நல்ல நிகழ்வு ஒன்று


நண்பர் நந்தன்ஸ்ரீதரனின்  பதிவு ... ஒரு  முன் கதையுடன் ..

அதீத சம்பளமும் அழுத்தமும்  ஒரு  ஐ.டி யில்பு திய இளைஞர் படையை உருவாக்கியிருப்பது நிதர்சனம். ஒரு  குழு வாழை என்ற அமைப்பைத் துவங்கி  அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்கு செயல்பட, சிலர்  இயற்கை வேளாண்மையில்  இறங்க புதுகையில் மௌன்ட் சயான் பொறியியல் கல்லூரியில் பயின்ற முன்னாள்  மாணவர்கள்    நாற்பது பேர் ஒன்றிணைந்து    நண்பா அறக்கட்டளை என்ற அறக்கட்டளையை நிறுவி நடத்தி வருகிறார்கள். 


எப்படி தெரிந்து கொண்டார்கள்  என தெரியாது நிழல் பதியம் பற்றி அறிந்து கொண்டு நண்பர் கார்த்திக்கை பயிற்சிக்கு அனுப்பி வைத்தார்கள். 

நிழல் திருநா அய்யா பற்றி அப்படித்தான் தெரியும். பல விசயங்கள் ஆச்சர்யகரமானவை. பயிற்சியில் இருக்கும் பங்கேற்பாளர்கள் குசும்பாக ஏதாவது ஒரு படத்தைப் பற்றி கேட்போம் என்பதற்காக வகுப்பின் பொழுதே கூகிளில் தேடி ஒரு  படத்தின் தலைப்பை பிடித்து விவரங்களை அலைபேசித்  திரையில் வைத்துகொண்டு ஒன்றுமே தெரியாதமாதிரி  அய்யா இப்படி ஒரு படம் வந்ததா என்று கேட்ட அடுத்த நொடியே படத்தின் முழு விவரத்தையும் சொல்வாராம் நிழல் திருநா! 

அவர் குறித்த ஒரு மகிழ்வான செய்தி இப்போது ..நந்தனின் பக்கத்தில் இருந்து ..


அரசு என்று அவரை அழைப்பேன். நிழல்திருநாவுக்கரசு என்றால் நண்பர்களுக்குத் தெரியும்..

அப்போது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலம்.. பாளையம் காலேஜ் என்பது உருப்படாதவர்களுக்கான காலேஜ் என்பது பொது விதி. எந்த ஒரு வருடத்திலும் கல்லூரி அதிகபட்சம் 150 நாட்கள்தான் நடந்திருக்கும். மற்ற கல்லூரிகளில் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக வெளியேற்றப்பட்ட மாணவர்கள் எல்லாரும் கூட அந்த கல்லூரியில் சேர்த்துக் கொள்ளப் படுவார்கள்.

அப்படியாகதான் சரவணகுமார் என்ற நண்பன் எனது மூன்றாமாண்டு கல்லூரி நாட்களில் வந்து சேர்ந்தான். அவன் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக கல்லூரியில் இருநது வெளியேற்றப்படவில்லை.. அவனது அப்பா பேங்க் ஆபீசர். அதனால் டிரான்ஸ்ஃபர். அதனால் அவன் நெல்லையில் இருந்து பாளையத்தில் வந்து கல்லூரியைத் தொடரும்படி ஆனது..

ரொம்ப முக்கியமான விஷயம் என்னவென்றால் அவனும் கதைகள் படிப்பான்.. அந்த காலத்து வாத்சல்யமான எல்லா எழுத்தாளர்களும் அவனுக்கும் பிடித்திருந்தது கூடுதல் நெருக்கத்தைக் கொடுத்தது. லீவு நாள் என்றால் அவன் வீட்டுக்குப் போய் விடுவேன்..

அப்போதுதான் அவன் ரோகாந்த் பற்றி சொன்னான். பதினைந்து வயதிலேயே ரோகாந்த்தின் கதை கணையாழியில் வந்திருந்தது என நினைக்கிறேன். பார்த்தால் ஜெயகாந்தன் போலவே அல்லது பாலகுமாரன் போலவே அவனும் பத்தாம்ப்பு முடித்ததும் ஜனசக்தியில் சேர்ந்து விட்டான்.. இப்படியாக ரோகாந்த் பெருமையோடே மெல்ல மெல்ல பின்னாட்களில் அறிமுகமானது நிழல் என்ற திரைப்பட இயக்கம்..

