என்ன படிக்கிறார் மார்க் சக்கர்பெர்க்


ரபீக் சுலைமான்  அவர்களின் பதிவு
கொஞ்சம் படிங்க பாஸ்!
------------------------------------
இன்றொரு பிரபலமானவரைப் பற்றி எழுதுவதாக நேற்று சொல்லியிருந்தேன் இல்லையா? அதுவும் ஒருவருடத்தில் வாசிக்க வேண்டிய புத்தகங்களை முன்கூட்டியே வாங்கி, அவைகளை வாசித்து முடிப்பதற்கு முறையே கால நிர்ணயம் செய்து, படித்தபின் அந்தப் புத்தகங்களைப் பற்றி தனது கருத்துக்களையும் பதியும் அந்த நபர் வேறு யாருமல்ல!
.
.
.

.
.
பூமியின் மேற்பரப்பில் ஆளுக்கொரு மூலையில் இருந்து கொண்டு, இரவு பகல் என எந்த வேளையிலும் உலகத்திலுள்ள ஒவ்வொருவரையும் தொடர்பில் வைத்திருக்கும் இந்த ஃபேஸ்புக் எனும் சமூகவலைத்தளத்தினை வடிவமைத்த மார்க் ஸூக்கர்பெர்க் தான் அந்தப் பிரபலம்!
அவரின் இந்த வழக்கம் சென்ற ஆண்டில் ஆரம்பித்தது. ஆம், இரண்டு வாரத்திற்கு ஒரு புத்தகம் ஆக ஆண்டுக்கு 23 புத்தகங்கள் வாசிப்பது என்று முடிவெடுத்தார். பொதுவாக வாசிக்கும் நாமெல்லாம் அவரவர் சார்ந்திருக்கும் துறை சம்பந்தப்பட்ட புத்தகங்கள் வாங்குவதும் வாசிப்பதும் தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அவரின் புத்தகத் தேர்வு முறையும் வித்தியாசமானது. வியப்பிலாழ்த்தக்கூடியது.
உலகிலுள்ள மாறுபட்ட கலாச்சாரங்கள், நம்பிக்கைகள், வரலாறு மற்றும் தொழில்நுட்பம் இவையே அவர் தேர்ந்தெடுத்து வாசிக்கும் நூல்களின் பகுப்புகளாகும்.
இந்த மாதம் அவர் வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகம்
1. இஸ்லாமிய வரலாற்றாசிரியர் இப்னு கல்தூன். பதினான்காம் நுற்றாண்டில் வாழ்ந்தவர். தனது புரட்சிமிகு விஞ்ஞானப்பூர்வ அணுகுமுறையினால் வரலாற்றை ஆய்வு செய்தவர். நவீன வரலாற்றியல் மற்றும் சமூகவியலின் தந்தை என்றழைக்கப்படுபவர். இவர் எழுதிய The Muqaddimah' by Ibn Khaldun.எனும் நூல்தான் மார்க்கின் இந்த மாதத்திற்கான முதல் புத்தகம். முகாத்திமா எனும் அரபுச்சொல்லுக்கு அறிமுகம் என்று பொருள்.
மனிதகுல முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் காரணிகளைக் கண்டறிந்து சமூக ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் வழிகோல இந்த நூல் பெரிதும் உதவிபுரியும் என்று கூறியுள்ளார்.
எத்தனயோ கடினமான பணிகளுக்கிடையேயும், புதிய வரவாக வந்திருக்கும் அவரது மகளைக் கொஞ்சிக்குலாவும் இனிய நேரத்தையும் ஒதுக்கி ‘மார்க்’ வாசித்த / வாசிக்கவிருக்கும் அடுத்த புத்தகங்கள்.
2) 'The New Jim Crow' by Michelle Alexander
3) 'Why Nations Fail' by Daron Acemoglu and James A. Robinson
4) 'The Rational Optimist' by Matt Ridley
5) 'Portfolios of the Poor' by Daryl Collins, Jonathan Morduch, Stuart Rutherford, and Orlanda Ruthven
6) 'World Order' by Henry Kissinger
7) 'The Varieties of Religious Experience' by William James
8) 'Creativity, Inc.' by Ed Catmull
9) 'Sapiens' by Yuval Noah Harari
10) 'The Structure of Scientific Revolutions' by Thomas S. Kuhn
11) 'Dealing with China' by Henry M. Paulson Jr.
12) 'The Beginning of Infinity' by David Deutsch
13) 'The Better Angels of Our Nature' by Steven Pinker
14) 'Genome' by Matt Ridley
15) 'The End of Power' by Moisés Naím
16) 'On Immunity' by Eula Biss
17) 'The Idea Factory' by Jon Gertner
18) 'The Three-Body Problem' by Cixin Liu
19) 'Gang Leader for a Day' by Sudhir Venkatesh
20) 'The Player of Games' by Iain M. Banks
21) 'Orwell's Revenge' by Peter Huber
22) 'Energy: A Beginner's Guide' by Vaclav Smil
23) 'Rational Ritual' by Michael Suk-Young Chwe
- Rafeeq Sulaiman
பி.கு: பதிவை காப்பி/பேஸ்ட் செய்பவர்கள் புத்தகத்தின் பெயர்களை கவனமாக copy / paste செய்யவும் :P

Comments

 1. மார்க் இவ்வளவு படிக்றாரா

  ReplyDelete
 2. பாராட்டத்தக்க வேண்டிய முயற்சி. திட்டமிட்டுப் படிக்கும்போது இன்னும் அதிக மகிழ்வாக இருக்கும்.

  ReplyDelete
 3. அருமையான பதிவு

  இதோ மின்நூல் களஞ்சியம்
  http://ypvn.myartsonline.com/

  ReplyDelete
 4. யம்மாடியோவ்....பிரமிப்பு!

  பின் குறிப்பை ரசித்தோம்...ஹஹஹஹ்

  ReplyDelete

Post a Comment

வருக வருக