வணக்கம்,
புதுகை தொல்லியல் ஆய்வுக் கழகம் மரபு வழி நடையைத் துவக்கியிருப்பது உங்களுக்குத் தெரியும்தானே.
கடந்த திங்கள் (26/09/2016) அன்று முதல் மரபு வழி நடை நிகழ்வு முடிந்த பின்னர் தமிழ் உணர்வாளர், போராளி சீ.ஆ. மணிகண்டன், (நம்மாழ்வார் இயற்கை நலவாழ்வுச் சங்கம்-புதுகை) பொற்பனைக்கோட்டையின் வடக்கே பண்டைய ஆயுதத் தயாரிப்பு மையம் ஒன்று இருப்பதாக குறிப்பிட்டார்.
தமிழ் மைல் கல்களை தொடர்ந்து கண்டறிந்துவரும், திரு.மணிகண்டன் ஆறுமுகம் அந்த இடத்தைப் பார்த்தே ஆகவேண்டும் என்று அடம் பிடிக்க ஒரு குழுவாக சென்று பார்வையிட்டோம்.
வெறும் குழிகளாக இல்லாது ஒரு அடுப்பு அமைப்பில் இருகின்றன. பக்கத்தில் துருத்தி வைத்து உலைக்குள் காற்றைச் செலுத்த வழிகள் இருகின்றன.
மெல்ல மெல்ல புரிந்தது இது ஒரு உலோக உருக்கு ஆலை என்பது.
வெறும் பார்வைக்கு மாட்டுத் தொட்டி போல காணப் படும் இவை உண்மையில் பண்டைய நாகரீகத்தின் உலோக உருக்கு ஆலை.
உள்ளூர் மக்கள் என்ன சொல்கிறார்கள்?
ஐயோ இங்கே முனி வரும்.
இரவு நேரத்தில் தீ தக தகன்னு எரியும் யாரும் இங்கே வரமாட்டோம் என்கிறார்கள். தோல் ஊறல்கள் இவை எனவும் சொல்கிறார்கள்.
ஆகா..
இரவில் தீ எரியும் என்பதுதான் செய்தி. ஆக பன்னெடுங்கால வரலாறு வாய்வழியாக எப்படி தலைமுறைகளைக் கடந்து கடத்தப்படுகிறது என்பது கவனத்தில் இருத்தத் தக்கது.
முனி வருவது என்பது என்ன ?
பண்டய அரசர்கள், குறுநில மன்னர்கள் இரகசிய பணிகளில் இருக்கும் பொழுது ஒரு குறிப்பிட்ட நேரத்தை சொல்லி அந்த நேரத்தில் முனி வருவதாகச் சொல்லிவிட்டு பெருந்திறல் மக்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துவிடுவார்கள்.
அந்த நேரத்தில் ரகசியப் பணிகள் கனகச்சிதமாய் முடிக்கப் பட்டுவிடும். ஊரடங்கை மீறுபவர்களுக்கு முனி தண்டனையும் கொடுக்கும்!
ரகசியம் காக்க வேறு வழி ?
இந்த கருத்தின் அடிப்படையில் பார்க்கும் பொழுது இந்த இடத்தில் நிச்சயமாக ஒரு உருக்குத் தொழில் நுட்பம் இருந்திருப்பதை உணர முடிகிறது.
வெறும் தோல் தொழிற்ச் சாலை என்றால் முனிவர மாட்டரே!
ஆக மக்களிடம் முனி வருவார் என்று சொல்லிவிட்டு, தோல் பொருட்கள் தயாரிப்பதாக சொல்லிவிட்டு ரகசியமாய் உருக்கு தொழில் நடந்திருக்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது.
தொடர்ந்து கள அனுபவத்தையும் இணையத் தரவுகளையும் சரிபார்த்து ஆய்ந்து உறுதி செய்த தமிழ் கல்வெட்டு ஆய்வாளர் திரு.மணிகண்டன் அவர்களின் பணி உண்மையிலேயே பாராட்டுக்குriயது.
