சீட்டாடிப்பார்

கருத்து: ஷாஜஹான்
வடிவம்: வைரமுத்து
ஆக்கம்: ஷான்


சீட்டாடிப்பார்
சம்பளத்துக்கு முதல் நாள்
கடன் வாங்கிப் பழகுவாய்சம்பளம் வாங்கிய நாளில்
புழக்கடை பின்வாசல் தேடுவாய்

முதன் முதலாய் நண்பர்களிடம்
பொய் பேசிப் பழகுவாய்

பணம் கொடுத்த நண்பர்கள்
விரோதிகளாகத் தெரிவார்கள்

திரும்பக் கேட்காத நண்பர்கள்
இளித்தவாயர்களாகத் தெரிவார்கள்
சீட்டாடிப்பார்

அவமானம் பழகிப் போகும்
வசவுகள் வழக்கமாகும்

குடும்பம் அன்னியமாகும்
ஜோக்கர் நெருக்கமாவான்

உறக்கத்திலும் சீட்டு சேரும்
கேட் அடித்ததாய் கனவு வரும்

வென்றவன் வீசும் ரொட்டி
வெட்கமின்றி உள்ளிறங்கும்

புகை நிறைந்த அறையொன்றில்
சிகரெட்டுகள் கரையும் இரவில்
துண்டு பீடி சொர்க்கமாகும்

சீட்டாடிப்பார்

குழந்தைகள் முகம் மறக்கும்
அவர்கள்
வகுப்புகள் நினைவிருக்காது
ஆடைகள் அழுக்காகும்

மனைவியின் நகைகள் அடகு போகும்
கவுரவத்தை கவரிங் காக்கும்

வேலைக்குச் செல்ல மறப்பாய்
சீட்டாட்டமே வேலையாகும்
பின் வேலை உன்னை மறக்கும்

விட்டதைப் பிடிக்கும் ஆட்டத்தில்
உன் பிடிப்பெல்லாம் விட்டுப் போகும்
வாழ்க்கை ரம்மி மயமாகும்

சீட்டாடிப்பார்
-----

Comments

 1. ஒரு பாடத்தைத் தரும் கவிதை.

  ReplyDelete
 2. அருமை அருமை! நல்ல சிந்தனையைத் தூண்டும் கவிதை...இதே வார்த்தைகள் சீட்டாட்டத்திற்கு உரித்தான வார்த்தைகளை விட்டு பார்த்தால் குடி க்கும் பொருந்தும். தீயப்பழக்கங்கள் அனைத்திற்கும் பொருந்தும்...

  ReplyDelete
 3. நல்லதொரு கவிதை.

  ReplyDelete
 4. முகநூலில் இதற்கான விளம்பரங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. ஆண் லைன் ரம்மிக்கும் பலர் அடிமையாகி வருவது வேதனை இந்தக் கவிதயை படித்தாவது திருந்தினால் நல்லது நல்ல பகிர்வு

  ReplyDelete

Post a Comment

வருக வருக