நோட்டா என்னம்மா இப்புடி பண்ணுறீங்களேமா

நோட்டா வாக்குகள் ஓர்  ஆய்வு -தின மலர் - பகிர்வு ஷாஜகான் புது தில்லி

தினமலரில் வந்த செய்தி


நோட்டாவுக்கு வாக்களிக்கப்போவதாக சொன்னவர்களை, அதனால என்ன பிரயோஜனம்.. செல்லாத ஓட்டு மாதிரித்தானே நோட்டா" என்று கிண்டலடித்தவர்கள் பலர் ஆனால் சில தொகுதிகளில் அந்த நோட்டா, வெற்றி தோல்விகளை தீர்மானித்திருக்கிறது
— சென்னை அண்ணா நகர் தொகுதியில் திமுக வென்றுள்ளது. இத் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் கோகுல இந்திரா, 1687 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்தத் தொகுதியில் நோட்டாவுக்கு கிடைத்திருப்பது 4048 ஓட்டு.
— விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், காட்டு மன்னார்கோயில் தொகுதியில் 87 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இத் தொகுதியில் நோட்டாவுக்கு 1025 வாக்குகள் விழுந்திருக்கின்றன
— கரூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி 441 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கிறது. இங்கு நோட்டாவுக்கு கிடைத்த ஓட்டுகள் 3595.
— ஆவடியில் தி.மு.க., வேட்பாளர் நாசர், 1395 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வி . இங்கு நோட்டாவுக்கு கிடைத்த ஓட்டுக்கள் 4994
— பர்கூர் தொகுதியில் தி.மு.க., கோவிந்தராசன் 982 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இங்கு நோட்டாவுக்கு 1392 ஓட்டுக்கள் கிடைத்துள்ளது
— சிதம்பரம் தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார் 1507 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இங்கு நோட்டாவுக்கு கிடைத்த ஓட்டுக்கள் 1724
— கிணத்துக்கடவு தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் குறிஞ்சி பிராபகரன் 1332 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இங்கு நோட்டாவுக்கு கிடைத்த ஓட்டுக்கள் 3884.
— கோவில்பட்டி தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் சுப்ரமணியன் 428 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. இங்கு நோட்டாவுக்கு கிடைத்த ஓட்டுக்கள் 2350.
— மொடக்குறிச்சி தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் சச்சிதானந்தம் 2222 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இங்கு நோட்டாவுக்கு கிடைத்த ஓட்டுக்கள் 2715
— ஒட்டப்பிடாரம் தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி 491 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. இங்கு நோட்டாவுக்கு 2612 ஓட்டுக்கள் கி டைத்தன.
— பெரம்பூர் தொகுதியில் தி.முக., கூட்டணியில் போட்டியிட்ட தனபாலன், 519 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இங்கு நோட்டாவுக்கு 3167 ஓட்டுக்கள் கிடைத்தன.
— பேராவூரணியில் தி.மு.க., வேட்பாளர் அசோக் குமார் 995 ஓட்டுக்கள் வித்தியாசத்தில்தோல்வியடைந்தார். இங்கு நோட்டாவுக்கு 1294 ஓட்டுக்கள் கிடைத்தன.
— ராதாபுரம் தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் அப்பாவு 49 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இங்கு நோட்டாவுக்கு 1821 ஓட்டுக்கள் கிடைத்தன.
— தென்காசி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட பழனி நாடார் 462 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இங்கு நோட்டாவுக்கு 3391 ஓட்டுக்கள் கிடைத்தன.
— திருப்போரூர் தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் விஸ்வநாதன் 950 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இங்கு நோட்டாவுக்கு 2116 ஓட்டுக்கள் கிடைத்தன.
— தி.நகரில் தி.மு.க., வேட்பாளர் எஸ்.என்.கனிமொழி 3155 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இங்கு நோட்டாவுக்கு 3570 ஓட்டுக்கள் கிடைத்தன.
— விருகம்பாக்கம் தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் 2333 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இங்கு நோட்டாவுக்கு 3897 ஓட்டுக்கள் கிடைத்தன.
இப்படி நோட்டாவுக்கு விழுந்த வாக்குகள், கட்சிகளுக்கு மாறியிருந்தால் முடிவுகளும் மாறியிருக்கும்.
ஆக, இந்தத் தேர்தலில் நோட்டாவும் வாக்குளைப் பிரித்து, வெற்றி தோல்வியை தீர்மானித்திருக்கிறது.
*
முதல் பத்தியை பார்ப்போம்.
செல்லாத ஓட்டுகளும் இதையேதானே செய்திருக்கும்?
ஓரிருவர் தவிர அது ஏன் பெரும்பாலும் திமுக வேட்பாளர்கள்தான் நோடாவினால் தோற்றார்கள்?
இந்த நோட்டா அதிமுகவுக்கு அல்லவா ஆதரவாகி விட்டது
நோட்டா வரம் என்றால், வேட்பாளர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதிகளில் அது என்ன சாதித்தது?
முன்னர் வாக்குச்சீட்டுகள் இருந்தன. செல்லாத ஓட்டுகள் விழுந்தன. இப்போது இயந்திரம். ஒரு பொத்தானை மட்டுமே அழுத்த முடியும். அது நோட்டாவாக இருந்திருக்கவும் வாய்ப்பு உண்டுதானே?


