இந்தக் காதலர் தினம் மறக்கக் கூடியதா என்ன ?மேதகு  கலாம் அவர்களின் நினைவைப் போற்றும் விதமாக துவக்கப்பட்ட மரக்கன்றுகள் நடும் இயக்கமான விதைக்KALAM அமைப்பு இருபத்தி ஐந்தாவது நிகழ்வை எட்டியது இன்று. 

உலகின் இளைஞர் பட்டாளம் காதலர் தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கும் இன்றய தினத்தில் அமைப்பின்  இளைஞர் பட்டாளம்  மரங்கள் இல்லா ஒரு மைதானத்தில் ஐம்பது மரக்கன்றுகளை நட்டு தங்களின் இயற்கை மீதான காதலை நிறுவியிருக்கிறது   என்றார் கவிஞர் நிலவன். 

கலாம் அவர்களின் மீதும்  இயற்கையின்  மீதும் பெரும் மரியாதையை கொண்ட அமைப்பு இது.  நிகழ்வு புதுகை மேட்டுப்பட்டியின் அருகே இருந்த சேங்கைத் தோப்பு கால்பந்து மைதானத்தில் நடைபெற்றது. அமைப்பினை இந்த கால்பந்தாட்ட மைதானத்தில் மரங்களை நடச் சொன்ன விஸ்வநாதன் அவர்கள் இந்த பகுதியின் கவுன்சிலர் திரு. கே.ஆர்.ஜி பாண்டியன் அவர்களை இதுகுறித்து வேண்டியதும் ஏற்பாடுகள் மின்னல் வேகத்தில் நடைபெற்றன. 

கவுன்சிலர் பாண்டியன் குழிகளை ஒரு ஜே.சி.பி இயந்திரம் மூலம் கடந்த செவ்வாய் கிழமையே எடுத்துத்தந்துவிட்டார். மேலும் நிகழ்விற்கான பந்தல், ஒலிபெருக்கி, நாற்காலிகள் என பல செலவுகளை அவரே எடுத்துக்கொண்டும் விட்டார்!

எனவே விதைக்கலாம் அமைப்பு பதாகை, கன்றுகள், கூண்டுகள், கூண்டுகளை தாங்கிப் பிடிக்கும் கழிகளுக்கு மட்டுமே செலவு செய்தது. இது இல்லாமல் காலைச் சிற்றுண்டியாக இருநூற்றி ஐம்பது இட்டலிகள், தண்ணீர் கேன்கள், சில பாக்கெட் பிஸ்கட்டுகள் மற்றும் தேநீர் இவை மட்டுமே விதைக்கலாம் அமைப்பின் செலவு. 

இந்தச் செலவையும் அமெரிக்காவில் இருக்கும் திரு.பாலதண்டாயுதம் ஏற்றுக்கொண்டுவிட்டார்! கடந்த வாரமே பணத்தை அனுப்பிவிட்டார்! 

இவை இல்லாமல் நிகழ்வில் உறுதுணையாக இருந்த டாடா ஏஸ்சை அமைப்பின் ஆலோசனைக் குழுத் தலைவர் திரு வீரமாத்திசுரேஷ் அவர்கள் அனுப்பி நிகழ்வை எளிதாக நடத்த உதவினார். 

அதிகாலை ஐந்து மணிகெல்லாம் விதைக்கலாம் குழு மைதானத்தில் குழுமியது.  பெரும் இயந்திரம் வைத்து  எடுக்கப்பட்ட குழிகள் என்பதால் உறுப்பினர்கள் ஒரு விநோதோமான சவாலை சந்தித்தனர். அது குழிகளை மூடுவது! 

ஐந்துமணிக்கு குழிகளை மூடத் துவங்கி ஏழு மணிவரை பணி தொடர்ந்தது! 

முதல் ஆளாக வருகை தந்த சிறப்பு விருந்தினர் புதுகை சட்ட மன்ற உறுப்பினர் அய்யா கார்த்திக் தொண்டைமான்! அடுத்தது நகராட்சி துணைத் தலைவர் திரு சேட், இவர்களைத் தொடர்ந்து வருகைதந்தார் நகர்மன்றத் தலைவர் திரு. ராஜசேகர். 

