ஒரு தமிழனின் அமெரிக்க கோவில் அனுபவம் !

சிறப்பு வகுப்பில்  இருக்கும்  பொழுது  ஒரு  அலைபேசி  அழைப்பு! எதிர்பாரா  அழைப்பு  சீனு. சரியாக  தேர்வு நேரத்தில்  பலரும்  பயன்பெறும்  வகையில்   ஒரு  அசத்தல்  பதிவை  எழுதிவர் பதிவின்  பின்னூட்டத்தை  அவரது  வலையில்  தருமுன்னே  அமேரிக்கா  சென்று விட்டார்!

டெக்ஸ்சாஸில்  இருக்கும்  அவரின் ஒரு  பதிவை  இங்கே  பகிர்கிறேன்.
அமெரிக்கா வந்து சேர்ந்த கதையை சாவகாசமாக எழுதுகிறேன். அதைவிடவும் சுவாரசியமான கதை ஒன்று இருக்கிறது. நமக்கு மிகவும் வேண்டப்பட்டவர்களைப் பற்றிய கதை.

அமெரிக்காவில் இப்போது தான் சிவராத்திரி ஆரம்பித்திருக்கிறது. அலுவலகத்தில் இருந்து கிளம்பும் போதே கிருபா கேட்டார் 'ஸ்ரீனு இன்னிக்கு சிவராத்திரி கோவிலுக்கு போவோமா' என்று. விமானக் களைப்பே அடங்கியிருக்கவில்லை. அதற்குள் ஊர் சுற்றவா? எப்போது போய் சாயலாம் என்ற மனநிலையில் இருப்பவனிடம் வந்து கோவிலுக்கு போலாமா என்றால் என்ன பதில் வரும். அதையே தான் கூறினேன். சரி என்று கூறிவிட்டார். முதல்முறை கோவிலுக்கு அழைக்கிறார் மறுப்பதா என்று வேறு ஒரு எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது. ஆனாலும் தூக்கம் முக்கியமாயிற்றே. ஆனாலும்... கொஞ்சம் தெம்பை வரவைத்துக்கொண்டு சரி போலாம் கிருபா என்றேன்.

'ஸ்ரீனு ரொம்பலா எதிர்பார்த்து வராதீங்க, நம்ம ஊர் கோவில் மாதிரிலாம் இருக்காது' என்றார். அவர் கூறியதைப் போலவே அது ஒரு கல்யாண மண்டபம் போல் தான் இருந்தது. ஆனால் சரியான கூட்டம். சிவராத்திரிக் கூட்டம்.

டெக்ஸாசில் பனிக்காலம் முடிந்து வசந்தகாலம் ஆரம்பித்திருக்கிறது. சரியான காற்று. சரியான காற்று என்றால் அம்மியை அசைத்துப் பார்க்கும் காற்று. குளிர் வேறு. இதற்கு மத்தியில் அந்தப் பெருங்காற்றில் பெரிய கூட்டம். தமிழ் தெலுங்கு மலையாளம் கொஞ்சம் ஹிந்தி இவற்றிற்கு மத்தியில் அதிக ஆங்கிலம்.

'ஸ்ரீனு செருப்ப இங்க கழட்டிப் போடனும்' என்றார் கிருபா. அமெரிக்கா வாரீங்க, உங்க சைஸ்க்கு செருப்ப தேடி அலைய முடியாது நல்ல செருப்பா வாங்கிட்டு வாங்க என்று அனுபவஸ்தர்கள் கூறியதால் செருப்பின் விலை கொஞ்சம் கூடிவிட்டது. ஆனாலும் இந்திய மனநிலை என்னை விட்டு அகலவில்லை. ஒரு பெருத்த தயக்கத்திற்குப் பின் செருப்பை கழட்டி 'பகவானே எவனும் தூக்கிரக்கூடாது' என்ற வேண்டுதலுக்குப் பின் குளிர்ந்த அந்த தரையில் கால் நடுங்க க்யூவில் ஐக்கியமானேன். குளிர் மெல்ல தலைக்கேறியது. கூட்டமும்.
அதேநேரத்தில் அங்கிருந்த ஒரு அம்மா புதிய அறிவிப்பைக் கூறினார். 'கொழந்தைங்க பெரியவங்களுக்கு தனி க்யூ. சீக்கிரம் உள்ள போகலாம்' என்றார். கூட்டம் கூட்டமாக கூட்டம் கலைந்து புதிதாக உருவான அந்த க்யூவுக்குள் நுழைந்தது. அவசர அவசரமாக எங்களைக் கடந்து பலரும் கோவிலினுள் நுழைந்தார்கள். குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மட்டுமான க்யூவில் அவர்கள் மட்டும் நுழைகிறார்களா என்று பார்த்தால் 'ம்கூம்' கூட வந்தவர், அவருக்குக் கூட வந்தவர், அவருக்குக் கூட வந்தவர் என யார் யாரோ உள்ளே நுழைந்து கொண்டிருந்தார்கள். நுழைந்தவர்களில் பத்து பேரில் எட்டு பேர் ஆஜானுபாகுவான ஆரோக்கியமான முப்பத்தைந்து நாற்பதுகள். செம கடுப்பு. எங்களுக்கும் தானடா குளிருது, எங்களுக்கும் தாண்டா நேரமாகுது என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே ஒரு பெரிய கூட்டம் சிபாரிசின் பேரில் உள்ளே நுழைந்தது. அடப்பாவிகளா என வாயைப் பிளக்கும் போதுதான் ஒன்று ஞாபகத்திற்கு வந்தது கோவில் மட்டும் தான் அமெரிக்காவில் இருக்கிறது. கோவிலில் இருப்பவர்கள் மொத்தமும் இந்தியர்கள் தானே!

