பாடலுக்குள்ளே ஒரு கால எந்திரம்


9/2/16
காலைஐந்தரை
ருக்ஜா ஹே மேரி தில் திவானி என இசைத்தது எனது கூல்பாட்...
உண்மையில் அதற்கு முன்னரே விழிப்பு வந்திருந்தாலும் அலார்ம் அடித்தபின்னர்தான் எழவேண்டும் என்கிற குலதெய்வ வழக்கப்படி  அலார்ம்  ஒலித்த பின்னரே எழுந்தேன்..மெல்ல அலார்மை நிறுத்தப் போன அந்த தருணத்தில் அதேபோல் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் எழுப்பிய இன்னொரு பாடல் நினைவில்வர அலார்மை நிறுத்தினேன், நினைவின் சுழலில் சிக்கினேன்.

ஏதொ ஒரு வேலையாக இளவல் சிவாவீட்டிற்கு சென்றிருந்தேன். இரவு ஒன்பதுக்கெல்லாம் திரும்பிவிடலாம் என்கிற திட்டம்.

வேலை முடியவில்லை. கணிப்பொறி சம்பந்தமான வேலைதான். என்ன பெரிசா  பண்ணியிருக்க  போறோம், ஒஎஸ் அடித்தோம் என்றுதான் நினைக்கிறன்.

சிவா வீட்டில் ஒரு மெகா சைஸ் மியுசிக் ப்ளேயர் உண்டு. திரீ சிடி சேஞ்சருடன். அவ்வகை இசைப்பான்களை பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்த்ததுபோல்தான் பார்ப்பேன் அப்போதெல்லாம்.

இசைப்பான்கள் மீதும் இசையின் மீதும் பித்துபிடித்து அலைந்த நாட்கள் அவை.

ஒரு மணிநேரம் அந்த இசைப்பானின் அத்துணை பொத்தான்களையும் இயக்கிப் பார்த்தோம் இருவரும்.

கணிப்பொறி வேலை வேறு முடியவில்லை. இரவு வீட்டிற்கு திரும்பமுடியாது என்றதும் போனைப்பண்ணி சொல்லிவிட்டு சிவாவீட்டில் தங்குவது என்று முடிவானது.

சிவா அப்போது கொஞ்சம் திடீர் தடார் நண்பர்களுடன் இருந்ததால் அவனது போட்டோ கலக்சனில் இருந்து நண்பர்கள் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தினான்.

கிடாமீசை நண்பர் ஒருவரின் படத்தைக் காட்டி இவர் எப்படிப்பட்டவர் என்று சொல்லுங்கள் என்றான்.

மீசைக்குள்ளே பிச்சுவாவை ஒளித்து வைக்கலாம் போல இருந்த அவரின் படம் தந்த செய்தியைச் சொன்னேன்...

செம போல்ட்டான ஆள் போல

கெக்கே பிக்கே என்று சிரித்தான்.

நேற்றுப்பிறந்த குழந்தைபோல் இருந்த இன்னொரு நண்பரின் படத்தைக் காட்டி இவன்தான் எல்லாம்; மீசை சும்மா குழந்தை என்றான்.

அந்த இரவு மறக்கமுடியாமல் இருப்பதற்கு இந்த சம்பவம் மட்டுமே காரணம் அல்ல

எப்போது தூங்கினோம் என்று தெரியாமல் தூங்கிய எங்களை எழுப்பிய அந்த பெரிய இசைப்பானும்தான்...

அன்று அது இசைத்தபாடல் "சாய்ரே சாய்ரே(அஜீத் படப்பாடல்) (பழனிவேல் ராஜன் முஷ்டியை முறுக்கினால் நான் பொறுப்பல்ல)

அன்று அந்த பெரும் இசைப்பான் கொடுத்த புதுமையான அனுபவத்தை இன்று ஒரு கூல்பாட் கொடுக்கிறது!

நுட்பம் எப்படி இருந்தாலும் அது நம் நினைவோடு நடமிடும் பொழுது தனித்த அனுபவமாகிறதுதானே...

Sivakkumaran Thirunavukkarasu Rajan Palanivel Nawaz Ahamed N
அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்

Comments

 1. //நுட்பம் எப்படி இருந்தாலும் அது நம் நினைவோடு நடமிடும் பொழுது தனித்த அனுபவமாகிறதுதானே...// மிகவும் உண்மை!

  உங்கள் பதிவைப் படித்தவுடன் நானும் வினோத்தும் முதன் முதல் வாங்கிய ஸ்பீக்கர் சிஸ்டம் பற்றி பேசினோம் :) நினைவுகளைத் தட்டி எழுப்பிவிட்டீர்கள், நன்றி அண்ணா

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சி
   இப்போதெல்லாம் இசை கேட்பதில்லை
   நற்பாதியின் கட்டளைகள்தான்
   அதைவிட வேற இசை இருக்கா என்ன...


   அப்புறம்
   உங்கள் ஸ்பீக்கர் சிஸ்டம் போஸ் ஆக இருந்தால் மிக்க மகிழ்ச்சி..

   Delete
 2. அழகான மலரும் நினைவு!
  இசை என்பதால் என்னையும் கவர்ந்தது.
  த ம 2

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் தோழர்..