கல்லூரியெல்லாம் முடிந்த பல ஆண்டுகளுக்குப் பிறகு அரிஅரவேலன் புண்ணியத்திலா இல்லை யாருடைய புண்ணியத்தில் என்று தெரியவில்லை. முனை மடங்கி அட்டை மடங்கிய நிழல் பத்திரிக்கை ஒன்று என் கைக்கு வந்து சேர்ந்தது.. அதில் சினிமா பற்றி அவ்வளவு செய்திகள்..

பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வயது வளர வளர தேடித் தேடி படித்ததில் நிழல் பற்றி நிறைய புரிந்து கொள்ள முடிந்தது. தற்கொலைக் காலமான பத்தாண்டுகள் முடிந்தபின் சென்னைக்கு வருகிறான் நந்தன் ஶ்ரீதரன்..

இங்கு வருவதற்கு முன்பே திருநாவுக்கரசுவைப் பற்றி கேள்விப் பட்டிருந்தான். திருநாவுக்கரசு, ஜோ ஜார்ஜ், ரோகாந்த் இவர்களுடன்தான் நிழலின் நினைவும் அவனுக்குள் இருந்தது. பின்னர் இளஞ்சேரன் என நினைக்கிறேன்.. எதோ ஒரு நண்பர் அரசுவை நந்தனுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். அப்படியாக துவங்கியது ஒரு நட்பு. அது அரசுவுக்கு கூட நினைவில் இருக்காது என நினைக்கிறேன்..

அப்புறம் இரண்டு மூன்று முறை அலைபேசி வழி பேச்சு வார்த்தையோடு முடிந்து போனது அரசுவுடனான நட்பு.. ஆனாலும் நேரமும் காசும் கிடைக்கிறபோதெல்லாம் நிழல் பத்திரிக்கையை வாங்கி படித்தபடி இருப்பான் நந்தன்..

உண்மையில் அரசு என்ற எளிய மனிதனின் சினிமா ஞானம் அவன் நினைத்து நினைத்து வியக்கும் ஒரு விஷயம்.. இவ்வளவு அறிவை வைத்துக் கொண்டு இந்த மனிதன் என்னத்துக்கு வெறும் நிழல் என்ற பத்திரிக்கையுடன் நின்று போக வேண்டும் என்றே நந்தன் நினைத்தபடி இருப்பான்..

ஆனால் அரசு அத்துடன் நிறுத்தவில்லை. தன் அறிவை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் வகையில் நிழல் பயிற்சிப் பட்டறைகளை மாநிலம் முழுக்க நடத்தத் துவங்கினார். எனக்குத் தெரிந்து அத்தனை இளைஞ்ர்கள் அவரது பட்டறையில் படித்துத் தேறி இருக்கிறார்கள்.. அதிர்ஷ்டவசமாக ஒரு பயிற்சிப் பட்டறையில் ஒரு மணி நேரம் நானே நேரில் சென்று பார்த்திருக்கிறேன்..

வெறும் பத்து நாள் பயிற்சியிலேயே தன் மாணவர்களை குறும்படம் எடுக்கும் அளவுக்கு வளர்த்து விட்டிருக்கும் அவரது ஆற்றலை நான் ஆச்சரியத்தோடு கவனித்திருக்கிறேன்..

எனக்குத் தெரிந்து சினிமா பற்றி கொஞ்சமும் தெரியாத நிறைய பேர் திரைப்படக் கல்லூரி நடத்துவதை நான் கண்ணால் பார்ததிருக்கிறேன். சினிமாவில் எழுபது எண்பது வருட காலம் இருககிறார்கள் என்ற தகுதியை வைத்தே சில நிறுவனங்கள் திரைப்படக் கல்லூரி துவங்கி ஆறு மாத கோர்சுக்கு நாலரை ஐந்து லட்சம் வசூலித்ததையும் நான் பார்த்திருக்கிறேன். இதுமாதிரியானவர்களை விட மிக நிச்சயமாக ஐயாயிரம் மடங்கு உயர்ந்த அறிவுள்ளவர் அரசு..

