அது ஒரு கனாக் காலம்

முகநூல் பகிர்வு நன்றி கார்த்திக் கார்த்திக் மற்றும் ஷான்டிராவலர்

1936 ஹாக்கி அணியின் சோதனை காலமாக மாறியது. பெர்லின் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள பணத்தை தயார் செய்து செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது.



இந்திய அணி கப்பலில் போக 50000 வரை செலவு பிடிக்கும். அவர்கள் பலரிடம் ஸ்பான்சர் கேட்டுச் சென்றனர். காந்தி இந்த ஹாக்கி பொருள் என்பது என்னவென்று கேட்டாராம், அன்றைய அரசியல் சூழல் அப்படி.
டாட்டா பிர்லா போன்றோர் உதவினர். பெரும் கடல் பயணத்திற்கு பின் ஒருவழியாக பெர்லினை சென்றடைந்தார்கள்.
அன்று வரை தோற்கடிக்கவே முடியாத பலம் வாய்ந்த இந்திய அணி பயிற்சி போட்டியில் ஜெர்மனியிடம் 1-4 என அதிர்ச்சி தோல்வியுற்றது.
இவர்கள் ஆட்டம் அடங்கிவிட்டது என மற்றவர் எண்ண தயான் தன் அணியுடன் பலவீனத்தை ஆலோசித்தார்.
தங்கள் வலது பக்க ஆடுநபர் சரியாக அமையவில்லை என்பதை உணர்ந்தவர்கள் டாரா என்பவரை அழைத்து வர கேட்டுக் கொண்டார். முதலாவதாக விமானத்தில் பறந்து வந்தவர் அவர் மட்டுமே.
அதன் பின்னர் நடைபெற்ற போட்டிகளில் இந்தியா தொடர் வெற்றி கொண்டு இறுதி போட்டிக்குள் நுழைந்தது.
இந்திய ஹாக்கி மந்திரவாதியின் மந்திரஜாலங்களை காண அரங்கத்திற்கு வாருங்கள் என்ற போஸ்டர் பெர்லின் தெருவெங்கும் ஒட்டப்பட்டது.
இந்திய ஹாக்கி மந்திரவாதியின் மந்திரஜாலங்களை காண அரங்கத்திற்கு வாருங்கள்.
ஜெர்மனியின் ஆதிக்கம் நிறைந்த அந்த ஒலிம்பிக் போட்டி நாசி ஒலிம்பிக்(Nazi Olymbic) என அறியப்பட்டது.
ஏற்கனவே பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்திதால் ஜெர்மன் அணி மிக வலுவான மனநிலையில் இருந்தது.
ஹிட்லர் தன் நாட்டு ரசிகர்களோடு ஆட்டத்தை ஆர்வத்தோடு கவனிக்க வந்திருந்தார்.
அன்றும் ஆகஸ்ட் 15. இந்தியாவின் அதிகாரப்பூர்வ மற்ற மூவர்ண கொடியை வணங்கி களத்தில் வீரர்கள் இறங்கினர்.
போட்டி துவங்கியதும் இந்திய அணி பெரும் ஆக்ரோஷத்தை சந்தித்தது. ஜெர்மனி தனது முதல் கோலை பதிவு செய்தது, ரசிக ஆரவாரங்கள் மண்ணை பிளந்தன.
சுற்றி வளைப்பட்ட தயான் எவ்வளவு முயன்றும் முதல் பாதியில் சற்று காட்டுத்தனமான கோல்கீப்பரால் அவர் பல் பறி போனது தான் மிச்சம்.
ஜெர்மனி வீரர்களின் உடல் வலிமை சிறப்பாக இருந்தது. இந்தியர்கள் வலிமையானவர்கள் அல்ல என்ற கூற்றை ஹிட்லர் விரும்பியதும் ஒரு காரணம்.
இந்தியர்களின் வாழ்வா சாவா போராட்டமாக இரண்டாவது பாதி தொடங்கியது. தயான் சந்த் தனது காலணிகளை கழற்றி வீசி வெற்று கால்களோடு களத்தில் இறங்கினர்.
நீங்கள் ஹாக்கி விளையாட்டை கவனித்திருந்தால் காலுறை உள்ளே பலமான அட்டையை பொருத்திருப்பார்கள்.
அது மட்டையை வீசும் வேகத்தில் கால் எலும்புகள் உடையாமல் வீரர்களை பாதுகாக்கும், அதுவும் அப்போதைய காலத்தில் மாற்று வீரரெல்லாம் அனுமதிக்க மாட்டார்கள்.அடிபட்டால் அவ்வளவுதான்.
ஆனால் அந்த நிமிடத்திலிருந்து தான் போட்டி சூடுபிடித்தது. இந்திய அணி ஒரு நேர்த்தியான ஹாக்கி விளையாட்டை ஜெர்மனுக்கு சொல்லி தர விரும்பியது.
புராதாண இந்திய ஹாக்கி ஒன்று அங்கே அரங்கேறியது. பந்து லாவகமாக ஜெர்மன் வீரர்களை தாண்டி இலக்கை சென்றடைந்தது.
தயான் சந்த் தன் மந்திர ஜாலத்தை பந்தாடினார். தொடர்ச்சியாக ஹாட்ரிக் கோல்கள் அடித்து ஜெர்மன் வீரர்களை மிரள வைத்தார், போட்டி முடிவடிகையில் இந்தியா 8 கோல்கள்.
ஜெர்மனி அடித்த ஒரு கோல் தான் பெர்லினின் நடைபெற்ற மொத்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு எதிராக அடிக்கப்பட்ட ஒட்டுமொத்த கோல் எண்ணிக்கை.
திருடி விட்டு மாட்டிக் கொண்ட குழந்தை போல ஹிட்லர் முகம் மாறியிருந்தது. 50000 ரசிகர்களும் ராணுவ அமைதியில் அரங்கத்தை விட்டு வெளியேறினர்.
மிரண்டு போயிருந்த ஹிட்லர் தயான் சந்த்யை நேரில் சந்தித்து உனக்கு ஜெர்மன் நாட்டுரிமை அளிக்கிறேன், ராணுவத்தில் உயர் பதவியும் தருகிறேன் எங்கள் நாட்டுக்காக விளையாடு என்றார்.
தயான் சந்த் என்ன சொன்னார் தெரியுமா. “நான் ஒரு ஹாக்கி வீரன் தான், ஆனால் அதற்கு முன்பிருந்தே ஒரு இந்திய ராணுவ வீரன்” என்று சிரித்துக் கொண்டே சொன்னாராம்.
அவரது சூரத்தனமாக ஆட்டத்தை பார்த்து வியந்த ஹிட்லர் தயான் சந்தின் மட்டையை விலைக்கு வாங்க விரும்பினாராம்.
ஜெர்மன் பத்திரிக்கைகள் இந்திய ஹாக்கி அணியை இதுபோல் உலகின் தலைசிறந்த நேர்த்தியான அணி இனிமேல் உருவாக போவதில்லை,தயான் சந்த் யை போன்ற ஆட்டக்காரரும் என்றது.விக்டோரியா மகாராணியின் கைத்தடியை ஹாக்கி மட்டையாகமாற்றி ஒரு கோல் அடித்து அசத்தியவர் தயான்.#இன்று அவர் பிறந்த தினம்!
நன்றி Shantraveller!

