கருப்பு பணம்


Raja M Raja கல்புவின் எக்கானமி குத்து...

அண்ணே இந்தியாவே ஆடிப்போச்சுன்ணே.. அம்புட்டு கறுப்பு பணமும் வெளியில வரப்போவுது பணப்பொழக்கத்துல இந்தியா ரெண்டாவது ஜப்பானா மாறப்போவுதுண்ணே..



ஆமாய்யா கறுப்பு பணம்னா இன்னா..??

அது அம்புட்டு அரசியல்வாதியும் ஆயிரம் கோடி ரெண்டாயிரம் கோடின்னு கொள்ளையடிச்சு பூராத்தையும் கொல்லையில குழி நோண்டி பதுக்கி வச்சிருக்கானுகண்ணே...

நாளைக்கி ஜேசிபிய வச்சு அதெல்லாம் நோண்டி வெளிய எடுத்து அரசாங்கத்துட்ட குடுத்துட்டு மாத்த வருவானுகல்ல அப்ப இருக்குண்ணே அவனுகளுக்கு ஆப்பு... வெச்சாருல்ல வெச்சாருல்ல எங்காளு..
ஆமாய்யா அந்த ஆயிரம் கோடிய அரசியல்வாதி எங்க போய் மொகமூடி போட்டு கத்தியகாட்டி கொள்ளையடிச்சிட்டு வந்தாங்க..??

அடப்போங்கண்ணே சும்மா கலாய்ச்சிக்கினு..

அதுபூராம் லஞ்சப்பணம்ணே லஞ்சப்பணம்..

அதாவது இந்த ரோடு போடுறது பாலம் கட்டுறதுன்னு காண்ட்ராக்ட் விடும்போது கோடிகோடியா கமிஷன் கெடைக்கும்ணே அதைக்கொண்டு போய் பண்ணை வீடு பத்துபேருன்னு பதுக்கி வச்சுருவாங்கண்ணே.. சிவாஜி படத்துல கூட பாத்துருக்கோம்ல பாத்துருக்கோம்ல..

ஆருக்கிட்ட எங்காளு வச்சாருல்ல ஆப்பு..

ஆமா இந்த கறுப்பு பணம்னா ஒடனே டைரக்டா அரசியல்வாதிதான் தெரியுமா..??

இந்த அமெரிக்க மாப்ளை கேரக்டர்மாதிரி கார்பரேட்டையெல்லாம் தெரியாதா..??

அட லூசுப்பயலுகளா.. ஆயிரம் கோடி ரெண்டாயிரம் கோடி
அடிக்கிறவனெல்லாம் சாதாரண டெத்சர்டிபிகேட் வாங்க வர்ர குப்புசாமி முனுசாமிக்கிட்ட வாங்குறதில்லை..

அம்பதாயிரம் கோடி ஒருலட்சம் கோடி ட்ரான்ஸாக்சன் பன்ற எல் அன் டி, ரிலையன்சு, டாடா, பிர்லான்னு பணமுதலைகள்ட்ட போடுற காசு...
அதாவது உதாரணமா ஒரு மெட்ரோ ப்ராஜக்ட் ஐயாயிரம் கோடின்னா அதுல  5% கமிஷன் வாங்குவான் சுமாரா 250 கோடி..

அதை காண்ட்ராக்ட் எடுக்குறவன் பணம் ஒயிட்ல வேணுமா ப்ளாக்ல வேணுமான்னு கேப்பான்...

பூரா அரசியல்வாதிப்பயலும் ஒயிட்ல 200 குடுத்துருங்க ப்ளாக்கா 50 குடுத்துருங்கன்னு டீல முடிச்சுருவானுக..

அது எப்படி ஒயிட்னு கேக்குறீங்களா.??