இங்கே இப்படி ஆயுதத் தயாரிப்பு பணிகள் இருந்தது என்பதை வெகு சாதரணமாக சொன்ன இன்னொரு மணிகண்டன் தொ.கா பேட்டியின் பொழுது எங்களுடன் இல்லாதது வருத்தம்தான்.
அவர் இந்த பேட்டி எடுக்கப் பட்டிருந்த பொழுது வைகை நாகரீகம் இருந்ததை உறுதி செய்த அகழ்வாய்வு இடமான கீழடியில் இருந்தார்.
நாங்கள் இன்னும் போகவில்லை அதற்குள் மூடிவிடுவார்கள் என்றே நினைக்கிறேன்.
நிற்க
பொதுவாக இந்த மாதிரி தகவல்களை மறைத்து அதன் மூலம் தனக்கு ஏதும் லாபம் இருக்கிறதா என்று பார்பவர்கள் மத்தியில் சீ.ஆ. மணிகண்டன் எல்லோருக்கும் அறிவித்ததுடன் அழைத்தும் சென்று காட்டியதால்தான் இந்த உறுதி செய்தல் சாத்தியமாகியது என்று தெரிவித்தார் கல்வெட்டியல் ஆய்வாளர் (இன்னொரு) மணிகண்டன் ஆறுமுகம்.
நன்றிகள்
ஆய்விற்கும் செய்திக்கும் - மணிகண்டன் ஆறுமுகம். தமிழ் எண்கள் ஆய்வாளர்.
வழிகாட்டல்
திருமிகு. மேலப்பனையூர் ராஜேந்திரன் அவர்கள்
குழு
இவன்
புதுகை தொல்லியல் ஆய்வுக்கழகம்
இன்னொரு அனுபவம் :
மரபுவழி நடையின் பயன்தான் இந்தக் கண்டுபிடிப்பு என்பது மகிழ்வு. ஆனால் பத்திரிக்கைகளுக்கு அனுப்பிய செய்தியில் திரு. சீ.ஆ. மணிகண்டன் பெயரோ, புதுகை செல்வாவின் பெயரோ, ஏன் மரபு வழி நடைஎன்பதோ கூட பதிவாகவில்லை.
செய்தியின் கூர்மைக்காக இந்த தகவல்களை ஆசிரியர் வெட்டிஇருக்கிறார் என்பது புரிகிறது. இதை நேற்றே புதுகை செல்வா சொல்லிவிட்டார். இருப்பினும் நண்பர்களின் புரிதலுக்காக இங்கே குறிப்பிட வேண்டியிருக்கிறது.
தொலைக் காட்சி நிருபர்கள் வருகை - தமிழ் மைல் கல் மணி விளக்குகிறார் |
புதுகை தொல்லியல் ஆய்வுக் கழகம் மரபு வழி நடையைத் துவக்கியிருப்பது உங்களுக்குத் தெரியும்தானே.
கடந்த திங்கள் (26/09/2016) அன்று முதல் மரபு வழி நடை நிகழ்வு முடிந்த பின்னர் தமிழ் உணர்வாளர், போராளி சீ.ஆ. மணிகண்டன், (நம்மாழ்வார் இயற்கை நலவாழ்வுச் சங்கம்-புதுகை) பொற்பனைக்கோட்டையின் வடக்கே பண்டைய ஆயுதத் தயாரிப்பு மையம் ஒன்று இருப்பதாக குறிப்பிட்டார்.
ஆயுதத் தயாரிப்பு என்று எங்களுக்கு சொன்ன தமிழ் மணி |
தமிழ் மைல் கல்களை தொடர்ந்து கண்டறிந்துவரும், திரு.மணிகண்டன் ஆறுமுகம் அந்த இடத்தைப் பார்த்தே ஆகவேண்டும் என்று அடம் பிடிக்க ஒரு குழுவாக சென்று பார்வையிட்டோம்.