Comments

  1. தயான் சந்த் புகழ் போற்றுவோம் !
    ஹாக்கியில் மட்டுமே முதலிடத்தில் இருந்த இந்தியா இன்று அதயும் இழந்து நிற்கிறது ,இதுதான் வளர்ச்சி :)

    ReplyDelete
  2. நல்லதொரு பகிர்வு. நானும் முகப்புத்தகத்தில் படித்தேன்....

    ReplyDelete
  3. தயான்சந்த் அறிமுகத்திற்கு நன்றி. தங்கள் பதிவு மூலமாகவே அவரைப் பற்றி அறிந்தேன்.

    ReplyDelete
  4. சில நேரங்களில் சிலசாதாரண மனிதர்கள் வரலாற்றுத் தேரின் வடம் பிடித்து நகர்த்தி விட்டு தன்னடக்கமாய் இருந்து விடுகிறார்கள். தயான் சந்தும் அவர்களில் ஒருவர் என்பது உண்மை. யாரவது எடுத்துச்சொன்னால்தான் சாதனை மனிதர்களை பற்றி தெரிய வருகிறது. இல்லையேல் வரலாறே மறைக்கப்படுகிறது.

    ReplyDelete
  5. நல்லதொரு கட்டுரை....

    ReplyDelete
  6. வரலாற்று பதிவு, உலகையே ஆட்டிவைத்த இட்லரையே ஆட்டிவிட்ட ஆக்கி விளையாட்டு விரரின் பதிவை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. என் வலைத்தளம் பக்கம் வாருங்களேன் kavithaigal0510.blogspot.com

    ReplyDelete
  7. அருமையான பகிர்வு!

    ReplyDelete

Post a Comment

வருக வருக