பின் குறிப்பு 1: எதிர்பாராத அதிர்ச்சியாக செருப்பு பத்திரமாக இருந்தது. ஆண்டவன் இருக்காண்டா கொமாரு.

பின் குறிப்பு 2 : சிபாரிசு பெற்றுச் சென்றவர்கள் அந்தக் குழந்தைகள் க்யூவில் மாட்டிக்கொள்ள அவர்களுக்கு முன் நான் ஆண்டவனைப் பார்த்துவிட்டேன் என்பது தட் ஆண்டவன் அமெரிக்காலயும் இருக்கான்டா கொமாரு...

Comments

 1. அனுபவம் புதுமை என்று சீனு பாடுவாரோ..!
  த ம 2

  ReplyDelete
  Replies
  1. அந்தப் பாடல் அவருக்குப் பிடிக்கும்தான்...
   ஆனால்
   இப்படிப் பாடுவாரா
   இல்லை ரஹமானை துணைக்கு அழைப்பாரா தெரியவில்லை

   Delete
 2. எங்கே சென்றாலும் நம்ம புத்தி மாறவே மாறாது :)

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் தோழர்
   பண்படவும்
   பண்படுத்தவும்
   தேவைஇருக்கிறது

   Delete
 3. பேஸ்புக்கில் பார்த்தேன் அண்ணா..//கோவில் மட்டும் தான் அமெரிக்காவில் இருக்கிறது. கோவிலில் இருப்பவர்கள் மொத்தமும் இந்தியர்கள் தானே// இதைப் போன்ற நினைவூட்டல்கள் அதிகம் இருக்கும்

  ReplyDelete
  Replies
  1. இதே போல் நீங்கள் ஒரு பதிவு எழுதியிருந்ததும் நினைவிருக்கு

   Delete
 4. ஹா ஹா... ஆண்டவன் அமேரிக்காவிலயும் இருக்கான்டா கொமாரு.... :)

  ReplyDelete
  Replies
  1. செமை கலாய் இல்லையா ஸ்பைஜி

   Delete
 5. முகப்புத்தகத்திலேயே படித்தேன். இங்கேயும்....

  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மது.

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் வெங்கட் ஜி

   Delete
 6. நம்மவர்களை எங்கு சென்றாலும் மாற்ற முடியாது போலிருக்கிறது நண்பரே

  ReplyDelete
  Replies
  1. மாற்ற வேண்டியது நாம் தான் தோழர்

   Delete
 7. செருப்பை வைத்துதான் ஆண்டவன் இருப்பதை தீர்மானிப்பதா ?
  தமிழ் மணம் 4

  ReplyDelete
  Replies
  1. சாமி இதற்கு பெயர் தான் தலைமுறை இடைவெளி..

   Delete
 8. அவருக்கு டெக்ஸாஸே குளிருதா? ஆமா ஆமா எல்லாமே ரிலேடிவ்தானே?

  நானும் கோயில் எல்லாம் போவேன்ங்க. என்ன பிரசாதம் என்கிற பேரில் ஃப்ரீ சாப்பாட்டுக்காகத்தான். வேறென்ன? அப்புறம், கோயில் சினிமாக்கு எல்லாம் போனால் கொஞ்சம் நம்ம மக்களைப் பார்த்ட்துட்டு "ஹோம் சிக்னெஸ்" போயிடும்.

