மரபு வழி நடை ஆயத்தம்


பொற்பனைக் கோட்டை

பொற்பனைக் கோட்டை கூகிள் எர்த்  தோற்றம்கடந்த  வாரம் ஒரு  நாள்  இரவு  அலைபேசி ஒலிக்க

யார்  எனப் பார்த்ததில் மணிகண்டன்  ஆறுமுகம் பேசினார்.  தொடர்ந்து செய்தித் தாள்களில் வரும் தமிழ் எண்கள், மைல் கற்கள், பண்டைய சிலைகள் என பல்வேறு தொன் மரபு சார் தரவுகளை கண்டறிந்து அவற்றை உலகுக்கு அறிவிப்பவர்.

எல்லா  மாவட்டங்களிலும் மரபு வழி நடை போகிறார்கள் புதுக்கோட்டையில் இல்லை  என்றால் நன்றாக  இருக்காது என்றார்.

நிகழ்வு  ஒன்றை ஏற்பாடு செய்யலாமா  என்றார். செய்யுங்கள் என்றேன்.

பின்னர்தான் தெரிந்தது அவர் என்னை வைத்து செய்திருப்பது.

எங்கள்  உரையாடலுக்கு  முன்னரே என்னையும் இன்னொருவரையும்  இணைத்து ஒருங்கிணைப்பாளர்கள்  என்று  அறிவித்துவிட்டுத்தான் பேசியிருக்கிறார்.

நான் அலுவலகத்தில் பல பணிகளில் இருந்ததால் முகநூல் பக்கம் கொஞ்சம் போகவில்லை. சந்து காப்பில் ஆட்டோ ஓட்டிவிட்டார்!

இன்னொரு அழைப்பு. அறம்செய்ய விரும்பு செல்வா. புதுகையின் முன்னணி ஒளிப் பதிவாளர்களில் ஒருவர். நான் வரவா என்றார். அவர் அழைக்கும் பொழுது கூட  நான் முகநூல் பார்க்கவில்லை.

வாங்க செல்வா என்றேன்.

உங்க  பெயரையும் என் பெயரையும் தான் மணி ஒருங்கிணைப்பாளர்கள் என்று அறிவித்திருக்கிறார் என்றார்.

ஒ !

பயணம் அறிவித்த தேதி 26 செப்டெம்பர் 2016.

அதற்குள் ஒரு பணியிடைப் பயிற்சி. ஆசிரியர்களுக்கு ஐ.சி.டி பயிற்சி தர வேண்டிப் பணித்தனர். எப்படி செய்யப் போகிறோம் என்ற திகைப்பு வந்து உட்கார்ந்துவிட்டது.

ஆயத்தப் பணிகளுக்காக களப் பார்வையிடலும் திட்டமிடலும் தேவையாக இருக்க செல்வா  தொடர்பு கொண்டு சொன்னார் காலை ஏழுமணிக்கு போய்ப் பார்த்தவிட்டு வந்துவிடுவோம்.

இரவு நெடுநேரம் பணியில்  (இரண்டு மணிவரை ) இருந்த செல்வா காலை சொன்னபடி வருவாரா என்கிற கேள்விவேறு.

எப்படியோ நேரம் கண்டுபிடித்து பொற்பனைக் கோட்டையை காணச்சென்றோம் ஆயத்தப்  பணிகள் தேவையல்லவா.

செல்வா குட்டிப்பாப்பா சங்கமித்திரையோடு வந்திருந்தார். களப் பயணத்திற்கான திட்டமிடல் துவங்கியது.

காலை ஏழு மணிக்கு துவங்கி ஒன்பது மணிவரை தொல்லியல் சான்று உள்ள இடங்களில் அலைந்தோம். சங்கமித்திரை களைப்படையவோ தூங்கவோ செய்யவில்லை.

பயணத்தை மகிழ்வுடன் அனுபவித்தாள் குழந்தை.

பல்வேறு கேள்விகள் மனதில் எழுந்தன.

தொடரும் ...

Comments

 1. அருமையாக இருக்கிறதே.மரபுவழி நடைப்பயணம்...சுவாரஸ்யம் நிறைய இருக்கும் போல!! தொடர்கின்றோம் நாங்களும் உங்கள் எழுத்துவழிப் பயணத்திற்கு!

  ReplyDelete
 2. ஆரம்ப காலத்தில் களப்பணி சென்றபோது என் மகனையும் அழைத்துச சென்றேன். இப்பதிவைப் படித்ததும எனக்கு அந்த நினைவு வந்துவிட்டது.

  ReplyDelete
 3. அசத்தலான தொடக்கம்.
  தொடர்கிறேன்.
  த ம 3

  ReplyDelete
 4. தொடருங்கள் நண்பரே
  ஆவலோடு காத்திருக்கிறேன்

  ReplyDelete
 5. தொடர்கிறேன் தோழரே...
  த.ம. + 1

  ReplyDelete
 6. பயணம் இனிதே தொடர வாழ்த்துகள் நண்பரே.

  ReplyDelete
 7. மரபு வழி நடைப்பயணம்..... தமிழகத்தில் இருந்திருந்தால் நிச்சயம் வந்திருப்பேன்..... உங்கள் பயணத்தின் மூலம் நாங்களும் மரபு வழி நடக்க நிகழ்வுகளையும், அந்த அனுபவங்களையும் தொடர்ந்து இங்கே பதிவிடுங்கள் மது. உங்களுக்கு இருக்கும் கடுமையான பணிகளுக்கு இடையே இங்கே தொடர்ந்து வர இயலவில்லை என்பது தெரியும் - இருந்தாலும் இந்த மரபு வழி நடைப் பயணம் பற்றி இங்கே தொடர்ந்து எழுதுங்கள்.

  ReplyDelete

Post a Comment

வருக வருக