ஹைபாட்டியா மதம் தின்ற மலர்


மாண்பு மிகு மகளிர் - அறிவியல் சுடர்கள்

பெற்ற பெண்ணை எட்டாம் வகுப்போடு தாய் மாமனுக்கு தாரை வார்க்கும் தங்கத் தமிழகத்தின் "குடிமகன்களுக்கு" கிபி 350இல் ஒரு அலக்ஸான்றிய  உன்னத பெண்மணி கணித விற்பன்னராகவும், தத்துவ மேதையாகவும், வானியல் விற்பன்னராகவும் இருந்தார் என்பது அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.ஹைபாட்டியா கிபி முந்நூறுகளில் உலக பிரசித்தி பெற்ற பல்கலைக் கழகங்களில் ஒன்றான அலக்ஸ்ஸான்றிய பல்கலைக் கழகத்தில் பயின்று அதே பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிவர்.

அதே பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருந்த உலகப் புகழ்பெற்ற கணித மேதை தியோனின் மகள் என்பதால் சிறு வயதிலேயே பல்கலைகழக வளாகத்தில் அறிவு சார் உரையாடல்களுடன் வளர்ந்தாள் ஹைபாட்டியா.

தியோன் தனது மகளை உன்னதமானவள் என கொண்டாடியதை அவர் அவளை ஹைபாட்டியா என்று அழைப்பதில் இருந்தே புரிந்துகொள்ளலாம். ஹைபாட்டியா என்றால் உன்னதம் என்று அர்த்தம்.

கோடிஸ்வரி என்று பெயர் வைத்துக்கொண்டு "அன்புள்ளம் கொண்ட அம்மாவிற்கு" என்று பாடுகின்ற முரண் போலன்றி ஹைபாடிய உண்மையிலேயே உன்னதமானவள் என்பதை சரித்திரத்தின் பக்கங்களில் வெகு அழுத்தமாக பதிந்தார்.

அஸ்ட்ரோபெல் எனும் ஒரு கணினியை மேம்படுதியவர் ஹைபாட்டியா. அஸ்ட்ரோபெல் ஒரு கணக்கீட்டு கருவி, குறிப்பிட்ட நேரத்தில் ஒரு நட்சத்திரம் எங்கே இருக்கும் என காட்ட வல்லது.

கணிதத்தில் கூம்பின் பிரிவுகளை குறித்து இவர் செய்த ஆய்வுகள் இன்றும் போற்றப்படுகின்றன.

இத்துணை அறிவியல் முன்னேற்றமடைந்த இக்காலத்திலேயே பெண்கள் ஆண்களின் உடமைப் பொருள்களாக நடத்தப்படுவதை பார்க்கிறோம்.

அன்று நிலைமை எப்படி இருந்திருக்கும்?

எதுகுறித்தும் வருந்தாத வீரம் செறிந்த மனப்பாங்கு ஹைப்பாட்டியவிற்கு இயல்பிலேயே கைவந்திருந்தது.

ஆண்கள் கோலோச்சிய பல்கலைக் கழக வளாகத்தில் எதுகுறித்தும் சட்டை செய்யாது தனது ஞானத்தேடல்களில் கவனத்தைக் குவித்திருந்தார்.

பேரழகை கண்ட பலர் திருமணம் செய்துகொள்ள விரும்பினாலும் புறங்கையால் தட்டிவிட்டு தனது வகுப்பிலும், ஆய்விலும் கவனத்தைக் குவித்தார்.

அலக்ஸாண்ட்ரியாவின் ப்ரிபெக்ட் ஓரஸ்ட்டஸ் ஹைபாட்டியவின் வகுப்புத் தோழன். ஹைப்பாட்டியாவை மணம் செய்துகொள்ள கோரிய பொழுது அவள் செய்த எதிர்வினை இன்றளவும் பேசப்படுகிறது.

தான் எவ்விதத்திலும் மற்ற பெண்களைவிட மேம்பட்டவள் இல்லை என்று சொல்லி தன்னுடைய மாதவிடாய்த் துணியை அவனுக்குத் தந்தவள் அவள்.

ஹைப்பாடியா இறுதி வரை திருமணமே வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்ததைப் போலவே அலக்ஸாண்ரியாவின் தலைவனும் உறுதியாக இருக்க இருவரின் காதலும் மக்களின் பேசுபொருளாகிறது.

அந்த மாதவிடாய் துணி சம்பவம் உட்பட.

அகிலத்தின் அணைத்து கப்பல்களும் வரவிரும்பும் துறைமுக நகர், உன்னதமான பல்கலைக்கழகம், பல்வேறு சமூக மக்கள் ஒருமையுடன் வாழ்ந்த நகர் மெல்ல மெல்ல சிறு கங்குகளாக எழுந்து நாக்குகளாக வளர்ந்த சுவாலைகளுக்குள் எரியத் துவங்கிய தினங்கள் அவை.

