

பதின் பருவங்களில் செய்திகளை வெறும் எழுத்துக்களாகவும்
வார்த்தைகளாகவும் வாக்கியங்களாகவும் கடக்க முடிந்தது என்னால். வாசிப்பும் வயதும் கூடக் கூட அந்த விரைவு இயலாமல் போனது. ஒரு கவிதையையோ, சம்பவத்தையோ, செய்தியையோ எளிதாக வாசித்துக் கடக்க முடியவில்லை என்னால்.

அப்படி நான் இந்த நூலை தற்போது கீழே வைத்திருப்பதற்கு காரணம் ஷாஜ் ஜியின் பெட்டியில் பயணித்த ஒர் அய்யர். தோழர் அய்யரை ஷாஜ் ஜி வர்ணித்திருப்பது அற்புதம்.

அதைவிட
“உழைத்துக் களைத்தப் பாதங்களை அவ்வளவு அழகாக நான் பார்த்ததே இல்லை” என்கிற வரியை கடக்க முடியாமல் விழியில் நீர்த்திரை.
தற்போதைக்கு அய்யர் என் மனசை உலுக்கியது போதும். கொஞ்ச நேரம் இதை அனுபவிக்க வேண்டும். மீண்டும் வாசிப்பேன்.

நன்றி ஒன்று

நான் ராஜாமகள் அவர்களுக்கு, அவர் சரியான வார்த்தையைப் பிரயோகிக்காது போயிருந்தால் இந்த நூல்கள் சாத்தியப்பட்டிருக்காது.

நன்றி இரண்டு

இதுவும் நான் ராஜாமகள் அவர்களுக்கே, இரண்டு நாட்கள் தாமதத்தில் ஷாஜ் அவர்களின் நூல் எங்கள் ஊர் என்.சி.பி.ஹச் கிளையிலேயே வந்துவிட்டது. ஆனால் அதற்கும் முன்னர் என் வீட்டிற்கு தேடி வந்தது. இதற்காக ஒரு
ஸ்பெசல் நன்றி.

நன்றி மூன்று
ஷாஜ் அவர்களுக்கு
ஏன் மூன்றாவதாக?
ஏன் நூல்களை இவ்வளோ தாமதப்படுத்தினீர்கள்?

ரசித்தப் படித்துத் திளைக்கப் போகிறேன் நான்.
நீங்கள் எப்படி?

நட்புப் பட்டியலில் உள்ள ஆசிரிய மஹாஜனங்களுக்கு ஒரு வேண்டுகோள், வாசிக்கும் திறனுடைய மாணவர்களுக்கு சிந்திக்கும் ஆற்றல் உள்ள மாணவர்களுக்கு அவசியம் கொடுக்கவேண்டிய நூல் இது.

இன்னும் சொல்லப் போனால் ஒவ்வொரு பள்ளி நூலகத்திலும் அவசியம் இருக்க வேண்டிய நூல் இது. நூல் என்.சி.பி.ஹச்  பதிப்பக வெளியீடு. விலை இருநூற்றி நாற்பது இந்திய ரூபாய்கள்.

தற்போதைக்கு ஒரு பிரதியை மாணவர் நட்டுக்கு பரிசளிக்க இருக்கிறேன். சில  நாட்களுக்கு இது எனது பரிசுப்பொருளாக இருக்கும். (ஏண்டா சில நாள் என்பவர்களுக்கு பட்ஜெட் அப்படி பாஸ்)
அன்பன்
மது

Comments

 1. அலட்சியம் ஆவலானது குறித்து மகிழ்ச்சி... கொடுத்து வைத்த மாணவர்கள்...

  ReplyDelete
 2. எனக்கொரு பிரதி வேண்டும் மது. படத்தில சிரிக்கும் என் குட்டி மருமகள் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தால் கூடுதல் தொகை தந்து வாங்கிக்கொள்ளத் தயார். த.ம.1

  ReplyDelete
 3. ஆமா எங்க த.ம.வைக் காணோம்? என்னாச்சு?

  ReplyDelete
  Replies
  1. ஓட்டுப்பெட்டி பலருக்கும் காணாமல் போகின்றது

   Delete
 4. ஆஹா புத்தகங்கள் வெளி வந்துவிட்டனவா.... தில்லி சென்றதும் அவரைச் சந்தித்து புத்தகங்கள் வாங்கிக் கொள்ள வேண்டும்....

  தகவலுக்கு நன்றி மது.

  ReplyDelete
 5. வணக்கம்
  நூல்பற்றி மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 6. சிறப்பான நூல்கள் அறிமுகம். நன்றி! தோழரே! இங்கு மாணவர்களுக்குக் கொடுக்க முடியாதே. சென்னையில் ம்ம்ம் முயற்சி செய்யலாம்.

  ReplyDelete
 7. நல்லதொரு அலசல் அருமை தோழர்
  தமிழ் மணம் 2

  ReplyDelete
 8. நல்லதொரு நூல் விமர்சனம்! வாங்க வேண்டியதும் படிக்க வேண்டியதுமான நூல்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது! இரண்டு மாதங்களாக நூல்களுக்கு என நான் ஒதுக்கும் சிறுதொகை ஒதுக்க இயலாமல் போய்க்கொண்டிருக்கிறது. தை பிறந்துவிட்டது அல்லவா? ஏதாவது வழி பிறக்கும் என்று தோன்றுகிறது!

  ReplyDelete
 9. நல்லதொரு நூல் விமர்சனம்....
  அருமை... அருமை....

  ReplyDelete
 10. ஷாஜியின் நல்ல உள்ளமும் எழுத்துவன்மையும் அறிந்ததே என்றாலும் அவருடைய நூலை வாசிக்கும் ஆர்வம் மேலிடுகிறது இங்கே உங்களுடைய எழுத்தால். நன்றி மது.

  ReplyDelete
 11. இரண்டு நூல்களைப் பற்றியும் நன்றாகவே சொன்ன நீங்கள், மற்ற (பதிப்பகம்) விவரங்களையும் சொல்லி இருந்தால், என்னைப் போன்றவர்களுக்கு வாங்க ஏதுவாக இருக்கும்.

  ReplyDelete

Post a Comment

வருக வருக