புதுகை கணினித் தமிழ்ச் சங்க நிறுவனர் திரு நிலவன், பாவலர் பொன்.கா உறுப்பினர்கள் கவிஞர் வைகரை, , கவிஞர் அமிர்தா தமிழ், கவிஞர் மாலதி, மணவை நகராட்சி மேலாளர் திரு. முத்துக் குமார் என பெரும் பட்டாளமே வருகைதந்து , சிறப்பித்தனர்.
பொறியாளர் சுஹைப் முதன் முதலாக வருகை தந்திருந்தார். விதைக்கலாம் அமைப்பின் உறுப்பினர்கள் யு.கே டெக் கார்த்திக், CAD ஸ்ரீதர், பாக்யராஜ், சுகந்தன், காசிப்பண்டியன், தலைமை ஆசிரியர, குருமூர்த்தி, பேராசிரியர் பாஸ்கர், ட்விட்டர் சிவாஜி,  நாகு, பிரபாகரன், முருகன், நண்பா கார்த்திக், பொறியாளர் ரகுபதி, பொறியாளர் சந்தோஷ், மரியா ஸ்போர்ட்ஸ் யூஜின் ராஜ்,   மருத்துவர் சுகேஷ், ராம்தாஸ், ராமலிங்கம், மணி சங்கர அய்யர் என அனைவரும் வந்திருந்தது மகிழ்வு. 

நிறுவனர்கள் ஸ்ரீ மலையப்பன் மற்றும் நாக பாலாஜி அனைவரையும் வரவேற்றுச் சிறப்பித்தனர். 

சிறப்பு விருந்தினர்கள் அனைவருமே மிக நல்ல ஊக்க மூட்டும் வார்த்தைகளை பேசினர். நிலவன் அவர்கள் இது செயல்படும் இயக்கமாயிற்றே ஏன் இப்படி மைக் செட் என்று மேடையிலேயே கேட்கத் தவறவில்லை!

விதைக்கலாமின் பெருவாரி உறுப்பினர்கள் பல்வேறு துறையைச் சேர்ந்தவர்கள். யாருமே பேச விரும்புவதே இல்லை. அவர்களின் ஈடுபாடு தொற்றிக்கொள்ளும் இயல்புடையது! 

எப்படி மைக் வந்தது என்றால் அது விழா ஏற்பாட்டாளர் திரு. பாண்டியன் அவர்களின் திட்டம்.  ஏற்பாடுகளில் சிரத்தையோடு இருந்த அவரை மறுத்துப் பேச விருப்பம் இல்லை. எனவேதான் நாம் ஒப்புக் கொண்டோம். அதோடு இல்லாமல் முதலில் வந்தவர்கள் கன்றுகளை வைத்துவிட்டுப் சென்றுவிடவும் வாய்ப்பிருந்ததால் அவர்களை ஒரு சிறு பேச்சின் மூலம் விருந்தோம்பவும் இயன்றது! 

இதை அமைப்பினரின் கவனத்துக்கு வைக்கிறேன். இனி வரும் நிகழ்வுகளில் கட்டாயம் தவிர்க்கப்படும் என்று நம்புவோம். 

 இன்று புதுகையின் இளைய மன்னரும் சட்ட மன்ற உறுப்பினருமான  கார்த்திக் தொண்டைமான் அவர்களின் கரங்களால் நடப்பட்ட கன்று அமைப்பின் சார்பில் நடைபெற்ற 300வது கன்று! 

தொடருந்து முன்னூற்றி ஒன்றாம் கன்றினை நகர்மன்றத் தலைவர் அவர்கள் நட, துணைத் தலைவர் முன்னூற்றி மூன்றாவது கன்றினை நட்டார்கள். 

அடுத்த கன்றினை புதுகைத் கணினித் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் கவிஞர் நிலவன்  நட உறுப்பினர்கள் அடுத்தடுத்த கன்றுகளை நட்டனர். திரு.பொன்.கா அவர்கள் கன்றினை நட்டவுடன் அவசரப் பணி நிமித்தம் விடைபெற்றார். 

