லோகன்


மார்வல் ஸ்டுடியோஸ் தங்கள் கல்லாவை கடந்த பதினேழு ஆண்டுகளாக நிரப்பி வந்த கதாபாத்திரம் ஒன்றுக்கு குட்பை சொல்லியிருக்கும் படம்.ஹூஜ் ஜாக்மென் உல்வோரின் கதாபாத்திரத்தில் நடித்தார் என்பதைவிட பாத்திரமாகவே  மாறிவிட்டிருந்தார்!

தமிழக திரையரங்குகளில் உல்ப் விசில் பெரும் ஹாலிவுட் கதாபாத்திரம் இது.

எண்னூறுகளில் பிறந்து ஓநாய்க் குணத்தோடும் நீளும் நகங்களோடும் வளரும் வோல்வரின் தனது சகோதரன் விக்டருடன் துரத்தும் ஊரைவிட்டு ஓடி இரண்டாம் உலகப்போரில் பங்கெடுக்கிறான். தனது மியூட்டேசன் காரணமாக மரணமே இல்லாமல் வாழ்கிறான்.

இப்படி தொடர்ந்து வந்ததிரைப்படங்கள் மூலம் லோகன் கதாபாத்திரத்திற்கு முடிவே கிடையாது என்று நம்பவைத்த பின்னர் அந்தக் கதாபாத்திரத்தை போட்டுத்தள்ளுவது கொஞ்சம் ரிஸ்க்தான்.

யோசிக்காமல் செய்திருக்கிறார்கள்.

கதைப்படி தனது எலும்புகளில் பொருத்தப்பட்ட அடமாண்டியம் மெல்ல மெல்ல லோகனின் சுயமீட்பு சக்தியை அழிக்கிறது. வயோதிக லோகன் கொஞ்சம் விந்தி விந்தி நடந்து தனது ரசிகர்களை பரிதாபப்பட  வைக்கிறார். எக்ஸ் மென் லாஸ்ட் ஸ்டாண்ட்லில் சுக்கல் சுக்கலாக பிரிந்துபோன புரபசர் சார்லஸ் சேவியரை ஒரு உருக்காலையில் வைத்துக் காப்பாற்றிக்கொண்டு பதுங்கி இருக்கிறான் லோகன். இருவருக்கும் இடம் கொடுத்து உதவுபவன் காலிபன் என்கிற மியூடன்ட் ட்ராக்கர்.

ரிவர்ஸ் என்கிற கூலிப்படை லோகனை தொடர்பு கொண்டு காப்பியால என்கிற நர்ஸ் ஒருத்தியை கண்டுபிடித்துத் தர சொல்கிறான். லோகன் அவனை விரட்டிவிட்டு தனது பதுங்கிடத்திற்கு வருகிறான்.

லோகனைப் பொறுத்த வரை புரபசர் சேவியரை அழைத்துக்கொண்டு ஒரு சன் சீக்கர் படகில் நடுக்கடலில் தங்குவதே நல்லது என்று நம்புகிறான்.

அந்தப் படகை வாங்கப் பணம் தேவை, அதற்காக டாக்சி ஒட்டிக்கொண்டிருக்கிறான்!(இயக்குனர் சேரன் கதை விவாதக் குழுவில் இருந்திருகிறாரோ?)

காப்ரியோலோ பணம் தருவதாக சொன்னதும் அவள் இருக்கும் ஹோட்டல் அறைக்குச் செல்கிறான் லோகன். அங்கே அவள் பரலோக பிராப்தி அடைந்திருக்க குழந்தை லாராவைக் காணாது பணத்தையும் செல்போனையும் எடுத்துக்கொண்டு தன் இடத்திற்கு மீண்டும் வருகிறான்.

ஆனால் லோகனுக்கு தெரியாமலேயே லாரா வண்டியின் டிக்கியில் வந்துவிடுகிறாள்.

படம் டாப் கியரில் எகிற ஆரம்பிக்கிறது.

கம்பீரமாய் ஆண்மை ததும்பும் லோகனை மட்டுமே பார்த்தவர்கள் இந்தப் படத்தைப் பார்ப்பது சிரமம்தான்.

என்ன நினைப்பில் இப்படி லோகனை போட்டுத் தள்ளுகிறார்கள்?

காமிக்ஸின் எல்லா முன்னணி கேரக்டர்களையும் போட்டுத்தள்ளியாச்சு.

புரபசர் சேவியர், அவரது நண்பனாக இருந்து வில்லனாகிய மக்நீட்டோ, போனிக்ஸ் என்கிற பெரும் சாத்தானை தன்னுள் மறைத்து வைத்திருந்த ஜீன் என எல்லா காரக்டர்களும் அனுப்பிவைக்கப்பட்ட பிறகு

லோகனுக்கு மட்டும் என்ன இருத்தல் நியாயம்?

இந்த தலைமுறை எக்ஸ்மேன்களை போட்டுத்தள்ளினால்தான் அடுத்த தலைமுறை எக்ஸ் மேன்களை இறக்குமதி செய்ய முடியும்.

இதற்காவே இந்தப் படம்.

எனக்கு சுத்தமாப் பிடிக்கல...

ஆனால் வசூலில் அசத்துகிறது.

பார்க்கலாம்

அன்பன்
மது  

Comments

 1. அருமையான விமர்சனம்
  நன்றி நண்பரே

  ReplyDelete
 2. வணக்கம்
  விளக்கம் சிறப்பாக உள்ளது பார்க்க தூண்டுகிறது.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. நன்றி தோழர்

  ReplyDelete

Post a Comment

வருக வருக