   Delete
 3. உங்கள் கூல்பாட் போல கூல் பதிவு! அனுபவங்கள் வித்தியாசமாகத்தான் இருக்கின்றன..

  கீதா: பரவாயில்லையே கஸ்தூரி நல்ல பாட்டு எழுப்புகின்றது...இங்கு என்னைப் பல சமயங்களில் எழுப்புவது காளியாத்தா இல்லை மாரியாத்தா இல்லை என்றால் வேய்குழலோசை ஹை டெசிபலில்...ஹஹஹ்

  ReplyDelete
  Replies
  1. ஹ ஹ
   நலமா சகோதரி ?
   இங்கு அந்த தொல்லைகள் கொஞ்சம் குறைந்திருக்கின்றன

   Delete
 4. இசைப்பான் எல்லாம் ஒரு காலத்தில் ஏதோ தேவலோகத்துப் பெட்டி...இப்போது இந்தக் கணினி யுகத்தில் எல்லாம் சர்வசாதாரணமாகிவிட்டது. எழுதிக் கொண்டே போகலாம் பதிவாகிவிடும் பயம்...எனவே சென்சார்..மீதம் வெள்ளித்திரையில் என்பது போல் பதிவில்...(இப்படித்தான் சொல்லுவேன் அப்புறம் எழுதாமல் பாதியில் கிடக்கும்..ஹிஹி)

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஜி நலமா?
   எழுதுங்கள் ஜி
   காத்திருக்கிறேன்

   Delete
 5. தமிழ்மணம் ஓட்டு அளிக்க எரர் என்கின்றது...

  ReplyDelete
  Replies
  1. கொஞ்சம் நாட்களாக அப்படித்தான்.

   Delete
 6. வணக்கம்
  மலரும் நினைவுகள் அருமை.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் ரூபன்

   Delete
 7. பதிவை ரசித்தேன் தோழரே நன்று
  தமிழ் மணம் 3

  ReplyDelete
 8. என்ன நண்பரே இசையைக் கேட்பதற்குக் கூட தடாவா? என்ன ஒரு அராஜகம்! பாவம் நீங்கள்.

  இசைப்பான்கள் நல்ல சொல்லாக இருக்கிறதே. இப்போதுதான் கேள்விப்படுகிறேன். . என்னதான் ஐ பாட் போன்ற இளமையான துடிப்பான தொழில்நுட்பம் வந்தாலும் எல் பி ரெகார்ட் பிளேயரில் இசை கேட்கும் அந்த அனுபவமே தனி. உயரமாக நிற்கும் இரண்டு ஸ்பீக்கரில் பாடல் கேட்டுப் பாருங்கள். அதுவும் மனதுக்குப் பிடித்த பாடலாக இருந்தால்.... அதுதான் டிக்கட் டு பேரடைஸ்...

  ReplyDelete
  Replies
  1. நைஸ் வோர்ட்ஸ்
   டிக்கெட் டு பாரடைஸ் ...

   Delete
 9. இசைப்பான் - இசை போலவே அழகிய வார்த்தை.. ரசித்தேன். தினமும் இரவில் நானும் கணவரும் பழைய பாடல்கள் கேட்பது வழக்கம். என்னுடைய ஐபாடில் இருக்கும் பாடல்கள் எல்லாமே 60-80 களுக்கு உரியவை. இன்னமும் சலிக்காமல் ஒலித்துக்கொண்டிருக்கும் ஒவ்வவொரு பாடலின் பின்னணியிலும்தான் எவ்வளவு ரசனையான நினைவுகள்.. சுகமான நினைவுகளைத் தூண்டிவிட்ட பதிவுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் சகோ ..

   Delete
 10. ஹலோ மது சார்

  இசை மட்டுமே பல நினைவுகளையும் கிளர்ந்தெழச் செய்யும். இசை கேட்பதை நிறுத்தி விடாதீர்கள். புதிய பாடல்கள் அல்ல உங்களுக்குப் பிடித்த பழைய பாடல்களை அவ்வப்போது கேட்டுக் கொண்டேயிருங்கள் . நீங்கள் எதைச் செய்தாலும் அது உங்களை உயிர்ப்புடன் வைத்திருக்கும்

  ReplyDelete
  Replies
  1. கேட்க ஆரம்பித்திருக்கிறேன்

   Delete
 11. இளையராஜாவின் முதல் ஸ்டீரியோ படப் பாடலான 'டார்லிங் டார்லிங் 'கை ,LP இசைத்தட்டில் கேட்டு மகிழ்ந்த சுகம் இருக்கே .மறக்கவே முடியாது :)

  ReplyDelete
  Replies
  1. எல்லோரும் சொல்வது இது...
   மாறி மாறி வலதும் இடதுமாய் சுழலும் குரலும் இசையும் இன்னும் நினைவுகூரப்படுவது இயல்பே

   Delete
 12. இது போன்ற இசைப்பானில் எங்கள் வீட்டில் பாடல் கேட்ட அனுபவம் இருக்கு...

  இப்ப மாற்றங்கள் வந்து எல்லாம் மாறியாச்சு... உலகம் உள்ளங்கையில்...

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் தோழர்..
   உலகமட்டுமல்ல
   இசை கேட்க ஏது இப்போ நேரம் ...
   அரிதினும் அரிதான விசயமாகிவிட்டது

   Delete

Post a Comment

வருக வருக