அல்ரெடி பெரியலெவல்ல கமிஷன் அடிக்கிறவன் பக்காவா ஏஜென்சி இல்லை எண்டர்ப்ரைஸ்னு ஒரு அக்காசுக்கா கம்பெனி ஒன்னு அவன் அவனோட பொண்டாட்டி மச்சினன் மண்ணாங்கட்டின்னு ஒரு பத்து பேரை சேர்த்து ஒரு நாலஞ்சு ஃபேர்ம் கம்பெனிகளை உருவாக்கி ட்ரான்சாக்சன் பன்னிட்டுருப்பான்..
அதுல பணத்தை ட்ரான்ஸ்ஃபர் பன்னுவானுக அதுவும் பணம் கொடுக்குறவன் பக்கா ரெக்கார்டோட ட்ரான்ஸ்ஃபர் பன்னுவான் ஏன்னா அவனும் மாட்டிக்க மாட்டான்..

ஆக200 கோடி பத்து பாகமா ஸ்ப்ளிட்டாகி நலைஞ்சு கம்பெனி பேர்ல லீகலா பேங்க்ல இருக்கு ...ஆச்சா

சரி இந்த ப்ளாக்ல ஒரு 50 கோடி வாங்குனானுகல்ல அதை என்ன பன்னுவானுகன்னா பத்து பார்ட்டா பிரிச்சு அவனுகளுக்கு கீழ உள்ள அதிகாரி அல்லக்கை மாவட்டம் வட்டம்னு பிரிச்சுக் குடுத்துட்டு மீதி ரெண்டு முணு கோடிய கைச்செலவுக்கு வச்சிக்குவானுக...

ஆக லஞ்சப்பணம் ஆயிரம் ரெண்டாயிரம் கோடியும் பக்காவா டாகுமெண்ட் ஆகிருச்சா..

அப்ப கொல்லையில குழிதோண்டி பொதைக்கிற கதையெல்லாம்..??

அது நம்பியாரு செத்தப்பவே அந்த டெக்னாலஜியையும் சேத்து பொதைச்சாச்சு..

அடப்போங்கண்ணே அந்த கண்டய்னரு.. 500 கோடி.. இதெல்லாம்..??
அந்த கண்டைனர் பணமெல்லாம் உண்மைதான் ஆனா அதெல்லாம் பாத்ரூமுக்குள்ள பரப்பி வச்சிருந்து எடுத்து வரலை.. பக்காவா பேங்க் ட்ராப் பண்ணி ஓட்டுக்கு பணம் குடுக்குறதுக்காக எடுத்து வரப்பட்டா வெல் ஆர்கனைஸுடு செட்டப்பு..

அப்ப இப்ப ரெண்டு முணு கண்டெய்னர் எங்கயோ போனதா சொன்னாங்களே..??

அதுவும் உண்மைதான் அந்த கண்டெய்னர் எலக்சனுக்கு டெலிவரி பன்ன முடியாததை முன்னாடியே 500 1000 தடை மேட்டரு தகவல் தெரிவிக்கப்பட்டு ஆட்டமேட்டிக்கா திரும்ப டெபாசிட்டுக்கு போயிருச்சு அதாவது பேங்க்காரனுக சப்போர்ட்டோட....

என்னன்ணே சொல்றீங்க.. அப்ப கவர்மெண்ட்டு அவனுகளுக்கு சப்போர்ட்டா..

அட முட்டாமூதி ஆளும்கட்சியோ எதிர்கட்சியோ கவர்மெண்ட்டே
அவனுகதாம்லே அவனுகளே ஆப்பு வச்சிக்குவானுகளா..??

அப்ப இந்த தடை எழவுனால என்னதான்யா பிரச்சணை?? மோடி எது செஞ்சாலும் நொட்டை சொல்றீங்க...

ரொம்ப பொங்காதிங்க அத்தனை பான் பரோக்கரும் அதாவது அடகுகடையும் வட்டிக்கடையும் ஜெயின்சும் மார்வாடியும்தான்..

ஆயிரம் ரூபாயை கொடுத்துட்டு டெய்லி பத்துரூவா வட்டி வசூல் பன்றவன் கெடையாது..
பாண்ட் கேள்விப்பட்டருக்கியா பாண்ட்..

