முதன்மைக் கல்வி அலுவலர் திருமிகு சாந்தி |
புதுகை முதன்மைக் கல்வி அலுவலர் திருமிகு சாந்தி அவர்கள் போற்றுதலுக்குரிய ஒரு முன்னெடுப்பைச் செய்திருக்கிறார். மாணவர்களுக்கான ஒரு உண்டு உறையுள் முகாமை நடத்துகிறார்.
அப்படி என்ன முகாம் இது என்கிறீர்களா ?
புதுகைக் கல்வி மாவட்ட அளவில் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் பயிலும் பணிரெண்டாம் வகுப்பு மாணவர்களில் முதல்வர்களை ஒரே முகாமில் சேர்த்திருக்கிறார்.
அரசுப் பள்ளி ஆசிரியர்களில் அற்பணிப்புள்ள ஆசிரிய குழுவை ஒன்றிணைத்து மீத்திறன் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கிறார்.
நோக்கம் தெளிவானது.
இவ்வாண்டு மாநில அளவில் ஒரு இடத்தையாவது புதுகை மாணவர்கள் பெற வேண்டும் என்பதுதான் அது.
ஒரு பெரும் குழு ஆசிரியர்களின் காலம் கருதாத உழைப்பும், அலுவலகப் பணியாளர்களின் கடமை உணர்வும் உணமையிலேயே சிலிர்க்க வைக்கிறது.
இவற்றிற்கு சிகரம் வைத்தார் போல் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மாண்புமிகு சி. விஜயபாஸ்கர் அவர்கள் முகாமிற்கான நிதி உதவியை வழங்கியிருக்கிறார்.
இதுவரை மூன்று முறை முகாமிற்கு வருகைதந்து மாணவர்களை ஊக்கப் படுத்திப் பேசியிருக்கிறார்.
ஊக்கப்படுத்திப் பேசும் மாண்புமிகு அமைச்சர் விஜயபாஸ்கர் |
முகாமில் பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் ஒரு பூங்கொத்து!
முதன்மைக் கல்வி அலுவலரின் கவனம் எல்லாம் இந்த மையத்தில் இருக்கும் பொழுது ஒரு மாநிலத்தின் சக்தி மையம் ஒன்று அடிக்கடி வந்து பேசும் பொழுது பயிலும் மாணவர்களுக்கு நிச்சயம் நல்ல ஊக்குவிப்பாக இருக்கும்.
இங்கே பணியாற்றும் அலுவலக உதவியாளர் ஒருவர் எமது பள்ளியில் இருந்து சென்றுள்ளார்.
மாண்புமிகு அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் முகாமை பார்வையிட்ட பொழுது |
ஒரு ஞாயிறு பயல்களா கொஞ்சம் மைதானத்திற்கு போய் விளையாடுங்க, அப்புறம் படிக்கலாம் என்று சொன்னால் வெறும் ஐந்து பேர் மட்டும்தான் விளையாடப் போயிருகிறார்கள்!
மற்றவர்கள் நெருப்புக் கோழிகள் போல பாட புத்தகத்தை விட்டு தலையை நிமிரவே இல்லையாம்!
வெற்றி நமதாகட்டும்.
தேர்வுகள் நெருங்கி வரும் வேளையில் மைதானத்தில் இருந்து கவனத்தை நூலில் நங்கூரமிட்டிருக்கும் இப்படை தோற்பின் எப்படை வெல்லும்.
சிறந்த பணி
ReplyDeleteபாராட்டுவோம்
யாழ்பாவாணனின் பாவண்ணங்கள் - 01 (மின்நூல்)
http://www.ypvnpubs.com/2016/01/01.html
வருகை தந்து இன்ப அதிர்ச்சி கொடுத்ததற்கு நன்றிகள்
Deleteபுதுகை வெல்லட்டும்
ReplyDeleteவாழ்த்துக்கள்
வலையுலக புயலுக்கு நன்றிகள்
Deleteவாழ்த்துகள் கல்வி சிறந்த புதுகையாக திகழட்டும்
ReplyDeleteநன்றிகள் எக்ஸ்செல் சித்தரே
Deleteமிக மிக நல்ல முயற்சி! வாழ்த்துகள்! இது தொடர்வதற்கும்!