Comments

 1. நோட்டாவை இளைஞர்கள்தான் பெரும்பாலும் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் . அரசியலைப் பற்றி அரைவேக்காட்டுத்தனமான சிந்தனை அதன் காரணமாக இருக்கலாம். நோட்டாவைத் தேர்ந்தெடுப்பவர்களை விட ஓட்டு போடாதவர்கள் மேல் என்று சொல்லலாம். ஐந்து வருடம் ஆடியவர்களை மீண்டும் ஆட வைக்கக் காரணமாகி விட்டார்கள். இனிமேல் பிரச்சாரத்தில் நோட்டாவுக்கு ஓட்டுப் போடாமல் இருக்கவும் கட்சிகள் விழிப்புணர்வு கொடுக்க வேண்டும் போலிருக்கிறது.

  ReplyDelete
 2. உண்மைதான்... நோட்டா சில இடங்களில் வேட்டாகிவிட்டது

  ReplyDelete
 3. வருங்காலத்தில் நோட்டா வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் ஒரு முக்கியக் காரணியாக அமையும் என்று நம்புகிறேன்.

  ReplyDelete
 4. நோட்டோ உண்மையிலேயே பலமாற்றங்களை கொண்டு வந்து விட்டது தோழரே அடுத்த தேர்தலில் இதன் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் இதுவும் உண்மையே..
  தமிழ் மணம் 2

  ReplyDelete
 5. நோட்டா சிலரின் வெற்றியை பாதித்து இருப்பது உண்மைதான்! நாஞ்சில் மனோவும் இதை பகிர்ந்து இருக்கிறார்!

  ReplyDelete
 6. வேட்டான நோட்டா.....

  நோட்டாவில் இன்னும் சில மாற்றங்களும் செய்யப்படலாம்... பார்ப்போம்.

  ReplyDelete
 7. யாருக்குமே ஒட்டு இல்லை என்று எப்படி சொல்கிறார்கள்? நோட்டா போடுபவர்கள் அதிமுக,திமுக,மக்கள் நலக் கூட்டணி,பிஜேபி வேட்பாளர்களை பிடிக்கவில்லை என்பதனாலேயே நோட்டாவுக்கு வாக்களிப்பது நியாயமல்ல ஒரு சுயேச்சையையாவது பரிசீலித்து ஓட்டளித்து நோட்டவை தவிர்த்திருக்கலாம். கட்சிகள் சார்ந்துதான் ஓட்டளிக்க வேண்டும் என்ரூ ஏற்படுத்திக் கொண்ட எண்ணத்தின் விளைவே நோட்டா. சகாயமே நின்றாலும் நோட்டா ஒட்டு போடுவார்கள் நம்மவர்கள். தனி மனித தேவைகளை பூர்த்தி செய்பவர்களையே மக்கள் விரும்புகிறார்கள்.பொது தேவைகளை நிறைவேற்றுபவர்களையும் நேர்மையானவர்களையும் கண்டு கொள்வதில்லை.

  ReplyDelete
  Replies
  1. நானும் நோட்டா கருத்தை இறுதியில் மாற்றிக் கொண்டேந்தான் நீங்கள் சொல்லியிருப்பது போல். ஆனால் சுயேச்சைகளின் மீது நம்பிக்கை இல்லாமையால் தான் நோட்டா வாக்கு இட்டதாகவும் சிலர் சொன்னார்கள். ஏனென்றால் அவர்கள் வெற்றி பெற்றாலும் பின்னர் ஜெயிக்கும் கட்சி இல்லை எதிர்க்கட்சி சார்ந்து விடுவார்களே என்றும்....

   கீதா

   Delete
 8. நோட்டா வாக்குகள் இந்தத் தேர்தலின் முடிவுகளைப் பாதித்ததாகச் சொல்லப்படலாம். ஆனால் என்னைப் பொருத்தவரை நோட்டா ஓட்டுகள் இத்தனை வந்திருப்பதைப் பார்க்கும் போது அதுவும் இளைஞர்கள் தரப்பிலிருந்து, இளைஞர்கள், கட்சிகள், தலைவர்கள் என்று பார்க்காமல், தாங்கள் யதார்த்தத்தில் சந்திக்கும் பல ஊழல் பிரச்சனைகளைப் பிடிக்காமல் யார் ஆட்சிக்க்கு வந்தாலும் புரையோடிப் போன ஊழல்கள் இருக்கும் அது பிடிக்கவில்லை என்பதைச் சொல்லுவதாகவே எனக்குப்படுகிறது. அடுத்த தேர்தலுக்குள், இப்போது இருக்கும் நோட்டா வீக்காக இருப்பதால், நோட்டா பவர்ஃபுல்லானால் நிச்சயமாக அடுத்த தேர்தலில் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

  கீதா

  ReplyDelete

Post a Comment

வருக வருக