ஜேம்ஸ் பாண்ட்டான்னு கேக்காத கடன் பத்திரம்..

அதாவது பெரிய பெரிய கம்பெனிகளுடைய பாண்ட் பத்திரங்களை வாங்கி வித்து பல்லாயிரம் கோடி ட்ரான்சாக்ஸன் பன்ற டான்..டான்
அவனுக என்ன பன்னுவானுகன்னா அல்ரெடி நஷ்டக்கணக்கு எழுதி வச்சிருப்பானுக அதுலதான் இப்ப மிச்ச மீதி இருக்குற இந்த ஐம்பது கோடி நூறு கோடிக்காரனுக்கெல்லாம் 15% கமிஷன் வாங்கிட்டு 2000 ரூவாயை சப்ளை பன்னப்போறானுக...

அதாவது நம்ம குஜராத்தி..

அப்ப சிறுவாடு சேத்தவனும் கருவாடு வித்தவனும்தான் பேங்கல கொண்டு போய் ரெண்டு லட்சத்தை கொடுத்துட்டு மாத்திட்டு வந்துருவான்..
மூணுமாசம் கழிச்சு நோட்டீஸ் வரும் பணத்துக்கு என்ன கணக்குன்னு..
விளக்கம் சொன்னா 45% ப்ளஸ் இன்ட்ரஸ்ட்டோட டாக்ஸ் கட்டு இல்லைனா ரெண்டுலட்சத்தையும் அரசாங்கத்துக்கிட்ட ஒப்படைன்னு அடுத்த நோட்டீஸ் வரும்...

என்னது கேஸா..??

கூழு குடிக்க வேணும்னா வர்றோம் அம்மஞ்சல்லி கெடையாது கேஸ் போட்டுக்கடா வெண்ணைனு நம்மாளும் கைலிய தூக்கி கட்டிட்டு வரப்பு வெட்டப் போயிருவான்...

அடுத்து பார்டர்ல சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் ஒன்னு நடக்கும் நம்மாளு நாளுபேரு வாயப்பொழந்து கெடப்பான்..

நம்மளும்..... ப்ப்ப்ப்ப்பபாபாபா பாகிஸ்தானுக்கு என்னா அடிடான்னு புல்லரிச்சு வரட்டு வரட்டுன்னு சொறிஞ்சுக்க வேண்டியதுதான்..
வாழ்க குஜராத்தியர்கள்..

ஜெய்ஹிந்த்..
Thanks - Raja M Raja
பதிவினை தொடர்ந்த அவரது பக்கங்களில் கமெண்ட்களையும் அவசியம் வாசிக்கவும்.
(திரு Raja M Raja அவர்களின் பதிவிலிருந்து நண்பன் சதீஷ் செல்லதுரை பகிர்ந்ததை காப்பி பேஸ்ட் செய்திருக்கிறேன்..)

முகநூல் பகிர்வு ... 

Comments

  1. ராஜா m ராஜா , விளக்கம் தருவதில் ராஜாதி ராஜாதான் :)

    ReplyDelete
    Replies
    1. வருக பகவானே ...
      நன்றிகள்

      Delete
  2. அட கொக்க மக்கா...! அய்யோ...??!!!

    ReplyDelete
    Replies
    1. உணர்வு வயப்பட்டு தேசபக்த வியாபாரம் செய்வதே நம்ம ஆட்களுக்கு வேலையாப் போச்சு.
      வருகைக்கு நன்றிகள்

      Delete
  3. கள்ள நோட்டு பிரச்னை? எப்படி தீக்கறது..? தானும் உருப்படியா ஒண்ணும் செய்ய மாட்டான்.. அடுத்தவனையும் உருப்படியா ஒண்ணும் செய்ய விட மாட்டான்.. அந்த வகை போல இருக்கு இந்த ராஜா.

    ReplyDelete
  4. ரசனையாகத்தான் இருக்கு
    த.ம.3

    ReplyDelete
  5. அருமையான பதிவு

    ReplyDelete

Post a Comment

வருக வருக