ஆம், பல்வேறு மதங்களும், நம்பிக்கையும் எப்படி ஒரே இடத்தில் இருக்க முடியும்?

அலெக்ஸ்சான்றியா வெண்மை பயங்கரவாதத்தில் சிக்கிய தினங்கள், "எம் பிதாவே இவர்களை மன்னியும்" என்று சிலுவையில் உயிர்நீத்த இயேசு பிரானின் திருநாமத்தில் அரங்கேறின மதத்தீவிரவாதங்கள்.

சிறில் என்கிற பிஷப் மெல்ல மெல்ல மக்கள் செல்வாக்கைப் பெற்று ஆண்டுகொண்டிருந்த ஓரஸ்டசை மண்டியிட்டு மன்னிப்புப் கேட்க வைக்கிறான்.

சிலுவையில் தொங்கி மக்களின் பாவங்களி இரத்தமாக வழியவிட்ட கர்த்தரின் துறவி ஒருவன் ஒராஸ்டஸ்சை கிருத்துவதிற்கு எதிரானவன் என்று ஏசி, அவமானப்படுத்தி அவன் மண்டையை உடைக்கிறான்.

நிலைமையின் தீவிரத்தில் ஒராஸ்டசின் பாதுகாவலர்கள் பயந்தோடிப்போக, எப்படியோ தப்பி தனது அரண்மனைக்கு வருகிறான் ஒராஸ்டஸ்.

சட்டப்படி செயல்பட்டு தன்னை தாக்கிய துறவியை கைது செய்து கவனிக்கச் சொல்கிறான்.

கவனித்த கவனிப்பில் பரலோகமடைகிறான் துறவி.

அவன் உடலை பெரும் பிஷப் அவனை தியாகி என்று அறிவிக்கிறான்.

அவன் உடலைக் கிடத்தி மீதம் இருக்கும் துறவிகளுக்கு வெறியேற்றுகிறான், மேலும் பைபிளின் சில பக்கங்களை படித்து பெண்கள் எப்படி அடக்கி ஒடுக்கப்பட வேண்டும் என்பதை உணர்த்துகிறான்.

ஹைப்பாடிய மற்றும் ஒராஸ்டாஸ்க்கு இடையே உள்ள நட்பு ஊருக்கே தெரிந்த தகவல், ஹைப்பாட்டியாதான் ஒராஸ்டசின் ஆலோசகர் என்பதும் தெரியும்.

எனவே துறவிகளின் ஒட்டு மொத்த கோபமும் ஹைப்பாட்டியா மீது திரும்புகிறது.

ஹைப்பட்டியாவை கடத்தும் துறவியர்  கூட்டம் கிருத்தவத்திற்கு மாறுமாறு வற்புறுத்த அவள் மறுக்கிறாள். அவள் உடலின் தோலை முத்துச் சிப்பிகள் கொண்டு வழித்து எடுக்கிறது அந்தத் துறவியர் குழு. இப்படி கொடூர சித்திரவதைகளை அனுபவித்த பின்னர் அவளைக் கொல்கிறது அக்குழு.

இப்படியாக உலகின் உன்னதமான ஒரு குரு பரம்பரை முடிவுக்கு வருகிறது.

அலக்ஸ்சான்றிய பல்கலை கழகம் தாக்கப்பட்டது, புகழ் மிக்க கிரேக்க தத்துவ ஞானிகளின், செம்மரபை முடித்து வைத்தது.

ஹைபாட்டியாவின் வாழ்வு எவ்வளவு உன்னதமானதொ அதே அளவு வேதனை மிக்கது.

சமூகத்திற்கு அவள் உன்னத பங்களிப்புகளைத் தந்தாள், ஆனால் மதவெறி பீடித்த ஆணாதிக்கச் சமூகம் அவளுக்கு வேதனையையும் கொடூர மரணத்தையும் தந்தது.

ஹைப்பாட்டியா வெறும் பெயரல்ல

யுகம் யுகமாக அழித்தொழிக்கப்படும் பெண்மையின் குறியீடு.

தொடர்வோம்

அன்பன்
மது

பிற்சேர்க்கை

இது கிருத்தவ மதவெறிக்கு  ஒரு சான்று அல்ல.

கிருத்துவம் என்பது ஒரு குறியீடு, கிருத்துவத்தை எடுத்துவிட்டு, இஸ்லாம் என்றோ பவுத்தம் என்றோ இந்துமதம் என்றோ போட்டாலும் இதே கதைதான் மீண்டும் மீண்டும் நடக்கிறது.