ReplyDeleteகீதா: மேலே சொல்லப்பட்டக் கருத்துடன் எனது தனிப்பட்டக் கருத்து இது. முதல்வர்கள் என்றால் முதல் மதிப்பெண்கள், முதல் 3/4/5 ..இப்படி இடத்தில் எடுப்பவர்களைத்தானே. குறிப்பிட்டிருக்கின்றீர்கள்? நல்ல திட்டம் மறுப்பதற்கில்லை. மனமார்ந்த வாழ்த்துகள் பயிற்சி கொடுக்கும் ஆசிரியர்களுக்கும் பயிற்சி பெறும் மாணவ மாணவிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
ஒரு சிறு (பெரிதோ) பரிந்துரை. இதோ போன்ற ஒரு முகாம் அல்லது பயிற்சி கற்பதில் சற்றுக் குறைவாக, குறைபாடுகளுடன் இருக்கும் மாணவ மாணவிகளுக்குக் கொடுக்கலாமே. மாவட்டக் கல்வி ஆட்சியர் அதை யோசிக்கலாமே. ஆசிரியர்கள் நீங்கள் எல்லோரும் இதையும் பரிந்துரைக்கலாமே. நாம் இவர்களைப் பற்றியும் யோசிக்கலாமே. இவர்களில் பலரும் நல்ல திறமை உடையவர்கள். அவர்களுக்கு வேண்டியது சற்று மாறுபட்ட ஒரு சூழல் அவ்வளவே.
இது எனக்குச் சிறு வயது முதல் மனதில் பதிந்த ஒன்று. எனது பள்ளி ஆசிரியர்கள் - புனித சூசையப்பர் பள்ளி நாகர்கோயில் - (St. Joseph convent)தான் காரணம். ஒவ்வொரு தினமும் பள்ளி முடிந்ததும், க்ரூப் ஸ்டடி என்று வகுப்பில் முதல் 5, 6 இடங்களில் இருப்பவர்களின் தலைமையில் சற்றுக் குறைவாகக் கற்பவர்களைப் பிரித்து குழு அமைத்து இந்தத் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் கற்பிக்க வேண்டும். ஆசிரியர்களின் மேற்பார்வை உண்டு. சந்தேகங்கள் விளக்கப்படும். சிறு சிறு தேர்வுகள் வைக்கப்பட்டு ஏனென்றால் அந்த மாணவர்க்கு பெரியதாகப்படிப்பதில் சிரமம் இருக்கும் என்பதால்...பிரித்துப் படித்தல் முறை...புத்தகங்களில் இருக்கும் கேள்விகள் அல்லாமல் நாங்களே கேள்விகள்- ஒருமார்க் கேள்விகளிலிருந்து 10, 15 மதிப்பெண்கள் கேள்விகள் வரை - மாற்றி மாற்றிக் கேட்க வேண்டும். தலைமைப் பொறுப்பில் இருக்கும் மாணவிகளுக்கும் நல்ல பயிற்சி குழு மாணவிகளுக்கும் நல்ல பயிற்சி.
இந்த முறையைத்தான் கற்றல் குறைப்படு இருந்த, பள்ளிக்கே செல்ல மறுத்த என் மகனிற்கு (முதலில் ICSE திருவனந்தபுரத்தில், கோயம்புத்தூரில் மெட்ரிக், அப்புறம் அரசு, சென்னையில் சிபிஎஸ்சி என்று மாற வேண்டிய சூழலிலும், இந்த முறையைத்தான் பின்பற்றினேன். இப்போதும் கூட பல குழந்தைகளுக்குப் பரிந்துரைத்து நன்றாகச் செய்துவருகின்றார்கள். க்ரியெட்டிவிட்டியும் அதாவது நாமே கேள்விகள் கேட்டு அதற்கான விடையும் ..என்று அறிவும் விரிகின்றது. மொனோடொனி இல்லாத, மனப்பாட்ம் செய்து அப்படியே எழுத வேண்டும் என்றில்லாமல்...ஆனால் அரசு நடத்தும் தேர்வில் விடைகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இருக்கிறது என்று சமீபத்தில் சொல்லப்பட்டுக் கேட்டேன். உண்மை தெரியவில்லை. எங்கள் காலத்தில் நன்றாக வொர்கவுட் ஆகியது.
இந்தக் குழந்தைகளைச் சாதிக்க வைப்பதுதான் பெரிய சாலஞ்ச் மட்டுமல்ல பெருமையும், மட்டற்ற மகிழ்வும் கூட என்பது எனது தாழ்மையான கருத்து.
நான் ஆசிரியை அல்ல. அதனால் நான் சொல்லுவது தவறாக இருந்தால் பொறுத்துக் கொள்ளவும்.... ஒரு பரிந்துரை அவ்வளவே.
