வெறும் மாட்டு வேடிக்கைக்கா இத்துணை ஆர்ப்பாட்டம்?

நாட்ல எவ்வளோவோ பிரச்சனைகள் இருக்கு
எல்லாத்தையும் விட்டுப்புட்டு இந்த பசங்க மாட்டைப் போய் கையில் எடுத்திருக்கிறார்களே என்று கருதுவோரின் கவனத்திற்குஇது இன்னொரு காலனியாதிக்கதின் எதிராக நடைபெறும் போராட்டம்.

ஜல்லிக்கட்டு என்பது மாட்டை அடக்கும் விளையாட்டு மட்டுமல்ல, வெறும் தமிழ்க் கலாசாரம் மட்டும் அல்ல அதில் இருக்கும் அரசியல் நம்பமுடியாத சிக்கல்கள் நிறைந்தது.

நாட்டு மாடுகளை அடியோடு அழித்துவிட்டு அதீதப் பால் தரும் என பரப்புரை செய்யப்பட்ட ஜெர்சி இன மாடுகளை இங்கே ஊடுருவச் செய்த ஒரு வணிகத்திட்டம்
கிட்டத்தட்ட ஒரு தசாப்தமாக எதிர்க் குரல்கள் ஒலித்துவந்தன
புதுகையில் சாலை கனகராஜன் இதுகுறித்து அதிர்வூட்டும் விசயங்களைப் பகிர்ந்தார்
A2 புரதம் குறித்தும் பெருகிவரும் சர்க்கரை நோய் குறித்தும், குடிப்பழக்கமோ புகைபழக்கமோ இல்லாதவார்கள் திடீரென இதய நோயில் மரணிப்பதின் காரணியாக ஜெர்சிப் பசுக்கள் இருப்பதையும் குறித்து பேசினார்.
மேலும் ஜெர்சி மாடுகள் மரபணு ஆய்வு முறையில் வெண்பன்றியின் டி.என்.ஏ மூலக்கூறுகளை கொண்டு உருவாகப் பட்டதால் திக்கான பால் தந்து வருவதையும் குறிப்பிட்டார்.
விசயம் இப்படி இருக்க.

பிரேமானந்தாவிற்கு இரட்டை ஆயுள் தந்த அதே நீதிபதிதான் மதுரைக் கோர்டில் தடையையும் தந்தார்.

ஒரு மாட்டு வேடிக்கை நிகழ்வில் உயிரிழந்த நாகராஜன் என்பவரின் தந்தை தொடர்ந்த வழக்கு அது. மனிதாபிமான அடிப்படையில் வழங்கப் பட்டிருந்தாலும் இதன் பின்னே உள்ள அபாயம் அன்றய நிலையில் யாருக்கும் புரியவில்லை.

காளைகளை வளர்க்கும் நோக்கம் அழிக்கப்பட்டுவிட்டால், மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக காளைகளை மறந்து விடுவார்கள் என்கிற கணக்கு இது. நீண்டகால விளைவாக இந்திய மாட்டினங்கள் முற்றாக அழிந்து போகும்.

வெறும் மாட்டு வேடிக்கைக்கான போராட்டம் அல்ல இது
இந்தப் பிரச்சனையில் அந்நிய வணிக நிறுவனங்களின் நீண்டகாலத் திட்டமும் ஊடுருவலும் அதிகம்.

இந்தக் கட்செவி காணொளி உங்களுக்கு நிறையப் புரிதலை உருவாக்கும்.

நண்பருக்கு நன்றி

Comments

 1. இப்பொழுதாவது விழிப்புணர்ச்சி வந்துள்ளதே ,மகிழ்ச்சி அளிக்கிறது !
  கட்செவியைக் காணவில்லையே ஜி :)

  ReplyDelete
 2. வணக்கம்
  இந்தியன் என்பதை விட தமிழன் என்ற உணர்வு உலகஅரங்கை அதிர வைப்பது பெருமைதான் வெற்றி நிச்சயம்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. இளைஞர்கள் விளையாட்டுப் பிள்ளைகள் அல்ல. சமூக வலைத்தளங்கள் அவர்களுக்கு நிறைய கற்றுக் கொடுக்கின்றன. படிக்கும் பாடங்களை விட வாசிக்கும் சமூக வலைதள செய்திகள் அதிகம் போதிக்கின்றன. நம் நாட்டு மாடுகளின் இனத்தை அழிக்க நினைக்கும் வெளி நாட்டு சதியையும் அதற்கு உறுதுணையாய் இருக்கும் அரசியல்வாதிகளையும் அடையாளம் கண்டு கொண்டனர்.

  இந்த எழுச்சி இளைஞர்களின் மாபெரும் சக்தியை வெளிப்படுத்துகிறது. கொடுத்த காசுக்கு கூவிக் கொண்டிருக்கும் அரசியல் கூத்தாடிகளை குலை நடுங்க வைத்திருக்கிறது. இந்த இளையோர் படை நினைத்தால் புது ஆட்சியையே உருவாக்கலாம்.

  ReplyDelete
 4. அரசியலில் இறங்காது
  தமிழனின் முதலீடான
  கல்வியை மேம்படுத்தியவாறு
  ஒழுக்கம், பண்பாடு பேணி
  எவருக்கும் இழப்புகளை ஏற்படுத்தாது
  ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) வெற்றிக்கான
  எழுச்சி நுட்பங்களைக் கையாண்டு
  மாணவர்களே தமிழ்நாட்டை மேம்படுத்தலாம்!
  ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) வெற்றி
  எதிர்கால வெற்றிகளுக்கு ஓர் முன்மாதிரி!

  ReplyDelete
 5. காணொளி கண்டோம்...அருமையான பதிவு..நேரத்திற்கு ஏற்ற ஒன்று

  கீதா: நல்ல பதிவு கஸ்தூரி. நாம் தற்சார்பு பொருளாதரத்தை நோக்கிப் பயணிக்க வேண்டிய காலம் எல்லையை மீறிவிட்டது என்று எல்லையைத் தாண்டிய எருது எச்சரிக்கை மணி அடித்துள்ளது. இது எருதுவிற்கு மட்டுமல்ல பல விசயங்களிலும்....

  இந்த நேரத்தில் முந்தைய ரிசர்வ் பேங்க் கவர்னர் ரகுரான் ராஜன் "நடுவண் அரசு இந்தியவையே விற்றுவிட்டது(டார்) " என்று ட்வீட்டியிருப்பதை நீங்களும் அறிந்திருப்பீர்கள்..

  நல்ல பதிவு

  கீதா

  ReplyDelete
 6. இளைஞர்களின் போராட்டத்தின் விளைவுகளை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். நடைபெறவிருக்கும் மாநகராட்சித் தேர்தல்களில் கட்சி சார்பில்லாத இளைஞர்கள் போட்டியிட்டால் அவர்களை நாம் ஆதரிக்க வேண்டும். ஊருக்கு நாலுபேர் அப்படி ஜெயித்து வந்தால் நிச்சயம் அரசியலில் பெரிய மாற்றங்களை எதிர்பார்க்க முடியும். - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

  ReplyDelete

Post a Comment

வருக வருக