மதம் என்றால் அறிவு மலம் தின்னப் போய்விடுகிறது.

மதங்கள் ஒருபோதும் மனிதர்களை அமைதிப்படுத்தாது, சமூகத்திற்கு நன்மை பயக்காது என்பதற்கான வரலாற்றுத் தரவு.

எப்படி நாளந்தாவின் நூற்கள் எரிக்கப்பட்டனவோ, எப்படி யாழ்பாணத்தின் நூற்கள் எரிக்கப்பட்டனவோ அதே போல்தான் அலக்சான்றியாவின் நூற்சுருள்களும் எரிக்கப்பட்டன.

மதம் எப்படி அரசை மிரட்டிப் பணிய வைக்கும், எப்படி அரசு ஊழியர்கள் உயிருக்குப் பயந்து ஓடுவார்கள் என்பதன் வரலாற்றுச் சாட்சி.

மதம் ஏன் அறிவியலை வெறுக்கிறது?

கிருஸ்துவ குருமார்கள் புவியைச் சுற்றிதான் மற்ற கோள்கள் வருகின்றன என்று சொன்ன பொழுது தீரத்துடன் அக்கருத்தை எதிர்த்தவர் ஹைபாட்டியா, இவர் சூரியன்தான் மையம் என்று போதித்தார், அதோடு இல்லாமல் கோள்கள் வட்டப்பாதையில் அல்ல நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகின்றன என்று சொன்னவர்.
இமாதிரியான அறிவு பூர்வமான விவாதங்கள்,  பிரச்சாரங்கள் எப்படி மத வெறியர்களால் எதிர் கொள்ளப்படும் என்பதற்கான சாட்சி ஹைப்பாட்டியவின்  வாழ்வு.

ஹைப்பாடியவின் மதம் குறித்து விரிவான தகவலோ குறுகிய தகவலோ இல்லை!

ஆறுதல் செய்திகள்

ஹைபாடியவின் வாழ்வு மீண்டும் மீண்டும் நாடகங்களில் மக்களுக்கு நினைவுறுத்தப்படுகிறது. பல திரைப்படங்கள் வந்திருக்கின்றன.

ஆனால்  நம்மிடம் இன்னும் இந்த மரபு வேரூன்றவில்லை. 

Comments

 1. ஹைபடியா வாழ்க்கையும் மரணமும் .வருத்தமும் வேதனையும் நிறைந்த ஒரு வரலாற்று சம்பவம் ..இந்த மாதம் தான் அவர் இறந்த நாள் வருகிறது என்று நினைக்கிறேன் ..நாமெல்லாம் அந்த காலத்தில் பிறக்கவில்லை என்று மனதின் ஓரம் ஒரு சிறு சந்தோஷம்.
  அக்காலத்தில் தங்கள் கொள்கைகளுக்கு மாறானவர்களை paganism என்று கூறி விளக்கி வைத்துள்ளார் .தங்கள் கோட்பாடுகளை ஏற்காதோர் பாகான்கள் :(

  ReplyDelete
  Replies
  1. வருத்தங்கள்தான் தோழர்
   வருகைக்கு நன்றி

   Delete
 2. உண்மைதான் நண்பரே
  நாம்தான் இந்த மரபினைப் பின்பற்றத் தவறிவிட்டோம்

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் தோழர்

   Delete
 3. படிக்க பிரமிப்பாக இருக்கிறது ஹைப்பாடியாவின் வரலாறு
  த.ம.+ 2

  ReplyDelete
  Replies
  1. இன்னும் வரும் தோழர்

   Delete
 4. த.ம. இணைப்பு இல்லை தோழரே

  ReplyDelete
  Replies
  1. பார்கிறேன் தோழர்

   Delete
 5. mika ariya thakaval...manathil nirkial haipattiya

  ReplyDelete
 6. ஹைப்பாட்டியா பகுத்தறிவுவாதியாக தனது கருத்துகளைச் சொன்னாலும்... உண்மையை ஏற்றுக் கொள்ளாத மதம் பிடித்த மதவாதிகள் அன்றைக்கும் இன்றைக்கும்கூட இருக்கத்தானே செய்கிறார்கள்.

  த.ம. 2

  ReplyDelete
  Replies
  1. என்றும் இருப்பார்கள் ...
   வருகைக்கு நன்றி அய்யா

   Delete
 7. Dear Admin,
  Greetings!
  We recently have enhanced our website, "Nam Kural". We request you to share the URL links of your valuable articles on our website to reach wider Tamil audience...

  தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

  நன்றிகள் பல,
  நம் குரல்
  Note: To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

  ReplyDelete

Post a Comment

வருக வருக