வீதி முப்பத்தி ஐந்து veethi 35

இன்றய வீதிக் கூட்டத்தின் பொறுப்பாளர் என்கிற முறையில் ஒரே ஒரு நிகழ்வை மட்டுமே திட்டமிட்டேன்.

படிக்க வேண்டிய பத்து நூற்கள் பட்டியலைத் தர வேண்டும் என்பதே அது.



பொறுப்பாளர் கீதா அவர்கள் நான் ஒரு நூல் விமர்சனம் செய்கிறேன் எனவும் கவிஞர்கள் கவிதைகளோடு தயாராக இருக்கிறார்கள் என்று சொல்லவே நிகழ்வுகள் பட்டியல் தயாரானது.

நிகழ்வை முழு வருகைக்கு பின்னர் துவங்கலாம் என்று பத்து நூற் பட்டியல் நிகழ்வு துவங்கவே

வருகையாளர்கள் தங்கள் வாழ்வை மாற்றிய பத்து நூற்களை பகிர்ந்து கொண்டனர்.

மிக நல்ல நிகழ்வாக அமைந்து போனது அது.

செல்வக்குமார் பரிந்துரையில் கரன் கார்க்கியின் கறுப்பர் நகரம் என ஆழமான வாசிப்பு பட்டியலினைப் பகிர்ந்தார்கள்.

முன்னோடிக் கவிஞர் திரு.தங்கம் மூர்த்தி அவர்கள் வருகைதர நிகழ்வுகள் முறையாகத் துவங்கப்பட்டன.

நீண்ட வாசிப்பனுபவம் உடைய திரு.சுதந்திரராஜன் அவர்களின் தலைமையில் மூத்த வலைப்பதிவர் திரு தமிழ் இளங்கோ அவர்களின் இருப்புடன் நிகழ்வுகள் துவங்க ஆரம்பித்தன.

எழில் ஓவியாவின் பாடல் முதல் நிகழ்வாக சிறக்க

தொடர்ந்தன நூல் அறிமுகங்கள்.

கவிஞர் கீதா அவர்களின் நூல் அறிமுகம் சிறப்பு. தான் அறிமுகப் படித்திய அத்துணை நூற்களையும் அரங்கிற்கு கொண்டு வந்திருந்தார்.

பேராசிரியர் திருமிகு விஜயலட்சுமி அவர்கள் பத்து நூற்கள் அறிமுகம் விரிவானது.

கவிஞர் மீரா செல்வக் குமாரின் எருதுப் புரட்சி குறித்த வலி நிறைந்த கவிதை அவையோரால் வெகுவாக சிலாகிக்கப்பட்டது.

தேவைதைகளின் காதலன் என்கிற தலைப்பில் கடந்த வாரம் வெளியிடப்பட்ட கவிதை நூலான தேவதைகளால் தேடப்படுபவன் குறித்த விமர்சன உரையை நுட்பமாக விரிவாக தந்தார் மஹா சுந்தர் அய்யா.

எதிர்பாரா கவிதை பகிர்வாக கவிஞர் சுகுமாரன், கவிஞர். மாலதி மற்றும் கவிஞர். சிவக்குமார் போன்றோர் தங்களின் கவிதையை பகிர்ந்துகொண்டனர்.

அய்யா தமிழ் இளங்கோ அவர்களின் வலை அனுபவப்  பதிவுகள் அருமையாக இருந்தன.

நுட்பமான விசயங்களை வெகு எளிதாக பகிர்ந்துகொண்டார். திரு தமிழ் இளங்கோ.

மாவட்டதின் இலக்கிய ஆளுமைகள் கலந்துகொண்டது மகிழ்வு.

வீதியின் சார்பாக விருது பெற்ற எழுத்தாளர் திரு. அண்டனுர் சுரா அவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.

கவிஞர் கிரேஸ் பிரதீபாவின் பாட்டன் காட்டைத் தேடி நூல் விற்பனையானது. பத்து நூற்களில் ஒரு நூல்மட்டுமே கவிஞர் கீதா அவர்களுக்கு எஞ்சியது.

 காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு நிறைவாக நிகழ்ந்த சந்திப்பாக அமைத்தது மன நிறைவு.

அடுத்த கூட்டத்தின் பொறுப்பை கவிஞர் சுகுமாரனும், பேரா.சக்திவேலும் ஏற்றுள்ளார்கள்.

வாழ்த்துகள் அவர்களுக்கு.


  

Comments

  1. நல்லதொரு பகிர்வு....

    வீதி நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. சிறப்பான நிகழ்வு பற்றிய தகவல்களுடன் நல்ல பதிவு..எல்லோருக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. ஆசிரியருக்கு நன்றி.

    ReplyDelete

Post a Comment

வருக வருக