நம்ம தம்பிகளிடம் அடிக்கடி சொல்லியபடி இருப்பேன். இத்தனை திரையறிவை வைத்துக கொண்டு என்ன செய்யப் போகிறார் திருநாவுக்கரசு..? ஒரு இன்ஸ்டிட்யூட் துவங்கி அடுத்த தலைமுறையை உருவாக்க வேண்டியதுதானே என்று..

அது அவரது காதுக்குப் போகும்முன் சரியாக முறைப்படி திரைப்படக் கல்லூரியை துவங்கிவிட்டார் நண்பர் அரசு..

நிழல் பதியம் திரைப்பட அக்காடமி என்பது அதன் பெயர்.. எனக்குத் தெரிந்து இத்தனை சிறப்புகளும் தகுதிகளும் உள்ள வேறு எந்த திரைப்படக் கல்லூரியும் தமிழகத்தில் இல்லை என்பேன்..

மற்ற பணக்காரர்களுக்கான நிறுவனங்கள் போல அல்ல இந்த அக்காடமி.. நம் மக்களுக்கான நியாயமான கட்டணங்களுடன் மிக மிக தகுதி உள்ள டெக்னிஷியன்களுடன் துவங்கப் பட்டுள்ளது இந்த அக்காடமி.. உள்ளூர் சினிமா முதல் உலக சினிமா வரை நீங்கள் புரிந்து கொண்டு சினிமா படிக்க சரியான நிறுவனம் என் நண்பர் அரசுவின் நிறுவனம்..

தம்பிகள். நண்பர்கள்.. சினிமாவை கற்று சிறக்க விரும்புபவர்கள் அனைவருக்கும் நான் பரிந்துரைக்கும் அக்காடமி இதுதான்..

நான் சொல்வதை விட மிகச் சிறப்பாக ஜனா அண்ணன் என நான் அழைக்கும் இயக்குனர் எஸபி ஜனநாதன் அரசுவின் இந்த அக்காடமி பற்றி மிகச் சிறப்பாக சொல்லி இருக்கிறார்..

ஆகஸ்ட்டு ஒன்றாம் திகதியிலிருந்து இந்த நிறுவனம் துவங்கப் போகிறது. உண்மையான சினிமாவை கற்றுக் கொள்ள விரும்பும் அனைத்து டெக்னிஷியன்களும் தேடிப் போக வேண்டிய நிறுவனம் இது..

இணையப் போகும் தம்பிகள் அனைவருக்கும் எனது மனப் பூர்வமான வாழ்த்துகள்..

நண்பர் அரசுவுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்..

கீழே நிழல் பதியம் திரைப்பட அக்காடமி பற்றி ஜனா அண்ணன் பேசிய வீடியோவின் லிங்க்..
https://www.facebook.com/nizhalpathiyamfilmacademy/videos/162217194197088/?__mref=message_bubble

Comments

  1. நல்லதொரு ஆரம்பம... வாழ்த்துகளும் பாராட்டுகளும்....

    ReplyDelete
  2. புதிய முயற்சியில் களம் இறங்கும் அனைவருக்கும் வாழ்த்துகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  3. மிகச் சிறந்த மனிதர் ஒருவர் தனது அடுத்த முயற்சியில் வெற்றி பெற வாழ்த்துக்கிறேன்.

    ReplyDelete
  4. வணக்கம்
    நானும் அவர்களுக்கு வாழ்த்து மாலைகளை தூபுகிறேன் த.ம 1
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஆயுதப்பூ சிறுகதை நூல் வெளியீடு.-மலேசியா-சிங்கப்பூர...:
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. விடா முயற்சி வெற்றி தரும்! நிழல் பலருக்கு நிழல்கொடுக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. புதிய முயற்சியில் களம் இறங்கும் இளைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இதை பகிர்ந்த உங்களுக்கும் நன்றி. அந்த இளைஞர்களுக்கு விருப்பம் இருந்தால் எனது தளத்தில் பதிவிற்கு கீழாகவோ அல்லது வலது புறமாகவோ விளம்பரமாக இடுகிறேன் இலவசமாகத்தான். அவர்களிடம் கேட்டு இமெயில் அனுப்புங்கள்

    ReplyDelete

Post a Comment

வருக வருக