  மற்றபடி நானும் கடவுளை வணங்கி ஏதாவது வரம் வாங்கிடுவோம்னு ட்ரை பண்ணியிருக்கேன். ஆனா ஒவ்வொரு முறையும் தோல்விதான். Always feel that that's ridiculous to pray God and ask him to help me? எப்படியெல்லாம் மனிதன் தன்னைத்தானே ஏமாத்திக்கிறான்? "கடவுள்" என்கிற கான்சப்ட்தான் ஆறாவது அறிவு உள்ள மனிதனை சிந்திக்கவிடாமல் செய்வது. விலங்குகள் எல்லாம் கோயில், குளம், பகவான், பக்தினு அலையாமல் நிம்மதியா இருக்குதுக பாருங்க. ஆறாவது அறிவு மனிதனை இன்னும் முட்டாளாக்குகிறதா? What if humans had only five senses only? World would have been a better place? or Not? :)

  ***தங்கள் வருகை எனது உவகை...***

  இதுக்கு எக்ஸப்ஷன் எல்லாம் இல்லையா, மது? :)))

  ReplyDelete
  Replies
  1. அப்படி ஒன்றும் எக்ஸ்செப்சன் இல்லை ஜி

   Delete
 9. ஒரு ஆசிரியராய்
  இதுகுறித்து சிந்தித்துப் பார்க்கையில் அதீதமாய் அழுத்தி வளர்க்கிறோம் அவ்வளவுதான்

  எங்கே ஒழுக்கத்தை வளர்க்க வேண்டுமோ அங்கே செய்வதில்லை

  மேலும் ஒரு உபரித் தகவல்

  எழுபது எண்பது வாக்கில் காணமல் போன ஒரு பதவி கண்டெக்டர்.

  ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு கண்டெக்டர் இருப்பார்.

  இவர் பணி வகுப்பறையில் இருந்து மைதானதிற்கோ, அல்லது மைதானத்தில் இருந்து வகுப்பறைக்கோ செல்லும் மாணவர்களை வரிசையில் நிற்க வைத்து அழைத்துச் செல்வது!

  இப்படி ஒரு பதவியே இல்லை இப்போது.

  ஒருவேளை இந்தப் பதவி தொடர்ந்து, கண்டெக்டர்களுக்கு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை செய்யும் வாய்ப்பு வழங்கப் பட்டிருந்தால் காட்சிகள் மாறியிருக்குமோ என்று தோன்றியது.

  சம்பவம் இரண்டு

  லண்டன் மாநகர்

  செய்தித்தாள் வழங்கும் இயந்திரம் முன்னே ஒரு வரிசை.பின்னாட்களில் பெரும் தலைவராக வந்த ஒருவர் அந்த வரிசையில்.

  இவருக்கு முன்னே நின்றவர்க்கு ஒரு தாளுக்கு பதில் இரண்டுதாட்கள் வழங்குகிறது இயந்திரம்.

  அவரோ அதை மீண்டும் இயந்திரத்தில் திரும்ப வைக்கிறார்!

  நம்ம தலை சொல்றார் two hundred years of good governance has done this!

  ஒரு பொறுப்புள்ள நல்ல அரசாங்கம் அவசியம்.

  காட்டான்களாகவே தொடர்கிறார்கள் (சமயத்தில் நானுமே!)

  நன்றிகள் வருண்
  உவகைதான்

  ReplyDelete
  Replies
  1. அப்புறம் அந்த தலைவர் யார்னு கெஸ் பண்ணுங்க பார்ப்போம்

   Delete
 10. அன்புடையீர் வணக்கம்! என்னுடைய வலைத்தளத்தில் ‘தொடரும் தொடர் பதிவர்கள்’ என்ற வலைப்பதிவினில் உங்களது வலைத்தளம் பற்றி குறிப்பிட்டுள்ளேன்.

  ReplyDelete
 11. சீனு அமெரிக்கா போகும் போது சொன்னேன் உங்க அனுபவத்தை எழுதுங்க சீனு. உங்க நடைல!! என்று..அதுக்குள்ள பதிவு போட்டுட்டாரா? எங்க பெட்டிக்கு வரவே இல்லையே...இந்த ஃபீட்பெர்னர் ...உங்கள் இந்தப் பகிர்வும் பெட்டிக்கு வரவில்லை என்ன ஆச்சோ..

  ஆமாம் சீனு அங்க கோயில்தான் அமெரிக்கா ஆனா நடத்துபவர்கள் இந்தியர்கள் என்பதால் அப்படியே. நீங்க அங்க இந்தியர்கள் ஏரியாவுக்குப் போனீங்கனா இந்தியாவ மிஸ் பண்ணமாட்டீங்க. இந்த கொமாரு டயலாக் நிறையவே வரும் பாருங்க..ஹஹஹ்

  எஞ்சாய் சீனு

  கஸ்தூரி மிக்க நன்றி பகிர்விற்கு.

  ReplyDelete

Post a Comment

வருக வருக