மிக்க நன்றி கஸ்தூரி.
எல்லா விசயத்திலும் முதல்வர்களுக்கு முதல் மரியாதை உண்டுதானே..
Deleteஇந்த அளவிற்கு செயல்படவே புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டியிருக்கிறது அவர்களுக்கு சூழல் தேவைப்படுகிறது
நீங்கள் விவரித்த திட்டம் எனது மனதிலும் ஏற்கனவே எழுந்ததுதான்.
அதற்கு கொஞ்சம் நாட்கள் தேவைப்படலாம்
அவ்வளவே..
உங்கள் நீண்ட கருத்துரை கல்விமேல் உங்களுக்குள்ள சமூகப் பொறுப்பைக் காட்டுகிறது
நன்றிகள் சகோதரி ..
மேலும் பேசுவோம்
உண்மைதன் சகோ! ஒன்று விடுபட்டு விட்டது...முதன்மைக் கல்வி அலுவலர் திருமிகு சாந்தி அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துவிடுங்கள்! நல்ல முயற்சிகள் எப்போதும் தொடரவேண்டும் எல்லோருடைய ஆதரவுடனும்.
Deleteபுதுகையில் நீங்கள் ஆசிரியர்கள் எல்லோரும் + கல்வித் துறையும் பல புதிய புதிய பரிமாணங்களில் முயற்சிகள், திட்டங்கள் எடுப்பதால் அதையும் உங்கள் மூலம் அறிய முடிவதால் பரிந்துரைத்தேன் கஸ்தூரி..நன்றி.
ReplyDeleteகீதா
நன்றிகள் சகோ
Deleteபணி சிறக்கட்டும்.....
ReplyDeleteவாழ்த்துகள்.
வருக வருக வெங்கட்ஜி
Deleteவாழ்த்துகள்!
ReplyDeleteநன்றி தலைவரே
Deleteஎமது வாழ்த்துகளும் உரித்தாகுக தோழரே
ReplyDeleteதமிழ் மணம் 2
அருமையான முன்னுதாரணம்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றிகள் தோழர்
Deleteசார்
ReplyDeleteஎல்லோருடைய பணியையும் நேர்மறையாக போற்றும் உங்கள் பணியும் சிறந்ததே ! நீங்கள் ஒரு நல்லாசிரியர்.
வாழ்வின் மிக முக்கியமான விசயம் நல்ல காரியங்களை கொண்டாடுவது
Deleteசரிதானே அய்யா
ஆஹா !மிக அருமையான முயற்சி .. ..இங்கும் 1,2,3 என மாணவர்களை தரம் பிரித்து கற்பிக்கிராகள் .செட் 1 இல் இருக்கும் பிள்ளையின் grasping learning ability விரைவாக இருக்கும் செட் 3 இல் இருக்கும் பிள்ளை நிதானமா படிக்கும் வெவ்வேறு ஆசிரியர்கள் தான் ஒவ்வொரு செட்டிற்க்கும் ..ஆனால் நிச்சயம் இறுதித்தேர்வில்
ReplyDeleteசெட் 3 இல் அல்லது 4 இல் உள்ள பிள்ளை A ஸ்டார் அதிக பாடங்களில் எடுத்த சம்பவங்களும் உண்டு .
எல்லா மாணவர்களையும் குழு பிரித்து இப்படி முகாம் அமைத்து ஒன்று சேர்த்தால் ..நிறைய மாணவர்கள் முதல் மதிப்பெண் எடுப்பார்கள் என்பதே நிச்சயம் .
முதன்மைக் கல்வி அலுவலர் அம்மாவின் அர்ப்பணிப்புணர்வு,விடா முயற்சி இவற்றைப் பாராட்டியே ஆகவேண்டும்.முதல்வர்களுக்குத் தனிப் பயிற்சி வேண்டுமா..வேண்டாமா..என்ற விவாதம் நடக்கட்டும்.
ReplyDeleteவைரமுத்து அவர்கள் சொன்னதைப் போல் "தேர்வு முறை நமக்கு உடன்பாடில்லை;ஆனால் தேர்வுமுறை இருக்கிறவரை அதில் நாம் வெற்றி பெற்றாகவேண்டும்!"..அதனால் இபாடை நிச்சயம் வென்றாகவேண்டும்! வெல்லும்!
சிறந்த அலுவலராலும் தன்னலமில்லா ஆசான்களாலும் நம் பிள்ளைகள் சிகரம் தொடப்போவது திண்ணம்....
ReplyDelete