கோவையில் இருந்து வருகைதந்து சிறப்பித்த கவிஞர் பூபாலன் அவர்களும் ஒரு கன்றினை நட்டார்கள். 

வருகை தந்து சிறப்பித்த அனைவர்க்கும் நன்றிகள் 

சொந்த  அலுவல்களின்  காரணமாக நான்  நிகழ்வின்  ஏற்பாடுகளில் முழுமையாக ஈடுபட முடியவில்லை. 

வெள்ளை டி ஷர்டில் ஒரு புதிய நண்பர் வந்திருந்தார். யார் என்று அறிவதற்குள்ளேயே  விடைபெற்றுவிட்டார். மேலும் ஒளிப் பதிவாளர் ஒருவர் வருகிறேன் என்று சொல்லியிருந்தார். தொடர்ந்து பேசி  வருகையை உறுதி செய்ய முடியாத குற்ற உணர்வும் இருக்கிறது. 

இந்தக் குறைகள் ஐம்பதாம் நிகழ்வில் இருக்காது. 

குடும்பத்தோடு வந்திருந்த அனைவருக்கும், குழந்தைகளோடு வந்திருந்த சகோ அமிர்தா தமிழுக்கும்,  ஒளிப்பதிவாளர் செல்வாவுக்கும் நன்றிகள். 

வாசிக்கும் உங்களுக்கும் நன்றிகள்! 


அன்பன் 
மது 

Comments

 1. தொடரட்டும் தொண்டுள்ளங்களின் தொண்டுகள்
  தமிழ் மணம் 1

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் தோழர்

   Delete
 2. விதைத்துக் கொண்டே இருங்கள்
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் தோழர்

   Delete
 3. அன்புள்ள அய்யா,

  இயற்கையுடன் கூடிய இந்தக் காதலர் தினம் மறக்க முடியுமா?
  மண்ணில் இந்தக் காதல் வாழ்க!

  விதை(க்)கலாம் அமைப்பு இருபத்தி ஐந்தாவது நிகழ்வை எட்டி வெற்றியுடன் செயல்பட்டுச் சமதாயத் தொண்டு செய்து கொண்டிருக்கும் இளைஞர் அணிக்குப் (வயது பொருட்டல்ல) பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  புதுகையின் சட்ட மன்ற உறுப்பினர் அவர்களுக்கும் நகர்மன்றத் தலைவர் அவர்களுக்கும் நகர்மன்றத் துணைத் தலைவர் அவர்களுக்கும் புதுகைத் கணினித் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் அவர்களுக்கும் கோவை கவிஞர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  விதை(க்)கலாம் தொண்டு தொய்வின்றித் தொடரட்டும்.

  நன்றி.

  த.ம. 3

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் தோழர்

   Delete
 4. பாராட்டும் வாழ்த்துகளும்..!
  த ம 4

  ReplyDelete
 5. எதிர்காலத்தை தமிழக தலைவர்கள் தோண்டி புதைத்து கொண்டிருக்கும் போது நல்ல எண்ணம் கொண்ட உள்ளங்கள் விதைக்கலாம் மூலம் எதிர் காலத்தை ஒளிரச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறது என்பதை நினைக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களின் முயற்சிகளுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் விதைக்கலாம் குழுவினருக்கு .அருமையான விஷயம் ..உங்கள் பதிவை பசுமை விடியல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன் .
  தொடரட்டும் இத்தகைய நற்பணிகள்

  ReplyDelete
 7. விதைக்கலாம் அமைப்பின் இயற்கை காதலுக்கு வாழ்த்துகள்..இது மற்றவருக்கும் தொற்றிக்க்கொள்ளட்டும் என்றே ஆசைப்படுகிறேன். விதைக்கலாம் அமைப்பினர் அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

  ReplyDelete
 8. விதைக்கலாம்....விதைத்துக் கொண்டே இருங்கள் தொடர்க தங்கள் எல்லோரது நற்பணிகளும். இப்படியான அரிய பணிகள் செய்யும் தங்கள் குழுவினர் அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்...

  ReplyDelete
 9. விதைக்கலாம் என்ற அமைப்பு வேரூன்றி வளர்ந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது !

  ReplyDelete

Post a Comment

வருக வருக