வெறும் குழிகளாக இல்லாது ஒரு அடுப்பு அமைப்பில் இருகின்றன. பக்கத்தில் துருத்தி வைத்து உலைக்குள் காற்றைச் செலுத்த வழிகள் இருகின்றன.
மெல்ல மெல்ல புரிந்தது இது ஒரு உலோக உருக்கு ஆலை என்பது.
வெறும் பார்வைக்கு மாட்டுத் தொட்டி போல காணப் படும் இவை உண்மையில் பண்டைய நாகரீகத்தின் உலோக உருக்கு ஆலை.
உள்ளூர் மக்கள் என்ன சொல்கிறார்கள்?
ஐயோ இங்கே முனி வரும்.
இரவு நேரத்தில் தீ தக தகன்னு எரியும் யாரும் இங்கே வரமாட்டோம் என்கிறார்கள். தோல் ஊறல்கள் இவை எனவும் சொல்கிறார்கள்.
ஆகா..
இரவில் தீ எரியும் என்பதுதான் செய்தி. ஆக பன்னெடுங்கால வரலாறு வாய்வழியாக எப்படி தலைமுறைகளைக் கடந்து கடத்தப்படுகிறது என்பது கவனத்தில் இருத்தத் தக்கது.
முனி வருவது என்பது என்ன ?
பண்டய அரசர்கள், குறுநில மன்னர்கள் இரகசிய பணிகளில் இருக்கும் பொழுது ஒரு குறிப்பிட்ட நேரத்தை சொல்லி அந்த நேரத்தில் முனி வருவதாகச் சொல்லிவிட்டு பெருந்திறல் மக்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துவிடுவார்கள்.
அந்த நேரத்தில் ரகசியப் பணிகள் கனகச்சிதமாய் முடிக்கப் பட்டுவிடும். ஊரடங்கை மீறுபவர்களுக்கு முனி தண்டனையும் கொடுக்கும்!
ரகசியம் காக்க வேறு வழி ?
இந்த கருத்தின் அடிப்படையில் பார்க்கும் பொழுது இந்த இடத்தில் நிச்சயமாக ஒரு உருக்குத் தொழில் நுட்பம் இருந்திருப்பதை உணர முடிகிறது.
வெறும் தோல் தொழிற்ச் சாலை என்றால் முனிவர மாட்டரே!
ஆக மக்களிடம் முனி வருவார் என்று சொல்லிவிட்டு, தோல் பொருட்கள் தயாரிப்பதாக சொல்லிவிட்டு ரகசியமாய் உருக்கு தொழில் நடந்திருக்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது.
தொடர்ந்து கள அனுபவத்தையும் இணையத் தரவுகளையும் சரிபார்த்து ஆய்ந்து உறுதி செய்த தமிழ் கல்வெட்டு ஆய்வாளர் திரு.மணிகண்டன் அவர்களின் பணி உண்மையிலேயே பாராட்டுக்குriயது.
இங்கே இப்படி ஆயுதத் தயாரிப்பு பணிகள் இருந்தது என்பதை வெகு சாதரணமாக சொன்ன இன்னொரு மணிகண்டன் தொ.கா பேட்டியின் பொழுது எங்களுடன் இல்லாதது வருத்தம்தான்.
அவர் இந்த பேட்டி எடுக்கப் பட்டிருந்த பொழுது வைகை நாகரீகம் இருந்ததை உறுதி செய்த அகழ்வாய்வு இடமான கீழடியில் இருந்தார்.
நாங்கள் இன்னும் போகவில்லை அதற்குள் மூடிவிடுவார்கள் என்றே நினைக்கிறேன்.
