புதுக்கோட்டை வாசிக்கிறது

அமேசான் கிண்டிலை ஆராயும் மாணவர்கள்

குழந்தைகளிடம் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களிடமிருந்து ஒரு உத்தரவு வந்திருப்பதாக தலைமையாசிரியர் அறிவித்தார். 

வேறொன்றுமில்லை குழந்தைகளிடம் நூலகப் புதகங்களைக் கொடுத்து ஒருமணிநேரம் வாசிப்பில் ஈடுபடுத்தவேண்டியதுதான். மாவட்டத்தின் எண்பதாயிரம் குழந்தைகளும் இந்த திட்டத்தின்படி 21/11/2016 அன்று காலை பத்து மணி முதல் பதினோரு மணிவரை வாசிப்பில் ஈடுபட வேண்டும் என்று பணிக்கப்பட்டனர். 


இன்று காலை சரியாக பத்து மணிக்கெல்லாம் குழந்தைகளிடம் நூல்கள் வழங்கப்பட்டன. வாசிக்கப் பணித்ததும் வாய்விட்டு உரக்க வாசித்தனர் சில குழந்தைகள். 


பொறுமையாக வாசித்தல் என்பது வாய்விட்டு உரக்க வாசிப்பது மட்டுமல்ல. மௌனமாகவும் வாசிக்கலாம். உணர்ந்து, அனுபவித்து வாசித்து பழகுங்கள் என்று மீண்டும் மீண்டும்.... மீண்டும் சொல்ல வேண்டியிருந்தது. 

ஒருமணிநேர வாசிப்பின் பின்னர் ஏழாம் வகுப்பு முருகேசன் அவன் படித்த ஒரு கதையை மாணவர்களிடம் ஒலிபெருக்கிமூலம் பகிர்ந்துகொண்டான். பின்னர் ஒன்பதாம் வகுப்பின் திவ்யதர்ஷினி தான் படித்த வியாச பாரதம் குறித்து சில விசயங்களை சொன்னார். 


மகிழ்வுடன் மாணவர்கள் தங்கள் வகுப்புகளுக்கு சென்றனர். 

நல்லதோர் நாள். பேறுபெற்றன நூல்கள். 

தொடர்வோம். 

அன்பன் 
மது. 

Comments

  1. அரியதொரு செயல் தோழர் தொடரட்டும்
    த.ம.1

    ReplyDelete
  2. கேட்கவே மிக இனிமையாக உள்ளது, சில பழக்கங்களை பழக்கப்படுத்தி விட்டால் மாணவர்கள் அதை அப்படியே பிடித்துக்கொள்வார்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழர் வருகைக்கு நன்றி

      Delete
  3. இந்தப் “புதுக்கோட்டை வாசிக்கிறது” நிகழ்வே, வரும் 26ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 4ஆம் தேதிவரை புதுக்கோட்டை நகரில் நடைபெறவுள்ள புதுக்கோட்டைப் புத்தகத் திருவிழா நிகழ்வின் முன்னோட்டம்தானே? ஆமா இந்தச் செய்தி தங்களுக்கு வந்து சேரவில்லையா? நாங்கள் புதுகை இராணியார் அ.ம.மே.நி.பள்ளியில் கலந்துகொண்டு வந்தோம். நல்ல திட்டம். கல்வித்துறையின் ஒத்துழைப்பு மகிழ்வளிக்கிறது.

    ReplyDelete

  4. என் குழந்தை ஐந்தாவது படிக்கும் போது மாணவர்களின் வீட்டில் படித்து முடித்த புத்தங்களை கொண்டு வரஸ் செய்து அதை ஒரு பொது இடத்தில் வைத்து மாணவர்கள் தாங்கள் விரும்பிய புத்தங்களை தங்கள் வீட்டிற்கு எடுத்து சென்று படிக்க சொன்னார்கள் இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது இதை ஒரு மாதம் தொடர்ந்து செய்தார்கள் நல்ல பலன் இருந்தது

    ReplyDelete
  5. கட்டாயத்தால் வருமா வாசிப்பு பழக்கம் ? தூண்டி விட்டால் நல்லதுதான் :)

    ReplyDelete
  6. வாசிப்பின் அருமை உணரப்பட வேண்டும்.

    வாசிப்புப் போட்டி - 2016
    https://seebooks4u.blogspot.com/2016/10/2016.html

    ReplyDelete
  7. சிறந்த அறிஞர்களின் புதிய பதிவுகளைப் படிக்க, நாட வேண்டிய ஒரே குழு உலகத் தமிழ் வலைப்பதிவர்கள்! மறக்காமல் படிக்க வாருங்கள்! நீங்களோ உங்கள் நண்பர்களோ வலைப்பதிவர்கள் ஆயின் உங்கள் புதிய பதிவுகளையும் எமது குழுவில் இணைக்கலாம் வாருங்கள்!

    https://plus.google.com/u/0/communities/110989462720435185590

    ReplyDelete
  8. வாழ்த்துகள்

    ReplyDelete
  9. நல்ல முயற்சி! பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்!

    எங்கள் பள்ளியில் எங்களுக்கு வெள்ளிக் கிழமை தோறும் நூலக வகுப்பு என்று ஒன்று இருந்தது. அன்று அந்த 45 நிமிட வகுப்பில் நூலகம் சென்று புத்தகங்கள், இதழ்கள் வாசித்துவிட்டு, வீட்டிற்குப் புத்தகங்கள் எடுத்துச் செல்ல வேண்டும். சனி விடுமுறைஇல்லை என்றாலும்....திங்கள் அன்று நாங்கள் எடுத்துச் சென்ற புத்தகத்தைப் பற்றி வகுப்பில் சொல்ல வேண்டும், அல்லது அதனைப் பற்றிய விமர்சனம் எழுதி வர வேண்டும். இப்படித் தமிழ் மற்றும் ஆங்கில வகுப்புகளில் செய்வதுண்டு. அதைப் பற்றிய விமர்சனம் மட்டுமின்றி நாம் அறிந்தது என்ன, எழுத்தாளருடன் மாறுபட்ட கருத்து இருந்தால் அதையும் முன் வைத்தல் என்று எல்லோரும் பகிர்வார்கள். புதிய வார்த்தைகள் கற்றுக் கொண்டால் அதனை வகுப்பில் சொல்லுதல், அந்த வார்த்தை நௌனா அட்ஜெக்டிவா, என்று சொல்ல வேண்டும். அதனைப் பயன்படுத்தி வாக்கியமும் அமைக்க வேண்டும்... இது வாசிப்பு, எழுத்தாற்றல், பேச்சாற்றல், சுய சிந்தனை எல்லாம் வளர உதவியது என்றால் மிகையல்ல. எங்கள் ஆசிரியர்களும் மிகவும் ஊக்கப்படுத்துவார்கள். எங்கள் பள்ளி அருமையான பள்ளி, ஆசிரியர்களும் தான்!
    நல்ல பகிர்வு..என் பழைய நினைவுகளை மீட்டது மிக்க நன்றி கஸ்தூரி

    கீதா

    ReplyDelete

Post a Comment

வருக வருக