எதிக்ஸ்

கார்த்திக் முகநூலில் பல அசத்தல் பதிவுகளை செய்துவருபவர். சமீபமாய் கதைகள்! அதில் ஒரு கதை..

எழுத்தாளரின்  முகவரி 

“டாக்டர்! நாம பண்ரது தப்பில்லையா? “என்றான் டாக்டர் கதிர்.

“என்ன பண்ண சொல்ரீங்க? நமக்கு வேற வழியில்லை! “என்றார் டீன்.“யோசிங்க சார்! பிளாட்பாரத்துல படுத்திருந்த நாலு ஏழைகள் மேல் குடி போதையில் காரை ஏத்தி கொன்னுட்டு நெஞ்சுவலி, சுகர், பிரஷர்னு பொய் சொல்லி இங்கே அட்மிட் ஆயிருக்கிற கிளாமர் ஸ்டார் ரவி கிஷனுக்கு அட்மிட் போட்டது தப்பில்லையா? நம்ம தொழிலுக்கு விரோதமாக அநியாயத்திற்கு துணை போகலாமா? “

“என்ன பண்ணலாம் கதிர்? நாம அட்மிட் பண்ணலைன்னா வேற ஹாஸ்பிடல்ல பண்ணுவாங்க. கோர்டுக்கு போனாலும் பணத்தை வாரி இறைச்சு வெளிய வந்துருவான். சட்டம் அவ்வளவு பலவீனமா இருக்கு! “
“சட்டம்தான் அவனை தண்டிக்க முடியும்னு இல்லை.நாமளும் தண்டிக்க முடியும்.நீங்க ஒத்துழைத்தால்! “
“நாம என்ன பண்ண முடியும்னு நினைக்கிறீங்க? “
“என்ன வேணா! “என்று குரலில் அழுத்தம் கொடுத்தவன் “ரவிக்கு எங்க அடிபட்டிருக்கு? “என்றான்.
“ரெண்டு கையிலும் லைட்டா பிராக்சர்.சுகர், பிரஷர் நார்மலாத்தான் இருக்கு! “
“ரைட்! ஆபரேஷன் தியேட்டரை ரெடி பண்ண சொல்லுங்க! “
“எதுக்கு கதிர்? “
“இன்னும் ஒரு மணி நேரத்தில் தெரியும் “என்று புன்னகைத்தான்.
ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு கண் விழித்த ரவி கிஷன் பெட்டில் ஊன்றி எழ கைகள் இன்றி திடுக்கிட்டான்.

“ஸாரி ரவிகிஷன்! மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள்.விபத்துல கைல பிராக்சர் ஆகி சுகர், பிரசர் எல்லாம் எக்கச்சக்கமாக ஏறி விட்டது.உங்க உயிரை காப்பாற்ற வேறு வழியில்லாமல் கைகள் இரண்டையும் ரிமூவ் பண்ண வேண்டியதாக போச்சு! இனி இப்படியே வாழப் பழகுவதுதான் பெட்டர்.”

ரவி கிஷன் பெரும் குரலோடு அழத்துவங்கினான்.கதிர் இறுக்கமான முகத்தோடு வெளியே வந்த போது அடித்த காற்றில் மனம் இலேசானது.தூரத்தில் டீன் கட்டை விரலை தூக்கி காட்டினார்.தன் விரலால் தம்ஸ் அப் காட்டியவன் “தண்டிப்பதற்கு தனியாக கடவுள்னு ஒருத்தன் வருவான்னு காத்திருப்பது ஒல்டு ஸ்டைல்.தண்டனையை நாமே கொடுப்பது லேட்டஸ்ட் ஸ்டைல். “என்று மனதில் நினைத்துக் கொண்டான்.

Comments

 1. நல்ல சிறுகதை.... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மது.

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் தோழர்

   Delete
 2. சபாஷ்,சரியான முடிவு !

  ReplyDelete
  Replies
  1. வாங்க பகவானே

   Delete
 3. இது கதையாக இல்லாமல் சிலருக்கு இப்படி நடந்தால் பலருக்கும் நல்லது தோழரே...

  ReplyDelete
  Replies
  1. நடப்பதில்லை தோழர்

   Delete
  2. உண்மையில் டாக்டர் தவறு செய்துவிட்டார்.
   கொலையாளி நிலைக்கு அவரும் இறங்கிவிட்டார்.
   அவன் திமிர்,குடியில் செய்தால் இவர் நியாயத்தை காரணம் காட்டுகிறார்.

   தவறு யார் மீது ?
   சட்டத்தை சரியாக செயல்படுத்தாத நமது அமைப்பின் மீது. அதை ஆதரிக்கும் நம் மீதும் இருக்கிறது என்பதும் உண்மைதானே தோழர் ..

   படிக்க நன்றாக இருந்ததால் பகிர்ந்தேன்..
   அம்புட்டுதான்..
   கார்த்தி இதுபோல் பல கதைகளை எழுதியிருக்கிறார்.. நீங்களும் படிக்கலாம்.
   ஒவ்வொன்றும் வேறு வேறு களம்

   Delete
 4. அருமை யான கதை!

  ReplyDelete
 5. கதை என்பதால் சரிதான்...
  சட்டத்தை எல்லாரும் கையில் எடுப்பது தவறு...
  டாகடர் கொடுத்த தண்டனை ஏற்புடையது இல்லை...
  நம்முடைய சட்டத்தில் இருக்கும் ஓட்டகளை அடைத்தாலே போதும் குற்றம் செய்தவன் கண்டிப்பாக தண்டனை அடைவான்...
  கதை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete

Post a Comment

வருக வருக