நிற்க
பொதுவாக இந்த மாதிரி தகவல்களை மறைத்து அதன் மூலம் தனக்கு ஏதும் லாபம் இருக்கிறதா என்று பார்பவர்கள் மத்தியில் சீ.ஆ. மணிகண்டன் எல்லோருக்கும் அறிவித்ததுடன் அழைத்தும் சென்று காட்டியதால்தான் இந்த உறுதி செய்தல் சாத்தியமாகியது என்று தெரிவித்தார் கல்வெட்டியல் ஆய்வாளர் (இன்னொரு) மணிகண்டன் ஆறுமுகம்.
நன்றிகள்
ஆய்விற்கும் செய்திக்கும் - மணிகண்டன் ஆறுமுகம். தமிழ் எண்கள் ஆய்வாளர்.
வழிகாட்டல்
திருமிகு. மேலப்பனையூர் ராஜேந்திரன் அவர்கள்
குழு
- அறம்செயவிரும்பு செல்வா,( புதுகை செல்வா)
- சீ.ஆ. மணிகண்டன்,
- பழ. குமரேசன்,
- பாண்டியன், கல்வெட்டியல் ஆய்வாளர்
- நம்மாழ்வார் இயற்கை நல வாழ்வுச்ச்சங்க நிறுவனர்கள்,
- தோழர் பாரி - தாய்மொழி வழிக் கல்வி இயக்கம்
- கலை - இயற்கை ஆய்வாளர்
- அசோக் நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளி, ஆசிரியர் பழனிச்சாமி மற்றும் மாணவர்கள்.
- மலையப்பன் மற்றும் சிவாஜி விதைக்கலாம் புதுகை
- இளம்கதிர் - முதல் புரவலர்
- பொதுப் பள்ளிகள் பாதுகாப்பு இயக்கம் - புதுகை
இவன்
புதுகை தொல்லியல் ஆய்வுக்கழகம்
இன்னொரு அனுபவம் :
மரபுவழி நடையின் பயன்தான் இந்தக் கண்டுபிடிப்பு என்பது மகிழ்வு. ஆனால் பத்திரிக்கைகளுக்கு அனுப்பிய செய்தியில் திரு. சீ.ஆ. மணிகண்டன் பெயரோ, புதுகை செல்வாவின் பெயரோ, ஏன் மரபு வழி நடைஎன்பதோ கூட பதிவாகவில்லை.
செய்தியின் கூர்மைக்காக இந்த தகவல்களை ஆசிரியர் வெட்டிஇருக்கிறார் என்பது புரிகிறது. இதை நேற்றே புதுகை செல்வா சொல்லிவிட்டார். இருப்பினும் நண்பர்களின் புரிதலுக்காக இங்கே குறிப்பிட வேண்டியிருக்கிறது.
மரபு நடை நல்லமுயற்சி புதிய தகவல். எனக்குக் கூட அவ்வபோது ஐயம் வருவதுண்டு.தமிழ் இலக்கியங்களில் தங்கம் வெள்ளி இரும்பு போன்ற உலோகங்கள் எப்படிக் கிடைத்தன சுரங்கங்கள் இருந்தனவா? எப்படி வெட்டி எடுத்தார்கள் என்பதற்கான குறிப்புகள் ஏதேனும் இருக்கிறதா எனத் தெரியவில்லை. தமிழ் அறிஞர்கள்தான் சொல்ல வேண்டும்.
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteபுறப்பட்டன புதுகைப் புயல்கள்..!
ReplyDeleteநானும் வர நினைத்திருந்தேன்...தேர்தல் பணியில்.. (A.R.O)இருந்ததனால் வர இயலவில்லை. வாழ்த்துகள்..!
அறியாத தகவல்....
ReplyDeleteஆச்சர்யம் மது சார்...
நக்கீரனிலும் இதனைப் பற்றி செய்தி வாசித்து இருக்கிறார்கள்.
ReplyDeleteசிறப்பான ஒரு பயணம். எத்தனை தகவல்கள்.... உங்களுக்கும் குழுவினர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்...
ReplyDeleteநல்ல ஒரு பயணத்தின் பகிர்விற்கு நன்றி. நண்பர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்.
ReplyDelete